3 months 1 week ago
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 months 1 week ago
32 ஓவரிலேயே வங்காளதேசம் வென்றுள்ளது! சமபலம் என்றால் 48 ஓவர் மட்டுமாவது மட்ச் போயிருக்கவேண்டும் 😬 RESULT 3rd Match (D/N), Colombo (RPS), October 02, 2025, ICC Women's World Cup PAK-W 129 BAN-W (31.1/50 ov, T:130) 131/3 BAN Women won by 7 wickets (with 113 balls remaining)
3 months 1 week ago
சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை.
மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்?
வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது.
“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான் | seeman slams tvk leader vijay - hindutamil.in
3 months 1 week ago
சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை. மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது. “விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான் | seeman slams tvk leader vijay - hindutamil.in
3 months 1 week ago
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது.
விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை கூறிய பிறகு ஒரு வீடியோவை வெளியிடுகிறார். விஜய்க்கு தனது தொண்டர்கள், ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது. இப்படி நடந்ததற்கு திமுக தான் காரணம், முதல்வர் தான் காரணம் எனக் கூறி பழிபோட பார்க்கிறார்கள். உங்களது, தொண்டர்கள் அளவு கடந்து ஒரு இடத்தில் கூடுகிறார்கள், ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி மிதித்து தானே இறந்தார்கள். யாராவது மயக்க மருந்து தெளித்தார்களா, கல் எறிந்தார்களா? இது குறித்த ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
இந்த விஷயத்தில் ஆதாயம் தேடத்தான் விஜய் ஆவலாக இருக்கிறாரே தவிர, மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் ஆர்வமாக இல்லை. இவை எல்லாம் அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள். இதை நாம் காலப்போக்கில் தெரிந்து கொண்டோம். அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக அவர், கட்சி தொடங்குவதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் இல்லை. ஆனால் விஜய்க்கு அதிகாரத்தின் மீதுதான் மோகம். அடுத்த முதல்வராக ஆட்சியில் உட்கார வேண்டும் என குறிவைத்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். விஜய் கருத்தியல் சார்ந்து எதுவுமே பேசவில்லை.
தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் கூறவில்லை. திமுவை தான் மாறி மாறி விமர்சிக்கிறார். இதுபோன்ற பல நபர்களை ஆர்எஸ்எஸ் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன் | Thirumavalavan slams dmk and vijay over karur incident - hindutamil.in
3 months 1 week ago
சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது. விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைமை கூறிய பிறகு ஒரு வீடியோவை வெளியிடுகிறார். விஜய்க்கு தனது தொண்டர்கள், ரசிகர்கள் மீது என்ன அக்கறை இருக்கிறது. இப்படி நடந்ததற்கு திமுக தான் காரணம், முதல்வர் தான் காரணம் எனக் கூறி பழிபோட பார்க்கிறார்கள். உங்களது, தொண்டர்கள் அளவு கடந்து ஒரு இடத்தில் கூடுகிறார்கள், ஒருத்தர் மேல் ஒருத்தர் ஏறி மிதித்து தானே இறந்தார்கள். யாராவது மயக்க மருந்து தெளித்தார்களா, கல் எறிந்தார்களா? இது குறித்த ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இந்த விஷயத்தில் ஆதாயம் தேடத்தான் விஜய் ஆவலாக இருக்கிறாரே தவிர, மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் ஆர்வமாக இல்லை. இவை எல்லாம் அவரது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தான் கட்டாயப்படுத்தினார்கள். இதை நாம் காலப்போக்கில் தெரிந்து கொண்டோம். அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக அவர், கட்சி தொடங்குவதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதவி, அதிகாரம் மீதெல்லாம் மோகம் இல்லை. ஆனால் விஜய்க்கு அதிகாரத்தின் மீதுதான் மோகம். அடுத்த முதல்வராக ஆட்சியில் உட்கார வேண்டும் என குறிவைத்து, திமுகவை கடுமையாக சாடி வருகிறார். விஜய் கருத்தியல் சார்ந்து எதுவுமே பேசவில்லை. தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் கூறவில்லை. திமுவை தான் மாறி மாறி விமர்சிக்கிறார். இதுபோன்ற பல நபர்களை ஆர்எஸ்எஸ் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அஞ்சுகிறதா?” - திருமாவளவன் | Thirumavalavan slams dmk and vijay over karur incident - hindutamil.in
3 months 1 week ago
02 Oct, 2025 | 04:51 PM மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது. காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி மன்னார் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்! | Virakesari.lk
3 months 1 week ago
02 Oct, 2025 | 04:51 PM

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (02) காலை 11.00 மணிக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளரிடம் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய கடிதமும் வழங்கப்பட்டது.
காற்றாலை மின் திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு குழுவினர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்த நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதைச் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி மன்னார் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி போராட்டம்! | Virakesari.lk
3 months 1 week ago
02 Oct, 2025 | 06:51 PM வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.15க்கு காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும். அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகி முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும். கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077 ரயில்) வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு, வவுனியா ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிப்பதால், தாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை இரத்து செய்ய வேண்டுமானால் பயணச்சீட்டை இரத்து செய்து முழு தொகையையும் மீளப்பெறும் வசதி, முன்பதிவு செய்யும் வசதியுள்ள ரயில் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் | Virakesari.lk
3 months 1 week ago
02 Oct, 2025 | 06:51 PM

வடக்கு ரயில் பாதையில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான ரயில் பிரிவில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ரயில் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தை ஆரம்பித்து, வவுனியா (வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர், வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.15க்கு காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும்.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகி முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077 ரயில்) வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு, வவுனியா ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிப்பதால், தாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை இரத்து செய்ய வேண்டுமானால் பயணச்சீட்டை இரத்து செய்து முழு தொகையையும் மீளப்பெறும் வசதி, முன்பதிவு செய்யும் வசதியுள்ள ரயில் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புனரமைப்பு பணிகளினால் எதிர்வரும் நாட்களில் யாழ்.தேவி ரயில் தாமதமாக இயக்கப்படும் | Virakesari.lk
3 months 1 week ago
02 Oct, 2025 | 07:56 PM

மட்டக்களப்பில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த 3 பசு மாடுகளைத் திருடிச் சென்று அதில் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சம்பவம் தொடர்பாக காத்தான்குடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் பசுவை திருடிச் சென்று விற்பனை செய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (1) இரவு கைது செய்ததுடன் இரு மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் கடந்த மாதத்தில் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது வாழ்வாதாரத்துக்காக உறுகாமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் 3 பசுமாடுகளை கட்டி வளர்த்து வருகின்றார் இதில் இறைச்சிக்காக வெட்டிய கன்று குட்டி ஒன்றின் தாயான பசுமாட்டிலிருந்து தினமும் காலையில் 15 லீற்றர் மாலையில் 15 லீற்றர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்தில் அமைந்துள்ள குடிசையில் நித்திரை செய்துவிட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது கட்டியிருந்த 3 மாடுகளும் திருட்டுப் போய் உள்ளதை கண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து காத்தான்குடியில் உள்ள மாடு வெட்டும் மடுவத்தில் திருடிச் சென்ற பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய வருவதாக மாட்டின் உரிமையாளருக்கு தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை (1) இரவு மாட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருடன் மாடு வெட்டும் மட்டத்தை சுற்றிவளைத்த போது அங்கு திருடு; போன பசு மாடு இறைச்சிக்காக பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியுடன் வெட்டி இறைச்சியாக்கப்பட்டை கண்டுபிடித்ததுடன் வெட்டிய பசு மாட்டின் தலையை மீட்டதுடன் இரு மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.
இதனை தொடர்ந்து இறைச்சி கடை முதலாளியை கைது செய்து விசாரணையில் அவர் அந்த பகுதி இளைஞர் ஒருவர் தனது மாடுகள் என தனக்கு பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் அவரிடம் இருந்து அதற்கான கடிதத்தை எழுத்து மூலம் பெற்று அதற்கான பணத்தை வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து திருடிய மாடுகளை விற்பனை செய்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் திருடய மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட சான்று பொருட்களுடன் அவர்களை கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் மட்டும் 25 மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு | Virakesari.lk
3 months 1 week ago
02 Oct, 2025 | 05:41 PM (செ.சுபதர்ஷனி) 2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான கமகே இந்துவர அமேஷ மாதேவ தெரிவித்தார். மொஹம்மட் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் மித்தெனியவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவுக்கு தொடர்பிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறித்த ரக்பி வீரர் உயிரிழந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு எனது தந்தை ஹொரணை- கொழும்பு 120 பஸ் வீதியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எனக்கு மூன்று வயது மாத்திரமே எனினும் எனது உறவினர்கள் எனது தந்தையின் சகோதரர்கள் நண்பர்கள் ஆகியோர் அவர் பேருந்து உதவியாளராக பணியாற்றி இருந்தது எனக்கு தெரிவித்திருந்தனர். அது எனக்கும் நன்றாக தெரிந்த விடயமே. அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிசிடிவி காணொளி ஒன்றை காண்பித்து அதில் இருக்கும் நபர் உங்களது தந்தையா? என கேட்டனர். அதற்கு காணொளியில் இருக்கும் நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார். தந்தைக்கு முதுகு வலி இருப்பதாக எனது அம்மா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். எனது தந்தைக்கு முதுகு வலி இருந்தது உண்மைதான் எனினும் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தினால் பின்னர் முதுகு வலி ஏற்பட்டது. சூது, கப்பம் கொருதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தந்தை ஈடுபட்டுள்ளார். அவ்வாறு பெரும் பணத்தையும் ஏழை குடும்பங்களுக்கு செலவழித்துள்ளார். எவ்வாறாயினும் எனது தந்தை செய்தது தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தந்தை உயிரிழந்த போது அம்மா டுபாயில் இருந்தார். அம்மாவுக்கும், தந்தை பணியாற்றி வந்த பேருந்து சாரதிக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. அது எனக்கும் தெரியும் பின் தந்தைக்கும் தெரியவர பிரச்சனையாக மாறியது. ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட்ட இருவரையும் தந்தை தாக்கினார். சம்பத் ராமநாயக்க எனும் குறித்த பேருந்து சாரதியை இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம். இருந்தால் கொலை செய்வதாக எச்சரித்தார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எனது தந்தை கைது செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நானே அவரை பிணையில் வெளியே எடுத்தேன். எனினும் பொலிஸார் கூறியது போல எனது தந்தையிடமிருந்து துப்பாக்கி அல்ல 4 “வாக்கிடாக்கிகள்” மாத்திரமே கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் தந்தையின் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு அம்மா வெளிநாட்டுக்குச் சென்றார். விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த தந்தை பின்னர் அம்மாவை தேடினார். அதன் பின்னரே அவர் தனது இரண்டாவது கணவருடன் டுபாயில் இருப்பது தெரியவந்தது. தந்தையின் முன்விரோதியான ஜே.சி.பி . சமன் (பெக்கோ சமான்) என்பவரும் அதன் பின்னர் தந்தையுடன் பேச ஆரம்பித்தார். ஏதேனும் உள்நோக்கத்திற்காக பேச ஆரம்பித்தாரா என்பது எனக்கு தெரியாது. சம்பத் ராமநாயக்க சாரதியாக இந்த பஸ்ஸின் உரிமையாளரே ஜே.சி.பி சமன் . தந்தை உயிரிழந்தமை தொடர்பில் அம்மாவுக்கு தெரியப்படுத்தினோம் எனினும் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உயிரிழந்த விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை. அன்றைய தினமே அம்மா வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தார். தந்தை இறந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் ஜே.சி.பி . சமன் எனும் குறித்த நபர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை அம்மாவின் வங்கி கணக்கில் வைப்பிட்டார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயத்தை தெரிவித்திருந்தார். அம்மாவிடம் இதை கேட்ட போது அவரை இல்லை என அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னரே அதை ஏற்றுக்கொண்டார். எவராயினும் எனது தந்தையின் மரணத்துடன் எனது தாய்க்கும் ஜே.சி.பி சமன் என குறிப்பிடப்படும் நபருக்கும் தொடர்புள்ளது. பல வருடங்களாக தந்தையுடன் முரண்பட்டு கொண்டிருந்த நபர் திடீரென அவருடன் பழக ஆரம்பித்தது எப்படி? என தாயிடம் கேட்டபோது அவர் தனக்கு அதைப் பற்றி தெரியாது . எனது முதல் கனவனையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார். தந்தை இறந்து தற்போது 7 மாதங்கள் கடந்து விட்டன. தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினரே எனக்கான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். தாய் என்னை பராமரிப்பதோ என்னுடன் பேசுவதோ இல்லை. குற்றப்புலனாய்வு பிரிவில் காணொளியை காண்பித்து விசாரணை நடத்திய போது நானும் அங்கிருந்தேன். இருவரிடமும் வெவ்வேறாக விசாரணை செய்தனர். ஆரம்பத்தில் அது தந்தை அல்ல என மறுத்த அவர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதன் பின்னர் அது தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உள்ள என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. தந்தையின் மரணத்தின் போது வீட்டிற்கு வந்திருந்த அம்மா எனக்கு தேவையானவரை அல்ல விட்டு வைத்துள்ளீர்கள் இவனை எப்படி நான் பார்த்துக்கொள்வது என தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அங்கிருந்த எனது உறவினர்களும் நன்கு அறிவார்கள். எனது தாய்க்கு என்னையும் எனது தந்தையையும் கொலை செய்ய வேண்டும் என்றே திட்டமிருந்தது. அவரின் உறவுக்கு நாங்கள் இருவருமே தடையாக இருந்தோம் ஆகையால் எம்மை இல்லாமல் ஆக்கவே எண்ணினார். தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம். தந்தையின் மரணத்துக்கு காரணமான எனது அம்மாவையும் சமன் ரத்நாயக்க எனும் நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மனித படுகொலை போன்ற பாரிய குற்றச்செயலில் எனது தந்தை ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார். காணொளியில் இருந்த நபர் எனது தந்தை அல்ல ; அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவின் மகன் | Virakesari.lk