| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 301 online users. » 0 Member(s) | 298 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,242
|
|
|
| உள்ளங்கள் உறங்கும் வரை.... |
|
Posted by: kuruvikal - 10-28-2005, 11:44 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<img src='http://img493.imageshack.us/img493/4247/pen3jk.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு துளி
உயிர்த்துளி
உணர்வுகள் தேங்கிட
உருவம் வாங்கிட
உள்ளங்கள் போலியாய்
உதிர்க்கின்றன
உண்மைகள் எங்கும்
உறங்குகின்றன...!
உறையும் கையுமாய்
உணர்வுகள் தாண்டி
உணரிகள் நம்பி
உண்மைக்கு
ஒரு திருப்பள்ளி எழுச்சி
அது சாதனை..?!
ஒரு வார்த்தை
உண்மையாய் இருந்தால்
ஏன் இது...??!
உறவுகள் ஊனமாக்க
உளறல்கள் உதிர்கின்றன
இல்லாத ஒன்றுக்காய்
இருப்பதாய் கற்பனை
ஒத்த முனை ஏன் கவராது
கவரும்....
ஆய்ந்து சொல்லி
சாதிக்கத் துடிக்கிறது
ஓர் உள்ளம்
தேவை அது - அதற்காய்
உண்மைகள் மீண்டும்
உறங்குகின்றன...!
உலகம் தட்டை
உண்மை அன்று
இன்றது கோளம்
அங்கு கோழைகள் யாருமிலர்
நாளை மீண்டும்
உண்மைகள் மாறும்
விதிகள் மாற்றும்
மதிகள் கலங்கும்..!
உணர்வுகள் வாங்கிடா
உண்மைகள்
உலகம் உணரும்
அழிவின் விழிம்பில்....!
அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!</b>
|
|
|
| தீபாவளி |
|
Posted by: Rasikai - 10-28-2005, 10:25 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<b>தீபாவளி
கொடுத்தவரம் தவறாகிக் கொடிய துன்பம்
குவலயத்தில் தலைவிரித்து ஆடும் போது
படுத்திருந்தால் பாற்கடலில் பாவம் என்றே
பகவானும் வெகுண்டெழுந்து படையை ஏவி
எடுத்தெறிந்தான் அசுரனது உயிரை அந்த
இனியதினம் தீவாளித் திருநாள் என்றும்
அடுத்தவிருள் விலகியதால் அந்த நாளில்
அழகாக தீபமிடும் உலகம் இன்றும்.
புத்தாடை விலைபோகும்! புகுந்த கூட்டம்
பொல்லாத விலையென்று பொருமும்! வாங்கும்!
முத்தாக நீர்வடியும் கண்கள்! ஏதும்
முடிவாகா திருநாளாய் முடிந்தும் போகும்!
அத்தானைப் பகையாக்கும் ஆசைச் சேலை!
ஆத்தாளைப் பகையாக்கும்! அதனால் மாந்தர்
பத்தோடு நூறாகக் கடன்பட் டேனும்
பயத்தோடு நடந்திடுவார் இந்த நாளில்!
ஆடெல்லாம் உயிர்துறக்கும் இறைச்சிக் காக!
ஆனபனைக் கள்ளருந்திக் களிக்கும் நெஞ்சம்!
கூடெல்லாம் அடைபட்டுக் கிடந்த கோழி
குழம்பாகிக் கமகமக்கும்! மாலை வந்தால்
வீடெல்லாம் புதுப்படங்கள் பார்க்க ஓடும்!
வெடிகேட்கும்! மணிகேட்கும்! கோயில் தோறும்
நாடெல்லாம் இவ்வாறாய் நரகா சூரன்
நாளிதனைக் கொண்டாடும் நன்று! நன்று!!
உள்ளத்தை இருளாக்கிக் கொண்டு தீபம்
ஊர்கூடி ஏற்றுவதும் உணவுக் காக
கள்ளத்தை அறியாத ஆட்டைக் கட்டிக்
கழுத்தரிந்து கொல்லுவதும் கள்ளை உண்டு
வள்ளத்தைப் போலாடி இங்கும் அங்கும்
வழிமாறி அலைவதுவும் சினிமாப் பார்த்து
பள்ளத்தில் அறிவொளியைப் போட்டு மேலும்
பாமரராய் ஆவதுமே சமய வாழ்வாம்!
நெஞ்சத்தில் கெட்டதெலாம் நீக்கி நேர்மை
நிறுவுமெனில் தீபநாள் வரட்டும்! ஏங்கித்
தஞ்சத்தில் கிடக்கின்ற ஏழைக் கேதும்
தருமேனும் என்றாலும் வரட்டும்! இல்லை
வஞ்சத்தை முறியடிக்க வாழ்வில் ஏதும்
வழிகாட்டும் என்றாலும் வரட்டும்! ஆனால்
பஞ்சத்தை அன்புக்குப் பகிர்ந்து தந்தால்
பகவானின் நாளேனும் வேண்டாம் இங்கே!
எழுதியவர்- இரா சம்பந்தன்</b>
|
|
|
| பூவாக இருந்தவள் புலியாகினாள் |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:35 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (3)
|
 |
அன்று அதிகாலை மூன்றுமணி இருக்கும். தெருவெங்கும் நாயின் குரைப்புச் சத்தம் ஊரெங்கும் கேட்டது. சிவா எழும்பி தன் குடிசை வீட்டின் ஓட்டையால் பார்க்கிறான். சிலர் நடமாடுவது தெரிந்தது.
அவன் நன்றாக உற்றுப் பார்க்கின்றான். படையினர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். சிவாவுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. நேற்று நடந்த சுற்றிவளைப்பின் போது படையினரால் பிடிபட்டவன் முகமூடியாக வந்திருப்பான் என்ற எண்ணம் அவனின் மனதில் எழுந்தது. பயம் இன்னும் இரு மடங்காகியது. சிவா தன் மனைவி சாந்தியைப் பார்த்தான். அவள் நித்திரையில் இருந்தாள்.
அவளைக் கட்டியணைத்தபடி தன் ஒரே மகள் சுகன்யா படுத்துக்கொண்டிருந்தாள். சிவா மெல்ல சாந்தியை எழுப்பினான். என்ன இந்த நேரம் என்றாள் சாந்தி! பயந்தவனாகச் சிவா கூறினான். “நம்மட கடப்புல ஆமிக்காரனுகள் நிக்கிறார்கள். எனக்குப் பயமாய்க் கிடக்கு|| என்றான் சிவா. சாந்தி பதறியபடி சொன்னாள். படிச்சுப் படிச்சு சொன்னேன் தானே. கேட்டிங்களா? நான் இப்ப என்ன செய்வது. என்றபடி அழுதாள் சாந்தி.
சிவா சாந்தி இருவரும் பேசிய சத்தம் கேட்டு எழுந்தாள் மகள். என்ன அப்பா என்ன நடந்தது என்றபடி எழும்பினாள். அவங்கட தொடர்பு வேண்டாம் என்று சுகன்யா சிவா சாந்தியிடம் சொன்னான். என்னைப் பிடித்தால் எப்படியும் அடித்துக் கொன்று விடுவாங்கள். இப்போது என்ன செய்வது என்று தடுமாறினான் சிவா. அவர்களின் தகரக் கேற்கைத் தள்ளுவது போல் சத்தம் கேட்டது. சிவா நினைத்தான் இனியும் நான் இங்கிருந்தால் என்னைக் கொன்று விடுவார்கள். நான் எப்படியும் இங்கிருந்து தப்பித்தான் ஆக வேண்டும் என்றவன் தடுமாறினான்.
சிவா சொன்னான். ‘சாந்தி நான் பின்பக்கமாக ஓடுகிறேன். நீ மகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்! எப்படியும் தப்பிக் கொள்ளனும்’ இதைக் கேட்டதும் சாந்தி பதட்டம் கொண்டவளாக விம்மினாள். அவளுடன் மகளும் அழுதாள். சிவா சொன்னான் மகள் கவனம் அப்பா இங்கிருந்தேன் என்றால் என்னைக் கொன்று விடுவார்கள் மகள் என்றதைக் கேட்டதும் சாந்தியும் மகளும் வாய்களைக் கையால் பொத்தியபடி அலறினார்கள்.
அப்போது தான் யாரோ தங்கள் குடிசையை நோக்கி வருவது போல் சத்தம் கேட்டது. சிவா திடீரென்று பின்பக்கமாக ஓடினான். சிவா ஓடியதைக் கண்டு கொண்ட படையினர் புரியாத வார்த்தைகளால் ஏதோ சொல்லிக் கொண்டு பின்தொடர்ந்து ஓடினார்கள். சிறிது தூரம் ஓடிய பின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது.
சாந்தியும் மகளும் குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். இருள் நீங்கி மெல்ல மெல்ல ஒளி வந்து கொண்டிருந்தது. பின்பக்கமாகப் பார்த்த சாந்தியின் கண்களில் சில இருட்டு உருவம் தாங்களை நோக்கி வருவதை உணர்ந்து கொண்ட மகளும் சாந்தியிடம் பயத்தால் நடுங்கினர். வந்த அந்த இருட்டு உருவங்கள் சாந்தியையும், மகளையும் பார்த்துக் கெட்ட வார்த்தைகளால் பேசினார்கள். சாந்தியும் மகளும் சுமனைக் கண்டாற்போல் இருந்த வேளை சாந்தி தன் கணவர் உயிருக்கு என்ன நேர்ந்து விட்டதோவென அலறினாள். சுகன்யாவும் தன்மீது பாசமான என் அப்பா கேட்ட பொருள் எல்லாம் எவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும் வாங்கித் தந்த என் அப்பாவுக்கு என்ன நடந்ததோ என்று அனலில் புழுவாய் துடித்தாள்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த ஏனைய படையினர் சாந்தியைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.
அதில் வந்த ஒரு இனவெறி பிடித்தவன் சாந்தியை தாறுமாறாகத் தாக்கினான். அப்போது சுகன்யா அம்மாவை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அழுது புலம்பினாள். அவள் என்ன தான் செய்வாள். அவளும் பருவமடைந்து இரண்டு வருடமாகின்றது. அந்த வெறிபிடித்தவர்களிடம் நின்று பேசுவதற்கு கசப்புடனும் அச்சத்துடனும் நிலை தடுமாறி செய்வதறியாமல் உதவுவார் யாருமில்லாமல் தவித்தாள் சுகன்யா.
சற்று பொழுது விடிந்தது. அங்கும் இங்குமாக சில வீடுகளில் நடமாட்டம் தெரிந்தது. படையினர் சிரிப்பும் கும்மாளமுமாக அங்குமிங்குமாய் சிலரைப் பிடித்து வைத்திருந்தார்கள். சாந்தியும் மகளும் ஓடிப்போய் தன் கணவரைத் தேடும் முயற்சியில் வெளியே போக எண்ணிய வேளை அப்போது தான் ஆமியின் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து ஏதோ ஒன்றை இருவர் கொண்டு போனார்கள். பின் சிறிது தூரத்திலிருந்து ஒரு பிணத்தைத் தூக்கி வந்தார்கள். சாந்தி சற்றுப் பதட்டத்துடன் தலையில் அடித்துக் கத்திக்கொண்டு ஓடினாள். ஓடியவளிடம் தன் கணவன் புலி அவனைக் கொன்று விட்டோம் என்றான் ஒருவன்.
சாந்தி அவ்விடத்திலேயே மயங்கி வீழ்ந்ததைக் கண்ட சுகன்யா தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் தாயைத் தூக்கி மடியில் வைத்துக் கத்தினாள். யாராவது வாங்களேன் என்று அலறினாள். பின்னர் சாந்தியின் கணவனைப் பிணமாக்கிய அந்த எமன்கள் சிரித்துக் கும்மாளம் போட்டபடி சென்றுவிட்டார்கள்.
அதன் பின் அங்குள்ள சிலர் சாந்தியும் மகளும் கிடந்த இடத்திற்கு வந்தார்கள். சாந்தியின் கணவன் புலி என்று படையினர் முத்திரை குத்தினர். காலங் கடந்தது. சாந்தியும் மகளும் தங்கள் வாழ்வைக்கடத்த பல பாடுகள்பட்டனர். சுகன்யாவும் தன் படிப்பை நிறுத்தி விட்டாள். சாந்தி தன்னாலான பல வேலைகளைச் செய்தாள். அவளின் வாழ்க்கைக்கு அதுவும் போதவில்லை. சுகன்யா தன் தந்தையின் இழப்பை ஜீரணிக்க முடியாமல் கலங்கினாள்.
அந்த நேரம் தான் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு படைமுகாம் கட்டப்பட்டது. படைமுகாம் வந்து சிறிது காலம் பிரச்சினை ஒன்றும் நடக்கவில்லை. அங்கிருந்த படையினர் அந்தக் கிராம மக்களுடன் அன்புடன் பழகினார்கள். ஆனால் அங்குள்ள மக்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் நயவஞ்சகமாகத்தான் பழகுகின்றார்கள் என்று. அந்தக் கிராம மக்களுக்குப் புரியவில்லை. அப்போது தான் சாந்தியின் வீட்டிற்கும் ஒரு சில படையினர் வருவதும், அன்பாகப் பேசுவதும் சில சாமான்கள், உணவுப் பொருட்கள், உடைகள் என்பன கொண்டு போய்க் கொடுப்பார்கள். ஆனால் சுகன்யாவுக்கு இது எல்லாம் பிடிக்கவில்லை.
சுகன்யா தன் தாயிடம் சொன்னாள். அப்பாவைக் கொன்ற பாவிகளிடம் நாங்கள் கைநீட்டி வாங்கிச் சாப்பிடுகிறதோ? என்று எரிந்து விழுந்தாள் சுகன்யா. சாந்தி சொன்னாள் மகள் அவங்கள் வேற ஆக்கள். இவங்கள் வேற ஆக்கள். இவங்கள் நல்லவங்க தானே என்றாள் சாந்தி. என்ன அம்மா சொல்றீங்கள். எல்லாம் பேய் தான். எங்கள் உயிர்களையும் உடமைகளையும் குடிக்க வந்த காடேறி தான் என்றாள் ஆவேசத்துடன் சுகன்யா.
சுகன்யாவுக்குத் தான் தாயின் போக்குப் பிடிக்கவில்லை. நாட்கள் போகப் போக சாந்தியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. படை அதிகாரி அடிக்கடி தன் வீட்டுக்கு வருவது சுகன்யாவுக்குப் பிடிக்கவில்லை. எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தாள் சுகன்யா. சாந்தி எதையும் ஏற்பதாயில்லை. அங்கு வரும் படையினர் சுகன்யாவிடமும் கேலியும், சேட்டையும் செய்தார்கள். சுகன்யா எவ்வளவோ தன் தாயிடம் சொல்லியும் பார்த்தாள். அழுதும் பார்த்தாள் சுகன்யா. சாந்தி எதையும் கேட்பதாகவில்லை. ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று இரவு ஏழு மணியிருக்கும் நாடகம் பார்ப்பதற்காக சிறிது தூரம் தள்ளியிருக்கும் வசந்தி அக்காவின் வீட்டிற்கு நாடகம் பார்க்க போனாள் சுகன்யா.
நாடகம் முடிந்ததும் தன் குடிசை வீட்டை நோக்கி வந்தாள். வீட்டை நெருங்கியவள் ஏதோ தன் குடிசைக்குள் சத்தம் கேட்க மெதுவாக வந்தாள். அங்கு அவள் கண்ட காட்சி சுகன்யாவைத் தீயில் தூக்கிப் போட்டது போல் இருந்தது. என்ன அசிங்கம். இப்படியும் ஒரு தாயா? என்று அவள் மனம் பதறியது. கோபம் ஒரு பக்கம் தன் தாயை நினைத்து ஆவேசம் கொண்டாள் சுகன்யா. எனக்கும் என் அப்பாவுக்கும் துரோகம் செய்த இவளை அழிக்க வேண்டும் என்று மனதில் ஆவேசம் பொங்கத் தேடினாள். கண்ணில் ஒன்றும் படவில்லை. மூலையில் பார்த்தாள் அவனின் துப்பாக்கி இருந்தது. அதை எடுத்து ஒன்றும் செய்ய தன்னால் முடியாதே!
விறாந்தையில் பார்த்தாள் மங்கல் வெளிச்சத்துடன் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கோ பல்ப்பினாலானது. அதை மெதுவாகக் கையில் எடுத்தாள். விளக்கின் திரியை இன்னும் கொஞ்சம் இழுத்தாள். அந்த வெளிச்சம் தங்கள் மேல் பட்டதும் சட்டென்று எழும்ப முயன்றார்கள் இருவரும். அதற்குள் சுகன்யா ஆவேசத்துடன் எடுத்த விளக்கை அவர்கள் மேல் வீசினாள். பல்ப் என்பதால் அது சட்டென்று தீப்பிடித்தது. எண்ணெய் சிதறி குடிசை பற்றி எரிந்து தீச்சுவாலை எழுந்தது. அந்த வெளிச்சத்தில் வேங்கைகளின் பாசறையை நோக்கி நடந்தாள் சுகன்யா.
பாண்டியூர் புலேந்திரா
நன்றி
http://www.battieezhanatham.com
|
|
|
| ரணிலா? மகிந்தவா? |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:32 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக விடுதலைப் புலிகள் எவ்வித நிபந்தனையையும் தமிழ் மக்களுக்கு விடுக்கவில்லை.
வாக்களிப்பது, அல்லது வாக்களிக்காது விடுவது அல்லது ஒரு வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்ற கருத்து தற்போது விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழினம் சிங்களத் தலைமைத்துவங்களால் மிகமோசமான முறையில் ஏமாற்றப்பட்டது. தற்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் இன்னுமொரு முறை சிங்களப் பேரினவாதத்தினால் ஏமாற்றப்படுவற்கு தமிழர் தரப்பு தயாராகவில்லை.
தற்போது தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமிழ் மக்களுக்கு சுயாட்சியையோ அல்லது சுயநிர்ணய உரிமையையோ வழங்கக் கூடிய வகையிலில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டு வருவதாக தற்போது பிரசாரக்களத்தில் ஈடுபட்டுள்ளது. தற்போது பலவீனப்பட்டு இருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலப்படுத்துவது, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த் தைகளை மீள ஆரம்பிப்பது, மற்றும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு போன்றன ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி வாக்களித்தால் மட்டும் சமாதானம் வந்துவிடப்போவதில்லை. ஏனெனில் எந்தவொரு சமாதானத் தீர்வும் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் இது முக்கிய பிரச்சினை.
ஏனெனில் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது நிச்சயம் அது பேரினவாதிகளினால் தோற்கடிக்கப்படும் என்பது உறுதி. அதேவேளை பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாட்டுடன் தான் சமாதான முயற்சி மேற்கொள்ளப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இதுவும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஒருபோதும் ஏற்படுத்தாது. ஏனெனில் இனவாதக் கூட்டுடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிக்கு ஒத்துழைக்குமா? என்றால் அது சாத்தியமற்றதே. இதேவேளை இன்று சமாதான சூழல் பலவீனப்பட்டுப் போவதற்கும் காரணம் போர் நிறுத்த சூழலில் தமிழ் மக்கள் மீது திணித்திருக்கின்ற நிழல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே நிழல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாயின் ஒட்டுப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். இது போர் நிறுத்த உடன்படிக்கையில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவ்விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் நிகழ்ச்சி நிரல்"என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனையும் தெளிவுபடுத்தவில்லை. பின்னர்கூட தேர்தல் பிரசார மேடைகளில் கூட இவ்விடயம் தெளிவுபடுத்தப்படாதுள்ளது.
உண்மையில் இவ்விவகாரமே சமாதானச் சூழலை மிக ஆபத்தான நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது. அண்மையில் திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவை விடுத்திருந்த அறிக்கையில் ஒட்டுப்படைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் இந்த வேண்டுகோள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எவ்வித பதிலுமளிக்கவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். மீண்டும் போர் மூளக்கூடாது எனும் இதய சுத்தியுடனான எண்ணங்கள் ஐ.தே.கட்சிக்கு இருக்குமானால் இதற்கான பதிலைத் தெளிவுபடுத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறான எண்ணம் இல்லாத நிலை தெளிவாகத் தெரிகிறது.
இதேவேளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலையையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் தற்போது மூன்றாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது தடவை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன எதிரும் புதிருமாக நிற்கின்ற சூழலில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக ஐ.தே.கட்சி அவசரகாலச் சட்டம் ஒரு மாதம் அமுல்படுவதற்கு ஆதரவளித்தது. அதேவேளை ஒரு மாதத்திற்கு மட்டும் தான் ஆதரவு வழங்குவோம். அதன் பின்னர் எந்தவித காரணம் கொண்டும் ஆதரவளிக்க மாட்டோம் எனத் தெரிவித்த ஐ.தே.கட்சி மூன்றாவது முறையாக அவசரகாலச் சட்டம் அமுலாக்குவதற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்களின் முகத்தில் கரிபூசியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் தற்போது அவசரகாலச் சட்டம் தேர்தல் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்கா படைத்தரப்பின் சோதனைக் கெடுபிடிகள் அதிகரித்துச் செல்கின்றது.
தமிழ் மக்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்து நிற்கின்றனர். இந்த நிலையில் இதய சுத்தியுடன் சமாதான முன்னெடுப்புக்களில் பங்கு கொள்கின்ற கட்சியாகவிருந்தால் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கக்கூடாது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பும் தேர்தலில் கடும் போட்டியில் குதித்திருக்கும் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியிருப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு என்னதான் பேசியிருப்பார்கள் என ஆராய்ந்த போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படப் போவதாகத் தீர்மானித்துள்ளார்களாம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியானால் அவருக்குப் பக்க வாத்தியம் பாடும் ஒருவராக அம்மையார் செயற்படலாம்.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயம், வேட்பு மனுத் தாக்கல் என்ற நிலையிலிருந்து காலம் தேர்தலை அண்மித்துக் கொண்டிருக்கும் போது அவரது அதிகாரங்களும் வலுவிழந்து போகின்ற நிலையை அவதானிக்க முடியும். பல்லுப் போனால் சொல்லுப் போச்சு"என்று கூறுவது போன்று பதவி துறந்த பின்பு ரணிலுடன் சந்திரிகா இணைந்து செயற்படுவது என்பது தீர்வு குறித்த நகர்வுகளுக்கு எந்தளவுக்குப் பயன்பாட்டை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி.
ஒருவேளை மகிந்த ஜனாதிபதியானால் மகிந்தவின் அதிருப்தியாளர்களை உள்ளடக்கி சுதந்திரக்கட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து உடைத்தெடுத்து ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைத்து மகிந்தவுக்குச் சவால்விடும் சக்தியாக உருவாகலாம். அவ்வாறான எண்ணம் இருந்திருந்தால் ரணில் - சந்திரிகா கூட்டுப் பயன்படுவதற்கு வாய்ப்புண்டு. இதேவேளை மகிந்தவின் சிந்தனைகளை ஆராய்வோம்.
அது மீண்டும் போரை விரைவாக ஆரம்பிப்பதற்கான சூழலைக் கொண்டிருக்கின்றது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எத்தகைய விபரத்தையும் அது கொண்டிருக்கவில்லை.
தாம் ஆட்சியமைத்தவுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் கொண்டுவருதல், சமஷ்டி ஆட்சி முறையை நிராகரித்தல், சுனாமிக் கட்டமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு குறித்த பேச்சுவார்த்தை, இந்தியாவை மீண்டும் உள்நுழைப்பது போன்ற விடயங்கள் மகிந்தவின் சிந்தனைகளாக உள்ளன.
குறிப்பாக இது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற எந்த அடிப்படை அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை. பொதுவாக பேரினவாத சக்திகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தச் சிந்தனை வடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நோக்கும் போது மகிந்த ஜனாதிபதியானால் போர் மீண்டும் மூழ்வது உறுதியாகிவிடும். ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையை இரு தரப்பும் சமபலத்தின் அடிப்படையில் கையொப்பமிட்டனர்.
உடன்படிக்கையில் மாற்றம் கொண்டு வருவதானால் இரு தரப்பும் கலந்தாலோசித்தே அதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஒரு தரப்பு தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவர முடியாது.
இதனடிப்படையில் சிறிலங்கா அரசு அல்லது ஜனாதிபதி மாற்றங்களைக் கொண்டுவர விரும்பினால் அது மீண்டும் போர் மூழ்வதற்கான சூழலையே உருவாக்கும் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மகிந்த ஜனாதிபதியாகும் பட்சத்தில் போர் மூளும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
இதனைவிட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நோக்கி ஒன்றையாட்சி முறையை மீண்டும் நினைவுபடுத்துகிறார். இதன்மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது. தமிழ் மக்களின் இறைமை, சுய நிர்ணயம், மரபுவழித் தாயகம் என்பன அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இவை இல்லாது ஒற்றையாட்சி முறைமையைத் தேர்தல் பிரசாரத்தில் ஆயுதமாகப் பாவித்து தென்னிலங்கை மக்களிடையே வாக்கு அறுவடையைப் பெறமுடியுமே தவிர சமாதானத்தைக் கொண்டுவர முடியாது.
ஒட்டு மொத்தத்தில் நோக்குமிடத்து மகிந்தவின் சிந்தனைகள்" தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் நிராகரித்து மீண்டும் போரை உருவாக்குவதற்கான விடயங்களையே வலியுறுத்துகின்றன. இந்நிலையில் இரு பிரதான கட்சி வேட்பாளர்களையும் நோக்குமிடத்து சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.
எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அவர்கள் சுயமாகத் தீர்மானித்து முடிவெடுப்பர் என்பது உறுதி.
பிரவீனா
நன்றி
http://www.battieezhanatham.com
|
|
|
| எப்படி இலக்குகள் எட்டப்பட்டனவோ அப்படி அடைவதே வழி |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:30 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
தென்னிலங்கையில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல், இப்போது எல்லாப் பொருட்களையும் நிகழ்வுகளையும் மேற்கோள் களையும் தனக்கான பரப்புரைக்குரியதாக மாற்றி இருக்கின்றது. பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தத்தம் எதிராளிகளை சகல வளங்களையும் வார்த்தைகளையும் பிரயோகித்து எதிர்கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் முன் வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடங்கி அவரது உரைகள், நடத்தைகள், கடந்த காலம் எல்லாம் அரசியலுக்காக மேடைகளில் சல்லடை போடப்படுகின்றன. இதன் மூலம் அவர் இவ்வாறு நாட்டை நாசமாக்கப் போகின்றார், இத்தகைய செயலைச் செய்தவரா நாட்டை ஆளப் போகின்றார், அமைதியை நிலை நாட்டப் போகின்றார் என்றவாறாக விளாசித் தள்ளப்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில் நியாய ப+ர்வமாக விமர்சனம் செய்யும் ஒருவருக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் எந்த விதத்திலும் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர் அல்ல என்பது தெளிவாகும். தமிழ் மக்களின் நோக்கு நிலையில் எந்த விமோசனத்தையும் தரச்சித்தம் இல்லாத தன்மையிலும் சிங்கள நோக்கு நிலையில் தமது பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் இருந்து விடுபடாத உறுதிப்பாட்டிலும் இருவரும் ஒரே எடையில்தான் இருக்கின்றார்கள்.
அவரவரின் அணுகுமுறைகளில் இருக்கும் வேறுபாட்டைத் தவிர எல்லாம் ஒன்றுதான். இது சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தல் என்ற வகையில் அவர்கள் தமக்குள் இழுபறிப்படுகின்றார்கள் என்று கருதினாலும், அடிப்படையில் அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பணயம் வைத்துத்தான் மோதுகின்றார்கள் என்பது அசட்டை செய்யக் கூடியதல்ல.
இரு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் ஆதாயத்துக்காகவும் அதிகார மோகத்துக்காகவும் தமிழ் மக்களாகிய எம்மைத்தான் வார்த்தைகளிலும் செயலிலும் போட்டு உதைக்கின்றனர் என்பது நிராகரிக்கப்படக்கூடியதல்ல.
தமிழர் சேனை இன்று அடைந்திருக்கின்ற ஒடுக்கிவிட இயலாத பலத்தின் காரணமாகவும் பெற்றிருக்கும் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும் நேரடியாக மிதித்து தேர்தல் அரசியல் நடத்த முடியாதிருக்கின்றதே தவிர வார்த்தைகளிலும் அதற்கு சமமான கலாசார யுத்தத்திலும் நிழல் யுத்தத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
இது விடயத்தில் இரு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈடுபடுகின்றன என்றால் அதற்கு எந்த விதத்திலும் சளைக்காமல் சில ஒட்டுக்குழுக்களும் செயற்படுகின்றமைதான் விசனத்துக்குரியது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய சிங்கள இனவாதத்தை புதிய ஆவணமாக தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்திருக்கும் மகிந்தவுக்காக வார்த்தையாடும் தமிழ்க் கட்சியொன்று?, அறவே தமிழ் மக்களால் ஏற்க இயலாததை ஏற்கச் செய்யவேண்டும் என்பதற்காக தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான தகவல்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தில் அரங்கேற்றப்படும் தேர்தலை இலக்கு வைத்த வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக்கி அவர்களை ரணிலின் ஆதரவாளர்கள் போல சித்தரித்து எதிர் மனோபாவத்தை உருவாக்க துடிக்கின்றது.
இதில் உள்ள மிகப் பெரிய முரண்பாடு என்னவென்றால் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படுகின்ற சீரழிவுகள், படுகொலைகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான குற்றவாளிகளாக விடுதலைப் புலிகளையே சித்திரிக்க முயல்கின்றமைதான்.
சிறிலங்கா படைகள் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள், தோற்றுவித்த புதைகுழிகள், மக்கள் வாழ்வுக்கு மறுக்கப்பட்ட பிரதேசங்கள் எல்லாவற்றுக்கும் சில சமயம் இனக்கலவரத்துக்கும் கூட விடுதலைப்புலிகள் தான் காரணமாக இருந்தார்கள் என்ற விதமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றின் மூலமாக தமிழ் மக்களை இத்தனை அவலங்களும் கடந்த பதினொரு ஆண்டுகளாக நிகழக் காரணமான ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரும் துரோகத்தனம் பற்றி தமிழ் மக்கள் எள்ளி நகையாடுவதைத் தவிர, அதனை எதிர்கொள்ளத் தலைப்படுவதைத் தவிர வேறு வழியிருக்காது.
குறிப்பாக தமிழ் மக்களின் கலாசார தளமென எண்ணப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளும் அந்நிய புலனாய்வு சக்திகளும் ஊடுருவவிட்டிருக்கும் கலாசார சீரழிவுகளுக்கு ஆதரவளிக்கும் போக்கும் அதற்கெதிராக குரல் கொடுப்போர், செயற்படுவோர் யாவரையும் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதும் இப்போது தேர்தல் அரசியலாகவே தீவிரம் பெற்றிருக்கின்றன.
அண்மைய நாள்களாக வீதிகளில் நின்று சாமானிய மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் - இளம்பெண்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவரும் சிறிலங்கா படைகளின் ஆதரவுடன் செயற்படும் குழுக்கள் நையப்புடைக்கப்படுகின்றன. ஒரு விழிப்புணர்வு அமைப்பாகவே திரண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் மேற்கொள்ளும் இந்த எதிர் நடவடிக்கையை திசைதிருப்பி அவர்களை மோசமான அடிதடிக்காரர்களாக சித்திரிக்கும் சின்னத்தனத்தை மேற்கொள்வதன் மூலம் எதனை வெளிக்காட்டுகின்றன?
அரச பயங்கரவாதத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக திரண்டெழுந்து போராடத் தலைப்பட்ட தமிழர் சேனையை பயங்கரவாதம் என்று சர்வதேச சமூகத்தில் சிறிலங்கா அரசு சித்தரித்ததற்கு சமமாக இந்த தமிழ் மக்களின் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளை விபரிப்பது மிக அப்பட்டமாக அவர்களை இனங்காட்டவே செய்கின்றன.
திடமாகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் மிக மலினமாக அவர்களிடம் மகிந்தவுக்காக வாக்கு வேட்டையாடப் புறப்பட்டிருப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நலனையும் அன்றாட வாழ்வியல் நலனையும் வியாபாரம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்கள்.
கடந்த ஆட்சியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், அது பற்றி எந்த வார்த்தைகளும் உறுதிமொழிகளும் தரத் திராணியற்று, தமிழர்கள் மீதே அவர்களின் தலைவிதி இதுதான் என்பது போல பழிசுமத்தும் வக்கிரத்தை தமிழ் மக்கள் சரியாகவே இனங்கண்டு கொள்வார்கள்.
அதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்கள் எதிலும் குறைந்தவர்கள் என்று அர்த்தப்படாது. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தமிழ் மக்களிடம் வாக்குகளைச் சேகரித்த மகேஸ்வரன் கூட இன்று அக்கட்சியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி எதிராகச் செயற்பட்டு வருவது ஒன்றே இதற்குப் போதுமான எடுத்துக் காட்டாகும். மிகப் பி;ந்திய உதாரணமாக அவசர காலச் சட்டம் அப்பாவித் தமிழ் மக்களை இலக்க வைத்து கொண்டுவரப்பட்டது என்பதை கூறிக் கூறியே சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அதற்கு இரண்டாவது தடவையாகவும் ஆதரவளித்துள்ளது.
மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எந்த விதத்திலும் வேறுபாடில்லாத கொள்கைகளையே வேறுவழிகளில், வேறு வார்த்தைகளில் முன் வைத்திருக்கும் ரணில், தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தான் விற்பனைப் பொருளாக்குகின்றார். மிக எளிதாக கடந்த மூன்றாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமின்றி அமுலில் இருக்கும் போர் நிறுத்தத்தை பிரதான வாக்குப் பொறுக்கும் பெட்டியாக கையாளுகின்றார்.
குறைந்த பட்சம் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிக்க உருவான பொதுக் கட்டமைப்புக்காகவோ, அல்லது ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களுக்கு புனர்வாழ்வளிக்க முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்காகவோ, திடமாக குரல்கொடுக்க திராணியற்றுத் தான் இது வரையும் இருக்கின்றார். அவரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய இந்த அற்ப விடயத்துக்காக குரல் கொடுப்பது அதிக சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மற்றவருக்கு வழங்கிவிடுவதாக அமைந்துவிடும் என்ற அச்சம் கொண்ட மனப்பாங்குதான் உள்ளது.
இந்த விசித்திரத்தில் அவர் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனத்தின் வரிகளை நம்பி தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது விவேகமற்ற ஒன்றேயாகும். ஆனால், அவர்கள் இரு பகுதியினரும் தமிழ் மக்களை நோக்கி குறிப்பாக தமிழர் சேனையின் நிர்வாகப் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரப் போவதாக பிரயத்தனப்படுகின்றார்கள்.
இது விடயத்தில் நாம் முன்னுணரக் கூடிய ஒரு விடயம் உள்ளது. தமிழர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாக்குச் சாவடிகளை நிறுவுமளவுக்கு அவர்களை நியாயமாக வாக்களிக்கும் உரிமையையே மறுப்பவர்கள் தமிழர்களை வருத்திப் பெறும் வாக்கில் எதனை அள்ளித் தந்துவிடப் போகின்றார்கள்?
ஆக, இந்த தேர்தலினால் ஆவதொன்றுமில்லை@ வல்லமை வகுத்த வழியில் செயற்பட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை வரை எப்படி எப்படி தமிழர்களின் இலக்குகள் எட்டப்பட்டனவோ அப்படி அப்படி அடைவது தான் புத்திசாலித்தனமானது.
-ஞாபகன்
நன்றி
http://www.battieezhanatham.com
|
|
|
| தமிழ் இனத்தை அழித்துக்கட்ட உறுதி பூண்டுள்ள மகிந்த |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:27 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் இலங்கையில் எழுந்துள்ள இனச்சிக்கலைத் தீர்க்க பிரபாகரனைத் தான் அழைத்துப் பேச இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்கள் ஊடாக அறிகிறோம். இதையொட்டி நாம் முதலில் கேட்கும் கேள்வி மகிந்த ராஜபக்ஷ நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதே. வெற்றி பெறுவார் என்பது அவருடைய நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரை அது ஒரு கேள்விக்குறி. வெற்றி பெறுவார் என்ற ஊகத்தில் இவர் விடுக்கின்ற அழைப்பை, விலைபோக மறுக்கின்ற எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்பாரா என்பது நம் எல்லோரும் எதிர்நோக்கும் மிகப் பெரும் கேள்வியாகும்.
இலங்கையில் இனச்சிக்கல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரையோடிய புண்ணாக விளங்குகிறது. புரையோடிய புண்ணாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே. பல்லினம், பல்மொழி, பல்சமயம் உள்ள ஒரு நாட்டில் தொடர்ந்து ஒற்றையாட்சி கடைப்பிடிக்கப்படின் காலப்போக்கில் சிறுபான்மை இனங்கள் சீரழிவுக்காளாகி ஒழிந்து போவது தவிர்க்க முடியாததாகும்.
"Perpetual rule of the permanent sinhala Majority will eventually result in the liquidation of the Tamil speaking minorty" என்பது டாக்டர் இ.எம்.வி.நாகநாதனின் அழகிய ஆழமான ஆங்கிலச் சொல்லாட்சி ஆகும். (நிரந்தரப் பெரும்பான்மையான சிங்கள ஆட்சி, காலப்போக்கில் சிறுபான்மை இனமான தமிழ்பேசும் இனத்தை முற்றாக ஒழித்துக் கட்டும் என்பது அவரின் ஆங்கிலக் கூற்றின் தமிழ் ஆக்கம்) இதே கருத்தை அடங்காத் தமிழன் பேராசிரியர் சுந்தரலிங்கம் தனக்கேயுரிய நடையில் "counting of heads will lead to the cracking of heads" என கூறியுள்ளார். (முதலில் தலைகள் எண்ணப்படும் பின்பு தலைகள் உடைக்கப்படும் என்பது இதனின் தமிழாக்கம்) இக்கூற்றுக்களை மெய்ப்பிக்கின்ற முறையில்தான் நாடாளுமன்ற நாளாந்த நடவடிக்கைகளும், நாளும் பொழுதும் நடைபெறும் நாட்டின் நிகழ்ச்சிகளும் எம்மை உறுத்தியபடி உள்ளன. முன்பு கூறியதற்கமைய அதிகாரப் பரவலுக்கு மருந்தளவும் இடந்தராத ஒற்றையாட்சி அமைப்பே எம் இனத்தின் அழிவிற்கு காரணமாக அமைவதை நாம் அறிவோம்.
ஆனால் நீண்ட காலமாக அரசியலிலும், இன்று தலைமை அமைச்சராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த அரிச்சுவடி அரசியலைக்கூட அறியாதிருப்பது எமக்கு வியப்பைத் தருகின்றது. தமிழ்பேசும் இனத்தின் பேரழிவிற்கும், நாட்டின் அரசியலில் ஓர் நிலையற்ற தன்மை நிலவுவதற்கும், நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் இன்று விழுவதற்கும் அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே என்பதற்கு நாம் பெரும் ஆய்வு செய்யத்தேவையில்லை. ஆனால் ஒற்றையாட்சி அடிப்படையில்தான் இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் கொக்கரிப்பது எமக்குப் புரிய முடியாத புதிராக இருக்கின்றது. அவர் இன்று எடுத்துள்ள முடிவு இலங்கையில் எழுந்துள்ள இனச் சிக்கலுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை. மாறாக தமிழினத்தைப் பூண்டோடு தீர்த்துக்கட்டும் முயற்சியாகும். தீர்வு வேறு தீர்த்துக் கட்டுவது என்பது வேறு.
அனைத்துச் சிக்கலுக்கும் ஒற்றையாட்சியில் தான் தீர்வு காண்போம் என்று கூறும் இவர் மேலும் ஒருபடி சென்று தமிழர் ஒரு தேசிய இனம் என்பதைத் தாம் ஏற்கவில்லை என்றும், தமிழர் தாயகக் கோட்பாட்டை மறுப்பதாகவும், தமிழரின் தன்னுரிமை (சுயநிர்ணய) கோட்பாட்டை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார். இவை ஒருபுறம் இருக்க, கடல் கோளினால் பேரழிவிற்கு ஆளாகி தாங்க முடியாத துன்பத்துள் மூழ்கியிருக்கின்ற மக்களின் துயர் துடைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பைக்கூட தாம் முற்றாக நிராகரிப்பதாக, மருந்தளவும் மனிதாபிமானம் அற்ற நிலையில் - புத்த மதத்தின் பேரிலும், சிங்கள வல்லாண்மையின் பேரிலும் வெறியாட்டம் ஆடுகின்ற இம்மகிந்த ராஜபக்ஷ தான் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் பிரபாகரனுடன் பேசப் போவதாகக்கூறும் கூற்று ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவனின் பேச்சாக இருக்க முடியாது. மாறாக சிங்கள பௌத்த வல்லாண்மையின் முழு வடிவமாகவே அவர் விளங்குகிறார். இப்படிப்பட்ட ஒருவருடனும் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பேச வருவார் என்று மகிந்த ராஜபக்ஷ காண்கின்ற கனவு வெறும் பகற்கனவே ஆகும்.
ஈழத் தமிழினம் பல தமிழ்த் தலைவர்களைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் அவர்கள் பல தடவைகள் தடம் புரண்ட தலைவர்களாக மாறியதன் விளைவுதான் இன்று இத்தமிழினம் கதிகலங்கிய நிலையில், எம்மண்ணிலேயே வேரோடு சாய்க்கப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளது. தந்தை செல்வா போன்ற சில தலைவர்கள் தொலை நோக்குடன் சிந்தித்து செயலாற்றியது உண்மை. ஆனால் அவர்களுடைய அற வழிப்போராட்டம் வெறிபிடித்த சிங்களத் தலைமைப்பீடத்திடம் எடுக்கப்படவில்லை. எனவே தான் 1976ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் - தமிழ் மக்களுக்கு அளித்த இறுதி உயிலில், "சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு"என்று கூறிய கூற்று இங்கு நாம் நினைவு கொள்ளத்தக்கது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் "எம்மை நத்துவாய் என எதிரிகள் கோடிட்டு அழைத்தாலும் தொடமறுக்கின்ற"- ஆவது அறியும் தொலைநோக்குச் சிந்தனை உடைய உள்ளுணர்வு உள்ள எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏமாற்றலாம் என்று மகிந்த ராஜபக்ஷ கருதுவாராயின் அவர் தன்னைத் தானே ஏமாற்றுகிறார் என்பது பொருள்.
மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஞானத்தை - இல்லை அரசியல் அஞ்ஞானத்தை இவ்விதம் புட்டுக்காட்டி விளக்கியுள்ள நாம் ஐ.தே.கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது எமக்கு ஏதோ தீராத காதல் என்று எவரும் எண்ணி ஏமாற வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அறிக்கையில் இனச்சிக்கலைத் தீர்க்க இணைப்பாட்சி என்ற சொல் கையாளப்பட்டிருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அதே அறிக்கையில் இணைப்பாட்சியின் சாயல் கொண்டுள்ள, இந்திய அரசியல் அமைப்பை பின்பற்றலாம் என்று கூறும் சொற்றொடர்கள் எமக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்வோமோ நாமறியோம்.
பிரிவு 356 ஐ வைத்துக் கொண்டு மாநில அரசுகளைக் கலைக்கின்ற அதிகாரம் இந்திய மைய அரசுக்கு உண்டு. இதனை சிறிலங்கா அர சும் கடைப்பிடிக்கின் எத்தகைய சீரழிவு ஈழத்தமிழருக்கு உருவாகும் என்பதை எம்மில் எத்தனை பேர் எண்ணிப் பார்க்கின்றார்கள். நிலப்பரப்பற்ற நிலையில் இணைப்பாட்சி இயங்க முடியுமா?
இணைப்பாட்சியை வாயளவில் உச்சரிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை, தமிழருக்குத் தாயகம் உண்டு என்பதை, தமிழருக்குத் தன்னுரிமையை நிலைநாட்டுகின்ற உரிமை உண்டு என்பதை, அவர் ஏற்கிறாரா என்பதை நாம் அறிய விரும்புகின்றோம். இவற்றை ஏற்காத நிலையில் இணைப்பாட்சி எவ்விதம் உருவாக முடியும். "அந்தரத்தில் இருக்கின்ற இந்திரலோகத்திலா"இணைப்பாட்சியை உருவாக்கித்தர இருக்கிறார். மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் இனச்சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என இரு தலைவர்களும் கூறுகிறார்கள். மிக்க எண்ணிக்கைப் பெருக்கமுடைய சிங்கள மக்கள், பொதுமக்கள் வாக்கெடுப்பில் (சுநகநசநனெரஅ) இணைப்பாட்சிக்கு இசைவு தெரிவிப்பார்களா? இரண்டு கட்சிகளும் இணைந்த நிலையில்தான் 2/3 விகிதாசார அடிப்படையில்தான் இணைப்பாட்சிக்கு ஆதரவாக நாடானுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய நிகழ்ச்சியா? யார் யாரை ஏமாற்ற முயல்கிறார்கள்.
இரு தலைவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் படைப்பலப் பெருக்கம் பேசப்படுகின்றது. படைப்பயிற்சி பற்றியும் பேசப்படுகின்றது. அத்தோடு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாதுகாப்பு நிதியாகக் கோடிக்கணக்கை அரசாங்கம் ஒதுக்கிய போது ஐ.தே.கட்சி அதற்கு ஆமோதித்து வாக்களித்தது. அவசரகாலச் சட்டம் நீடிப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்த போதுகூட, அரசுக்கு ஆதரவாகத்தான் ஐ.தே.கட்சி வாக்களித்தது. இவை அண்மைக்கால நிகழ்ச்சிகள். தமிழர்களை அழிப்பது என்று வரும் போது இரு கட்சிகளும் ஒன்றுபடுவர்.
சிறிது பின்நோக்கிப் பார்ப்போமாயின் புத்த தர்மம் பேசும் சிங்களக் கட்சிகள் வாள் ஏந்திய சிங்கக் கொடியைத் தம் தேசியக் கொடியாக ஏற்றியுள்ளது. இதை எதிர்த்து அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் நாடாளுமன்றத்தில் நடாத்திய போராட்டம், பின்பு பதவி துறந்து தன் கொள்கையை நிலைநாட்டியதை வரலாறு பதித்துள்ளது. "இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமை வாக்குரிமைச் சட்டம்"இன்று இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கின்றது. நாளை எமக்கும் இதுவே ஏற்படும் என்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது தந்தை செல்வா கூறிய தீர்க்க தரிசனம் எவ்வளவு தூரம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்ணாரக் கண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் தமிழனின் பிரதிநிதித்துவம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டு பலவீனமான குரலாக இன்று மாறியிருப்பதற்கு ஐ.தே.கட்சிதான் காரணம் என்பதை சிந்திக்கின்ற தமிழன் எவனும் மறுக்க முடியுமா? இக்குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதனால் மலையக மக்களின் எட்டுப் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதனை வசதிக்காக யார் மறந்தாலும் நாம் மறப்பதற்கில்லை. இவ்வெட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குப் பதிலாக இவ்வெற்றிடத்தைச் சிங்களப் பிரதிநிதிகள் நிரப்பயிருப்பதையும் நாம் எளிதில் மறக்க முடியாது.
எங்கள் தமிழீழ மண்ணில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்டு அரசின் ஆதரவோடு அம்பாறையை அபகரித்த நிகழ்ச்சியையும், திருகோணமலையில் திரியாய்த் தொகுதியைச் சிங்களவருக்காக உருவாக்கியதையும், முல்லைத்தீவில் மணலாற்றை விழுங்கி ஏப்பமிட எடுக்கும் முயற்சியையும் நாம் ஆழ்ந்த கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழீழ மண்ணின் நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் அபகரித்து தமிழீழ மண்ணைத் துண்டாடுகின்ற முயற்சிகளுக்கு ஐ.தே.கட்சியே பெருங்காரணம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் வரைந்தே உள்ளனர். எனவேதான் மகிந்த ராஜபக்ஷவை வேண்டாம் என ஒதுக்குகின்ற நாம், ரணில் விக்கிரமசிங்காவையும் அதே கண்ணோடு பார்த்து அவரையும் எமக்கு வேண்டாதவர் என ஒதுக்குகின்றோம்.
வருகின்ற குடியரசுத் தேர்தலில் நாம் உணர்ந்தோ, உணராமலோ எந்தக் குடியரசுத் தலைவருக்காவது வாக்களிப்போமாயின் நாம் தேசிய நீரேட்டத்தில் இரண்டறக் கலந்து கொள்கிறோம் என்றுதான் பொருள் கொள்ளப்படும். தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்ற நாம் தமிழீழம் தான் எங்கள் முடிந்த முடிவென்று கூறுகின்ற நாம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எம் விடுதலைப் புலிகளுடன் நாம் எழுப்புகின்ற குரல் பொருள் பொதிந்த குரலாக விளங்க வேண்டின் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும். வழக்காற்றில் உள்ள புரியும் பிறமொழியில் கூறின் நாம் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தே ஆக வேண்டும். "மக்களெல்லாம் பிரபாகரன் பக்கமென்று"நாம் வாயளவில் கூறுவதானால் எதுவிதப் பயனுமில்லை. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கின்ற முறையில் வருகின்ற தேர்தலையொட்டி நாம் அளிக்கின்ற தீர்ப்புத்தான் உலகின் கவனத்தை எம்பால் ஈர்க்கும் செயலாகும். "செய் அல்லது செத்துமடி| என்பது நாம் கடைப்பிடிக்கும் தாரகமந்திரமாக அமையட்டும். "தமிழன் வாழவேண்டின் தமிழன் தன்னை ஆழவேண்டும்"என்பது நாம் தருகின்ற புதிய குறள், குரல்.
மா.க.ஈழவேந்தன்
நன்றி
http://www.battieezhanatham.com
|
|
|
| பத்தியக் காய் |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:04 PM - Forum: மருத்துவம்
- Replies (1)
|
 |
கத்தரிக்காயில் பலவிதமான மாறுபட்ட வண்ணங்கள் உண்டு என்றhலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்றுதான். எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தாpக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். தற்காலத்தில் விதையே இல்லாத கத்தாpக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக் கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம்.
கத்தரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப் படுபவர்கள் கத்தாpக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி
தினகரன்.கொம்
|
|
|
| சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க* |
|
Posted by: வதனா - 10-28-2005, 09:01 PM - Forum: மருத்துவம்
- Replies (6)
|
 |
கீரைத்தண் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.
கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.
நன்றி
தினகரன்.கொம்
|
|
|
| டென்சன்காரர்களுக்கு கொழுப்பு அதிகம் |
|
Posted by: வதனா - 10-28-2005, 08:57 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
உடலில் கொழுப்புச்சத்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தேவைப்படுகிறது, இந்த லிமிட்டை தாண்டும்போது உடலில் பல நோய்கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது. சராசாpயாக, ஆண்கள் உடலில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகவும், பெண்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமான கொழுப்பு இருந்தால் பிரச்சினை தான். கொழுப்பு அதிகமானால் சுமார் 15 வகையான நோய்கள் ஏற்படுவதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய், வாதம். பித்தப்பை கோளாறுகள், சிறுநீரகக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். மேலும் இவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். எனவே அளவுக்கு அதிகமான கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதைக் குறைப்பதுவே சிறந்தது.
நன்றி
தினகரன்.கொம்
|
|
|
|