புதிய பதிவுகள்

06 Oct, 2025 | 04:50 PMimageஅகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற்படை தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலகின் பல்வேறு நாடுகளில்
New-Project-2-1.jpg?resize=600%2C300&sslமருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில்
06 Oct, 2025 | 12:37 PMimageயாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.https://www.virakesari.lk/article/227014
06 Oct, 2025 | 04:50 PMimageஅகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற்படை தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து உதவி கோரி, இந்த நாட்டு மக்களுக்கு நன்மைகளை வழங்குவதில் வணக்கத்திற்குரிய ராஜவெல்ல சுபூதி தேரர் மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டுதலுக்கு சுகாதார அமைச்சர் என்ற முறையில் தனது மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இதன்போது தெரிவித்தார்.அரசாங்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, நூறு மீட்டர் ஓடுவது போல மிக விரைவாகச் செய்ய முடியாது என்றும், மருந்துப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாகவும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்தச் சட்டங்களை மாற்றுவது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எழுந்துள்ள சில சிக்கல்கள் இன்று நேற்று எழுந்தவையல்ல. ஆனால் பிரிட்டிஷ் காலத்திலிருந்து இவை காணப்படுகின்றன என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அவற்றை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவை மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.சுகாதார அமைச்சகத்தின் சேவையின் மீது நம்பிக்கையை வளர்ப்பது தனக்கு ஒதுக்கப்பட்ட முதல் பணி என்று அமைச்சர் கூறினார். மேலும் அத்தகைய நன்கொடைகளை முறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார்.நாட்டில் தற்போதுள்ள சில சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் சில அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், நன்கொடையாளர்கள் அரசு இராஜதந்திரம் மூலம் உதவியைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட்டார்.வைத்தியசாலை செயற்பாடு மற்றும் அதற்குரிய அத்தியாவசிய உபகரணங்கள் வரை நன்கொடையாளர்கள் அளிக்கும் நன்கொடைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அடுத்த 10 ஆண்டுகளுக்கு வைத்தியசாலைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான உபகரணங்கள் சம்பந்தமான தரவுகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சகம் ஒரு சிறப்புத் திட்டத்தை தயாரித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். மஹரகம சிறி வஜிரநான தர்மயநாதிபதி தேரர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவைக் கொண்ட மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக விவகாரங்கள், வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரரால் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வை மருத்துவமனை சேவைகள் சபையின் நிர்வாக இயக்குநர் வணக்கத்துக்குரிய ராஜவெல்லே சுபூதி தேரர் ஏற்பாடு செய்தார்.இந்நிகழ்வில் நுவரெலியாவின் பிரதம பீடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், அமரபுர ஸ்ரீக தம்மரக்ஷித மகா நிகாயவின் மகாநாயக்க தேரர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய ஆனந்த மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய அக்குரட்டிய நந்த தேரர் மற்றும் மகா சங்கத்தினர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, இலங்கை தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் பிரஹதீப் விஜேசிங்க மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.WhatsApp_Image_2025-10-06_at_15.14.18__1WhatsApp_Image_2025-10-06_at_15.14.15.jpWhatsApp_Image_2025-10-06_at_15.14.16.jpWhatsApp_Image_2025-10-06_at_15.14.17.jpWhatsApp_Image_2025-10-06_at_15.14.19.jphttps://www.virakesari.lk/article/227042
New-Project-2-1.jpg?resize=600%2C300&sslமருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல்
image?url=https%3A%2F%2Fada-derana-tamilஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs
Published By: Vishnu19 Sep, 2025 | 05:36 AMimage(நா.தனுஜா)இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் ஜெனிவா ஊடக அமையத்தில் நடைபெற்றது. தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தனால் தொகுத்தளிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் வழக்கறிஞரான அலைன் வேனர், சர்வதேச சட்டத்தரணி மரியம் பொஸ்டி, பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் ஜுலி டுபே கக்னன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஸ்ரீ ஞானேஸ்வரன் (நிகழ்நிலை முறைமையில்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.அவர்கள் உள்ளகப்பொறிமுறைகள் மூலமாகவன்றி, சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக மாத்திரமே இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்October 4, 2025மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்— கருணாகரன் —‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன.1.   அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 2.   அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால்.3.   ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக.4.   அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வதேசத் தன்மையைக் கொண்டதாக தாமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக. இதையெல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் நிறைவேற்றாத காரணத்தினால், புதிய தரப்பொன்றின் மூலமாக அல்லது மாற்றுத் தரப்பின் மூலமாக இவற்றைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் மக்களுக்குரியவை. மக்களுக்குக்
கழுத்து காட்டும் ஆரோக்கியம்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல்நலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.கட்டுரை தகவல்சந்தன் குமார் ஜஜ்வாரேபிபிசி செய்தியாளர்29 செப்டெம்பர் 2025, 04:10 GMTமக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை.கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்யவே முயற்சிக்கின்றனர்.ஆனால் கழுத்துப்பகுதி வழக்கத்தை விட தடிமனாகவோ, ஒல்லியாகவோ இருந்தால் அது எதை உணர்த்துகிறது? இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட..
Published By: Digital Desk 305 Oct, 2025 | 12:06 PMimage“வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்!(சரண்யா பிரதாப்)இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது.இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது.
உலக விலங்குகள் தினம் இன்று04 Oct, 2025 | 12:19 PMimageஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக (World Animal Day) கொண்டாடப்படுகின்றது.இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது.விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும்.எனவே விலங்குகளை பாதுகாத்து அவற்றை பராமரிப்போம்.https://www.virakesari.lk/article/226865
நினைவு, மறதி, குழந்தைகள், மூளை, நரம்பியல்பட மூலாதாரம், KDP via Getty Imagesபடக்குறிப்பு, குழந்தை பருவ மறதி என்பது பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமையைக் குறிக்கிறது.கட்டுரை தகவல்மரியா சக்காரோபிபிசி உலக சேவை25 செப்டெம்பர் 2025, 09:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்நாம் பிறந்த அந்த நாள், நாம் எடுத்து வைத்த முதல் அடி, நாம் பேசிய முதல் வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்வின் முக்கியமான தருணங்கள். ஆனாலும் அவற்றில் எதையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஏன்?நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள் பல்லாண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடைகாண போராடி வருகின்றனர்.வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் இருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமை 'குழந்தைப் பருவ மறதி நோய்' என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதை விளக்கும் முயற்சியில் பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியரான நிக் டர்க்-பிரவுன், "இந்த விவாதம் இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. நாம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,தனியான ஈழம் இல்லை “1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா?தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் | Sinhala Journalist Exposed Balasingham Tamil Eelamஅதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் போகிறீர்கள்” என நான் கேட்டேன்'. அவர் சிரித்துக் கொண்டு
AVvXsEibKjOyrxW5mGSYz42eGf0Rw7MWq3vP8mOEஎனக்குத் தெரிந்த ஒருவர், இளைஞர், பொறுப்பானவர், பார்க்க ஆரோக்கியமாகத் தெரிபவர். அவருக்குத் திடீரென மூளைக்குச் செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வரும் நிலை ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அடுத்து ஓராண்டில் அவருக்கு மூளைக்கும் முதுகெலும்புக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டி வந்தது. அதையும் அறுவை சிகிச்சையால் சரி பண்ணினார்கள். அவருக்கு அதன் விளைவாக பக்கவாதம் வந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததும் மீண்டும் கட்டி ஏற்பட்டு அது புற்றுநோய் என உறுதிப்படுத்தினார்கள். ஊடுகதிர் சிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகியவனவற்றை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறார். நானும் செய்தியறிந்து மனம் வருந்தினேன். ஆனாலும் என்னிடம் அவர் சொன்ன ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது - மருத்துவர்கள் தன்னை டய்ட் உணவு மேற்கொள்ளச் சொல்லியிருப்பதாகவும், குறிப்பாக மாவுச்சத்தை குறைவாக எடுத்துக் கொள்ள
உங்கள் தோல் மூலம் கூட கருத்தரிக்க முடியும்பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicksகட்டுரை தகவல்ஜேம்ஸ் கல்லாகர்சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்1 அக்டோபர் 2025, 11:25 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர்.இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம்.ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி
சிறுகதைசிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி -- ஶ்ரீரஞ்சனி -சிறுகதை25 செப்டம்பர் 2025mother_and_daughter2300.jpg* ஓவியம் - AIsriranjani_photo.jpgகூட்டங்கூட்டமாகநின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘என்னையே இப்பிடி உலுக்கியிருக்கெண்டால் லக்கியாவின்ர குடும்பத்துக்கு எப்பிடியிருக்கும்?’ உள்ளங்கை வியர்த்துக்கொட்டுகிறது. பாடசாலைக்குள் காலடி எடுத்துவைத்தபோது, என் சப்பாத்துக்கள் போட்ட சத்தத்தைவிட என் இதயம் அதிக சத்தத்தில் அலறுகின்றது. யார், யார் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பீதி கடந்துசெல்வோரை நிமிர்ந்து பார்க்கவிடாமல் என்னைத் தடுக்கிறது.“Instagram, twitter எண்டு எல்லாத்திலும் படம்போடுற, கருத்திடுற வேலை எல்லாத்தையும் நிப்பாட்டிப்போடு! ஆர் என்ன சொன்னாலும் சொல்லிப்போட்டுப் போகட்டும். பள்ளிக்கூடம் போறனா, வாறனா எண்டிருக்கவேணும். படிப்பைத்தவிர வேறையொண்டும் உன்ரை வேலையில்லை, விளங்கிச்சுத்தானே?” விடிந்ததிலிருந்து குறைந்தது ஐஞ்சு தடவையாவது அம்மா சொல்லியிருப்பா.‘பீற்றரைப் பாத்தால், கொலைசெய்வான், அதுவும் துடிக்கத்துடிக்கக் கத்தியாலை வெட்டிக்கொலைசெய்வான் எண்டு சொல்லேலுமே?’ மீளமீள எனக்கு அதே நினைப்பாகவிருக்கிறது.இலக்கியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம். அவளின் படம் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலை graduation உடுப்பில், தடித்த உதடுகள் மெல்லப் பிரிந்த புன்சிரிப்பும், இரு தோள்களிலும்
திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் ..tamil-marriage-rituals.jpgஅன்புள்ள ஆண்களே..,இது எல்லா ஆண்களுக்கும் அல்ல...பெரும்பாலான ஆண்களுக்கானது...நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது.திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் கோட்டையைக் கட்டியுள்ளதாக நினைத்து ஓய்வு பெறுகிறார். ஆனால் உண்மை என்ன? அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தனியாக விடப்படுகிறார், அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தவர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறார்.இதை உடைப்போம்:1. அவருக்கு வயது 72, ஓய்வு பெற்றவர், தனியாக இருக்கிறார்.
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்-------------------------------------------------------------------large.Karur.jpgமேய்ந்து கொண்டும்சாணம் இட்டும்புரண்டு விட்டுசரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும்ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள்அன்று கடவுளே நேரே வருகின்றார் என்றுகுட்டிகளுடனும் கருக்களுடனும்ஆடாமல் அசையாமல்கடவுள் வரும் வழியில்ஆநிரைகள் அப்படியே நிற்கின்றனநாள் முழுதும்காவலர்களுடன் வரும் கடவுள்கள்கையை அசைப்பார்கள்எழுதி வைத்து வாசிப்பார்கள்இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள்மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள்கடவுள்களின் முன்னேயேஏதோ நடந்து ஆநிரைகள் சிலகுட்டிகள் சிலகருக்களில் சிலஎரிந்து நசிந்து மூச்சடக்கி என்றுஇறந்து போகின்றனஅன்று வந்த கடவுள்ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார்மிச்சமான கடவுள்கள்தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளேகொன்று குவித்தது என்கின்றார்கள்கடவுள்களின் போதகர்களும்தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள்இது தான் தருணம் என்றுஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம்'அவங்கள சும்மா விடாதீங்க
ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி?கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறுபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017)கட்டுரை தகவல்தினேஷ்குமார்பிபிசி தமிழுக்காக4 அக்டோபர் 2025நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று.விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி?இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில்
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.written by admin August 3, 2025IMG_1048.jpg?fit=1170%2C780&ssl=1 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும்.நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க
"தோற்றிடேல், மீறித்தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"-நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடத்தில் இல்லை.விடுதலைப்புலிகளின் கொடி:தவிபு அமைப்பின் கொடிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கொடியாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணக்கருவிற்கேற்ப 1977 அம் ஆண்டு வரையப்பட்டது. இது முதன் முதலில் 1978ம் ஆண்டு அவர்களின் கடிதத்தில் பாவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் இவ் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் 'சிறில் மத்தியூவின் அரசபணியில்' என்ற கடித உறைக்குள் வைக்கப்பட்டு இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது (ஆதாரம்: மூத்த உறுப்பினர் தேவர்).