Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
அண்ணாவின் பெயரையும் சேர்த்து எழுதுவதில் என்ன தயக்கம், இப்பவே எழுதுவோம் என்று நினைத்து, அண்ணாவின் தெரிவுகளையும் ஒரு தடவை போய்ப் பார்ப்போம் என்று பார்த்தால்.................... 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா .............. ஜக்கம்மா, அக்கம்மா, எந்த அம்மா துணைக்கு வந்தாலும் நிலைமை கொஞ்சம் கஷ்டம் போலத்தான் தெரியுது, அண்ணா.................🤣.

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

3 months 1 week ago
ஒரு பூப்புனித(?) நீராட்டில் முதல்வர், உயர் நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் போது, அழைத்தவர்கள் கூட இப்படி ஒரு படத்தை வேண்டி கேட்டு எடுத்திருக்கலாம். ஒரு அரசியல்வாதி, இன்னொருவரை இனத்தின் வைரி என சொல்லிப்போட்டு, ஒண்டவீட்ட அண்ணன் செத்ததை, தேர்தலில் வென்றதை எல்லாம் சாக்கு சொல்லி போய் சந்திப்பது போல அல்ல இது. அல்லது ஏ1 அக்யூஸ்டை சிறையில் இருந்து வந்ததும் சந்தித்துவிட்டு, பின்கதவால் ஓடியது போலவும் அல்ல இது. ஒரு நீதியரசர் தனிப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, ஒரு முதல்வர் வந்தால் முகத்தையா திருப்ப முடியும். இதை வைத்தே இவர் திமுக அனுதாபி என கூற முடியாது.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months 1 week ago
நான் மேலே சொன்னது ஜோக் அண்ணை. விஜை வாழ்வில் ஏழரை, அஷ்டம, அஷ்டமாத்து எல்லாம் ஒண்டா வந்து கும்மி அடிப்பது மட்டும் இல்லாமல், குசினி வரை போய் குடும்பமே நடத்துவது பார்க்க புரிகிறது🤣. பிகு நான் கேட்ட சீமான் 2026 வாக்கு சதவீத பந்தயத்துக்கு ஒத்து கொண்டிருக்கலாம் என இப்ப தோணணுமே?🤣

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
தம்பி உங்கள் அரிச்சனைச் சீட்டில் எனது பெயரையும் சின்னனா எழுதிவிடுங்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

3 months 1 week ago
மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂‍↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months 1 week ago
இனி விஜய்க்கு அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் இடம் இல்லை. ஆகக் கூடியது காமெடியனாக வேண்டுமானால் நடிக்கலாம் தனது பணத்தில்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
ஏதோ நேற்று கிரிக்கேட் விளையாட‌ வ‌ந்த‌ ம‌க‌ளிர் போல் இருந்ச்சு இன்றையான் விளையாட்டு , முன்ன‌னி விக்கேட் இர‌ண்டு உட‌ன‌ போனால் ப‌ந்தை நொட்டி ப‌ந்து வீச்சு எப்ப‌டி என‌ க‌னித்த‌ பிற‌க்கு மெதுவாய் ஆடி இருந்தாலும் 150ஸ்கோர‌ தான்டி இருக்க‌லாம் 69 இந்த‌ உல‌க கோப்பையில் இது தான் குறைந்த‌ ஸ்கோரா இருக்கும்.................69 நீங்க‌ள் பிற‌ந்த‌ ஆண்டு ஹா ஹா😁.....................

கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.

3 months 1 week ago
கரூரில் நடந்த அவலமான நிகழ்வுக்கும், மரணங்களுக்கும் யார் பொறுப்பு??? நடிகர் விஜை, தமிழக அரசு, கூட்டம் கூடிய மக்கள். இந்த அனைவருமே பொறுப்பானவர்கள். குற்றம் இந்த அனைவரிலும் உண்டு.

“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்

3 months 1 week ago
https://www.facebook.com/share/19ukjrCRGY/ என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைப்பு! தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது. கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர்: அதிகளவில் மக்கள் போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதால் இருபக்கமும் மறைக்கும் நிலை வரும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை. ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை வந்தது. மனுதாரர்கள் மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஜாமின் வழங்கக்கூடியவையே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லை, காவல்துறையே தவறிவிட்டது. நீதிபதி: உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும் போது அதற்கான பொறுப்பு வேண்டும் தானே? அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இது முன் ஜாமின் வழக்கே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை என கூறுகிறார்கள். 304 (A) பிரிவிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. சிலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இரவு 7 மணிக்கு துயர சம்பவம் நிகழ்ந்தது. கட்சியினரால் தான் அவர்களின் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும். அது போன்ற அறிவிப்பை அவர்கள் செய்யவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர் நீரிழப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைமாவது ஏற்கத்தக்கதல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி இருக்கும். அவற்றை வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே முன் ஜாமின் வழங்கக்கூடாது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார். #TVK | #Vijay | #TVKVijay | #NAnand | #Karur | #Nirmalkumar | #LatestNews | #TNNews

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
69.................. என்ன ஒரு தெய்வீக எண்............ இது ஒரு கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி தெரியவில்லை, யாரோ பிறந்த வருடம் மாதிரித் தான் தெரிகின்றது..................😜.

கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

3 months 1 week ago
ப்போதைக்கு பலாலியில் பெரிய விமானங்கள் இறங்க முடியாது எனில் கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கு உள்ளக விமான சேவையை தொடங்கலாமே.

இனப்பிரச்சினை எனும் பதத்தை மாற்றும்படி இலங்கை கோரியது - அதற்கமையவே மோதல்கள் எனும் சொல் சேர்க்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம்

3 months 1 week ago
இனப்படுகொலை போர்க்குற்றமாகி, பின் போர்க்குற்றம், இனப்பிரச்சினை ஆகி, இப்ப இனப்பிரச்சினை வெறும் மோதல் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளை இதுவும் நீர்த்துப் போய் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக எந்த விடயமும் நிகழவில்லை எனும் நிலைக்கு வந்து விடும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
வினா 5) 10 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 11 புள்ளிகள் 2)கிருபன் - 11 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 11 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 9 புள்ளிகள் 5)வாதவூரான் - 9 புள்ளிகள் 6) ரசோதரன் - 9 புள்ளிகள் 7) வீரப்பையன் - 9 புள்ளிகள் 8)சுவி - 8 புள்ளிகள் 9)புலவர் - 7 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 7 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 7 புள்ளிகள் 12)வாத்தியார் - 5 புள்ளிகள் 13) வசி - 5 புள்ளிகள் 14)கறுப்பி - 5 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 5, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 1 week ago
https://www.facebook.com/share/v/19ip5pJTWa/ போற போக்க பார்த்த ஒருத்தனுக்கும் ஜாமீன் கிடைக்காது போல விஜய்-க்கு விழுந்த அடிமேல் அடி - நீதிமன்றத்தின் 10 கண்டனங்கள்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாய் இருப்பது நடுவர்தான். இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும். பந்து வீசும்போது துடுப்பாட்டத்தில் கை மடங்கக்கூடாது, மடக்கி வீசினால் அது தவறு. நடுவர் அந்தத் தவறைக் கண்டு அதற்கான சைகையைக் காட்டி அதனை “நோபோல்” ஆக அறிவிக்க வேண்டும். ஆனால் நடுவர் அந்தத் தவறைக் கவனிக்காது வீராங்கனையின் அழகில் கண்மயங்கி விட்டதுபோல் வீடியோ படம் காட்டுகிறது.🤪

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

3 months 1 week ago
‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ - சீமான் தூத்துக்குடி: “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல அசிங்கம்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளதாக சொல்கிறது. இந்த தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கை எளிதாக திமுகவால் பெற முடியாது. ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு விசாரணைக் குழுவை பாஜக அனுப்பியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மக்களே போராடிய போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. அப்போது காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?. வன்முறை ஏற்பட்டாலும் கூட கண்ணீர் புகைக்குண்டு வீசித்தானே கூட்டத்தை கலைத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் பாஜக விசாரணைக்குழு வந்திருக்க வேண்டியதுதானே?. கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள். இப்போது சில மாதத்தில் தேர்தல் வருவதால், அரசியல் செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்பியுள்ளார்கள். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். அதற்கு அவர் பொறுப்பேற்கவே இல்லையே?. ‘இந்த சம்பவத்துக்கு காரணமாகிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள், இது வலிமிகுந்ததாக உள்ளது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ‘அங்கு நடக்காதது இங்கு ஏன் நடந்தது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், சின்ன இடத்தை கொடுத்தார்கள்’ என விஜய் சொல்கிறார். நீங்கள் கேட்ட இடம்தானே இது. அங்குதானே எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன்னர் கூட்டம் நடத்தினார். சிறிய இடமாக இருந்தால், அந்த இடம் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியதுதானே. கரூருக்கு அன்று வந்தவுடனே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் பேசினார். சாவு விழுந்தவுடன் அந்த காவல்துறை மீது ஏன் பழிபோடுகிறார். இதனை கேட்கும் போது கடுமையான கோபம் வருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியாளர்களை, சாதனையாளர்களை அழைத்து பேச வைக்காத தமிழக அரசு, திரைப்பட நடிகர்களை, இயக்குநர்களை பேச வைக்கிறார்கள். கல்வி விழாவுக்கு கூட நடிகர்களை அரசு அழைத்தால், அப்புறம் நடிகர்கள் ஏன் நாடாள துடிக்க மாட்டார்கள். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம். விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து. விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல, அசிங்கம். நாங்கள் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம், 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். இப்போது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எங்கே போனார். அப்போது நாங்கள்தான் களத்தில் நின்றோம்” எனத் தெரிவித்துள்ளார் ‘விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவரவே கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க பாஜக கூறுகிறது’ - சீமான் | BJP is doing this to bring Vijay into the alliance Seeman speech - hindutamil.in