Aggregator
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

நிதர்ஷன் வினேத்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாக புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களை பூர்த்தி செய்துள்ளாரா? என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்
பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது.
பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவசர சிகிச்சையின் பின்னர் ஆம்புலன்சில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார்.
பரீட்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவு வண்டி மூலம் மூலம் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
https://www.tamilmirror.lk/செய்திகள்/பாம்பு-தீண்டிய-நிலையில்-பரீட்சை-எழுதிய-மாணவன்/175-368312
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக, அருட்தந்தை சிரில் காமினி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் பின்னர் அருட்தந்தை சிரில் காமினி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ,
குறித்த கலந்துரையாடலின் போது, மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் அதற்கு பின்னரான நீதிமன்றின் நடவடிக்கைகளின் அவசியத்தை தாம் வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்ததாகவும் அருட்தந்தை கூறினார். அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!
கண்டியில் இருந்து யோகர் சுவாமி சமாதி கோவிலுக்கு சென்ற பிக்குகள்!
adminNovember 22, 2025

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை யோகசுவாமிகள் சமாதி திருக்கோயிலுக்கு கண்டியில் இருந்து வருகை தந்த 120 பெளத்த துறவிகள் மற்றும் அடியவர்கள் அங்கு நடைபெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
யோகசுவாமிகளின் வாழ்க்கை பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் நூல்களில் படித்ததாகவும், இந்த ஆத்ம ஞானியின் சமாதியை தரிசிக்க வேண்டும் என வந்ததாகவும் கூறினார்கள்.
அத்துடன் அங்கு யோகசுவாமிகள் வாழ்க்கை, போதனைகள் பற்றிய செய்திகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் கேட்டு மகிழ்ந்தனர்.

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு!
adminNovember 22, 2025

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது.
இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது.
இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர்,
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் .
அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் .
யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது.
'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடைஇளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரசித்த.... புகைப்படங்கள்.
அதிசயக்குதிரை
சிரிக்க மட்டும் வாங்க
கருத்து படங்கள்
திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!
திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!

திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்!
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அட்டை கட்டண முறை நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டணங்களுக்கான வங்கி அட்டைகள் மூலமாக பயணிகள் செலுத்தலாம்.
அரசு, தனியார் உட்பட மொத்தம் 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் கூறியுள்ளது.