3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 02 JUN, 2025 | 10:51 AM பிரான்ஸில் பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்றை சம்பவத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பாரீஸ் நகரின் வீதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு உள்ளான் என தேசிய பொலிஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், ஸ்கூட்டரில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 560 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் சிக்கிய பொலிஸார் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் சமீபத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு வீதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உட்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பாரீஸ் நகரில் நடந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். https://www.virakesari.lk/article/216311
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3
02 JUN, 2025 | 10:51 AM

பிரான்ஸில் பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற வன்றை சம்பவத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜேர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும்.
இதனை தொடர்ந்து, பிரான்ஸின் பாரீஸ் நகரின் வீதிகளில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு உள்ளான் என தேசிய பொலிஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், ஸ்கூட்டரில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 560 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் சிக்கிய பொலிஸார் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் சமீபத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு வீதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உட்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பாரீஸ் நகரில் நடந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
https://www.virakesari.lk/article/216311
3 months 2 weeks ago
தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற 'தனி ஒருவன்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆமதாபாத்தில் நேற்று நடந்த 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு பைனலுக்கு பஞ்சாப் தகுதியாகி இருந்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கல் சேர்த்திருந்தது. 204 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தனி ஒருவன் அதிக பரபரப்பு நெருக்கடி மிகுந்த இதுபோன்ற போட்டிகளில் 200 ரன்களை பதற்றமின்றி சேஸ் செய்வது என்பது கடினமானது. ஆனால், அந்த இலக்கை ஒற்றை மனிதராக இருந்து பவர்ப்ளே முடியு ம்போது களத்துக்கு வந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் சேர்த்த 87 ரன்களில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். மும்பை பந்துவீச்சாளர்களை ஓடவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பும்ரா யார்க்கருக்கு பதிலடி ஐபிஎல் சீசனில் ஆபத்தான பந்துவீச்சாளராக, சர்வதேச அளவில் பேட்டர்கள் பேட் செய்வதற்கு கடினமான பந்துவீச்சாளராக அறியப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. குஜராத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக பும்ரா இறக்கிய யார்கர் முக்கியமான உதாரணமாகும். அதனால் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பந்துவீச்சு பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஸ் பேட்டிங்கின் முன் பும்ராவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பும்ராவின் யார்கர்களை கச்சிதமாக கையாண்ட ஸ்ரேயாஸ் அந்த யார்களை பலமுறை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். டிரன்ட் போல்ட் வேகப்பந்துவீச்சு ஸ்ரேயாஸ் அய்யருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, பவுண்டரிகளாக விளாசியதால் எப்படி பந்துவீசுவது என குழம்பினர். கடைசி 8 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற ரீதியில் இருந்தது. 13வது ஓவரில் டாப்ளி ஓவரில் ஸ்ரேயாஸ் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசிய பின் பஞ்சாப்பின் வெற்றி கணினியின் கணிப்பில் 25 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. மும்பை அணியின் எந்த பந்துவீச்சாளரின் பந்துவீச்சையும் ஸ்ரேயாஸ் விட்டுவைக்கவில்லை. அஸ்வனி குமார், பும்ரா, போல்ட், டாப்ளி, ஹர்திக் என யார் பந்துவீசிலும் பவுண்டரிகளை விளாச ஸ்ரேயாஸ் தவறவில்லை. ஸ்ரேயாஸ் அய்யரை ஆட்டமிழக்கச் செய்ய கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த அனைத்து முயற்சிகளையும் ஸ்ரேயாஸ் தவிடுபொடியாக்கினார் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்ரேயாஸுக்கு துணை செய்த பேட்டர்கள் 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை ஸ்ரேயாஸ் வெற்றிகரமாக எட்டியதற்கு பஞ்சாப் அணியில் ஜோஸ் இங்கிலிஸ், நேஹல் வதேரா ஆகியோரின் பேட்டிங் பங்களிப்பு முக்கியமானதாகும். ஜோஸ் இங்கிலிஸ் சேர்த்த 21 பந்துகளில் 38 ரன்கள், பும்ரா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசிய நேஹல் வதேரா 29 பந்துகளில் சேர்த்த 38 ரன்களும் முக்கியமானவை. நடுவரிசையில் ஸ்ரேயாஸ், வதேரா, இங்கிலிஸ் ஆகிய 3 பேரும்தான் ஆட்டத்தை மும்பையின் கரங்களில் இருந்து கைப்பற்றி கடைசிவரை தக்கவைத்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன்(6), ஆர்யா(20) ரன்களி்ல் ஆட்டமிழந்தபின் ஆட்டம் மும்பையின் கரங்களுக்கு மாறியது. மும்பை பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி தாக்குதல் நடத்தியதில் பஞ்சாப் ரன்ரேட் சற்று குறைந்தது. ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் களத்துக்கு வந்தது முதல் தனது அதிரடி ஆட்டத்தையும், தேவைப்படும் நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் பாணியை கடைபிடித்தபின் பஞ்சாப் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறந்த கேப்டனுக்கான முன்னுதாரணம் இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி ஆடிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ், சஷாங் சிங் ஆட்டமிழக்காமல் இருந்து 243 ரன்கள் சேர்த்தனர். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது 97 ரன்களுடன் இருந்தார். கடைசி ஓவரை சிராஜ் வீசியபோது, சஷாங் ஸ்ட்ரைக்கில் இருந்து பவுண்டரி அடித்து, அடுத்தபந்தை தட்டிவிட்டபோது ஒரு ரன் ஓடி ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கிற்கு வந்து சதத்தை நிறைவு செய்திருக்கலாம். வழக்கமான கேப்டன்கள் இதைத்தான் செய்திருப்பரார்கள். ஆனால், 2 ரன்களுக்கு சஷாங்க் சிங்கை விரட்டிய ஸ்ரேயாஸ், ஸ்ட்ரைக்கை சஷாங்கிடம் கொடுத்து, அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் தொடரந்து 4 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோர் உயர காரணமாகினார். இதை சஷாங்க் சிங் ஒரு பேட்டியில் கூறுகையில் " ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் 97 ரன்களில் இருந்த போது, நான் அடித்த ஷாட்டில் 2 ரன்கள் ஓடிவா என்றார். உண்மையில் 2 ரன்கள் கடினமானதுதான். ஆனால், சதத்தை பற்றி அவருக்கு கவலையில்லை அணியின் ஸ்கோர்தான் முக்கியம். பல வீரர்கள் ஸ்ட்ரைக்கை கைப்பற்றி 3 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் அப்படி செய்யவில்லை. சுயநலமில்லாமல் ஸ்ரேயாஸ் விளையாடக்கூடியவர். அணிதான் முக்கியம் என்று எப்போதுமே பேசக்கூடிய கேப்டனாக நான் ஸ்ரேயாஸை பார்க்கிறேன். இதுதான் எங்களின் கண்ணோட்டத்தை மாற்றியது, தனிநபர் சாதனைக்கான ஆட்டம் இல்லை, அணிக்கான ஆட்டம் என்று எங்களை உணரவைத்தது" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரிக்கி பாண்டிங் புகழாரம் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் "டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸை பார்த்து வருகிறேன், பஞ்சாப் அணி பைனல் செல்லவும், கோப்பையை வெல்லவும் ஸ்ரேயாஸ் தேவை என்பதை தொடக்கத்திலேயே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். சக வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அணியை வழிநடத்துவதிலும் ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த கேப்டன். பிரியன்ஸ் ஆர்யாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஜோஸ் இங்கிலிஸ், பிரப்சிரம்தான் ஜோடியைத்தான் சீசனில் தொடக்கத்திலிருந்து களமிறக்க முடிவு செய்திருந்தோம். ஆனால், 23வயது பிரியன்ஸ் ஆர்யாவின் பேட்டிங்கை பார்த்த ஸ்ரேயாஸ் அய்யர் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் களமிறங்கவைத்தார். ஆர்யாவின் அச்சமற்ற பேட்டிங் பாணி, ஷாட்கள் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. இந்த சீசனில் பஞ்சாப் அணி 7 முறை 200ரன்களைக் கடந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அணியில் இருக்கும் அன்கேப்டு வீரர்கள் பிரப்சிம்ரன், பிரயன்ஸ் ஆர்யா, சஷாங் சிங், நேஹல் வதேரா ஆகியோர்தான். ஆனால், இந்த அன்கேப்டு வீரர்களை அணிக்கு எப்படி பயன்படுத்த முடியுமே அதை ஸ்ரேயாஸ் சிறப்பாகச் செய்தார். பல போட்டிகளில் ஆர்யா, பிரப்சிம்ரன் ஜோடி வலுவான ஸ்கோர் அமைத்து நடுவரிசை வீரர்களின் சுமையைக் குறைத்துள்ளனர். பிரப்சிம்ரன், ஆர்யா மீது ஸ்ரேயாஸ்மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்பட்டார். அவர்களும் அவரின் நம்பிக்கயை காப்பாற்றும் வகையில் செயல்பட்டனர். இளம் வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களை எப்படி வளர்த்துவிட வேண்டும் என்பதில் ஸ்ரேயாஸ் சிறந்தவர்" எனத் தெரிவித்தார். பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை அதிகமாக நம்பியிருந்து சீசனை வழிநடத்திய நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டும் அதிகமான உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதிலும் சொந்த மாநில பஞ்சாப், சண்டிகர் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதை வெற்றியாகவும் பஞ்சாப் மாற்றியது. ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக அன்கேப்டுவீரர்கள் பஞ்சாப் வீரர்களே 1519 ரன்கள் சேர்த்துள்ளனர், 163 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 34 சராசரியும் வைத்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தனித்துவமான கேப்டன்சி ஐபிஎல் அணிகளில் உள்ள கேப்டன்களில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வருகிறார், இதற்கு முன் இருந்து கோப்பையையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த சீசனில் சஷாங் சிங் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை, ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இதனால் சஷாங் சிங் மனவேதனையுடனும், அழுத்தத்துடனும் இருப்பதை ஸ்ரேயாஸ் கண்டுள்ளார். அப்போது சஷாங்சிங்கிற்கு மொபைலில் மெசேஜ் செய்த ஸ்ரேயாஸ் "என்ன சஷாங் நல்லா இருக்கிறாய்தானே. மனதிற்கும் உடம்பிற்கும் ஒன்றுமில்லைதானே. லீக் போட்டிகள் அனைத்திலும் நீ களமிறங்குவாய், அதற்காக உறுதியளிக்கிறேன். நானும், ரிக்கியும், அணியும் உன்னை நம்புகிறோம், நீதான் சிறந்த ஃபினிஷர்" என்று தெரிவித்ததாக சஷாங் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். சகவீரர்களை அரவணைத்துச் செல்வதிலும், அவர்களுக்கு துணையாக இருந்து தேவையான வாய்ப்புகளை அளித்து அவர்களை அணியின் வெற்றிக்கு பயன்படுத்துவதிலும் ஸ்ரேயாஸின் கேப்டன்ஷி தனித்துவமானது. அதேபோல, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது குறிப்பாக சஹலை பயன்படுத்தியது ஆகியவை ஸ்ரேயாஸின் சமயோஜிதமான கேப்டன்ஷிக்கு சிறந்த உதாரணம் என்று துணைப் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சவால்களை, நெருக்கடிகளை ரசிப்பவர் நெருக்கடியான கட்டங்களை, சவாலான தருணங்களை, போட்டிகளை ரசிப்பதிலும், சந்திப்பதிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அலாதி விருப்பம். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தையும் அவ்வாறுதான் ஸ்ரேயாஸ் அணுகினார். கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவை என்ற கட்டத்தில் அஸ்வனி குமார் ஓவரில் 3 சிக்ஸர்களை ஸ்ரேயாஸ் அனாசயமாக விளாசி பரபரப்புக்கு முற்றுப்புள்ளிவைத்தார். கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டதிலிருந்து ஸ்ரேயாஸ் பேட்டிலிருந்து பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. அஸ்வனி குமார் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்கள், போல்ட் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள், பும்ரா வீசிய 18வது ஓவரில் பவுண்டிரி என ரன்ரேட்டை உயர்த்தி, அஸ்வனி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஸ்ரேயாஸ் எளிதாகவெற்றிக்கு அழைத்து வந்தார். ஆர்சிபிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆடிய ஆட்டம், ஷாட்கள் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் நேற்றையஆட்டம் பிரமிக்க வைத்தது. அது குறித்து ஸ்ரேயாஸ் கூறுகையில் "இதுபோன்ற சவாலான, பெரிய போட்டிகளை நான் மிகவும் விரும்புவேன். மிகப்பெரிய போட்டிகளின்போதுதான், அமைதியாக இருந்து, சிறந்த முடிவுகளைப் பெறமுடியும். ஆர்சிபிக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டுமே அணியை தீர்மானித்துவிடாது. எங்களின் தோல்வியும் இந்த சீசனை தீர்மானித்துவிடாது. அனைத்து வீரர்களும் முதல் பந்திலிருந்து தீர்க்கமாக இருக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் களத்தில் விளையாடினோம். ஒவ்வொரு பேட்டரும், பந்துவீச்சாளர்களும் சிறப்பான பணியை செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அன்கேப்டு வீரர்களிடம் அதிகமாக அது தேவை, இது தேவை அப்படி பேட் செய் என்றெல்லாம் பேசமாட்டேன். அவர்களுக்கு ஆதரவு தேவை அதை வழங்குவேன். அவர்களின் அச்சமற்ற கிரிக்கெட்டை ஊக்குவிக்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை ஏற்கிறேன். அவர்களிடம் எந்த சூழலிலும் பேசி அவர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துகிறேன். அவர்களுக்கு அனுபவம் குறைவு என்றபோதிலும், பெரிய தருணங்களின்போது அவர்களிடமும் ஆலோசிப்பது அவர்களுக்கு பெருமயைாகவும், ஊக்கமாகவும் இருக்கிறது. அவர்களும் புதிய அனுபவத்தை பெறமுடியும். என்னைப் பொருத்தவரை அருமையான சூழல் அணிகக்குள்ளும், நிர்வாகத்திலும் நிலவுகிறது. அதனால்தான் இந்த அளவுவெற்றிகரமாக பயணிக்க முடிகிறது" எனத் தெரிவித்தார். வர்ணனையாளர்கள் விமர்சனம் ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அணிகளை முடிந்தவரை பைனலுக்கு அழைத்து வந்துள்ளார். இது 3வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்று அணியை பைனலுக்கு கொண்டு வந்துள்ளார். இதற்குமுன் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை பைனலுக்கு அழைத்து வந்திருந்தார், இப்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யரை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணியும் தவறு செய்துவிட்டது, இந்திய டெஸ்ட் அணியிலும், டி20 அணியிலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் அளிக்காதது பிசிசிஐ தேர்வுக்குழுவினர் செய்த மிகப்பெரிய குற்றம் என்று நேற்று வர்ணனையாளர்களே கடுமையான வார்த்தைகளால் விளாசினர். தொடர்ந்து 2வது முறையாக ஒரு அணியை ஐபிஎல் பைனலுக்கு அழைத்து வந்த பெருமையை எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தார்போல் இப்போது ஸ்ரேயாஸ் அய்யர் செய்து அவர்களின் சாதனையை சமன் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3j28xr4pro
3 months 2 weeks ago
40 போர் விமானங்கள் அழிப்பா? ரஷ்யாவுக்குள் பல ஆயிரம் கி.மீ. ஊடுருவி யுக்ரேன் டிரோன் தாக்குதல் பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,போர் விமானங்களை டிரோன்கள் தாக்கியதாக வெளியான காணொளி கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜாங்க செய்தியாளர் 2 ஜூன் 2025, 03:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிறு அன்று, ரஷ்யாவில் உள்ள நான்கு விமான தளங்களில் உள்ள 40 ரஷ்ய போர் விமானங்கள் மீது டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. யுக்ரேனின் எஸ்பியூ (SBU) பாதுகாப்பு அமைப்பால் நடத்தப்பட்ட "ஸ்பைடர்ஸ் வெப் (Spiders Web)" என்று அழைக்கப்படும் இந்த ஆபரேஷனில் 117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, குரூயிஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூடிய 34% போர் விமானங்கள் குறிவைக்கப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாக எஸ்பியூ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன. இதில் டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் மீது தூரத்தில் இருந்தே இயக்கக்கூடிய கூரைகள் உடன் விமானப்படை தளங்கள் அருகே கொண்டு வரப்பட்டு சரியான நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது. ஐந்து பிராந்தியங்களில் யுக்ரேனின் தாக்குதல்களை உறுதிபடுத்தியுள்ள ரஷ்யா இதனை "பயங்கரவாத செயல்" என விமர்சித்துள்ளது. இந்நிலையில் தங்களின் எல்லைக்குள் நள்ளிரவில் பலமான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,SBU SOURCE படக்குறிப்பு,டிரோன் தாக்குதல் திங்களன்று துருக்கியின் இஸ்தான்புலில் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த ரஷ்ய - யுக்ரேன் அதிகாரிகள் செல்லும் நிலையில் தான் இவை அனைத்துமே நடக்கின்றன. ஆனால் சண்டையிடும் இரண்டு நாடுகளுக்கும் இடையே இந்தப் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதால் பேச்சுவார்த்தை மீது குறைவான எதிர்பார்ப்புகளே உள்ளன. 2022-ல் பிப்ரவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கினார். 2014-ல் ரஷ்யா ஆக்கிரமித்த யுக்ரேனிய பகுதியான கிரைமியா உடன் சேர்த்து தற்போது 20% யுக்ரேன் நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஸ்பியூ தலைவர் வாசில் மலியுக்கை இந்த ஆபரேஷனின் "அட்டகாசமான முடிவிற்காக" பாராட்டியதாக ஸெலன்ஸ்கி ஞாயிறு அன்று சமூக ஊடகப் பதிவுகள் மூலம் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 117 டிரோன்களுக்கும் தனித்தனி பைலட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "மிகவும் சுவாரஸ்யமான, நாங்கள் வெளியே தெரிவிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த ஆபரேஷனுக்கான எங்களுடைய அலுவலகம் ரஷ்யாவின் பிராந்தியங்கள் ஒன்றில் அதன் எஃப்.எஸ்.பி-க்கு அடுத்தே இருந்தது" என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். எஃப்.எஸ்.பி என்பது ரஷ்யாவின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்தத் தாக்குதல்களில் சம்மந்தப்பட்ட நபர்கள் அதற்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றார் ஸெலன்ஸ்கி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட இடங்கள் ரஷ்ய விமானப்படைக்கு 7 பில்லியன் டாலர் (5 பில்லியன் யூரோ) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்பியூ மதிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் அது உறுதியளித்துள்ளது. யுக்ரேனின் கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது. தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர். பட மூலாதாரம்,SBU SOURCE "எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார். தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெட்ரோல் நிலையத்தில் அருகில் இருந்த லாரியில் இருந்து டிரோன்கள் பறந்து சென்றதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மர்மன்ஸ்கில் நடந்த தாக்குதலைப் பதிவு செய்துள்ள ரஷ்ய ஊடகங்கள் வான் பாதுகாப்பு வேலை செய்ததாகவும் தெரிவிக்கின்றன. இர்குட்ஸ்க் மீது நடந்த தாக்குதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிபடுத்தியது. பட மூலாதாரம்,SBU SOURCE இவாநோவா, ரியாசான் மற்றும் அமூர் பிராந்தியங்களில் ராணுவ விமானப்படை தளங்களில் அனைத்து தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி தளம் எஸ்பியூ தரப்பினால் குறிப்பிடப்படாத ஒன்று. டர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியங்களில் "டிரோன்கள் ஏவப்பட்ட பிறகு பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ அணைக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. "இந்த பயங்கரவாத தாக்குதல்களில் பங்கு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு யுக்ரேன் மீதான தொடர் தாக்குதல்களில் 472 டிரோன்கள், 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தான் தற்போது வரை ரஷ்யா நிகழ்த்திய மிகப்பெரிய ஒற்றை டிரோன் தாக்குதலாக உள்ளது. 385 வான் பொருட்களை அழித்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்தின் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj09d1np8g9o
3 months 2 weeks ago
Arts & EntertainmentColumnsரவீந்திரன் பா. வேடனை விடுதலை செய்யுங்கள் ரவீந்திரன் பா. ரவீந்திரன் பா. வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன மயிர் இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் “றப் இசையைப் பாட வேடன் யார்” என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும், அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. (இப்பதிவு ரவீந்ய்திரன் பா. வின் மே 29, 2025 ‘சுடுமணல்’ வலைப்பதிவில் பிரசுரமானது) https://marumoli.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/