3 months 2 weeks ago
கேரளா ராப் பாடகர் வேடன் தன்னை தலித்தாக அடையாளம் செய்து கொண்ட போதும், எங்கேயும் சாதியை பெருமையாக வெளிப்படுத்தியது இல்லை. அப்படி இருக்கும் போது அவர் புகழ் பெற்ற பிறகு, அவரை சாதியாக கொண்டாட செய்வது நாகரிகம் அல்ல. சாதிய, மத, இன,நிற பாகுப்பாடிற்கு எதிராக அவர் பாடும் பாடல்கள் கேரளா இளைய தலைமுறையை கொண்டாட வைக்கிறது. வாழ்த்துக்கள் வேடன். கந்தமங்கலம் மா.அறிவழகன்.விசிக மயிலாடுதுறை மாவட்டம் ·
3 months 2 weeks ago
பாணர் பண்டைக்காலந்தொட்டு இசைக்கலையில் ஈடுபட்ட மரபினராக பாணர் விளங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இவர்களின் குலப்பெருமையினையும் பழமையினையும் ‘பாணன் பறையன் கடம்பன் துடிய’ என்ற புறநானூற்று அடிகள் புலப்படுத்துவதைக் காணலாம். மேலும், துடி அடிப்பவன் துடியன் என்றும், பறை கொட்டுபவன் பறையன் என்றும் குறிப்பிடப் பெற்றது போல பண் இசைப்பவன் பாணன் என்று அழைக்கப் பெற்றான் என்பதை அறிய முடிகின்றது. பாணர்களில் ஆடவரை சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) என்கிறது பிங்கல நிகண்டு. பாணருள் இசைப்பாணரும், யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) இருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் இசைப்பாணர் பாடற்பாணர், அம்பணவர், அகவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணர் யாழிசைத்துப் பாடுபவராவர். அவர்கள் வாசித்த யாழில் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவை சிறப்பாகக் கூறப்படுகின்றன. இந்நால்வகை யாழுள் பேரியாழ் வாசித்த பாணர் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழ் என்ற சீறியாழ் வாசித்த பாணர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். யாழ்ப் பாணர் யாழேயன்றிக் குழலையும் இசைக்கருவியாகக் கொண்டு தம் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. இதனை, “குழலினும் யாழினும் குரல்முத லேமும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கை” (சிலப்.35௩7) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. https://www.muthukamalam.com/essay/literature/p239.html
3 months 2 weeks ago
Veluppillai Thangavelu உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதா! அநுரவிடம் மனோ கேள்வி வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? அவர்களைப் பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்?" என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை நோக்கி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் கோப்புகள் இது தொடர்பில் மனோ எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஊழல் பேர்வழிகளைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். அதைச் செய்யத்தான் வேண்டும். இன்னமும் நானூற்றுக்கணக்கான ஊழல் கோப்புகள் இருப்பதாகச் சொன்னீர்கள். அனைவரையும் கைது செய்து, விசாரித்து, ஆவண செய்யுங்கள். சட்டத்தில் இடமிருந்தால் ஊழல் பேர்வழிகளுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்குங்கள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், எதற்காகத் தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, வயோதிபம் அடைந்து, உங்களை நம்பி, நாடு திரும்பிய, 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் கைது செய்தீர்கள்? அவரை இன்று பிணையில் வெளியே விடாமல் எதற்காகச் சிறையில் அடைக்கிறீர்கள்? அகதிகள் வெளிநாடு சென்ற தமிழர்களைத் திரும்பி “வாங்கோ, வாங்கோ” என நீங்கள் தானே வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்? உங்களை நம்பி, திரும்பி வந்தால் விமான நிலையத்தில் கைது செய்வதா? சிவலோகநாதனுக்கு நாடு திரும்ப சென்னை இலங்கைத் துணைத் தூதரகம்தான் கடவுச்சீட்டு வழங்கி உள்ளது என்பது அரசுக்குத் தெரியாதா?வெளிநாட்டு அமைச்சுக்குத் தெரியாதா? தமிழக அரசின் பொலிஸ், பாரத மத்திய அரசின் குடிவரவு, குடியகல்வு வாரியம் என்பன ஒப்புதல் அளித்துள்ளன. ஐ.நா. அகதிகள் ஆணைக்குழு, சிவலோகநாதனுக்குப் பயண சீட்டு வாங்கிக் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, விமானமேற்றி அனுப்பி வைத்துள்ளது. இவை உங்களுக்குத் தெரியாதா? வெளிநாடு சென்ற தமிழர்களை நீங்கள்தானே திரும்பி வரச் சொல்கிறீர்கள்? உங்களை நம்பி நாட்டுக்கு வந்தால் அவர்களைக் கைது செய்வதா? "என்று பதிவிட்டுள்ளார்.