Aggregator
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ

“..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது. மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்தரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா.?”
“..யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்ட படுவோர், உடன் கைது செய்ய பட்டு. இராணுவ ட்ரக்கில், ஏற்ற பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்ல பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்க பட்டு, கொல்ல பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடர பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டு உள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்..”
லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது;
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐநாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” இன்று நிற்கிறது.
சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும்.
இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு இராணுவதை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை.
ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன்.
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி

எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதியும் நியாயமும் வேண்டி கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் புதை குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படும் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.பேரணியின் இறுதியில் ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.
இதன்போது, சிறப்புரையை சம்மேளன தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான சத்தார் நிகழ்த்தினார் பிரகடனத்தை சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஷ் ஜமாலி வாசித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த பிரகடனம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தியும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தவும், முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீள வழங்கவும் வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி பங்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, அரசு உயர் பதவிகளில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேரணியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை பிரதிநிதிகள் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைத் தாங்கி நின்றனர்.







இந்தியாவின் ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு குறித்து அமெரிக்கா கோபத்தில்!
தமிழ்த் தேசிய பிரச்சினை விடயத்தில் கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் அரசு பிற்போக்குத்தனமாக உள்ளது ; தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டு
தமிழ்த் தேசிய பிரச்சினை விடயத்தில் கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் அரசு பிற்போக்குத்தனமாக உள்ளது ; தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டு
03 Aug, 2025 | 11:44 AM
![]()
ஆர்.ராம்
இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்று தமிழ் கேள்விக்கான அரசியல் தீர்வுக்கான கவன மாற்றம் இரண்டாவது இந்தியாவின் வளர்ந்து வரும் வகிபாகமாகும்.
கறுப்பு ஜுலை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை வெளிப்படுத்தியது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் அரை தன்னாட்சி அதிகார சுய-நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக 1957இல் பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1983நிகழ்வுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர 1983 மற்றும் 1984 இல் தனது தலைமறைவுக் காலத்தில் கட்சியின் மத்திய குழுவில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அது 1985 இல் தமிழீழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு என்ற தலைப்பில் 350பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இரகசியமாக வெளியிடப்பட்டது.
அதில் அவர் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான கேள்விக்கு ஒரு தீர்வாக எந்தவொரு சுயாட்சி முறைமையையோ அல்லது அதிகாரப்பகிர்வையோ ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்விதமான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து எதிர்த்திருந்தார். அவரது வெளிப்படையான நிராகரிப்பில் அவரது கட்சி 1981இல் போட்டியிட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளைக்கூட உள்ளடக்கப்பட்டிருந்தது.
ஜே.வி.பி.யின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு இந்திய இராணுவத் தலையீட்டிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்னரேயே இருந்தது. ஜுலை கலவரத்துக்குப் பின்னர் ஜி பார்த்தசாரதி தலைமையிலான தூதுக்குழு விஜயத்துடன் இந்திய இராஜதந்திர வகிபாகம் ஆரம்பித்திருந்தாலும் ஜே.வி.பி. அதற்கு முன்னராகவே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இந்திய தலையீட்டையும் ஜே.வி.பி எதிர்த்தது.
ஜே.வி.பி.இடதுசாரித்து சிந்தனைகளைக் கொண்டது என்ற அடிப்படையில் சமஷ்டியை ஏற்காது விட்டாலும் சீன மற்றும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வெளிப்படையான ஒற்றையாட்சி அரசின் கீழ் இன-பிராந்திய சுயாட்சியை ஏற்றிருந்தன. ஆனால் ஜே.வி.பி.அதற்கு கூட தயாரக இல்லை. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக விஜேவீர 1985இல் வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தி நிலைப்பாடுகளில் இருந்து தற்போது வரையில் அக்கட்சி மாறவில்லை.
அக்கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாகவோ அல்லது தற்காலிகமான தீர்வாகவோ அல்லது பகுதியளவிலான தீர்வாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்-பிராந்திய சுயாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய பிரச்சினையை ஒரு தனித்துவமான அரசியல் கோரிக்கையாகக்கூட அங்கீகரிக்கவில்லை. லெனினின் கோட்பாட்டில் பார்க்கின்றபோது ஜே.வி.பியானது சொல்லில் சோசலிசத்தைக் கொண்டிருந்தாலும் செயலில் பெருமிதத்தையே (இனவாதத்தையே)கொண்டிருக்கின்றது என்ற வரையறைக்குள்யே காணப்படுகின்றது.
விசேடமாக அரைச்சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களைக் கூட அங்கீகரிப்பதற்கு முன்வராது விட்டாலும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன, வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவiடைந்து 12ஆண்டுகளாகின்றன. ஆனால் தற்போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மௌனமாக உள்ளார்.
தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த அரசியல் உரையாடல், தற்போது 1957க்கு முந்தைய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடம், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க புதிய இனப்படுகொலைக்கு நீதி கோரும் தலைமுறைக்கு எதிராக அநுர அரசை அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக விட்டுவிடும். அரசுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் முதலமைச்சர்களைக் கொண்டுள்ளோம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு முடியாது விட்டால் தெற்கில் சிங்கள பெரும்பான்மை இனப்படுகொலை'என்ற விடயத்தினைப் பயன்படுத்தி அதிதீவிர தேசியவாதத்துடன் பதிலளிக்கும் நிலைமையே உருவாகும். இது இனங்களுக்கு இடையிலான துருவமயமாக்கலை மேலும் அதிகரிக்கும். இந்த விடயம் சம்பந்தமாக ஜே.வி.பிக்கு கவலைகள் காணப்படவில்லை என்பது வெளிப்படையான விடயமாகும்.
ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. உலகளாவிய இடதுசாரி-தாராளவாதிகளின் வெறுப்பின் சின்னமாக இருந்த மஹிந்த கூட தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் போலியான முற்போக்கு நிர்வாகம், மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதான ஜனநாயகக் கட்சிகளும் தலைவர்களும் 1980களில் நிகழ்ந்தேறிய துன்பத்தின் முக்கிய முற்போக்கான கட்டமைப்பு விளைவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை, மௌனமான புறக்கணிப்பால் அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை, அவர்கள் திரண்ட மக்களாக வாழும் அருகருகே உள்ள பகுதிகளை இணைக்க முடியாதவாறு ஜே.வி.பி பறித்துவிட்டது. அத்தகைய ஜே.வி.பியினர் தற்போது என்.பி.பிஆக இருந்தாலும் மகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் எதிர்-சீர்திருத்தவாதிகளாகவே காண்பிப்பதோடு, ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை விட மிகவும் பிற்போக்குத்தனமானவர்களதக உள்ளது என்றார்.
ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.

தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.
செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது.
ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான்.
செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது.
இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு.
நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான்.
இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ?
இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள்.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள்.
நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது.
வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.
2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது.
அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.
எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது.
இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது.
எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும்.
இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ?
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
திருகோணமலை ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு
திருகோணமலை ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு
‘கன்சைட்’ சித்திரவதை சிறைக் கூண்டுகளில் வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அம்பலம் ; முன்னாள் கடற்படை தளபதி உலுகேதென்னவின் வாக்கு மூலத்தால் விரிவடையும் விசாரணைகள்
Published By: Digital Desk 3
03 Aug, 2025 | 11:03 AM
![]()
(எம்.எப்.எம்.பஸீர்)
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யினர் விசாரணையில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த 60 பேரும் யாரென அடையாளம் காண்பதற்கு, கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை பொல்கஹகவல நீதிவானின் உத்தரவூடாக கோரியுள்ளனர். எனினும் அந்த தகவல்கலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இதுவரை வழங்கவில்லையென சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ‘கன்சைட்’ எனும் நிலத்தடி வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று நடாத்திய விசாரணைகளின் போது கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம அல்லது கேகாலை சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டன.
இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அது குறித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்பித்தனர்.
அவ்வாறான நிலையில் கேகாலை மேல் நீதிமன்ற பதிவாளரின் முறைப்பாட்டுக்கு அமைய கேகாலையைச் சேர்ந்த குறித்து தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸாரால் கடந்த 2010 ஜூலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் விசாரணையில் பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் அவரை ‘கன்சைட்’ முகாமில் சிறை வைத்து காணாமலாக்கியமை வெளிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இது குறித்த விசாரணைகளில் இதுவரை அலவ்வ பொலிஸ் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாரும், கன்சைட் வதை முகாமின் பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது 2010 ஜூலை 23 ஆம் திகதி காணாமல் போன கேகாலை சாந்த அதிலிருந்து 6 மாதங்கள் வரை திருகோணமலை ‘கன்சைட்’ நிலத்தடி சித்திரவதை முகாமில் இருந்தமை சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்ப்ட்டது.
அதன்படியே, கடந்த 2010 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 வரை கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தியது. இதன்போது தான் 2010 ஒக்டோபர் முதலாம் திகதி உளவுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய ‘கன்சைட்’ முகாமை பார்வையிட சென்றதாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி.யினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு 40 முதல் 60 வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கன்சைட்’ என்பதை பதிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதையும், அது சட்ட விரோத தடுப்பு மையம் என்பதையும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஏற்றுக்கொன்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளனர். அதன்படியே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தண்டனை சட்டக் கோவையின் 356,141,296,32,47 ஆகிய பிரிவின் கீழ் கடத்தல் மற்றும் சிறை வைப்பு, சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருத்தமை, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட தண்டனைக் குரிய குற்றங்களை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த சட்ட விரோத செயலை அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க அறிந்திருந்ததாக சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரையும் அப்போது கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொலம்பகேவையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, கன்சைட் முகாமை பார்வையிட தான் என்ர போது, அங்கு விஷேட உளவுப் பிரிவு என ஒரு பிரிவு செயற்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையால் வழிநடத்தப்பட்ட பிரிவு அல்ல என்பதை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விசேட பிரிவுக்கு, உளவுத் துறையுடன் தொடர்புபடாத கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி, கௌசல்யா ஆகிய கடற்படை வீர வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பின்னர் தான் அந்த விசேட உளவுத்துறை பிரிவை கலைத்ததாகவும் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடற்படை விசேட உளவுத்துறை தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்னவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை இரத்துச் செய்தது. இந்த விவகாரத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி, கடற்படையின் விஜேகோன் உள்ளிட்ட சாட்சியாளர்கள் அளித்துள்ள சாட்சியங்களின் பிரகாரம் இரு வெளிநாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதனிடையே, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் நாமல், சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை கடற்படை உளவுப் பிரிவு அச்சுறுத்தும் வண்ணம் பின் தொடர்ந்த்துள்ளமை குறித்து பொல்கஹவல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து கடற்படை வீரர் விஜேகோனின் சாட்சியத்தை மையபப்டுத்தி, பருத்தித் துறையை சேர்ந்த்த கரன், சரீதா எனும் கணவன் மனைவியிடம் சாட்சியம் பெற அவர்களை தேடி சி.ஐ.டி. குழு சென்ற போது கடற்படை உளவுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்த்துள்ளனர். பருத்தித் துறையை சேர்ந்த குறித்த கணவன் மனைவி தற்போது சுவிட்சர்லாந்தில் வசிப்பது தெரியவரவே, சி.ஐ.டி.யினர் அவர்ளது வீட்டாரிடம் தகவல் பெற்று தொலைபேசியில் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பின்னர் அவ்வீட்டுக்கு கடற்படையினர் சென்று விசாரித்துள்ளனர்.
இது குறித்து சி.ஐ.டி.யினர் தகவல் தெரிந்த பின்னர், சி.ஐ.டி.யினரை பிந்தொடர்ந்த கடற்படையினரை சி.ஐ.டி.க்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பிந்தொடர உத்டவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து நீதிமன்றுக்கும் அறிவித்த விசாரணை அதிகாரிகள் ரூபசிங்கவை அழைத்து விசாரித்துள்ளனர். இதன்போது தனது முடிவுக்கு அமையவே தான் அவ்வுத்தர்வை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறித்த ரூபசிங்க எனும் லெப்டினன் கொமாண்டரும் அங்கு இருந்த நிலையில், இது குறித்து சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்துள்ளார்.
கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்பு படம்
கட்டுரை தகவல்
டானாய் நெஸ்டா குபெம்பா
பிபிசி செய்திகள்
3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது" என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார்.
கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து 2022 ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான் நீண்ட காலமாக உறைநிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை படைத்திருந்தனர் .
1994ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு என்பவர் தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய கரு இது. தற்போது 62 வயதாகும் லிண்டா ஆர்ச்சர்டு, தனது அப்போதைய கணவருடன் இணைந்து ஐ.வி.எஃப் IVF மூலம் குழந்தை பெறும் முயற்சியில் நான்கு கருக்களை உருவாக்கினார்.
அதில் ஒன்றை பயன்படுத்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தை வளர்ந்து தற்போது 30 வயது அடைந்துவிட்டது. மற்ற மூன்று கருக்கள் சேமிப்பிலேயே இருந்தன.

பட மூலாதாரம், Reuters
லிண்டா ஆர்ச்சர்டுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன பிறகும், அவர் தனது கருக்களை அகற்றவோ, ஆராய்ச்சிக்காக தானம் செய்யவோ அல்லது பெயர் குறிப்பிடாமல் வேறு குடும்பத்திற்கு கருவை தானமாக கொடுக்கவோ விரும்பவில்லை.
ஏனென்றால், உறைநிலையில் இருக்கும் கரு, குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் தன்னுடைய மகளுடன் அந்தக் குழந்தைக்கு தொடர்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.
நைட்லைட் கிறிஸ்டியன் அடாப்ஷன்ஸ் என்ற கிறிஸ்தவ கரு தத்தெடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படும் வரை, லிண்டா ஆர்ச்சர்ட், தனது கருக்களை சேமிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்தார்.
லிண்டா ஆர்ச்சர்ட் தேர்ந்தெடுத்த ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டம், நன்கொடையாளர்கள் கருவை தத்தெடுக்கும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அதாவது, கருவை நன்கொடையாக கொடுப்பவர், தத்தெடுப்பவர்களின் மதம், இனம் மற்றும் எந்த நாட்டவராக இருக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தின்படி நன்கொடை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
திருமணமான, காகேஸியன், கிறித்தவ தம்பதிக்கு தனது கருவை தத்துக் கொடுக்க லிண்டா ஆர்ச்சர்டு விரும்பினார். அந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஏனெனில் தனது குழந்தை "நாட்டை விட்டு வெளியே செல்வதில்" தனக்கு விருப்பமில்லை என்று அவர் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.
லிண்டா ஆர்ச்சர்டின் விருப்பப்படியே நன்கொடையாளர்களாக லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தனர். லிண்டா ஆர்ச்சர்டின் கருவை தத்தெடுக்க முடிவு செய்வதற்கு முன்பு, பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தம்பதியர் குழந்தை பெறும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட டென்னசியில் உள்ள ரிஜாய்ஸ் கருத்தரித்தல் மையம் (Rejoice Fertility) என்ற ஐவிஎஃப் மருத்துவமனை, கரு எத்தனை ஆண்டுகளாக உறைநிலையில் இருந்தது அல்லது அதன் நிலைமையை பொருட்படுத்தாமல், கிடைத்த எந்தவொரு கருவையும் பயன்படுத்தி தம்பதிக்கு வெற்றிகரமாக குழந்தை பெறச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறியது.
தானும் தனது கணவரும் "எந்தவொரு சாதனையையும் முறியடிக்க" விரும்பவில்லை, மாறாக "ஒரு குழந்தையைப் பெறவே விரும்பினோம்" என்று லிண்ட்சே பியர்ஸ் கூறினார்.
தனது கருவிலிருந்து உருவான குழந்தையை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளைப் போலவே இருப்பதை காண முடிந்தது என்றும் லிண்டா ஆர்ச்சர்ட் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு
03 Aug, 2025 | 10:09 AM
![]()
(நா.தனுஜா)
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், அவர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை தமது அலுவலகத்துக்கு வருகைதந்தோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டத் தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த மனிதப்புதைகுழி 1994 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறுகின்றன.
காணாமல்போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு எமது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பரந்துபட்ட முயற்சிகளின் ஓரங்கமாக, 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் 12(ஆ) பிரிவின் ஊடாக கீழான கடப்பாடுகளின் பிரகாரம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளை எமது அலுவலகம் கண்காணிப்புவருகிறது.
அதற்கமைய புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்துத் தீர்மானம் மேற்கொள்வதற்கு உதவுமாறு எமது அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என எமது அலுவலகம் நம்புகிறது.
எனவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் தொடர்பான சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் உடலியல் அம்சங்கள், உடைகள், முன்னைய காலங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் என்பன பற்றிய விபரங்கள், புதைகுழியில் உள்ள எச்சங்களின் நெருங்கிய உறவினர்களைத் தொடர்கொள்ளக்கூடிய தகவல்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து இந்த உடல்கள் இவ்விடத்தில் எவ்வாறு வந்தன என்பது பற்றிய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நாம் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்த உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஏனைய நபர்களை எமது அலுவலகத்pன் பயிற்சிபெற்ற அதிகாரிகள் நேர்காணல் செய்வார்கள். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கு எமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.
அதன்படி இதுகுறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், எமது தலைமை அலுவலகத்துக்கோ அல்லது எமது பிராந்திய அலுவலகங்களுக்கோ எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வருகைதந்து அல்லது தொலைபேசி ஊடாக எம்மைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.