Aggregator

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

3 months 3 weeks ago
ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது Nov 10, 2025 - 12:47 PM விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ 21 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 715 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர, ஹஷிஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களுக்குத் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 12,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmhst7y8z01i0o29nohx71ze2

யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்!

3 months 3 weeks ago
10 Nov, 2025 | 12:17 PM யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்! | Virakesari.lk

யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்!

3 months 3 weeks ago

10 Nov, 2025 | 12:17 PM

image

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. 

இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர்.

குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.

யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்! | Virakesari.lk

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

3 months 3 weeks ago
சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025, 02:22 GMT இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்) 2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர். படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார். சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார். அறிகுறிகள் என்ன? கால் மற்றும் தலை வீக்கம் சிறுநீர் வெளியேற்றம் குறைவது சோர்வு பசி வாந்தி ரத்த சோகை தூங்கும் முறை மாறுவது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார். யாரை அதிகம் பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்) விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார். "வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார். இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர். நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது. பரிசோதனை அவசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்) சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. "காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன். சிகிச்சைகள் என்ன? சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும். இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது. தடுக்கும் வழிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார். தினசரி 45 நிமிட நடை பயிற்சி உடல் பருமனை தவிர்ப்பது குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது புகையிலை நுகர்வை தவிர்ப்பது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

3 months 3 weeks ago

சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 10 நவம்பர் 2025, 02:22 GMT

இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்)

2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர்.

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்

மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார்.

சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள் என்ன?

  • கால் மற்றும் தலை வீக்கம்

  • சிறுநீர் வெளியேற்றம் குறைவது

  • சோர்வு

  • பசி

  • வாந்தி

  • ரத்த சோகை

  • தூங்கும் முறை மாறுவது

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார்.

யாரை அதிகம் பாதிக்கும்?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்)

விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார்.

"வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார்.

இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு

இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர்.

நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது.

பரிசோதனை அவசியம்

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்)

சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.

"காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன்.

சிகிச்சைகள் என்ன?

சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்?

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.

அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது.

தடுக்கும் வழிகள் என்ன?

சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார்.

  • தினசரி 45 நிமிட நடை பயிற்சி

  • உடல் பருமனை தவிர்ப்பது

  • குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது

  • பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது

  • தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது

  • அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது

  • புகையிலை நுகர்வை தவிர்ப்பது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

3 months 3 weeks ago
10 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலாத்தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் இன்றைய தினம் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதிக் கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம். ஏற்பாட்டுக் குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெருந்திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய மாதமாகும். அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனத்தோடு செய்ய வேண்டும். அந்த வகையிலே இன்றைய தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அதனை தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் எழுச்சிக் கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு கட்சிகள் தலையிடக்கூடாது. கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றனர். முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி | Virakesari.lk

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

3 months 3 weeks ago

10 Nov, 2025 | 06:47 PM

image

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,

2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலாத்தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் இன்றைய தினம் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதிக் கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம். 

ஏற்பாட்டுக் குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெருந்திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய மாதமாகும். அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனத்தோடு செய்ய வேண்டும். அந்த வகையிலே இன்றைய தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். 

அதனை தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் எழுச்சிக் கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு கட்சிகள் தலையிடக்கூடாது. கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றனர். 

1000693868.jpg

1000693862.jpg

1000693866.jpg


முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி | Virakesari.lk

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!

3 months 3 weeks ago
மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது Published By: Vishnu 10 Nov, 2025 | 12:39 PM மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய நடமாடி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவரை சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் சட்டத்தரணிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர் தனது வழக்காடிய நல்ல சட்டத்தரணி இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் வழக்கு தொகையாக என 2 இலட்சம் ரூபாய் கோரியுள்ளார். அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது இந்த நிலையில் போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அப்போது குறித்த பெண் நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை முன்கூட்டியே பணம் வழங்கி 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது அவர் நல்ல சட்டத்தரணி என எண்ணிக் கொண்டார். இதனையடுத்து அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி கொண்டு எனக்கு கல்முனை திருகோணமலை போன்ற உயர் நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குறித்த வழக்கை எடுத்து நடாத்துமாறு கோரியதை அடுத்து அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை என்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து 3 வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (6) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சி மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதில் கைது செய்த போலி சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு வெளியில் சில சட்டத்தரணிகளை சந்தித்தும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டும் தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என (விசிட்டிங் காட்) அடையாளப்படுத்தும் அட்டையை காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எனக்கு திருகோணமலை கல்முனை, வாழைச்சேனை போன்ற நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் அங்கு ஆஜராக வேண்டியுள்ளதாக தான் ஒரு பிரபல சட்டத்தரணி போல வழக்குகள் அதிகமாக இருப்பது போல காட்டிக் கொண்டு தனது வாடிக்கையாளர்களின் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரியுள்ளார் இவ்வாறு போலி சட்டத்தரணி தனது பல வாடிக்கையாளர்களை பல சட்டத்தரணிகளுக்கு வழங்கியுள்ளது டன் வாடிக்கையாளர்களிடம் தனது சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் என அறிமுகப்படுத்தி கொண்டு வழக்கு தொகையாக பல இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார் என்றும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 பையில்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229950

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!

3 months 3 weeks ago
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது! கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர். போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக, மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வாதாடுவதற்காக சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர், இந்த போலியான சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை பெண்ணிற்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போலியான சட்டத்தரணி இந்த வழக்கிற்காக 2 இலட்சம் ரூபாவினை பெண்ணிடம் கோரியுள்ளார். குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி ஆகியோர், நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருப்பதாக முதலில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், மற்றம் வழக்குகளுக்கு தேவையான 16 ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கைது செய்துள்ள சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452408

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

3 months 3 weeks ago
பி,பி.சி. தமிழ் வானொலியும்... முழுக்க முழுக்க இந்திய புலனாய்வுத் துறை "றோ" வின் ஆட்களால் நிரம்பி வழிவதால்... ஒட்டு மொத்தமாக அவர்களை பதவி விலக்கி, புதியவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் சம்பந்தமாக... பி.பி.சி தமிழ் வானொலி பொய் செய்திகளை மட்டுமே சொல்லி வந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் அதன் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்.

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

3 months 3 weeks ago
பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா! 10 Nov, 2025 | 11:20 AM பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார். தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229969

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

3 months 3 weeks ago

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

10 Nov, 2025 | 11:20 AM

image

பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார்.

தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது.

அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/229969

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

3 months 3 weeks ago
தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்; ஜஸ்டின் பொய்லட் 10 Nov, 2025 | 01:28 PM இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் என்ற ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கமும் ஸ்த்திரத்தன்மை ஏற்பாடுவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியமாக என்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும். இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம் அமைதி மற்றும் வன்முறை ஏற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்த்திரத் தன்மையை பலப்படுத்தும். ஆகவே இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என நம்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/229984

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months 3 weeks ago
யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 10 Nov, 2025 | 02:56 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு திங்கட்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வழக்கினை ஆராய்ந்த நீதவான் 26 மீனவர்களுக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் இரு படகுகளையும் செலுத்தியவர்களுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229990

பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்

3 months 3 weeks ago
பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர் பலி; 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு! 10 Nov, 2025 | 11:41 AM பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்-வோங் சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கி.மீ முதல் 230 கி.மீ வரை வீசியதால் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயலுக்குப் பிறகு, தற்போது பங்-வோங் சூறாவளி தாக்கி வருகிறது. கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் அதிகளவானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளை தாக்கிய பங்-வோங் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு லூசோன் தீவின் அரோரா மாகாணத்தின் கரையைக் கடந்தது. இதன் காரணமாக லூசோன் தீவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/229965