Aggregator

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
ஜோதிடத்தில் முனைவர் (Ph.D.) பட்டம் பெறுவது ஒரு கடினமான ஆனால் சாத்தியமான செயல்முறை ஆகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சி, அகாடமிக் திறன்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. ஜோதிடத்தில் Ph.D. பெறுவதற்கான படிகள்:1. தகுதிகள்:அடிப்படை தகுதி: ஜோதிடம் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலை (M.A. / M.Sc.) பட்டம். குறைந்தபட்ச மதிப்பெண்: பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் 55% (அல்லது CGPA 6.0) தேவைப்படுகிறது. ஆராய்ச்சி திறன்: UGC-NET/JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை கிடைக்கும் (இந்தியாவில்). 2. ஆராய்ச்சி தலைப்பு தேர்வு:ஜோதிடத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை (எ.கா., கிரகங்களின் மனோதத்துவ தாக்கம், வர்த்தக ஜோதிடம், மருத்துவ ஜோதிடம்) தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ச்சி தலைப்பு புதுமையானதாகவும், ஏற்கனவே உள்ள ஆய்வுகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதாகவும் இருக்க வேண்டும். 3. பல்கலைக்கழகம்/வழிகாட்டி தேர்வு:பல்கலைக்கழகம்: இந்தியாவில், பீகார் ராஷ்டிரிய பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் போன்றவை ஜோதிடத்தில் Ph.D. வழங்குகின்றன. வெளிநாடுகளில்: சில அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் "மதம் மற்றும் கலாச்சார ஆய்வுகள்" (Religion & Cultural Studies) பிரிவில் ஜோதிடம் தொடர்பான ஆராய்ச்சியை அனுமதிக்கின்றன. வழிகாட்டி: ஜோதிடத்தில் நிபுணத்துவம் உள்ள பேராசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 4. சேர்க்கை செயல்முறை:எழுத்துத் தேர்வு & நேர்காணல்: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் Ph.D. நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. ஆராய்ச்சி முன்மொழிவு (Research Proposal) சமர்ப்பித்தல்: உங்கள் ஆராய்ச்சி திட்டத்தை விளக்கும் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். 5. பாடப்பிரிவு & ஆராய்ச்சி:பாடப்பிரிவு வேலை: சில பல்கலைக்கழகங்கள் 6-12 மாத கோர்ஸ் வேர்க் (Course Work) தேவைப்படுத்துகின்றன. ஆராய்ச்சி & தரவு சேகரிப்பு: ஜோதிட நூல்கள், குறிப்புகள், நேரடி ஆய்வுகள் (ஜாதக பகுப்பாய்வு) மூலம் தரவுகளை சேகரிக்க வேண்டும். 6. ஆய்வறிக்கை & ஆய்வு:ஆய்வறிக்கை (Thesis): 3-5 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். வாய்மொழி தேர்வு (Viva Voce): ஒரு குழு முன்பு உங்கள் ஆராய்ச்சியை பாதுகாக்க வேண்டும். 7. Ph.D. வெளியீடு:ஆய்வறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், பல்கலைக்கழகம் உங்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும். நன்றி:ஆழமான தேடல்

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
இதை கண்டால் ஐரோப்பிய ஆரய்ச்சி கண்டு பிடிப்பு தான் எண் சோதிடம் என்று முகநூலில் ஆராய்ச்சி கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள் இதை விட சீமானின் பேச்சுக்களை பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவர்களான நந்தன், ரசோதரன், புலவருக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி. போட்டியை சுவாரசியமாக்க கருத்துக்களை வழங்கியவர்களுக்கும், மற்றும் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றி. மீண்டுமொரு போட்டியில் சந்திக்கலாம்.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
இப்படி காணொளிகள், தொலைக்காட்சிகளில் பலரை பார்த்துள்ளேன். இதனால் தான் கேள்வியும் வந்தது.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
இந்த தாக்குதலை, US. மேற்கு, Nato (உத்தியோகபூர்வமாக) செய்யவில்லை. நீங்கள் இணைத்த இணைப்பில் இருந்த்து "Article X 1. For the purpose of ensuring verification of compliance with the provisions of this Treaty, each Party undertakes: (a) to use national technical means of verification at its disposal in a manner consistent with generally recognized principles of international law; (b) not to interfere with the national technical means of verification of the other Party operating in accordance with this Article; and (c) not to use concealment measures that impede verification, by national technical means of verification, of compliance with the provisions of this Treaty. 2. The obligation not to use concealment measures includes the obligation not to use them at test ranges, including measures that result in the concealment of ICBMs, SLBMs, ICBM launchers, or the association between ICBMs or SLBMs and their launchers during testing. The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." இதன் கருத்து சோதனை செய்யும் வீச்சிலும் மறைக்கக்கூடாது. (ஏனெனில் மறைத்து வைத்து தான் உண்மையான சண்டையில் பாவிக்கப்பட்ட வேண்டும். ஆகவே சோதனை செய்யம் போது மறைத்து வைப்பது , அந்த மறைப்பு எவ்வளவு வேலைசெய்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும். அப்படி சோதனையின் வீச்சிலும் மறைத்து வைக்க கூடாது, அப்படி மறைத்து சோதனை செய்தால் எந்த ஆய்தத்தை சோதனை செய்யப்படுகிறது என்பதும் தெரியாது). இரண்டாவதில். "The obligation not to use concealment measures shall not apply to cover or concealment practices at ICBM bases or to the use of environmental shelters for strategic offensive arms." குறிப்பிட்ட ஆயுதங்களுக்கு enronmental shelters தேவை என்றால. இன்னொன்று strategic offensive arms என்றே இருக்கிறது. அது bombers (விமானங்கள்) ஐயும் உள்ளடுக்குகிறதா என்பதும் தெரிய வேண்டும். அது தொடக்கத்தில் பரிமாறப்படும் தரவில் இருக்கும். உள்ளடக்கினாலும், பொதுவாக இந்த (russia) bombers க்கு environmental shelters தேவை இல்லை. இதன் உயர்மட்ட கடப்பாடு சுமத்தப்படுவது Non‑Interference with National Technical Means (NTM) (e.g. satellites) அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் மறைக்க கூடாது. அதாவது environmental shelters பாவிக்க தேவையற்ற ஆயுதங்கள் / தளபாடங்கள் national technical means ஆல் சரிபாபார்க்கப்படுவதில் (எவற்றாலும்) தலையீடு இருக்க கூடாது. எனவே New START treaty சரியாகவே இருக்கிறது. பி-2 bombers க்கு environmental shelters பவிக்கப்படவேண்டும், தோற்றத்தை ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சை பழுதாகமல் பாதுகாப்பதற்கு குளிர் ஊட்டப்பட்ட environmental shelters தேவை. (மற்றும், இந்த பி-2 bombers குறிப்பிட்ட தூர பறப்பு, குறிப்பிட்ட வெப்பநிலையின் மேல் குறிப்பிட்ட நேர பறப்புக்கு பின், இந்த ரேடார் இல் இருந்து மறைக்கும் பூச்சு புதுப்பிக்கப்படவேண்டும்.)

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஆர்சிபி வெற்றி… ஒருபக்கம் கொண்டாட்டம்… மற்றொரு பக்கம் சோகம்! 4 Jun 2025, 6:11 PM 18 வருட காத்திருப்புக்கு பின், முதல்முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றியுள்ளது பெங்களூரு அணி. இதனால், நேற்று (ஜூன் 3) இரவு முதல் பெங்களூருவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இன்று (ஜூன் 4) மாலை கர்நாடகா சட்டமன்ற வளாகம் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஆர்சிபி ரசிகர்கள் மதியம் முதல் சட்டமன்றம் மற்றும் கிரிக்கெட் ஸ்டேடியம் முன்பாக குவியத்தொடங்கினர். கடும் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கர்நாடகா சட்டமன்றத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தவார் சந்த் கெக்லாட், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினர். ஆர்.சி.பி-யின் வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது https://minnambalam.com/rcb-fans-stampede-11-feared-dead/

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
ஒருவிடயம் உண்மையாக இருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும். ஒரே பிறப்பு எண்ணைக் கொண்ட பத்தாயிரம் நபர்களை எடுத்துக் கொண்டால் அதில் குறைந்தபட்சம் 75வீதம் - 7500 பேராவது தமது திகதி எண்ணுக்குரிய ஒரே தன்மையான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும். 9 எண்கள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் இலகுவானது இதில் பிறந்த திகதி எண்ணுடன் கூட்டெண்ணும் ஒரே மாதிரியானவர்கள் 1 வீதம் இருந்தால்கூட 100 பேர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். திகதி எண், கூட்டெண், பெயர் ஆகிய மூன்றும் பொருத்தமான 100 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் வாழ்க்கையை ஆராய வேண்டும். இவ்வாறு யாராவது செய்திருக்கிறார்களா ? ஒவ்வொரு எண்ணுக்கும் பொதுப் பலன்கள் கூறும்போது பணக்காரன் ஆகுவார், உயர் பதவியில் இருப்பார், பிரபலமானவராக இருப்பார், கடுமையாக உழைத்து முன்னேறுவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கும். ஏழையாக இருப்பார், வாழ்க்கை முழுவதும் தோல்வியடைவார், முட்டாளாக இருப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்காது. ஒருவரது வாழ்வில் பல ஆயிரம் நிகழ்வுகள் நடந்திருக்கும். பலன்களை வாசிக்கும் ஒருவர் தன்னோடு தொடர்புடைய நிகழ்வுகள் சில ஒத்துப் போகிறது என்றால் மீதியான நிகழ்வுகளைப் புறம்தள்ளி அதனை நம்ப ஆரம்பித்து விடுவார். எண்ணுக்கேற்றவாறு பெயரை வைத்துவிட்டால் எல்னோரும் வாழ்வில் வெற்றியடைந்துவிடுவார்களே. நிலமை அப்படி அல்ல. தெற்கசியாவை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மையானவர்கள் அடக்குமுறைக்குள்ளும் வறுமைக் கோட்டுக்குக் கீழும், துன்பத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 1 week ago
சாய் சுதர்ஷன் இந்த 2025 ஐ.பி.எல்லில் மட்டுமல்ல இதுவரையிலான ஒட்டுமொத்த ஐ.பி.எல் பருவங்களிலுமே தோன்றிய மட்டையாளர்களில் ஆகச்சிறந்தவர் சாய் சுதர்ஷன்தான். இவ்வாண்டு 156 ஸ்டிரைக் ரேட்டில் 759 ரன்கள். ஸ்டிரைக் ரேட்டோ இந்த ரன்களோ கூட அல்ல, வேறொன்றுதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஷ்ரேயாஸ் ஐயரையோ அபிஷேக் ஷர்மாவையோ போல பெரிய சிக்ஸர்கள் அடிப்பவர் அல்ல. ஆனால் எந்த ஆட்டத்திலும் அவர் ஆட்டச்சூழலாலோ பந்துவீச்சாளர்களாலோ ஆதிக்கம் செய்யப்படவில்லை, எதுவுமே அவரை நிலைகுலைய வைக்கவில்லை. ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை எந்த ரிஸ்கும் இன்றி அவர் எடுப்பதையும் வேகவீச்சையும் சுழலையும் பிசிறின்றி ஆடுவதையும் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் திறமையைப் பார்ப்பதைப் போல இருந்தது. வேகவீச்சை ஆடும்போது அவர் சில நுண் வினாடிகள் முன்பே தயாராக இருக்கிறார் - அனேகமாக எந்த விதப் பந்தையும் கணிப்பதில் அவருக்குப் பிழையேற்பட்டு நான் பார்க்கவில்லை. இசை நடத்துநர் ஒருவர் பெரிய வாத்திய கோஷ்டியை தன் சுண்டு விரல் அசைவில் கட்டுப்படுத்தி பிரம்மாண்ட இசையனுபவத்தை கட்டியெழுப்பி நம்மை மயக்கி நிறுத்துவதைப் போல எதிரணியின் கள அமைப்பு, பந்து வீச்சு, திட்டங்கள் எல்லாவற்றையும் சுதர்ஷன் தனி ஆளாக நடத்துவதாகத் தோன்றுகிறது. மிகப்பெரிய ஸ்கோர்களை அவர் துரத்திப் போகும்போதும் சற்றும் அவசரமோ குழப்பமோ இல்லை. மும்பைக்கு எதிராக 228 எனும் இலக்கை சரியான துணை வீரர் இன்றி அவர் எடுத்துச் சென்று (தோல்வியுற்றாலும்) 163 ஸ்டிரைக் ரேட்டில் 80 அடித்ததைப் பார்த்தபோது வாவ் என்றிருந்தது. ஏதோ ஒரு போட்டியில் 200 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் / சதம் அடிப்பது பெரிய விசயமில்லை, எல்லா போட்டிகளிலும் எதிரணியை அடித்து துவம்சம் பண்ணுவது, அவுட் பண்ணுவதற்கு சிறு பழுதும் கொடுக்காமல் ஆடுவது கிட்டத்தட்ட மேதமையைதான். சாய் சுதர்ஷனின் வளர்ச்சியின் அடுத்த கட்டம் இன்னும் சில சிக்ஸர்களைக் கூடுதலாக அடிக்கப் பழகுவதுதான் என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கென்னவோ அவர் சிக்ஸர்களையும் ரிஸ்க் இன்றி அடிக்கத் தொடங்குவார் எனத் தோன்றுகிறது. அப்படி நிகழாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஐ.பி.எல்லின் தரத்தை அவரளவுக்கு பலமடங்கு மேலே உயர்த்துகிற இன்னொரு வீரர் வரலாற்றிலேயே இல்லை. இதை நான் கெய்ல், ஜெயசூர்யா, சேவாக், டிவில்லியர்ஸ் துவங்கி பல்வேறு ஐ.பி.எல் அதிசூர பராக்கிரமசாலிகளைப் பார்த்த பிறகே சொல்கிறேன். கில்லை இப்போது இந்தியாவில் ஆடும் ஒருநாள் மட்டையாளர்களில் தலைசிறந்த திறமையாளர் என்கிறார்கள். ஆனால் பல போட்டிகளில் சுதர்ஷன் கில்லுடன் ஆடும்போது டெக்னிக்கலாகவே கில்லைவிட மேலாகத் தெரிகிறார். இதனால்தான் அவர் ஐ.பி.எல் பார்க்கும் நமது அனுபவத்தையே மகத்தானதாக்குகிறார் என்று சொல்கிறேன். https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_78.html

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
15 புகைப்படங்களில் வெற்றிக் கொண்டாட்டம்: விராட்டின் ஆனந்த கண்ணீர் முதல் ரசிகர்களின் மகிழ்ச்சி தருணம் வரை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் வெற்றிக் கோப்பைக்கு முத்தமிடும் விராட் கோலி 3 ஜூன் 2025, 19:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 ஜூன் 2025, 19:35 GMT இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும். இந்த போட்டியின் முக்கிய தருணங்களை புகைப்படங்களாகக் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட்டின் கையில் வெற்றிக்கோப்பை - அணியினரின் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றிக் கோப்பையுடன் ஆர்சிபி அணியினர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியை எட்டியதும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் விட்ட விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் விராட்டின் வெற்றிக் கொண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் போட்டியைக் காண நேரில் வந்திருந்தார் விராட் கோலியுடன் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஞ்சாப் அணிக்காக தலைப்பாகை மற்றும ஆர்சிபிக்காக ஜெர்சியுடன் வந்திருந்த மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்ட நாயகன் விருது பெற்ற க்ருனால் பாண்டியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பில் சால்ட் பிடித்த அபாரமான கேட்ச் பஞ்சாப் அணியின் விக்கெட் சரிவை தொடக்கி வைத்தது. அவரை சகவீரர்கள் பாராட்டுகின்றனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதலில் கண்ணீர் பின் கொண்டாட்டம்- ஆர்சிபி அணியின் சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைதானத்தில் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்புகின்றனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போட்டியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போட்டி தொடங்கும் முன்னதாக நடைபெற்ற இன்னிசை கலை நிகழ்ச்சிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆமதாபாத்தில் போட்டியைக் காண்பதற்காக திரண்டிருந்த ஆர்சிபி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql27kzykygo

ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் - ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு

3 months 1 week ago
கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி. Alberta வில் உள்ள Drumheller இல் சிறந்த டைனோசர் அருங்காட்சியகம் ஒன்று உண்டு. இரு தடைவை சென்று இருக்கின்றேன். Pipestone creek பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன். யாரும் யாழ் கள உறவுகள் இஞ்சால வந்தால் ஒருக்கா போய் பார்க்கலாம்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 04 JUN, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிக்கு போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப்போகின்றனர். அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் செம்மணியில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியிலான பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை கொண்டுள்ளது. இங்கே எவ்வித பாதுகாப்பும் போடப்படவில்லை. மக்கள் அங்கு சென்று எதனையும் செய்யலாம் என்பதை போன்று உள்ளது. அந்த புதைகுழி தொடர்பான நடவடிக்கைகளுக்ககாக போதுமான நிதி இல்லை. அங்கு அகழ்வுகளை நடத்துவதற்கும் சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் நிதி போதுமாக இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்கும் போதுமானது அல்ல. போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றனர். இதனால் அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத் தரவும் உதவலாம். 1996 காலப்பகுதியில் அங்கே நடந்த கிருஷாந்தி கொலை வழக்கின்போது 600 பேர் அங்கிருந்து காணாமல் போனமை தெரியவந்தது. இதனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நிதியை ஒதுக்குமாறு நாங்கள் கோருகின்றோம். இதனை பாதுகாப்பதற்காகவும், சாட்சியங்களை பாதுகாப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/216575

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி நியூஸ் 4 ஜூன் 2025, 03:22 GMT சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது? உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும். அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன. இந்த எண்ணெய்கள் 'தீங்கு விளைவிக்கும்', 'நச்சுத்தன்மை கொண்டவை' மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம். குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை "த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight" என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும். இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா? இதய ஆரோக்கியம் - சமையல் எண்ணெய் தொடர்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது. ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார். "ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என்று அவர் விளக்கினார். அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான 'லினோலிக்' அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) 'கெட்ட கொழுப்பை' குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன. கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. "உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன," என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார். அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம். இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. "ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்" என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார். ஆரோக்கியத்திற்கு உகந்தது எது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன. "இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்," என்று மொசாஃபாரியன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார். அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா? "இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு" என்கிறார் மொசாஃப்ரியன். விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y3y0x925o

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

3 months 1 week ago

உணவில் பயன்படுத்தும் சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிகா பிராட்லி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 ஜூன் 2025, 03:22 GMT

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய் போன்று, விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற சர்ச்சைக்குரிய கூற்றுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மையானது?

உங்கள் சமையலறை அலமாரியில் எங்காவது சூரியகாந்தி எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் நிச்சயமாக இருக்கக்கூடும்.

அவற்றை நீங்கள் சமைக்கப் பயன்படுத்தலாம், அல்லது சாலட்களில் தெளிக்கலாம்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், தற்போது இந்த எண்ணெய்கள் குறித்துப் பலரும் இணையதளத்தில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் குறித்து சமூக ஊடகங்களில் எண்ணற்ற பதிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த எண்ணெய்கள் 'தீங்கு விளைவிக்கும்', 'நச்சுத்தன்மை கொண்டவை' மற்றும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதுதான் இந்தப் பதிவுகளின் சாராம்சம்.

குறிப்பாக, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எட்டு வகையான எண்ணெய்களை "த ஹேட்ஃபுல் எயிட்-The Hateful Eight" என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் கடுகு, சோளம், பருத்தி விதை, திராட்சை விதை, சோயா, அரிசி தவிடு, சூரியகாந்தி, குங்குமப்பூ போன்ற பிரபலமான எண்ணெய்களும் அடங்கும்.

இந்த எண்ணெய்கள் அனைத்தும் இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்குக் காரணமாகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

விதைகளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் உண்மையில் நமது எதிரிகளா? அல்லது நியாயமே இல்லாமல் அவை குறை கூறப்படுகின்றனவா?

இதய ஆரோக்கியம் - சமையல் எண்ணெய் தொடர்பு என்ன?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களைப் பற்றியே பெரும்பாலான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. நம் உடலால் சுயமாக அவற்றை உற்பத்தி செய்ய இயலாது.

ஒமேகா-6 அமிலங்கள் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அது இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகவும் சமீபத்தில் சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஒமேகா-6 அமிலங்கள் வீக்கத்தை அதிகரிக்காது என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுவதாக மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாரிஷ் மொசாஃபாரியன் கூறுகிறார்.

"ஒமேகா-6 அமிலங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட லிபோக்சின்கள் போன்ற தனித்துவமான இயற்கை மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை, புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது" என்று அவர் விளக்கினார்.

அமெரிக்காவில் 200,000க்கும் அதிகமான மக்களின் உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உள்பட, தாவர அடிப்படையிலான எண்ணெய்களை உணவில் பயன்படுத்துபவர்கள் இதய நோய் அல்லது புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மறுபுறம், அதிகளவில் வெண்ணெய் உட்கொள்பவர்களுக்கு இந்த ஆபத்து அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை, குறிப்பாக விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலமான 'லினோலிக்' அமிலத்தை மையமாகக் கொண்டு, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த லினோலிக் அமிலம் நமது ரத்தத்தில் உள்ள (குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (low-density lipoprotein: LDL) 'கெட்ட கொழுப்பை' குறைக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான மேட்டி மார்க்லண்ட் 2019ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு லினோலிக் அமிலம் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இருந்து ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அதிகமாக உட்கொள்வது, நோய் அல்லது இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்டுள்ள ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தபோதும், இதுகுறித்த உயர்தர ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஹெக்ஸேன் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன என்று சில கவலைகள் உள்ளன.

கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் ஹெக்ஸேன். ஆனால், இந்தச் செயல்முறை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

"உணவுப் பதப்படுத்துதலில் ஹெக்ஸேன் சாற்றின் பயன்பாடு மிகவும் பொதுவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், வாசனையை நீக்குதல் மற்றும் ப்ளீச்சிங் போன்ற செயல்முறைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை நீக்குகின்றன," என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஊட்டச்சத்து ஆய்வுகளின் இயக்குநர் கிறிஸ்டோபர் கார்டனர் கூறுகிறார்.

அழுத்தும் (crushing) முறையில் எடுக்கப்படும் விதை எண்ணெய்களில் இந்தச் (ஹெக்ஸேன் மூலம் பிரித்தெடுக்கும்) செயல்முறை இல்லை. இருப்பினும், இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் விலை அதிகம்.

இந்த எண்ணெய்களால் புற்றுநோய் ஏற்படுகிறதா?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாகப் பல ஆய்வுகள் கூறினாலும், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோயின் வளர்ச்சியைத் தூண்டக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கான எரிபொருளாக, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துகின்றன.

ஆனால், இதில் ஒமேகா-6 அமிலங்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

"ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சில வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டால், பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்" என்று நியூயார்க்கில் உள்ள வெயில் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முதுகலை ஆய்வாளரான நிக்கோலஸ் கொண்டோராஸ் எச்சரிக்கிறார்.

ஆரோக்கியத்திற்கு உகந்தது எது?

சூரியகாந்தி மற்றும் கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடுகு எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் குறித்து வேறு எந்த விதை எண்ணெயையும்விட அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அவை குறித்துப் போதுமான சான்றுகள் உள்ளன.

"இவை இரண்டிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் சமநிலையில் உள்ளன. அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கும்," என்று மொசாஃபாரியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடுகு எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், ஆலிவ் எண்ணெயைவிட ரத்தக் கொழுப்பின் அளவை சிறப்பாக மேம்படுத்துகிறது என்றும் கூறினார்.

அதோடு 27 சோதனைகளின் பகுப்பாய்வின்படி, கடுகு எண்ணெய் சூரியகாந்தி எண்ணெயைவிட மோசமான கெட்ட கொழுப்பின் (LDL) அளவை கணிசமாகக் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைக்கும் முயற்சிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சாச்சுரேட்டட் கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது, சோயாபீன் எண்ணெய், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சோயாபீன் எண்ணெயை அதிகமாக உட்கொள்பவர்களுக்குப் பிற காரணங்களால் இறப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும் என்று ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டுமா?

"இயற்கை அளித்துள்ள சத்தான பரிசுகளில் விதைகளும் ஒன்று. அவை ஆரோக்கியமான கொழுப்புகளின் தொகுப்பு" என்கிறார் மொசாஃப்ரியன்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் கடுமையாக சோதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மறுபுறம், இந்த எண்ணெய்கள் ரத்தக் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளில் ஏற்படுத்தும் நன்மைகளை ஏற்கெனவே பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன என்று பேராசிரியர் மார்க்லண்டும் பிறரும் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5y3y0x925o

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
ஊரில் விவாகரத்து இலகுவாக்கப்பட வேண்டும். புனிதப் படுத்துதல்கள் தவிர்க்கப் பட வேண்டும்

முளைவிட்ட உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்க்கலாமா?

3 months 1 week ago
முளையின் கீழ் அல்லது கிழங்கின் சில பகுதிகள் பச்சையாக இருந்தால் வெட்டி அகற்றிவிட்டு பயன்படுத்தலாமாம் அண்ணை.

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

3 months 1 week ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம் Published By: DIGITAL DESK 3 04 JUN, 2025 | 05:13 PM பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சமிந்து தில்ஷான் பியுமங்க, செவ்வாய்க்கிழமை (04) அடையாள அணிவகுப்புக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, பூசா சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள பியுமங்க, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அடையாள அணிவகுப்பிற்கு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பியுமாங்க தான் என்பதை அவர்களால் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் பிரதான சந்தேகநபர் தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, ஜூன் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணைக்கு ஸ்கைப் மூலம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 19 கொலை வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் பூசா சிறைச்சாலையிலிருந்து சிறைசாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216592

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
ரஸ்யா தனது விமானங்களின் இழப்பிற்கு இந்த Treaty காரணம் என்று சொன்னதா ? இல்லை. இதை யார் சொல்கிறார்கள் என்று பார்த்தால், Treaty யை அரைகுறையாகப் புரிந்து கொண்ட சமூக வலைத்தள ரஸ்ய ஆதரவாளர்களின் பிரச்சாரமும் பொய்ச் செய்திகளை வெளியிடும் ரஸ்ய ஆதரவு ஊடகங்களும்தான். Treaty யின் Article 10 இல் 2 ஆவது பகுதியில் இது சொல்லப்பட்டுள்ளதாம். www.state.gov/wp-content/uploads/2019/02/11-205-Russian-Federation-Arms-Limitation-Treaty-and-Protocol.pdf பயிற்சி அல்லது அணுவாயுத சோதனை வேளையில் மட்டும்தான் விமானங்கள் வெளியே நிறுத்தப்பட வேண்டுமாம். 2023 இல் இந்த Treaty யில் இருந்து அரைகுறையாக வெளியேறிய ரஸ்யா 2 வருடங்களின் பின்னரும் தெளிவாகச் சொல்லப்படாத விதிகளைப் பின்பற்றியிருக்கும் என்று நம்பவில்லை. 2023 இலிருந்து அதன் தரவுகளைப் பகிர்வதை ரஸ்யா நிறுத்திக் கொண்டது. 2020 இல் அமெரிக்காவின் B-2 அணுகுண்டு வீச்சு விமானங்கள் பாதுகாப்பு மறைவிடங்களுக்குள்.