Aggregator
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
கருத்து படங்கள்
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
பிரிவினைவாதிகளின் நிறைவேற்றப்படாத 6 கோரிக்கைகள் அம்பலம்: ஜே.வி.பி.யை கடுமையாக விமர்சித்த உதய கம்மன்பில
பிரிவினைவாதிகளின் நிறைவேற்றப்படாத 6 கோரிக்கைகள் அம்பலம்: ஜே.வி.பி.யை கடுமையாக விமர்சித்த உதய கம்மன்பில
26 Nov, 2025 | 04:39 PM
![]()
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார்.
புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,
தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை, 2012இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் வெறித்தனமாக இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரணம் வேண்டும் என்று கோஷமிட்டனர். அன்றைய தினம் அவர் மேலும் பத்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் பின்னர் குறிப்பிட்டனர்.
ஆனால், தில்வின் சில்வாவுக்கு எதிராக நாம் கண்டது ஒரு பெயரளவு ஆர்ப்பாட்டம், ஒரு சுஹத (சுமுகமான/நட்பான) ஆர்ப்பாட்டம், ஏதோ கடமைக்காகச் செய்த ஆர்ப்பாட்டம். எப்படியும், வடக்கின் பயங்கரவாதிகளுக்கும் தெற்கின் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஒரு சகோதரத்துவ பிணைப்பு உள்ளது. நாங்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்துவிட்டார்களே என்று வடக்கின் பயங்கரவாதிகளுக்கு தெற்கின் பயங்கரவாதிகள் மீது ஒரு பெரிய மரியாதை இருக்கிறது.
திசைகாட்டி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிராகரிப்பு: நம்பகத்தன்மையை மீட்டெடுக்க புலிகளின் உதவி?
திசைகாட்டி (NPP) அரசாங்கம் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த முயற்சித்து, தனது தென் பகுதி வாக்குகளை இழந்துவிட்டதாக கம்மன்பில குற்றம் சாட்டினார்.
ரணவிருவோக்களுக்கு (போர் வீரர்களுக்கு) 'சிப்பாய்கள்' என்று கூறினர். புலிகள் அமைதிக்குத்தான் போராடினர் என்று கூறினர். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றினர். வடக்கில் சிங்களவர்களுக்கு தொந்தரவு கொடுக்க உள்ளூராட்சி சபைத் தலைவர்களை ஏவி விட்டனர். வடக்கில் பௌத்த விகாரைகளை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் தமது உறுப்பினர்களைப் பங்கேற்க அனுமதித்தனர். கிழக்கில் விகாரைகளை டோசர் செய்ய முயன்றனர். கிழக்கில் உள்ள விகாரைகளின் புத்த சிலைகளை பொலிஸாரைப் பயன்படுத்தி அகற்றினர். இதனால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அரசாங்கத்தின் மீது உடைந்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சமஷ்டி (Federal) யாப்பை கொண்டுவர வேண்டுமானால், இந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதனால்தான், லண்டன் புலிகள் ஆர்ப்பாட்டம், தெற்கின் பயங்கரவாதிகள் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வடக்கின் பயங்கரவாதிகளிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு என்ற நியாயமான சந்தேகம் நமக்கு எழுகிறது, என அவர் தெரிவித்தார்.
6 நிறைவேற்றப்படாத பிரிவினைவாதக் கோரிக்கைகள் அம்பலம்
கனடிய தமிழ்க் காங்கிரஸ், ஜனாதிபதி அனுர திசாநாயக்க வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டதை கம்மன்பில நினைவுபடுத்தினார்.
"ஜனாதிபதி எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், கனடிய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தலைவர் குமார் ரத்னம் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலையும் முன்வைத்துள்ளனர். திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இவைதான், என்று கூறி, கம்மன்பில அந்தக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்:
* அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் (கைதிகளாக உள்ளவர்கள் பயங்கரவாதிகளே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்).
* பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல்.
* இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகப் பெறப்பட்ட அனைத்துப் தனியார் நிலங்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, இராணுவ முகாம்களை அகற்றுதல்.
* வடக்கில் விகாரைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல்.
* புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்.
* இராணுவம் உணவகங்கள் நடத்துவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ நிலைநிறுத்தலை மற்ற மாகாணங்களுக்கு இணையாகக் குறைத்தல்.
"இவைதான் திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள். பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவற்றை நிறைவேற்றாததின் ஆவேசமே லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது," என்று அவர் கூறினார்.
"அனுரவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி"
நுகேகொட கூட்டத்தில் முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) நான்கு அல்லது ஐந்து கோப்புகள் இருப்பதாக திசைகாட்டி உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு கம்மன்பில சவால் விடுத்தார்.
"நானும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிராக நான்கு ஐந்து கோப்புகள் அல்ல, ஒரே ஒரு கோப்பு இருப்பது பற்றி உங்களால் கூற முடியுமா என்று திசைகாட்டி உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கிறேன். நாங்கள் இலஞ்சமோ, கொள்ளையோ, ஒழுக்கக்கேடோ செய்யாததால்தான், அனுர திசாநாயக்கவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி என்றும், திசைகாட்டி அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்றும் பயமின்றி கூறுகிறோம்," என்றார்.
அனுர திசாநாயக்கவின் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய முறைகேடுகளை பட்டியலிட்ட கம்மன்பில, பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்:
* ஊழலை விசாரிக்கும் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவரை நியமிக்காமல், அரசுத் தணிக்கையில் அனுபவமில்லாத கேளனி பல்கலைக்கழக சகா ஒருவரை நியமிக்க முயன்ற முதல் ஜனாதிபதி.
* ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாதவ தென்னக்கோன் என்பவரை நீக்கி, சதி மூலம் தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்தது.
* 323 கொள்கலன்கள் மோசடியாக விடுவிக்கப்பட்டதில் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக் குழுவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 'சீவலி அருக்கொடவுக்கு' தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, மரபுகளை மீறி சேவைக் கால நீட்டிப்புடன் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு வழங்கியது.
"இதைவிட ஊழல் மிகுந்த ஜனாதிபதி யாராவது இருந்தால், அவரை பெயரிடுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," என்று கம்மன்பில தெரிவித்தார்.
"பொய் வழக்குகள் போட்டால், அதுவே அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கலாகும்"
நுகேகொட கூட்டம் "திருடர்களின் கூட்டம்" என்று கூறப்பட்டதை நிராகரித்த கம்மன்பில, "திசைகாட்டி தலைவர்கள் வாயைத் திறந்தாலே அப்பட்டமான பொய்களைத்தான் சொல்கிறார்கள். நுகேகொட கூட்டத்தில் இருந்தவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானதா, பொய்யானதா என்று எங்களுக்குத் தெரியாது. அதனால், அரசியலில் ஈடுபடும் அனைவருடனும் நாம் இணைந்து பணியாற்ற நேரிடும். எங்களில் யாராவது திருடர்கள் இருந்தால், பேசிக்கொண்டிருக்காமல் அவர்களைக் கைது செய்யுங்கள். நாங்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதி அளித்ததால் தானே, மக்கள் ஆணை கிடைத்தது," என்று வலியுறுத்தினார்.
"ஆனாலும், எங்களைப் பயமுறுத்தி நிறுத்த முடியாமல், சிறையில் அடைப்பதற்காகப் பொய் வழக்குகளைப் புனைய முயற்சித்தால், அது அரசாங்கத்திற்கு ஒரு பேரழிவு சக்தியாக மாறும் என்று இப்போதே எச்சரிக்கிறேன்," என்றும் அவர் மேலும் கூறினார்.
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 01 / THE LAST LETTER FROM MULLIVAIKKAL / Chapter 01
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு
Mano ShangarNovember 26, 2025 12:31 pm 0

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதிய வரைவு ஒப்பந்தம் குறித்து ரஷ்யாவிடம் இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை ரஷ்ய தரப்பு தெரிவித்திருந்தது.
மேலும், திட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்காமல் போகலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் ஆரம்ப கட்டமைப்பிற்கு ஆதரவாக இருந்தபோதிலும், அமைதி ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்தம் கணிசமான மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் நிலைமை அடிப்படையில் வேறுபட்டிருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிய திட்டத்தின் நகல் கிடைக்கவில்லை என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பா, அமெரிக்கவின் அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் பகிரங்க கருத்துகளை வெளியிடவில்லை.
எனினும், அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோலும் ரஷ்ய பிரதிநிதிகளும் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அபுதாபியில் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆழமாக முரண்படும் சில பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
https://oruvan.com/us-peace-deal-to-end-war-ukraine-announces-general-agreement-reached/
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில்,
இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே!
வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக 2022ஆம் ஆண்டு மாவீரர் நாளில் கனகபுரம் துயிலுமில்லத்தில் எழுத்து மூலமாக நான் விடுத்த வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மூன்று மாவீரர்களின் அன்னையான சிங்களப் பெண்மணி துயிலும் இல்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமையை ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில் தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்தியது.
‘நான்கு இனத்தவர்களின் ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம்’ என்ற தலைப்பில் கடந்த 23ஆம் திகதி உதயன் சஞ்சீவியில் வெளிவந்த நான் எழுதிய கட்டுரையின் பிரதிகளை கிளிநொச்சி ஜெயந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களிடம் வழங்கினேன். எனது எதிர்பார்ப்பின் நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எனவே கடந்த ஆறு வருடங்களாக நான் விடுத்த அதே வேண்டுகோளை நேற்று (24) கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் அவரது பணிமனைக்குச் சென்று நினைவுபடுத்தினேன்.
அத்துடன் சிங்கள-முஸ்லிம் மாவீரர்கள் நினைவாக உங்களது நிலைப்பாடு என்ன என்று கேட்டேன். ஏனெனில் இவர் 2022ஆம் ஆண்டு மாவீரர் நாள் காலப்பகுதியில் அடுத்த ஆண்டு கட்டாயம் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வீரவேங்கை ரமீஸின் பெற்றோர் கௌரவிக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியவர். தற்போது அவரது பதில் எனக்கு ஆச்சரியமளித்தது.
‘புலம்பெயர் உறவுகள் சிங்கள-முஸ்லிம் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பது குறித்து கடும் சினத்துடன் ஆட்சேபிக்கிறார்கள்’ என்பதே அந்தப் பதிலாக அமைந்தது.
தவறான புரிதல் இது. மக்கள் பிரதிநிதி அதுவும் உள்ளூராட்சிச் சபையின் தவிசாளர் எமது மாவீரர்களின் பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியவர், இப்படிப் பதில் சொல்வதை நீங்களும் ஏற்கமாட்டீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
இவரது பதிலைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் விரைந்த நான் கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தைச் சந்தித்து விடயத்தைச் சொன்னேன்.
‘எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்துகொண்டு விடுதலைப்போரில் ஆகுதியானோரின் பெற்றோர் நிச்சயம் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே’ என அவர் பதிலளித்தமை ஆறுதலாக இருந்தது. நடந்த விடயங்களைக் கேட்டு மனம் வருந்திய அவர் இந்தக் கௌரவிப்புகள் ஏற்கனவே நடத்திருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்தப் போராட்டத்தில் ஏதோ முடிந்தளவு என்னால் பங்காற்றியுள்ளேன். இன்று நான் உயிரோடு இருப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்களிப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூருவேன். மாவீரர் பெற்றோரை புறந்தள்ளுவதைத் தேசியத் தலைவரின் ஆன்மாவும் மன்னிக்காது.
எனவே புலம்பெயர்ந்து வாழும் தாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் தலைமையை ஏற்றுப் போராடிய சிங்கள-முஸ்லிம்-பறங்கி என மாவீரர்களின் பெற்றோர் புறந்தள்ளப்படுவது குறித்த ஆட்சேபனைகளையும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் கரைச்சி பிரதேசசபைத் தலைவருக்கும் அவரை வழிநடத்தும் மாவட்டத் தலைமைக்கும் உடனடியாக சாத்தியமான சகல வழிகளிலும் தெரிவியுங்கள். நன்றி மறந்த இனத்தவராக நாம் மாறக்கூடாது.
கைதிகள் பரிமாற்றம் மூலம் இரு போராளிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது அவர்களில் ஒருவராக காமினி என்ற சிங்களப் போராளியைக் கிட்டு குறிப்பிட்டார். விடுதலையாகி வந்த அந்தப் போராளி மட்டக்களப்பில் போராடி 04.05.1987 வந்தாறுமூலையில் வீரச்சாவடைந்தார். இறுதி யுத்தம் வரை முஸ்லிம் போராளிகள் போராடினர். இவையெல்லாம் சாமானியமான விடயங்களா?
உங்களுக்கு மாவீரர் நாளுக்கு நிதி வேண்டுமாயின் நான் உண்டியல் குலுக்கி வழங்கத் தயார் என வேழமாலிகிதனுக்குத் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டுகிறேன்.
இன்னொரு விடயம் மாவீரர் நினைவேந்தல் மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களங்களாக மாற்றவேண்டாமென தயவுசெய்து சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள்.
இன உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம் குழுவினர் ஏதாவதொரு மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு முஸ்லிம் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கவேண்டும். இதற்கான முழுச் செலவையும் தாங்கள் பொறுப்பேற்கிறோம் என எனக்குத் தெரிந்த ஒரு தரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தவேண்டுகோள் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைமைக்கு அதன் மத்திய குழு உறுப்பினர் மூலம் தெரியப்படுத்தியும் அந்தப் பேச்சைத் தொடர அவர்கள் விரும்பவில்லை என்தைக் குறிப்பால் உணர்த்தினர்.
எனவே, தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது உறவுகள், முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்.” என்றார்.