Yarl Forum
உள்ளங்கள் உறங்கும் வரை.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உள்ளங்கள் உறங்கும் வரை.... (/showthread.php?tid=2715)



உள்ளங்கள் உறங்கும் வரை.... - kuruvikal - 10-28-2005

<img src='http://img493.imageshack.us/img493/4247/pen3jk.jpg' border='0' alt='user posted image'>

<b>ஒரு துளி
உயிர்த்துளி
உணர்வுகள் தேங்கிட
உருவம் வாங்கிட
உள்ளங்கள் போலியாய்
உதிர்க்கின்றன
உண்மைகள் எங்கும்
உறங்குகின்றன...!

உறையும் கையுமாய்
உணர்வுகள் தாண்டி
உணரிகள் நம்பி
உண்மைக்கு
ஒரு திருப்பள்ளி எழுச்சி
அது சாதனை..?!
ஒரு வார்த்தை
உண்மையாய் இருந்தால்
ஏன் இது...??!

உறவுகள் ஊனமாக்க
உளறல்கள் உதிர்கின்றன
இல்லாத ஒன்றுக்காய்
இருப்பதாய் கற்பனை
ஒத்த முனை ஏன் கவராது
கவரும்....
ஆய்ந்து சொல்லி
சாதிக்கத் துடிக்கிறது
ஓர் உள்ளம்
தேவை அது - அதற்காய்
உண்மைகள் மீண்டும்
உறங்குகின்றன...!

உலகம் தட்டை
உண்மை அன்று
இன்றது கோளம்
அங்கு கோழைகள் யாருமிலர்
நாளை மீண்டும்
உண்மைகள் மாறும்
விதிகள் மாற்றும்
மதிகள் கலங்கும்..!
உணர்வுகள் வாங்கிடா
உண்மைகள்
உலகம் உணரும்
அழிவின் விழிம்பில்....!

அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!</b>


- Birundan - 10-29-2005

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.


- sathiri - 10-29-2005

நன்றாக உள்ளது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- suddykgirl - 10-29-2005

அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!


அண்ணா கலக்குகின்றீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!

கவி மழையை என்றும் இன்றுபோல் தொடர என் வாழத்துக்கள்


- kpriyan - 10-29-2005

நல்லாயிருக்கு குருவி.....


- tamilini - 10-29-2005

யாரையோ பேசிற மாதிரியிருக்கு. நல்லது சொன்னா எடுத்திக்கிறாங்களா. இப்படித்தான் மூஞ்சியை நீட்டீட்டு இருப்பாங்க போல. அதை விட மெளனமாய் இருக்கிறது மேல் அல்லவா குருவிகாள். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:அதுவரை....
நான் பேசி
என்ன பயன்
பேனா மை
கரைந்து படிகிறேன்
துளியோடு துளிகளாய்..!
உரைப்பவன் ஊமையாய்
உலகம் கொண்டாடும்
உண்மையாய்
உள்ளங்கள் உறங்கும் வரை...!



- Rasikai - 10-31-2005

கவிதை அருமை குருவிகாள். வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்.
Quote:உலகம் தட்டை
உண்மை அன்று
இன்றது கோளம்
அங்கு கோழைகள் யாருமிலர்
நாளை மீண்டும்
உண்மைகள் மாறும்
விதிகள் மாற்றும்
மதிகள் கலங்கும்..!
உணர்வுகள் வாங்கிடா
உண்மைகள்
உலகம் உணரும்
அழிவின் விழிம்பில்....!



- kuruvikal - 10-31-2005

கருத்துப் பகர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இங்கு சில சொற்கள் புரியவில்லை என்று கேட்க்கப்பட்டிருந்தது... அதில் ஒன்று உணரி...அதன் ஆங்கில அர்த்தம் sensor..!


- வெண்ணிலா - 11-01-2005

கவி அழகு அண்ணா