Aggregator
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு
பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு
பதில் வழங்கமால் நழுவிய பிரதமர் ஹரிணி
--------- ----- ----- ----- ----
*பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு
*தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும் காரணம்!
---- ---- ----- -----
புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் சைவ சமய பாடநூல் விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை பற்றிய கேள்விக்கு பதில் வழங்கவில்லை.
சைவ சமய பாடநூல் தவறுகள் உட்பட மேற்படி சில கேள்விகளை சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சிக் குழு தலைவர் என்ற முறையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வினா தொடுத்தார்.
ஆனால் தமிழர் வரலாறுகள் பாடநூலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன, என்ற ஒரு கேள்வியே கேட்கப்படவில்லை என்ற தொனியில் தனது ஆசனத்தில் அமர்ந்தார் ஹரிணி.
தமிழ் வரலாற்று பாடநூலில் பௌத்த சமய வரலாறுகள் புகுத்தப்பட்டுள்ளமை பற்றி பல சந்தர்ப்பங்களில் என்னுடைய அரசியல் பத்தி எழுத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
சிங்கள மக்கள் தங்களை போற்றுவர் என நம்பி நூல்களை எழுதிய தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும், இந்த மூடி மறைப்புகளுக்கு பிரதான காரணம்.
பொலன்னறுவையில் உள்ள சிவன் - பார்வதி சிலை காதலர் சின்னம் என்று வரலாற்று பாடநூலில் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி கொழும்பில் நடந்த பாடநூல் கூட்டம் ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டிக்காட்ட முற்பட்டபோது, தமிழ் வரலாற்றுத் துறையின் மூத்த பேராசிரியர், தனக்கு அருகில் இருந்த அந்த ஆசிரியரை மெல்லச் சுரண்டி ”அது பற்றி இப்ப கதைக்க வேண்டாம்” என்று கட்டைக் குரலில் கட்டளையிட்டு நிறுத்தினார்.
அந்தப் பேராசிரியர், தான் தமிழில் எழுதிய வரலாற்று நூலில் சிவன் - பார்வதி சிலை என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் கூட்டத்தில் இருந்த பிக்குமார் மற்றும் சிங்கள அதிகாரிகள் சங்கடப்படக் கூடாது என்ற நோக்கில் சரியானதை சுட்டிக்காட்ட விடாமல், தடுத்து நிறுத்தி, சிங்கள அதிகாரிகள் முன்னிலையில் தன்னை ஒரு பக்கச் சார்பற்ற வரலாற்று பேராசிரியராக நிறுவி பெருமைப்பட்டுள்ளார்.
மறுபுறம் ---
தனது சொந்த இனத்துக்குத் தான் அநீதி இழைப்பதை அந்த பேராசிரியர் உணர மறுத்துவிட்டார்.
அந்த பேராசிரியர் தமிழ் மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் ஆங்கில மொழியில் எழுதியுள்ள வரலாற்று நூல்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளும் உண்டு.
அதாவது ஆங்கிலத்தில் தான் எழுதிய வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகளை நாசூக்காக மறைத்து, சிங்கள வரலாறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் அந்த பேராசிரியர்.
பொலன்னறுவையில் சோழர்கள் கட்டிய பல இந்துக் கோயில்களில் நடராஜர் சிலை மற்றும் பார்வதி சிலை போன்ற இந்து சமய சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே தமிழர்கள் அங்கு வாழ்ந்ததாலேயே இந்துக் கோவில்களை சோழர்கள் கட்டியிருக்கின்றனர்.
ஆனால் சோழ மன்னர்கள் ஏதோ பிராமணர்களை தூக்கிப் பிடிப்பதற்காக கட்டியுள்ளனர் என்ற தோற்றப்பாட்டை, சில தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் மடைமாற்றி எழுதியிருக்கின்றனர்.
தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலரினதும், தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சிலரினதும் வரலாற்று மூடி மறைப்புகள் சுட்டிக்காட்டப்பட்டு, மிகச் சரியான தமிழ் வரலாறுகள் மிக விரைவில் நூலாக வெளிவரவுள்ளன.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-