Aggregator

புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல

3 months 1 week ago

புதிய கல்வி சீர்திருத்தம் – பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல

adminAugust 2, 2025

3-4.jpg?fit=800%2C613&ssl=1

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்றைய தினம் சனிக்கிழமை வடக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதிய கல்வி சீர்திருத்தத்தில், ஒரு மாகாணம், மாவட்டம் அல்லது பிராந்தியம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிராந்தியமும் முக்கியமானது. சமத்துவம் அங்கிருந்து தொடங்குகிறது. நம் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்க விரும்பினால், அனைத்து வளங்களையும் ஒரு பிராந்தியத்திற்கு, ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்க முடியாது. அது நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

அங்கு, கடினமான மற்றும் வளம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். கடினமான பாடசாலைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்து பாடசாலைகளிலும் டிஜிட்டல் வசதிகள், கற்றல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுகாதார வசதிகள், தண்ணீர், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், புதுமை இடங்கள் மற்றும் அழகியல் அலகுகள் வழங்கப்பட வேண்டும்.

அதற்கான நல்ல திட்டம் எங்களிடம் உள்ளது. அதற்காக, இந்த பொது விவாதத்தை நாங்கள் நடத்துகிறோம். ஏனெனில் இது கல்வி அமைச்சகம் அல்லது ஹரிணி அமரசூரிய அல்லது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீர்திருத்தம் அல்ல. இது இலங்கையில் தேசிய கல்வியின் சீர்திருத்தம். நாம் அனைவரும் இதைப் பற்றி ஒரு யோசனை பெற வேண்டும். நாம் அனைவரும் இதில் ஈடுபட வேண்டும்.

கல்வி சீர்திருத்தம் பற்றிய உரையாடலை உருவாக்குங்கள். ஆசிரியர் சங்கங்களுடனும், நிபுணர்களுடனும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனும் நாங்கள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளோம். நாங்கள் தொடர்ந்தும் அவ்வாறு செய்வோம்.

பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் துறையினரும் இதில் ஈடுபட வேண்டும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

3-1.jpg?resize=800%2C492&ssl=13-3.jpg?resize=800%2C468&ssl=13-5.jpg?resize=800%2C363&ssl=13-7.jpg?resize=800%2C437&ssl=13-2.jpg?resize=800%2C540&ssl=13-6.jpg?resize=800%2C502&ssl=1

https://globaltamilnews.net/2025/218729/

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

3 months 1 week ago
இவ்வளவு நாள படுத்துத் தூங்கி விட்டு இப்போது போகும் இலங்கை மனித குழு அங்கு போவதில் என்ன அதிரடி இருக்கிறது. ஒரு வேளை கதையை மாற்றி சங்கிலியன் காலத்து படுகொலைகள் என்று வரலாற்றை திரித்து எழுதப் போகிறார்களோ? முதலில் மனித உரிமைகள் ஆணைககுழு என்ற ஒன்று இலங்கையில் இருக்கிறதா?இசயத்தித் தலைப்பை பொறுப்புணர்வோடு இடவேண்டும். இந்திய ஊடகங்களின் தாக்கம். இப்போது நம்மவர்களின் டஊடகங்களில் கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது.

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

3 months 1 week ago
காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷாத் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு ­எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரி­யாக 35 வரு­டங்­க­ளா­கின்­றன. அன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக காத்­தான்­கு­டியில் பல்வேறு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும், பல்­வேறு குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது. இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நீதியும் கிடைத்­த­தாக இல்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli https://www.vidivelli.lk/article/19832

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

3 months 1 week ago

DSC06935-640x430.jpg

காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷாத் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு ­எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரி­யாக 35 வரு­டங்­க­ளா­கின்­றன. அன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக காத்­தான்­கு­டியில் பல்வேறு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும், பல்­வேறு குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது.

இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நீதியும் கிடைத்­த­தாக இல்லை.

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

https://www.vidivelli.lk/article/19832

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months 1 week ago
எல்லாம் கண்துடைப்பாகவே முடியும். ஒன்று இனத்துவ அடிப்படையில் சிங்களத்தின் காவலனான ராஜபக்ஸ குடும்பத்தைக் காப்பாற்றாது விடமாட்டார்கள் அல்லது இனக்கலவரத்தைத் தூண்டி திசைதிருப்பிவிடுவார்கள். சிங்களத்தை தவறாகத் தமிழினம் தொடர்ந்து மதிப்பிடுவதன் பயனாகவே யாழில் சிங்களப் பெரும்பான்மைக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். சிங்களம் புதிதாகச் சிந்தித்திருந்தால் ஒரு இராணுவத்தின் சாட்சியோடு உள்ள செம்மணியை வெளிக்கொண்டரும் செயற்பாட்டைப் பொறுப்போடு கையேற்று நடாத்தியிருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

3 months 1 week ago
ஆம், இப்படியாக அன்றாட வாழ்க்கையில் கட்டாயம் இயங்குவதை உடல் பயிற்சி ஆக்குவது, நேரமொதுக்கி உடற்பயிற்சி என்று ஈடுபடுவதில் உள்ள தெவிட்டல் அல்லது சலிப்பை குறைக்கும் அல்லது நீக்கி விடும். நான் செய்வது, வாராந்த மளிகை பொருட்கள் வாங்க செல்லும் போது, கடடையில் இருந்து அதிக தூரத்திலே வண்டியை தரிப்பது. காவு வண்டில் எடுப்பது இல்லை. மளிகை கடைக்குள் கூடையில் பொருட்களை காவுவது அதே போல வண்டிக்கும் மளிகை பொருட்களை காவி வந்தே ஏற்றுவது. (இது தான் இப்போது இங்கே gym களில் சொல்லப்படும் farmers walk, யாழ்ப்பாணத்தில் யுத்த நேரத்தில் எல்லாரும் செய்தது வாளியில் தண்ணி காவி). இவற்றுக்கு இயன்ற அளவு வேகமான நடை. என்ன 2 தரம் மளிகை பொருட்கள் வாங்க செல்ல வேண்டி வரலாம். அது பரவாயில்லை.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.

3 months 1 week ago
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாருடன், அவரது மகனும் தற்போதைய பதினோராவது நிர்வாக அதிகாரியுமான குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் படத்தில் காணப்படுகின்றார்கள். பட இணைப்பிற்கு நன்றி சுவியர்.

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months 1 week ago
ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன. தந்தையார் ஈடு வைத்த வீட்டை மீட்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்களே உதவி செய்து மீட்டுக்கொடுத்ததாகவும், மஹிந்த அரசியலில் இணைவதற்கு பணமின்மையால் பணிசெய்த இடத்தில் ஒரு வருட சம்பளத்தை கடனாகப் பெற்றே இணைந்ததாகவும் இவரது முன்னைய வரலாறு கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கோடிகளில் பணம், வெளிநாடுகளில் முதலீடு எப்படி வந்தது? இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏழை சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து, மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்து. இப்போ இவை எல்லாம் வெளிவரும் நிலையில் நாமல் ஒருபுறம், கட்சி உறுப்பினர் மறுபுறம் எச்சரிக்கை விடுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் எப்போ பூதம் வெளிக்கிளம்புதென்று. அதற்கு முதல் இவர்களை காப்பாற்றும் பரிவாரங்களை கைது செய்து இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

3 months 1 week ago
ஊடங்களின் உசுப்பேத்தும் செய்தித் தலைப்புகளும், தமிழும் படும்பாடானது 21ஆம் நூற்றாண்டின் கொடுமை. திருந்தவேமாட்டார்கள் போலுள்ளது. ஆதவன் நியூசுக்கு என்ன அதிரடி இருக்குதோ!

குட்டிக் கதைகள்.

3 months 1 week ago
பழமையும் புதுமையும் Santha Batumalai ·entdpsSoroc 0559f07t:ih2gef077103a1lil uctu193681u13fl9,9u0j · சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட! � தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது.. அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது. டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர். ‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்னார் அந்த நேரம் பார்த்து இன்னொரு போன். அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.. போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர். ‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார். ‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார். என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!! ‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார். அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்! நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன். மருத்துவர் பெற்ற பலன் இவ்வுலகும் பெற வேண்டி பகிர்கிறேன் படித்ததில் பகிர்ந்தேன் 🙏" ........! பிரச்சினை வரும்போது முயற்சித்துப் பார்க்கலாம் .......... !

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் } (2) ஆண் : மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் பெண் : மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா மதனா மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா……….. பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைக்கிறதே வணங்கிட வா பெண் : கண்ணா ஆஆஆ ஆஆ கண்ணா ஆஆஆ ஆஆ ஆண் : வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன் அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆஆஆ ஆஆஆ….. ஆண் : வான் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது வா என்றால் நாள் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல ........ ! --- மின்சார பூவே ---

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

3 months 1 week ago
முதல்வர் ஸ்ராலினை சந்தித்த பன்னீர்செல்வம். அந்தச் சந்திப்பில்... சின்னவர் உதயநிதியும், பன்னீர்செல்வத்தின் மகனும் கலந்து கொண்டார்கள்.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

3 months 1 week ago
ஆஸ்பத்திரி பிள்ளைப் பெறு பகுதியில் பார்த்தால்... துருக்கி, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று முஸ்லீம் பெண்களால் நிரம்பி வழியும். அங்கு ஜேர்மன்காரிகளை காண்பது அரிது. இந்த முஸ்லீம் ஆண்களுக்கு... ஆணுறை என்று ஒன்று, கடையில் விற்பது தெரியாது போலுள்ளது. 😂

காசாவில் 60000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் 18500 பேர் சிறுவர்கள் - பெயர் விபரங்களை வெளியிட்டது வோசிங்டன் போஸ்ட்

3 months 1 week ago
சமீபத்தைய பிரான்ஸ் , கனடா அதிபர்களின் அறிக்கைகள் மற்றும் இதுபோன்ற செய்திகள் எல்லாம் பார்க்கையில் பலஸ்தீனம் சுதந்திரத்தை நோக்கி "இம்மி இம்மி " யாக நகர்கின்றது போலத்தான் இருக்கு ....... நடக்கட்டும் நடக்கட்டும் . ......... !