Aggregator

வவுனியா - புளியங்குளம் வரையான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமானவை - பிமல் ரத்நாயக்க

3 months 3 weeks ago
10 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன. வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது. இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது. ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/229999

வவுனியா - புளியங்குளம் வரையான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமானவை - பிமல் ரத்நாயக்க

3 months 3 weeks ago

10 Nov, 2025 | 04:24 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ  முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம், வடக்கு புகையிரத வீதியின் புகையிரதக் கடவைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வடக்கு புகையிரத வீதியின் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பகுதியில் உள்ள புகையிரதக் கடவைகள் பயன்படுத்தப்பட முடியாத வகையில் இருப்பது தொடர்பிலும், வவுனியா புளியங்குளம் பிரதேசங்களில் புகையிரத கடவைகள் கடுமையாக சேதமடைந்துள்ளமை தொடர்பிலும் மற்றும் அவற்றினூடாக பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புகையிரத கடவைகளே சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த கடவைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பான புகையிரத பாதைகள் பொருத்தமான நிலைமையில் இருக்கின்றன.

வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கடவைகள் மட்டுமே பொலிஸாரால் பராமரிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத புகையிரதக் கடவைகளை அகற்ற வேண்டியுள்ளதால் அவை புகையிரத திணைக்களத்தால் பராமரிக்கப்படுவதில்லை. அவை பிரதேச மக்களால் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் புகையிரத திணைக்களத்தால் பொறுப்பேற்க முடியாது.

இதேவேளை மஹவ – ஓமந்தை புகையிரத பாதை வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தாலும் பாதுகாப்பற்ற வகையிலான கடவைகளால் அந்த வேகத்தில் பயணிக்க முடியாமையினால் அந்த கடவைகளை அகற்ற வேண்டியுள்ளது.

ஆனால், மக்களின் போக்குவரத்துக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். இதன்படி புகையிரதப் பாதையில் இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான கடவை வரையில் சமாந்திரமான வீதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அதேபோன்று கடவைகளில் மேம்பாலத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/229999

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months 3 weeks ago
செங்கோட்டைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 8 பேர் பலி Nov 10, 2025 - 08:30 PM டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. அதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் மாலை வேளையில் அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வேலை முடிந்து பலர் செல்ல கூடிய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், சதி வேலையாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்றன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. https://adaderanatamil.lk/news/cmht9rd7j01ifqplp3b0o3b17

மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.

3 months 3 weeks ago
ரவிராஜ் அவர்களின் கொடூரக் கொலை நிகழ்ந்த போது நான் கொழும்புக்கு வந்து இரண்டு மாதங்கள்.கொலை நடந்த இடம் மிகப் பெரிய பாதுக்காப்பு நிறைந்த இடம். சிங்களப் பேரினவாதம் எமக்காக அனைத்து மக்களோடும் இணைந்து போராடிய ஒருவரை கொடூரமாக கொன்று தீர்த்தது. கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள் ஐவரும் 2015இல் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைக்கு இன்றுவரை நீதி நிலை நாட்டப்படவில்லை. இந்தக் கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் தான் இன்று பாரிய ஐஸ் போதைப் பொருள் மூலப்பொருளை வைத்திருந்தாக கைதாகியிருந்த சம்பத் மனம்பெரி. ரவிராஜ் கொலையில் அவர் பின்னர் அரச தரப்பு சாட்சியாகவும் மாறியிருந்தார். இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் NPP/JVPயின் தமிழ் உறுப்பினர்கள் இந்தக் கொலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பது தான் பெரும் ஆச்சர்யம். இன்று தடுத்து வைத்திருக்கும் மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று அழும் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா? அன்று இந்தக் கொலையின் பின்னர் JVP வெளியிட்ட மோசமான அறிக்கையை நாம் மறக்கவில்லை. The JVP: "We don't agree with the political views of Mr. Raviraj. However, we respect the democratic right he has to hold such views. It is the political heritage of murderous separatist Tiger terrorists to savagely murder their political enemies". ஜே.வி.பி: "திரு. ரவிராஜ்சின் அரசியல் கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. இருப்பினும், அத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்க அவருக்கு உள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம். கொலைகார பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளின் அரசியல் பாரம்பரியம், அவர்களின் அரசியல் எதிரிகளை கொடூரமாக கொலை செய்வது" Vaishu Pusparaj

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months 3 weeks ago
பட மூலாதாரம், VEERU SINDHI 10 நவம்பர் 2025, 14:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை. மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images பட மூலாதாரம், ANI வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது. படக்குறிப்பு, வெடிப்பில் காயமடைந்தவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன? டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே சிவப்பு சிக்னல் காரணமாக மெதுவாகச் சென்ற வாகனம் மாலை 6.52 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் குறிப்பிட்ட வாகனத்தில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர். "வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், ன்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். படக்குறிப்பு, வெடிப்பு ஏற்பட்டதில் சேதமடைந்த வாகனத்தின் ஒரு பகுதி இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாகவும், சிலர் இறந்ததாகவும் டெல்லி காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். "சிலர் காயமடைந்துள்ளனர், சிலர் இறந்துள்ளனர். சரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிலைமை என்னவாக இருந்தாலும், விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்றார். 'கட்டடத்தின் ஜன்னல் குலுங்கியது' பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராஜ்தர் பாண்டே அந்தப் பகுதி காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. "நாங்கள் தீப்பற்றி எரிவதை பார்த்தோம்... நான் அதை என் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்க கீழே வந்தேன். வெடிப்பு ஏற்பட்டபோது மிகவும் பலத்த சத்தம் கேட்டது. கட்டடத்தின் ஜன்னல் அதிர்ந்தது'' என அருகில் வசிக்கும் ராஜ்தர் பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ''வெடிப்பு நடந்தபோது நான் கடையில் அமர்ந்திருந்தேன். திடீரென்று நான் இதற்கு முன்பு கேட்காத அளவுக்கு பலத்த வெடிப்பு சத்தம் கேட்டது. நான் மூன்று முறை விழுந்தேன். இதற்குப் பிறகு, அருகில் இருந்த அனைவரும் ஓடத் தொடங்கினர்" என்று செங்கோட்டை பகுதியில் கடை வைத்திருக்கும் ரெஹ்மான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஷார்ட் வீடியோ காணொளிக் குறிப்பு, செங்கோட்டை டெல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய பிரதமர் இக்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn23y182lo

பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!

3 months 3 weeks ago
பெண் விவகாரம்: ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக கால அவகாசம் கோரினார் செல்வம் அடைக்கலநாதன்! ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலக எதிர்வரும் ஜனவரி மாதம் வரை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கால அவகாசம் கோரியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டைப் பல தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்வைத்துக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் அடைக்கலநாதன் பிழையாக நடந்து கொண்டார் என்ற சாரப்படவே அனைத்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர். இந் நிலையில் அவர் உடனடியாகத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டுமென தலைமைக் குழு உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கால அவகாசம் கோரியுள்ளார். Jaffna Vision

மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.

3 months 3 weeks ago
சிங்கள பேரிவாத அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 19 ஆவது நினைவில்... சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட இளம் அரசியல் தலைவர் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜ் மாமனிதர் நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் விடுதலை கூட்டணியில் ( உதயசூரியன் ) இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் பதவி ஏற்றார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க உறுதியுடன் செயற்பட்டார். போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார். உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது. ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த நேர்காணலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். Kunalan Karunagaran

குட்டிக் கதைகள்.

3 months 3 weeks ago
காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல்போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!. இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது. ஆம் _ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது... 💝 அகவி விஜி

மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.

3 months 3 weeks ago

Maamanithar-Raviraaj-600x849-1.jpg

raviraj.jpg

ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ்.

Babu Babugi

மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.

3 months 3 weeks ago
ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ். Babu Babugi

இரசித்த.... புகைப்படங்கள்.

3 months 3 weeks ago
காலாவதியாகி விட்டது. அனேகமாக சுவியும் தமிழ்சிறியும் இணைக்கும் படங்கள் ஓரிரு நாட்களில் பார்க்கவில்லை என்றால் அப்புறம் பார்க்கவே முடியாது. இது தான் படம். இப்போது தெரிகிறதா? இப்போது தெரிகிறதா?

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

3 months 3 weeks ago
மாகாணசபைக்கு அப்போதிருந்த அதிகாரங்களை விட இப்போது குறைவாகவே உள்ளது. எப்போதாவது நடைமுறைப்படுத்தினாலும் என்பதால் அதிகாரங்களை மெதுமெதுவாக மத்திக்கே நகர்த்துகிறார்கள். இவர்களிடம் போய் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!

3 months 3 weeks ago
இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.