Aggregator

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 1 week ago
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு - கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 01:11 PM மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். அக்வா பிளான்ட் இலங்கை - 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி நேற்று (21) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வான இன்று (22) விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இவற்றை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எமது அமைச்சின் 25 வருடகாலம் சேவையாற்றியவர்களுக்குரிய கௌரவிப்பும் இடம்பெற்றது. கடல்சார் சட்டங்களை முறையாக பின்பற்றி செயல்படும் கடற்றொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மீன்பிடி தொழில்துறையென்பது கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று மீன்பிடிப்பது மட்டும் அல்ல. அதனை சார்ந்து பல விடயங்கள் உள்ளன. எனவே, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது மேலும் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகங்களை கட்டியெழுப்புவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய மீன்பிடி கைத்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கமைய மீன்பிடித்தொழில்துறையும் நவீனமயப்படுத்தப்படும். மீனவ குடும்பங்களை நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம். மீன்பிடி தொழில்துறை மூலம் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அந்திய செலாவணியை பெறுவதற்கு வழிசமைக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். ” என்றார். https://www.virakesari.lk/article/231198

முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்

3 months 1 week ago
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி- கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, முதல் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தீபிகா டி.சி., "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்கள் அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம், இது மிகப்பெரிய வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். இது மிகவும் வலுவான அணி" என்று கூறினார். கொழும்புவில் நடைபெற்ற முதல் மகளிர் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சரிதா கிமிரே அதிகபட்சமாக 35 (ஆட்டமிழக்காமல்) ரன்களும், பிம்லா ராய் 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பாக கருணா கே அதிகபட்சமாக 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், ஃபுலா சரென் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A3fb9112c-212e-4105-b167-21b5002c948a#asset:3fb9112c-212e-4105-b167-21b5002c948a

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

3 months 1 week ago
ரணில் தம்பதிகளுடன் கலைஞர் கருணாநிதி மகள் கனிமொழி அவர்களும் நிற்கிறார். H.ராஜா ,அண்ணாமலை போன்ற தமிழக பிஜேபி தலைவர்களும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ரணில் சென்று இருக்கிறார். ஈழத்தில் சைவ கோவில்களை இடித்து விகாரைகளை கட்டும் போது கண்மூடி இருந்த ரணில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் சென்றது ஏன்?

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

3 months 1 week ago
இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள் தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.

இந்தியா எப்படி தோற்றது?

3 months 1 week ago
இந்த போட்டி ஆசிய அணிகளுக்கு இடையிலான Rising Stars (உயரும் நட்சத்திரங்கள்) போட்டி. இதில் இந்தியா அணிதான் பலம் பொருந்திய அணி. இந்தியா அணியில் பிரபல ஐபிஎல் வீரர்கள் Jithesh Sharma,vaibav suriyavamsi, Arya உட்பட பலர் விளையாடினார்கள், இலங்கை அணியில் விஜயகாந்த் சிறப்பாக 2 போட்டிகளில் விளையாடியதால் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண t20 இல் சேர்க்கப்பட்டார்.

இந்தியா எப்படி தோற்றது?

3 months 1 week ago
2008 இல் நடைபெற்ற மேற்கிந்தியா நியூசிலாந்து போட்டியில் இரு அணிகளும் 155 ஓட்டங்கள் பெற்றன. சூப்பர் ஓவரில் மேற்கிந்தியா அணி 25 ஒட்டங்களை ஒரு விக்கெட் இழப்புடன் பெற்றது. நியூசிலாந்து அணி 4 வது பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தாலும் 2 விக்கேற்றுகள் இழந்ததினால் மிகுதி 2 பந்துகள் இருக்கமுன்பே நியூசிலாந்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. கீழே உள்ள இணைப்பில் சுப்பர் ஓவரினை commentary இல் பாருங்கள் https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-new-zealand-2008-09-366700/new-zealand-vs-west-indies-1st-t20i-366707/ball-by-ball-commentary

இந்தியா எப்படி தோற்றது?

3 months 1 week ago
ஓஓஓ நன்றி கந்தப்பு. இதுவரை இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் போய்விட்டது. எனக்கு மட்டுமல்ல மற்றைய உறவுகளுக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

3 months 1 week ago
அல்வாயன், நான் ஏற்கனவே கூறியது தான். அவரவர் தமது மனத்திருப்திக்காக இவ்வாறான விடயங்களை செய்து தமக்குள் மகிழ்ந்திருப்பதற்கு எதிராக நான் கருத்து கூறவில்லை. அது அவரவர் உரிமை. ஆனால், இவை எதுவும் இலங்கையின் இன முரண்பாட்டை தீர்ககவோ தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வுக்கோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்பதை உணர்வதற்கு ரொக்கெற் விஞ்ஞானம் படிக்க தேவையில்லை. ஒரு சாமான்ய மனிதனுக்கு உள்ள அறிவு போதுமானது. அமெரிக்காவின் மசாசூசெற் மாநில தமிழீழ பிரகடனம் எப்படி தாயகத்தில் போராட்டத்துக்கு பாதகமான விளைவை தந்ததோ அது போல் தான் இதுவும் என்ற புரிதலுடன் அரசியல் செய்வதே தமிழ் மக்களுக்கு பலன் தரும். இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள். அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது. அதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்ய வேண்டியது வட கிழக்கு எமது மக்களை கல்வி பொருளாதார சமூக ரீதியிலான பலப்படுத்துதலை செய்ய உரிய முதலீடுகளை அங்கு செய்வதும், தம்பட்டம் அடிக்காமல் இலங்கை அரசின் பலவீனங்களை உபயோகித்து அதை செயற்படுத்துவதாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கையில் ஒரு தவிர்கக முடியா சக்தியாக கட்டியெழுப்புவது. இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!

3 months 1 week ago
மலையக பிரபலங்கள் பலரும் இந்திய பெண்களையே திருமணம் செய்வது ஏன்? அங்கேயுள்ள சொத்துக்களை பாதுகாக்கவோ எனும் ஐயம் எழுகிறது?

இந்தியா எப்படி தோற்றது?

3 months 1 week ago
சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.

இந்தியா எப்படி தோற்றது?

3 months 1 week ago
இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. @வீரப் பையன்26 @கந்தப்பு இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது. இதுபற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாமே?

துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?

3 months 1 week ago
துபாயில்... பறந்து காட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் அனைத்து பார்வையாளர்களின் கண் முன்பாக விழுந்து நொறுங்கிஇருக்கிறது. வீடியோக்களைப் பார்க்கும்போது விமானம் விழுந்து நொறுங்கும்முன்பாக விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் தப்பித்ததாக தெரியவில்லை. ஆக விமானியும் மரித்திருப்பார் என்பதே கணிப்பு.. உலகின் கண்களுக்கு முன் நடந்த ஆகப் பெரிய துயர மற்றும் அவமானகரமான சம்பவம் இது. இதே தேஜஸ் விமானம் இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் விபத்துக்கு உள்ளானது. இதே போன்ற விபத்துதான்அது. அந்த விபத்தில் நல்வாய்ப்பாக அந்த விமானத்தின் விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் குதித்து தப்பிவிட்டார். ஆனால் இன்று சற்று முன் நடந்த இந்த விபத்தில் விமானி தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். என்ன கொடுமை என்றால் ஏர் ஷோவுக்கு முன்பாக விமானத்தின் எரிபொருள்டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிந்ததை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த எரிபொருள் கசிவது ஓவர் ஃபில்லிங் எனப்படும் கொள்ளளவுக்கு மேல் எரிபொருளை ஊற்றியதால் நடந்தது என்று முடிவு செய்திருக்கிறார்கள். விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருளை அட்டைப் பெட்டிகள் வைத்து பிடித்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட விமானம் என்பதுதான் இதிலுள்ள ஹை லைட்டே.. தேச பக்தியை வைத்தே ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சியின்ஆட்சியில் போர் விமானங்கள் கூட ஊழலின் காரணமாக எவ்வளவு தரம் தாழ்ந்து தயாரிக்கப் படுகின்றன என்பதற்கான உதாரணம்தான் இந்த விபத்து. மேலே உள்ள படத்தில்... விமானத்தில் நடந்த எரிபொருள் லீக்கேஜை அட்டைப் பெட்டி வைத்து பிடித்த போட்டோக்களும் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோவும் கொடுத்திருக்கிறேன். முபாரக் அலி

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

3 months 1 week ago
23 Nov, 2025 | 04:43 PM (எம்.நியூட்டன்) யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம் இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231226

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

3 months 1 week ago

23 Nov, 2025 | 04:43 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து  காரைநகருக்கு  இலங்கை போக்குவரத்து சபையின்   பஸ் போக்குவரத்து  சேவை  திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்   அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம்  இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது. 

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/231226

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

3 months 1 week ago
இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்; தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை 23 Nov, 2025 | 11:54 AM (நா.தனுஜா) இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை நிகழ்த்தியதன் பின்னர் புலிக்கொடியை ஏற்றிவைத்தார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு: தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள் நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது. தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில் பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும். ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் இந்தத் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும் குறியீடாகும். அதேபோன்று உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியே போதியளவு பேசப்படவேண்டும். இந்த இனவழிப்புக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அதிலிருந்து தப்பிவிடலாம் எனக் கருதினால், அவ்வாறு தப்பிக்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் கூறுகின்ற பதிலாகும். எமது நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்கத்தின் (இலங்கை) அடிவருடிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை . என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம். அதேவேளை தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம், தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழீழத் தேசியக்கொடிக்கான அங்கீகாரம் என்பன உள்ளடங்கலாக இவ்விடயத்தில் எட்டப்பட்டிருக்கும் கணிசமாளனவு முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாகும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் விவகாரம் பலரது அவதானத்தைப் பெறும். அத்தோடு வலிமையுடனும், மீண்டெழும் தன்மையுடனும் தொடர்ந்து குரல் எழுப்பும் பிரம்டன் மற்றும் கனேடிய தமிழ் மக்கள் குறித்துப் பெருமையடைவதுடன் நாம் தமிழீழ மக்களுடன் என்றும் உடன்நிற்போம் என்றார். https://www.virakesari.lk/article/231186

மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை; டில்வினின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்தும் பேசப்படும் சாத்தியம்

3 months 1 week ago
23 Nov, 2025 | 11:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும், வெகுவிரைவில் இடம்பெறவுள்ள டில்வின் சில்வாவின் இந்திய விஜயத்தின்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. நீண்டகாலமாக நடாத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாணசபைத்தேர்தல்கள் ஒரு வருடகாலத்துக்குள் நடாத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழரசுக்கட்சியுடன் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பிலும் இதுகுறித்து ஜனாதிபதி உத்தரவாதமாக எதனையும் கூறவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பிறிதொரு முறைமையின் ஊடாக மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்துவருவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. இவ்விஜயத்தின்போது மாகாணசபை முறைமையைப் பதிலீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பதாக இதுபற்றி அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதேபோன்று இனிவரும் நாட்களில் மாகாணசபைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை எனவும், அதனைப் பதிலீடு செய்யக்கூடிய மாற்றுவழிகள் குறித்துச் சிந்திக்குமாறும் அரசாங்கத்துக்கு நெருக்கமான செயற்பாட்டாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார். எனவே மாகாணசபைத்தேர்தலை நடாத்துவதற்கான காலவரையறை எதனையும் அரசாங்கம் வெளியிடாத நிலையில், ஜனாதிபதி உத்தரவாதம் அளித்ததன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளின்போது மாகாணசபை முறைமையை பதிலீடு செய்வது குறித்தும் ஆராயப்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/231190