![]() |
|
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை புலிகள் சந்திப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை புலிகள் சந்திப்பு (/showthread.php?tid=2734) |
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை புலிகள் சந்திப்பு - Rasikai - 10-28-2005 <b>இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவரை விடுதலைப் புலிகள் சந்திப்பு </b> விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும்; இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. மூன்று மணிக்கு உலங்குவானூர்தி மூலமாக கிளிநொச்சியை வந்தடைந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் வரவேற்றார். சமாதான செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் காவல்துறைப் பொறுப்பாளர் திரு பா.நடேசன் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய சந்திப்பில் போர் நிறுத்த உடன்பாடு வவுனியாவுக்கு வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சிறிலங்கா படையினரின் வேவு விமானம் விழுந்து நொருங்கியமை சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிற்பகல் 3:30 மணிமுதல் மாலை 6:30 வரை இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பை முடித்துக்கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் தொடர்ந்தும் கிளிநொச்சியிலேயே தங்கியிருக்கின்றார். <img src='http://img499.imageshack.us/img499/9060/lttekankanippukulu28100516fk.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img499.imageshack.us/img499/3510/lttekankanippukulu28100520mj.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img499.imageshack.us/img499/8969/lttekankanippukulu28100534cu.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img499.imageshack.us/img499/6370/lttekankanippukulu28100540xy.jpg' border='0' alt='user posted image'> நன்றி (http://www.newstamilnet.com/)[/b] - RaMa - 10-29-2005 படங்களோடு கூடிய தகவலுக்கு நன்றி ரசிகை |