Aggregator

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

3 months 1 week ago
அநுரவுக்கு அலகு குத்தி நீங்கள் தூக்கிய காவடியை இறக்கி வைப்பதா அல்லது புத்தர் சிலை விவகாரம் ஆரம்பித்த பின்னர் வந்து கருத்துச் சொன்ன ஏனையோரைக் காட்டி அனுர அரசுக்கு முரட்டு முட்டுக் கொடுப்பதா என்ற தெரிவுகளில் இரண்டாவதைத் தேர்ந்திருக்கிறீர்கள்😂! நான் இன்னொரு திரியில் சுட்டிக் காட்டியது போல, முள்ளிவாய்க்காலுக்குக் காரணமான மகிந்தவை பதவியில் அமர்த்த உதவிய புலிகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன😎? இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைப் பத்தியாக மாற்ற நிலாந்தன் எந்த ஹோட்டலில் றூம் போட்டு யோசிக்கிறார் என்று அறிய வேண்டும்! அநுர பதவியில் இருப்பதால் , எந்த தமிழ் கட்சியாக இருந்தாலும் அனுரவோடு தான் பேச வேண்டும். இதை விட்டு விட்டு "நாம் 14 மாதங்கள் முன்பு ஆதரித்த சஜித் பதவிக்கு வரும் வரை பேச்சு வார்த்தையில் இறங்கோம்!" என்று நிற்க தமிழர்கள் என்ன நிலமும், இராணுவமும் வைத்துக் கொண்டு காலங் கடத்தும் வகையில் வசதியாக இருக்கிறார்களா என்ன?

ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 போட்டியில் வியாஸ்காந்த் பந்துவீச்சில் பிரகாசிப்பு; ஆனால் இலங்கை ஏ அணிக்கு ஏமாற்றம்

3 months 1 week ago
பங்களாதேஷை சுப்பர் ஓவரில் வீழ்த்தி ஆசிய கிண்ண உதயத் தாரகைகள் சம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் சூடியது Published By: Vishnu 24 Nov, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தோஹாவில் அமைந்துள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச விளையாட்டரங்கில் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகைள் (Rising Stars) இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியை சுப்பர் ஓவரில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் பங்களாதேஷ் 3 பந்துகளில் 2 விக்கெட்களை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர் ஓவரில் 2 விக்கெட்களையும் போட்டியின்போது 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அஹமத் தானியல் ஆட்டநாயகனானார். பதிலளித்து பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. இந்தியா ஏ அணியுடனான அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாத் மசூத் 38 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 25 ஓட்டங்களையும் மாஸ் சதாகத் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹபிபுர் ரஹ்மான் சொஹான் 26 ஓட்டங்களையும் ரக்கிபுல் ஹசன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபியான் முக்கீம் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அராபத் மின்ஹாஸ் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹமத் தானியல் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231321

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை!

3 months 1 week ago
தமிழ் மக்கள் அழிந்ததாக நீங்கள் கவலைப்படுகின்றீர்கள். நீங்கள் கூறிய மக்களில் 90 வீதம் யுத்த காலத்திலேயே கொல்லப்பட்டனர். 1983 வரையும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வந்தது. 2009 ம் ஆண்டின் பின்பும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வருகிறது. யுத்தகலத்தில் தினசரி 10 தமிழர்களாவது கொல்லப்பட்டனர். ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களில் பாரிய மக்கள் அழிவுகளினூடான போராட்டங்களை தவிர்க்க வேண்டும் அது எம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்தும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத போராட்டத்தினால் எந்த பயனும் இல்லை. பாரிய மக்கள் அழிவு ஏற்பட்டால் சர்வதேசம் தலையிட்டு தமிழீழம் எடுத்து தரும் என்று நினைத்து மக்களை பலியிட்ட முட்டாள்தனம் 2009 ல் அரங்கேறியது. மேற்கு நாடுகளில் யுத்தத்திற்கு பாரியளவில் பணம் சேர்தது அதை கொள்ளையிட்ட மாபியாகளின் தாகத்தை மட்டும் தான் அந்த போராட்டம் தீர்ததது. முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளை பெற்று சனத்தொகையில் வளர்ந்து வருகிறார்கள் என்று இனவாதம் பேசும் உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மோதல் தமிழர் அழிவுகளை நோக்கிய அரசியலையே ஆதரிப்பது முரண்நகை. முஸலீம்கள் எங்களை அழிக்கவந்தவர்கள் என்று பச்சை இனவாதம் பேசும் உங்கள் இனவாத சிந்தனையையே தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களை பார்தது கூறுகிறார்கள். இனவாதிகள் எந்த இனத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள். தாங்கள் தமது குடும்பங்களுடன் சுகபோக வாழ்ககை வாழ்வது போலவே தாயகத்தில் உள்ள மக்களும் வாழ விரும்புவார்கள் சிந்திக்காத சிந்திக்க விரும்பாத ஒரு சைக்கோ கூட்டமே புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அரசியல் நடத்துகிறன.

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
போட்டியினை பார்க்காமல் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியணியின் ஆரம்பத்தினை பார்த்து இந்தியா ஒரு செத்த ஆடுகளத்தினை வழங்கியிருக்கும் என நினைத்தேன், சிகப்பு மண் கொண்ட ஆடுகளத்தினை கொடுத்துள்ளது, வேகபந்து வீச்சாளர்களுக்கும் சுழல் பந்து வீச்சிற்கும் சாதகமான ஆடுகளம், 4 மற்றும் 5 ஆவது நாளில் ஆடுகளம் விரைவாக காய்ந்து சுழல் பந்து வீச்சிற்கு மிக சாதகமாகிவிடும், இந்தியா தோல்வியினை தவிர்க்க முடியாது.

களைத்த மனசு களிப்புற ......!

3 months 1 week ago
Arun Kumar G · "நான் கேப்டன் ஆன பிறகு ஜெயிக்கற டீமை உருவாக்க நெனச்சேன். கிழக்கு , மேற்கு , வடக்கு, தெற்கு எந்த zoneஆ இருந்தாலும் அவனுக்கு experience குறைவா இருந்தாலும் flightல கொண்டு வந்து இறக்குங்க பாத்துக்கலாம் Skill இருந்தா போதும்னு சொன்னேன். Zaheer khan, Yuvi , Harbajan எல்லாரையும் டீம்ல சேர்த்தேன். Shewag லேட்டா வந்து இணைஞ்சார். அவரை Testல ஓபன் பண்ணவைக்கலாம்னு நெனச்சேன். 'நான் fail ஆகீட்டா என்ன பண்றது'ன்னு கேட்டார் அவர். நீ எத்தனை தடவை fail ஆனாலும் உன்னை நான் back பண்ணுவேன்னு சொன்னேன். Shewag ரொம்ப நல்லா set ஆனார் அந்த slotக்கு. இருந்தாலும் பேட்டிகள்ல 'எனக்கு Middle orderதான் comfortable னு சொல்லீட்டிருந்தார். நான் அதை கண்டுக்கல. ஒரு கேப்டனா ஆட்டத்தை மாத்தற capacity இருக்கற அதிரடி வீரர்களை எப்பவும் நான் எதிர்பாத்துட்டிருப்பேன். அப்படித்தான் 2004ல தோணிய பத்தி கேள்விப்பட்டேன். Challenger Trophy போட்டீல அவரை Opening இறக்கனேன். Netsல அடி பிரிச்சார். Wankadeல ஒரு போட்டீல 100 அடிச்சதும் இல்லாம Nehra ஓவர் பெரிய Six அடிச்சதை மறக்கமாட்டேன். Sachin, Shewag, நான்- 3 பேரும் இருந்தாலும் இன்னொரு Power hitterஆ தோணியை எதிர்பாத்தோம். அவர் ஒரு match winnerஆ இருப்பார்னு நம்பினோம். அவரை 2003 World cupல include பண்ண நெனச்சேன். ஆனா அந்த சமயத்துல அவர் Indian Railwaysல டிக்கெட் கலெக்டரா இருந்தார்னு கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனா என் கணிப்பு தப்பாகல, தோணி பெரியாளா வந்தார். " GANGULY'S TEAM BUILT. 👏" (Excerpts from his Autobiography 'A Century Is Not Enough' ) Voir la traduction

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months 1 week ago
நான்கு வருடத்தை நெருங்குகின்ற இந்தப் போர்... ட்ரம்பின் பொதியுடன், முற்றுப் பெற்றால் மகிழ்ச்சி. 🙂