Aggregator

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

3 months 1 week ago
இந்த இளைஞனுக்கு இப்போது வயது 30 மட்டுமே ஆகிறதென்றால், இவர் 2009 ஆம் ஆண்டு 13 அல்லது 14 வயதுடன் இருந்திருக்க வேண்டும். இறுதிக் காலங்களில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களில் இவரும் அடங்கலாம். இவரையொத்த வயதுடைய பல இளம் வயதினர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டபின்னர் பாரிய கிடங்குகளின் அருகில் சடலங்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கொல்லப்பட்டவர்கள் போக இன்னும் சிலரை புணர்வாழ்வு என்கிற பெயரில் அரச இராணுவமோ அல்லது புலநாய்வுத்துறையோ தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது இவராகவே பணத்திற்காக சட்டவிரோதக் குழுக்களுடன் இணைந்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

3 months 1 week ago
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441387

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

3 months 1 week ago

734832817.jpeg?resize=600%2C375&ssl=1

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு  வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னதாக, ஜூன் மாதத்தில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் இரண்டையும் இரத்து செய்வதற்கான சட்டத்தை வரைவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

குறித்த சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இடைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் உட்பட, இந்த சட்ட சீர்திருத்தத்தை எளிதாக்குவதற்கு இரண்டு வரைவு சட்டமூலங்கள் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441387

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

3 months 1 week ago
20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா! இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20% வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும். மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக (திரைக்கு முன்னும் பின்னும்) கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, இலங்கையில் வர்த்தகத் தடைகளைத் தளர்த்தி, இலங்கையை உலகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் இன்னும் பல சாதனைகளை அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் – என்றார். https://athavannews.com/2025/1441420

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

3 months 1 week ago

New-Project-6.jpg?resize=750%2C375&ssl=1

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் 20% வரி குறைப்பினை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்,

இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது ஒரு வெற்றியாகும்.

மேலும் நமது ஏற்றுமதியின் பிராந்திய போட்டித்தன்மையை மேலும் பராமரிக்க இது உதவும்.

இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்காக (திரைக்கு முன்னும் பின்னும்) கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு சிறிய நாடாக நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு அந்த நிவாரணத்தை வழங்கிய அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, இலங்கையில் வர்த்தகத் தடைகளைத் தளர்த்தி, இலங்கையை உலகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் இன்னும் பல சாதனைகளை அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன் – என்றார்.

https://athavannews.com/2025/1441420

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months 1 week ago
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்! கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக்க தற்போதைய அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1441403

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months 1 week ago

New-Project-4.jpg?resize=750%2C375&ssl=1

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக்க தற்போதைய அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1441403

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

3 months 1 week ago
மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை! மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா). இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது. இது இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தண்டவாளங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் வடக்குப் பதை இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, ரயில் சேவைகளின் அதிர்வெண் மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும். இலங்கையில் பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். https://athavannews.com/2025/1441417

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

3 months 1 week ago

New-Project-5.jpg?resize=750%2C375&ssl=1

மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இந்தியாவின் முதல் தவணை!

மஹவ – அநுராதபுரம் ரயில் பதையில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவுவதற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தத் தவணைத் தொகை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் (770 மில்லியன் ரூபா).

இந்த திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இது மானியமாக மாற்றப்பட்டது.

இது இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தண்டவாளங்களில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் செல்லும் வகையில் வடக்குப் பதை இதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, ரயில் சேவைகளின் அதிர்வெண் மற்றும் செயல்திறனையும் அதிகரிக்கும்.

இலங்கையில் பல ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

https://athavannews.com/2025/1441417

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months 1 week ago
சிரிப்பதா ..அழுவதா என்று தெரியவில்லை ...சுவிசு .வி.பு .அமைப்பு தலைவராம்...ரகுபதி என்பவரி ன் செய்தியில் நான் இப்பதான் தலைவருடன் கதைத்துவிட்டு வருகிறேன் என்று ..அவிழ்த்து விடுகிறார்...என்ன நடக்குது புத்தன் சார்

நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்

3 months 1 week ago
ஆமா...நம்ம தலீவரு எங்க இருக்கீங்க.... சிரிக்க ....பிரியன் இப்ப எங்கு இருக்குறீங்கள்.... செய்திகள் நல்லதாக இல்லை...அவதானம்...ரசோ சார் பாடு எப்படி...மற்றும் அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும்...பாதுகாப்பில் அவதானமாக இருக்கவும்

சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

3 months 1 week ago
ஏன் கையிலிருந்த துப்பாக்கி எங்கே போனது? இருவர் ஒருவரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை? யாரோ வேண்டுதலின் பேரில் தப்பிக்க வைத்திருக்கலாம், சில கடமைகளை நிறைவேற்றுவதற்காக.

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு

3 months 1 week ago
பாலஸ்தீனத்தில் பட்டினி சாவை, அழிவை தடுத்து நிறுத்த உலக நாடுகளால் முடியவில்லை. மனித பேரவலத்தை மெளனமாக அங்கீகரிப்பதற்கு பிராயத்திச்சமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றோம் என அறிக்கைகள் விடுகின்றார்கள் போலும். இவர்கள் அங்கீகாரத்துடன் ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக்கரம் கிடைக்கும்முன்பே இஸ்ரேல் மிச்சம் சொச்சம் உள்ள இடங்களையும் நிர்மூலமாக்கிவிடும்.