Aggregator

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

3 months 2 weeks ago

New-Project-171.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

“ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை “இரண்டாம் நிலை வரிகள்” என்றும் ட்ரம்ப் விவரித்தார்.

அதாவது உலகப் பொருளாதாரத்தில் மொஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணும் வர்த்தக பங்காளிகளையும் குறிவைப்பது ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான நேரடி வர்த்தகம் சரிந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான இந்த இரண்டாம் நிலை வரிகள் செயல்படுத்தப்பட்டால், அது மேற்கத்திய தடைகள் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போர் முழுவதும், மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் சொந்த நிதி உறவுகளில் பெரும்பாலானவற்றைத் துண்டித்துவிட்டன.

ஆனால் ரஷ்யா தனது எண்ணெயை வேறு இடங்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற வாங்குபவர்களுக்கு எண்ணெய் அனுப்புவதன் மூலம் மொஸ்கோ நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதிக்க அனுமதித்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யும்?

நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட இந்த ஆயுதங்கள் பின்னர் உக்ரேனுக்கு அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.

நேட்டோவின் விரைவான நடவடிக்கை முக்கியமானது என்று கூறி மார்க் ரூட் இந்த திட்டத்தை ஆதரித்தார்.

ஜெர்மனி, பின்லாந்து, கனடா, நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

1110412183_0%3A163%3A3065%3A1887_1920x0_

உக்ரேன் என்ன சொல்கிறது?

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார்.

உக்ரேனின் வான் பாதுகாப்பு, கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் மேலும் அமெரிக்க ஆதரவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் “பயனுள்ள உரையாடலை” நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ukraine-crisis-kellogg.JPG?resize=1063%2

அடுத்து என்ன நடக்கும்?

பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து விவாதிக்க ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சில நாட்களுக்குள் நடக்கலாம் என்று ட்ரம்பும் ரூட்டும் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் அறிவித்த 30% வரிகள் உட்பட ட்ரம்பின் பரந்த கட்டணத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஐரோப்பாவின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பதாகவும் AP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று கூறினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அவர் பிரஸ்ஸல்ஸில் கூறினார்.

https://athavannews.com/2025/1439192

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

3 months 2 weeks ago

செப்டெம்பர் அமர்வில் தமிழர் நிலைப்பாடு

லக்ஸ்மன்

செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுக்குத் தமிழர்கள் தயாராக வேண்டிய நேரமாக இதனைக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இந்த வருட அமர்வானது இலங்கையில் இடதுசாரி சித்தாந்தத்தின் கீழ் ஆட்சிக்கு வந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது எதிர்கொள்ளல்.

அந்தவகையில்தான் இந்த அமர்வானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. அத்துடன், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விஜயம். 

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு வடிவங்களிலும் தங்களது முயற்சிகளை 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்ட உரிமைகளை அடைவதற்கான முயற்சிகளை நகர்த்தி வருகின்றனர்.

இருந்தாலும், 16 வருடங்களை எட்டிவிட்டபோதிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முடியாததாக சர்வதேச சமூகம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு அமர்விலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கம் நகர்ந்து வருகிறது. இது தமிழர்கள் தங்களது எந்த முயற்சியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளமுடியாத நிலையையே ஏற்படுத்துகிறது.  

ஒவ்வொரு வருடத்திலும் இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள்  தொடர்பாக ஐ.நா. மனித உரிமை
பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், ஏற்கெனவே இலங்கை  தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் வலுப்பெறும் என்றெல்லாம் நம்பியிருப்பது மாத்திரமே தமிழர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. 

2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் போராட்டத்தைப் புதைத்ததுடன் ராஜபக்‌ஷ கூட்டணி இலங்கையின் ஏகாதிபத்தியவாதிகளாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள்ளிருந்த மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து அவரை ஜனாதிபதியாக்கி ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, சந்திரிகா பண்காரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெரும் கூட்டணி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தியது. இது மகிந்த ராஜபக்‌ஷ கூட்டணிக்கு பெரும் அடியாகவே அமைந்தது.

இந்தச் சூழ்நிலையையும் தமக்குச் சாதகமானதாக்க முடிந்த மகிந்த அணி மைத்திரியை தமது வலைக்குள் கொண்டுவந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்றிருந்த வேளையில், மகிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கிக் கொண்டது.

இந்த பதவி மாற்றத்தினை தவறு என்று நீதிமன்றம் சென்று நிரூபித்துக் கொண்ட ரணில் தரப்பு மகிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியை இல்லாமல் செய்தது, 
அதன்பின்னர் உருவாக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சித் தேர்தலில் தொடங்கி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன்படி, கோட்டாபய  ராஜபக்‌ஷ பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதியானார்.

பாராளுமன்றம் பெரும்பான்மைபலத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், கோட்டாபய  ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆட்சி நடவடிக்கைக் காலம் கொவிட் பெருந்தொற்றுக் காலமாக இருந்தது. அக்காலத்தில் அவர் மேற்கொண்ட முடிவுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவந்தது. 

அதன் காரணமாக ‘அரகலய’ போராட்டம் வெடித்து கோட்டாபய - ராஜபக்‌ஷ அரசாங்கம் இல்லாமல் செய்யப்பட்டது. நாட்டுக்குள் இருக்கும் போது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார்.

கோட்டாபய  ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி தனது பதவி 
விலகலை நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டே அறிவித்தார். 

நாட்டுக்கு வெளியே சென்று பதவி விலகலை அறிவித்த பின்னர், பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார். அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர்கள், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை ரணில் ஆட்சிக்கு வந்ததும் கைது செய்தார், நடவடிக்கை எடுத்தார்.

அவ்வாறான செயற்பாடுகள் தவறு என்ற விமர்சனங்களை நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் உருவாக்கிக் கொண்டார். இருந்தாலும் அவற்றினை அவர் சமாளித்தும் கொண்டார்.  ஆட்சியை நடத்துதல், சட்டங்களை உருவாக்குதல், தேர்தல்களை நடத்தாது காலம் கடத்துதல் என நகர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர்தான் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது.
இந்த ஒழுங்கில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு யுத்தத்தினை முள்ளிவாய்க்காலில் புதைத்து மௌனிக்கச் செய்ததன்.

பின்னர் தமிழ்த் தரப்பு போர்க்குற்ற, இன அழிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை, நல்லாட்சி என்ற பெயரில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, இணை அனுசரணை வழங்கியது, ஆனால், 

கோட்டாபய ஜனாதிபதியானதும் அதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் காலத்தைத் தாமதப்படுத்த இராஜதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில்தான் கால இழுத்தடிப்பு நடைபெறுகிறது. அரசாங்கம் என்று பொதுவில் பார்த்தாலும் அரசாங்கங்களின் மாற்றத்தினை தமக்குச் சாதகமாக இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்திக் கொண்டு 
வருகிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களுக்கான காலத்தை மனித உரிமைப் பேரவையில் கோரும் என்பதே நிச்சயமானது. 

இந்த நிச்சயத்தின் அடிப்படையைக் கொண்டுதான் செப்டெம்பருக்காக தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 
இலங்கை தொடர்பான விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப்புது தீர்மானங்கள் ஏற்படுத்தப்படுவதும்.

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்குவதும் காலங்கடத்துவதும் நடைபெறுகிறதே தவிர இற்றைவரை இத்தீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தலுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தது. அதேபோன்று, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காரணம் காட்ட முயற்சிக்கிறது.

மனித உரிமைகள் பேரவை அமர்வில் அரசின் கோரிக்கை சாதகமாகவே பரிசீலிக்கப்படும் என்பதற்கு அண்மையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கை இதற்கு ஒரு சாட்சியாகும்.

இதில் முக்கியம் என்னவென்றால், தமிழ் மக்களின்  தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கக் கூடிய ஆரோக்கியமான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதுதான். 

நீண்டகாலமாக நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற 
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையை 
முன்வைக்காத அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறை என்ற கண்துடைப்பில்தான் சர்வதேசம் நம்பிக்கை கொண்டிருக்கிறதா? என்றும் இந்த இடத்தில் சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

அந்த வகையில்தான், கண்துடைப்புகளாலேயே காலத்தை நகர்த்தும் அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கொள்ளப்பட வேண்டும் என்பதும் நினைவூட்டப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது.

உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள் நிகழாமை என வெளிப்பேச்சுக்கு நகரும் இலங்கை அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இந்த 2025 செப்டெம்பர் அமர்வினை தமிழர் தரப்பு பயன்படுத்துவது கட்டாயமானது. 

இலங்கை அரசாங்கம் கூறிவருகின்ற உள்ளகப் பொறிமுறையானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. மாறாக, சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது கவனிக்கப்படாததாக இருந்து வருகிறது. 

அதேநேரம், இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற சர்வதேச பொறிமுறையை விடுத்து, இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக நெறிமுறைகள் ஊடாகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துப்படி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்ரர் ரார்க் கருத்து வெளியிட்டமையானது, வெறுமனே ஒதுக்கி விடக்கூடியதொன்றல்ல. 

அத்துடன், இதுவே செப்டெம்பர் அமர்விலும் பிரதிபலிக்கும் என்பது தமிழர் தரப்புக்கு நினைவில் இருத்தல் வேண்டும். இதனை அடியொட்டியே வருகிற செப்டெம்பர்  மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான நகர்வுகள் அமைதல் வேண்டும்.  பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் வழங்கப்பட்டமை முதல் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர் நோக்கிவருகின்ற பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படாது என்பதுவே உறுதியானது.

அதனைக் கடந்து, சர்வதேச நீதிப்பொறி முறையே பொருத்தப்பாடானது என்பதாக 
அந்த நிலைப்பாடு இருக்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/செப்டெம்பர்-அமர்வில்-தமிழர்-நிலைப்பாடு/91-361055

அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்

3 months 2 weeks ago

அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் கொண்டதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக 22 வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அனுரா மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள் மூன்று மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன:

1) வெளியிடப்பட்ட ஆதாரங்களில் காணப்படுவது,

2) தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு பெறப்பட்ட பதில்கள், மற்றும்

3) பயனர்களால் வழங்கப்படும் நம்பகமான தகவல்கள்.

Manthri.lk பக்கத்தில் உள்ள Anura Meter ஐப் பார்வையிடுவதன் மூலம் பயனர்கள், யோசனைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அநுரவைக்-கண்காணிக்க-அனுர-மீட்டர்-அறிமுகம்/150-360993

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு!

3 months 2 weeks ago

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு!

1355444606.jpg

"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது.

மருத்துவ கலாநிதி சண்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், மருத்துவ நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

https://newuthayan.com/article/%22சிவபூமி_திருவாசக_அரங்கம்_மண்டபம்%22_திறப்பு!

வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!

3 months 2 weeks ago

வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!

adminJuly 15, 2025

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று, நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை, சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம், தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார்.

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர்  குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/217873/

ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!

3 months 2 weeks ago

ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!

adminJuly 15, 2025

Attack.jpg

ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.07.25) ஜேர்மன் நாட்டில் இருந்து சென்ற நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார்.

அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து, மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்னர்.

https://globaltamilnews.net/2025/217868/

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

3 months 2 weeks ago

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

adminJuly 14, 2025

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம்  சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம்  காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/217863/

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

3 months 2 weeks ago
நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months 2 weeks ago
பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன். இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள். மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன. இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.