Aggregator

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
உக்ரேனின் ஜனநாயக நியாயத்தன்மையை மறுப்பது தவறானது மட்டுமல்ல டொனால்ட் ரம்பாலேயே பைத்தியம் என்று அழைக்கபட்ட கொடியவனை ஊக்குவிக்கும் ஆபத்தானதும் ஆகும்.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
ஒரு வேளை நடிகர் கமலஹாசந்தான் இப்படி ஒரு பெயரில் வந்து யாழ் கள உறுப்பினர்களுக்கு மண்டைகாய வைக்கிறாரோ என நான் சந்தேகிக்கிறேன்🤣. நுனிப்புல் மேய்வதும்… அதைவைத்து கொண்டு மேதாவி போல காட்ட முனைந்து மூக்குடை படுவதும்…. தனக்கென புதிய மொழி ஒன்றை உருவாக்கி கொள்வதும்…. பத்து பொருத்தமும் பொருந்துகிறதா இல்லையா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் விராட் கோலி நிதானமாக 43 ஓட்டங்களை எடுத்தார். மற்றையவர்கள் நிலைத்து ஆடாவிட்டாலும் கமியோ ஆட்டங்கள் மூலம் 15-25 ஓட்டங்களை எடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுக்க உதவினர். பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக அடித்தாடினாலும், குருனல் பாண்டியாவின் இறுக்கமான பந்து வீச்சாலும், ஷ்ரேயஸ் ஐயர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த காரணத்தாலும் ஜொஷ் இங்கிலிஸின் விக்கெட் பறிபோன பின்னர் வந்த வீரர்களில் ஷஷாங் சிங்கின் புயல்வேக 61 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் பங்களிக்காததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டி ஐபிஎல் 2025 க்கான சம்பியனாகியது! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா ஐந்து புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: குறிப்பு: கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
போன வருடம், 2024 கோப்பை, பெண்கள் அணி தூக்கியது. ஈ சாலா கப் நம்தே என்டு சிமிரிதி சொல்லிட்டுப் போனதில் இருந்து, எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. பசங்களும் இம்முறை தூக்கிட்டாங்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
என்ன செய்வது வாதவூரன் . ....... எனக்கும் 50% கவலைதான் .......ஆனால் என்ன நான் பொங்களூருக்கத்தான் பதிந்திருந்தேன் அது வென்று விட்டது .......... ! 😂

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 1 week ago
நானும் நீங்களும் தமிழர்கள் அல்லவா? ஆகவே உங்கள் மனநிலைதான் எனதும். உங்களை போலவே, நானும் நேரடியாக கண்டும், அனுபவித்ததுமான அடிப்படையில் உருவான மனநிலை இது. ஆனால் சிங்கள மக்களில் மிக பெரும்பான்மையானோருக்கு ஆமியுடன் இந்த அனுபவம் இல்லை. அவர்கள் அறிந்தது எல்லாம், அறந்தலாவ, அனுராதபுரம், புறக்கோட்டை, மத்திய வங்கி போல சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை செய்பவர்கள் புலிகள், அவர்களிடம் இருந்து சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாவர்கள் ஆமி. கொஞ்சம் சிங்களவர்களுக்கு ஜேவிபி காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அனுரா. உண்மையில் அவர் ஆமியை ரணவிரு என அழைக்காமல் இட இதுவும் (நாடகம் ஆடுவதும்) ஒரு காரணம். தன் தோழர்களை, சகோதரனை கொண்ட ஆமியை ரணவிரு என அழைக்க அனுர விரும்பவில்லை. எம்மை கொண்டதால் அல்ல.

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 1 week ago
செய்திமூலமோ, பிறர்சொல்லியோ அறியாமல், சிங்கள அரசின் ஆமிபற்றி என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகள் உங்கள் பதிவை ஏற்பதற்கு மறுக்கிறது. சிங்களவர் போகட்டும், உங்கள் மனநிலை என்னவென்று அறிய மனம் விளைகிறது.