Aggregator
போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச-
போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச-

போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச-
தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கருத்து படங்கள்
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
கர்நாடகா: பெண்கள் உட்பட 100 உடல்களை புதைத்ததாக கூறும் நபர் - எழும் கேள்விகள் என்ன?
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
இரசித்த.... புகைப்படங்கள்.
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் - தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்
விசேட தேவையுடையோருக்கு தொழிற்கல்வியை வழங்கி தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் - தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்
21 Nov, 2025 | 05:04 PM
![]()
(ஸ்டெப்னி கொட்பிறி)
விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற “விசேட தேவையுடையவர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் (German Federal Ministry for Economic Cooperation and Development) சார்பாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) மற்றும் சுவிஸ் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation - SDC) ஆதரவுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கையின் விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புப் போட்டி மேடை (Disability Job Match Pavilion) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது தொழில் வாய்ப்புக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட விசேட தேவையுடையவர்கள் தங்களது சுயவிவரக் கோவையை சமர்ப்பித்தனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
விசேட தேவையுடையவர்களின் தொழில் வாய்ப்புகளில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களைக் கண்டறிந்து அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அதேவேளை நாம், விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு விசேட தேவையுடையவருக்கும் தனித்துவமான திறன்கள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர வேண்டும். இது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கும்.
விசேட தேவையுடையவர்களுக்குச் சிறந்த தொழிற்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜெர்மன் சங்கத்தின் (GiZ) இலங்கை தொழில் பயிற்சி திட்டம் (VTSL) உட்பட பல தரப்பினர் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, விசேட தேவையுடையவர்களுக்காக சிறந்த தொழிற்கல்வி பயிற்சிகளை வழங்கி, அவர்களின் தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அமைவதற்கு பல வழிமுறைகளை உருவாக்கிக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தொழில்நுட்பத்துறை, வர்த்தகத்துறை, உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறைகளில் விசேட தேவையுடையவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டத்திலும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக பல கல்வி முறைகளை உருவாக்க வேண்டும். விசேட தேவையுடையவர்களுக்கு கல்வி மிக அவசியம்.
விசேட தேவையுடையவர்களின் இலட்சியத்தைக் கண்டறிந்து, அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதற்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பங்களிப்பு வழங்கும் என நாலக களுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அவலம்
திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
வியட்நாமில் வெள்ளப்பெருக்கு; 43 பேர் உயிரிழப்பு
Published By: Digital Desk 3
21 Nov, 2025 | 12:59 PM
![]()
மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய கோப்பி உற்பத்திப் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சூறாவளியினால் ஏற்கனவே விவசாயிகளின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாகவே வியட்நாமில் சீரற்ற வானிலை நிலவுகிறது. கல்மேகி மற்றும் புவாலோய் ஆகிய இரண்டு சூறாவளிகள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கி பல உயிரிழப்புகள் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வியட்நாமில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மண்சரிவுகள் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தியதை அடுத்து அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான சுற்றுலா நகரமான டா லாட்டுக்கான முக்கிய நுழைவுப் பாதையான மிமோசா கணவாயின் ஒரு பகுதி பள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இடிந்த பகுதியில் உருவான பெரிய இடைவெளியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கு அவசரகால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளில் இராணுவப் படையினரும் பொலிஸாரும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வியட்நாமில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமானது முதல் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

