Aggregator
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது.
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
யாழ். நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!
யாழ். நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!
30 JUL, 2025 | 11:21 AM
![]()
யாழ். நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.



ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது - பணிப்பாளர் சத்தியமூர்த்தி
யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது - பணிப்பாளர் சத்தியமூர்த்தி
30 JUL, 2025 | 03:50 PM
![]()
வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
சிரிக்க மட்டும் வாங்க
உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!
உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!

உலகின் மிகவும் அழகான தீவாக இலங்கை தேர்வு!
உலகளாவிய பயண தளமான ‘Big 7 Travel’ தொகுத்த உலகின் 50 சிறந்த தீவுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, இலங்கை உலகின் மிக அழகான தீவாக முடிசூட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் பிரெஞ்சு பாலினேசியாவின் மோரியா, ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் மற்றும் சீஷெல்ஸ் போன்ற பிரபலமான தீவுகளை முந்தி முதலிடத்துக்கு வந்துள்ளது.
Big 7 Travel தகவலின்படி, இலங்கை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், மாறுபட்ட நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றின் கலவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தீவு தேசத்தின் தனித்துவமான வனவிலங்குகள், பழங்கால கோயில்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுறுசுறுப்பான உள்ளூர் சுற்றுலா பகுதிகளுக்காக இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத் துறை அதன் நிலையான மீட்சி மற்றும் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகளாவிய அங்கீகாரம் மேலும் அதனை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.