Aggregator

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

3 months 1 week ago
04 Jun, 2025 | 01:37 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார். இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எனினும் சில எதிராளிகளின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள். குறிப்பாக சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே ஆஜரான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருதார்கள். சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார். ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும் இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி. எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

3 months 1 week ago

04 Jun, 2025 | 01:37 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே இன்றையதினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார். 

புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என இன்றைய வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தான் கட்சி உறுப்பினர் எனவும் இந்த வழக்கிலே தன்னை இடைபுகு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படியாகவும் ஒரு விண்ணப்பம் செய்திருக்கின்றார். இந்த வழக்கானது சென்ற வருடம் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டு யாராவது வழக்கிலே அக்கறை உள்ளவர்கள் வழக்கிலே இணைந்து கொள்வதானால் 2024 பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னதாக மன்றுக்கு வர வேண்டும் என்று பத்திரிகைகளிலே அறிவித்தலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து தன்னை இடைபுகுமனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் விண்ணப்பித்திருக்கின்ற காரணத்தினாலே நாங்கள் பலர் அதற்கு எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம். எனினும் சில எதிராளிகளின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் எந்த எதிர்ப்பும் இல்லை அவர் சேர்த்துக் கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்கள். குறிப்பாக சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் சார்பிலே ஆஜரான சட்டத்தரணிகள் இந்த சந்தர்ப்பத்திலேயும் அவரை சேர்த்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியிருதார்கள்.

சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தன்னுடைய மனுவிலே இந்த வழக்கானது இழுபட்டுக் கொண்டு செல்கின்ற காரணத்தினாலே காலம் போய்க் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேதான் தன்னை இணைத்துக் கொள்ளும்படியாக தன்னுடைய மனுவின் 9ஆம் 10ஆம் பந்திகளிலே சொல்லியிருக்கின்றார்.

 ஆகவே அதை மேற்கோள்காட்டி நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். அவரை சேர்த்துக் கொள்வதா?, இல்லையா? என்ற விசாரணையே ஒரு வருடம் இழுபடும் இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சி. எனவே அந்த இடைபுகுநரை மனுவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற எங்களுடைய ஆட்சேபனைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தவணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சி.வி.கே.சிவஞானமும் தன்னுடைய பதிலியை அணைக்க வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் வழக்குத் திகதியில் தனது பதிலியை சமர்ப்பிக்க வேண்டும் - நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு | Virakesari.lk

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார எம்.பி முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்கின்றேன். அதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கின்றேன் என்றார். செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் : நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன | Virakesari.lk

வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன்

3 months 1 week ago
(நா.தனுஜா) அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குரிய வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை. இரத்துச் செய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், ஒத்திவைக்கப்பட்ட சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் காரணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிய சட்டமறுப்புப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை ஒத்திவைப்பதாகவும், இரத்து செய்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், அப்போராட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனவும் சுமந்திரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி புதன்கிழமை (4) கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், 'காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன்னைய நாள் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கடந்தும், இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன் | Virakesari.lk

வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன்

3 months 1 week ago

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குரிய வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை. இரத்துச் செய்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், ஒத்திவைக்கப்பட்ட சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

வட மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தின் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் எனக் கோரி வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்து, அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை இரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் காரணமாக கடந்த மாதம் 30ஆம் திகதி வட, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பாரிய சட்டமறுப்புப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை ஒத்திவைப்பதாகவும், இரத்து செய்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், அப்போராட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் எனவும் சுமந்திரன் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி  புதன்கிழமை (4) கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், 'காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக கடந்த மாதம் 27ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது. 

நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன்னைய நாள் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வாரம் கடந்தும், இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படாவிடின், சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர எமக்கு வேறு தெரிவுகள் இருக்காது' எனத் தெரிவித்துள்ளார். 

வடக்கு காணி விவகாரம் : ஒரு வாரமாகியும் இரத்துக்கான வர்த்தமானி பிரசுரிக்கப்படவில்லை; நடவடிக்கை இன்றேல் சட்டமறுப்புப் போராட்டமே வழி - சுமந்திரன் | Virakesari.lk

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன்முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
"செவ்வாய் தோஷம்" என்று திருமணங்களைத் தாமதமாக்குதல், அல்லது சாதகத்தை முன்னிலைப் படுத்தி வெறும் பயலுக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்தல், இது போன்ற துன்பகரமான பின் விளைவுகளும் இருக்கின்றன. இவற்றைக் கடந்து போகாமல், ஏறி மிதித்து விட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து!

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
நான் முழுதாக நம்புவோர் லிஸ்டில் வரவில்லை. ஆனாலும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் அறிந்தவரை எண் சோதிடம் என இப்போ பார்க்கப்படுவதே - ஐரோப்பிய இறக்குமதிதான். தமிழர்களிடம் இருந்த தமிழ் எண்கணித முறை ஐரோப்பா போய், அங்கே ஆங்கில எண் கணிதமாகி மீண்டும் எம்மிடையே பரவியது. இங்கே முக்கியம் நாட்களின் எண்தான். ஆகவே கிரெகேரியன் கலண்டரில் 3 திகதி பிறந்தவர் தமிழ் காலண்டரில் 7ம் திகதி பிறந்தால் - கணிப்பும் மாறும். ஆனால் இப்படியான குழப்பங்கள் சோதிடத்துக்கு புதிதல்ல. இந்த முறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனி 2025 மேயில் மாறி விட்டது. திருக்கணிதப்படி 2026 மேயில்தான் மாறும்! கிட்டதட்ட ஒரு வருட வித்தியாசம். இதே போல் எமது ராசிப்படி ஒரு ராசியில் இருக்கும் நபர் ஆங்கில ராசிப்படி வேறு ராசியில் இருப்பார். சாத்திரம் கலையே தவிர, விஞ்ஞானம் அல்ல. கலைக்குரிய முரண்கள் இதிலும் இருக்கும். அதை பொழுதுபோக்காக பார்த்து விட்டு நகர்ந்து விடல் வேண்டும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
இதை ஒத்த இன்னொரு சம்பவத்துக்கான எம்மவர்களின் பின்னூட்டங்களும், செய்தியை உள்வாங்கிய விதமும் எனக்கும் அண்மையில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு தமிழ் இளைஞன் (21 வயது என நினைக்கின்றேன்), நீரில் மூழ்கி இறந்து விட்டார். அந்த செய்தியைக் கேட்டவுடன், அவரது காதலியும் தற்கொலை செய்துவிட்டார். எம்மவர்களின் பின்னூட்டங்களில் 90 சதவீதமானவை, அப் பெண்ணை மிகவும் பாராட்டியும், இது தான் உண்மையான காதல் , காவியக் காதல், புனித காதல், என்றெல்லாம் மெய்சிலிர்த்து இருந்தனர். தாலிபானிசம் என்பது கொலைகளை மட்டுமல்ல, தற்கொலைகளையும் ஆதரிக்கும் (தற்கொடைகளை அல்ல). இப்படியான சமூகத்தில் போலி மதிப்பீடுகளின் மூலம் தான் ஒருவரை எடை போடுகின்றனர்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
பார்க்கலாம்.. வளர்ந்து வரும் வீரர் யார் என்று கணிப்பது சிரமம். அதேபோல சிறந்த கட்ச் யார் பிடிப்பார்கள் என்பதும் ஊகிக்கமுடியாது! அடுத்தமுறை (யாழில் போட்டி நடந்தால்) Play-off, final புள்ளிகளை அதிகரிக்கலாம். இது வெற்றியாளரை மாற்றி போட்டியை சுவாரசியமாக்க உதவும்

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
எண் சோதிடம் பற்றி பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிலும் இந்தியர்கள் / தமிழர்கள் / இந்துக்கள் அதிகம் எண் சோதிடத்தை நம்புகின்றனர். உண்மையில் எனக்கு ஆச்சரியம் தரும் விடயமும் இதுதான். இவர்களால் எவ்வாறு இதனை நம்ப முடிகின்றது என. ஏனெனில் எண் சோதிடம், நாம் பிறந்த திகதியின், மாதத்தின்,ஆண்டின் அடிப்படையில் கணிக்கப்படுவது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின் அடிப்படையில் இது கணிக்கப்படுகின்றது. நாம் இன்று பயன்படுத்தும் இந்த காலண்டர் Gregorian Calendar ஆகும். இது 1582 இல் போப்பாண்டவர் Gregory XIII இனால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்பத்தில் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட காலண்டர். இவ்வாறான ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய (கத்தோலிக்கர்கள்) முக்கிய தலைவர் ஒருவரால், அதுவும் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படுவது எப்படி சரியாகும்? ஒரு இந்துவோ, ஒரு சைவரோ,ஒரு பெளத்தரோ, ஒரு நாத்திகரோ, ஒரு ஆத்திகரோ இதனை எப்படி நம்புகின்றனர்? இவர்கள் தம் காலண்டரின் அடிப்படையில் அல்லவா எண் சாத்திரத்தை கணிக்க வேண்டும்? உதாரணமாக இந்து ஒருவர், இந்துக் காலண்டரின் அடிப்படையில் அமைந்த திகதியை அல்லவா, கணிப்பீட்டுக்கான திகதியாக கொள்ள வேண்டும்? நான் எண் சாத்திரத்தை நம்புகின்ற சக சைவர்களை நோக்கி கேட்கும் கேள்வி "நீங்கள் இந்து மதம் சார்ந்த சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு எவ்வாறு கத்தோலிக்க மதத்தை சார்ந்த காலண்டரின் அடிப்படையில் கணிக்கப்படும் எண் சாத்திரத்தையும் நம்புகின்றீற்கள் என. யாராவது இதற்கு பதில் தர முடியுமா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
யாழ்களத்தில் விளையாட்டுப்போட்டி என்றால் அதில் கிருபன் பெயர் தான் முன்னிலையில் வரும். சளைக்காமல் வருடாவருடம் போட்டியை நடத்திவரும் கிருபனுக்கு நன்றி எனும் ஒற்றைச்சொல் போதாது . விளையாடடை கலகலப்பாக்கும் உறவுகளுக்கும் , முதல்வர் நந்தனுக்கு முன்னிலையில் நிற்கும் ரசோதரன், புலவர் ,செம்பாட டன் ஆகியோருக்கும் எல்லோ ருக்கும் அழைப்பு விடுக்கும் வீரப்பையனுக்கும் வாழ்த்துக்களும் என் நன்றிகளும். ( கடைசியாக கிடந்து மிதிப்படாமல் ஒருவாறு 18 ம் இடத்துக்கு வந்து விட்டேன்.)😃

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 1 week ago
இந்த மாம்பழம் பிரச்சினை என்று வந்தால் அதில் என் தலை நிச்சயமாக உருளும் என்று நினைக்கிறேன். மாம்பழப்பிடுங்குப்பாட்டால தானே அந்தாள் மலைக்கு போனது. ஆனால் கோமணத்தோட விட்டது எனது ஊர்க்காரர்கள் என்று கதையை கட்டிவிட்டார்கள். இது வேறு ஊரில் என்று வந்து பார்த்தால் பிரான்ஸ் பிரமுகர் என்று போட்டிருக்கு.....🤣

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
தெனாலி ஒத்துவரவில்லை என்றால் வேறு இருக்கிறது உ.ம். Dancing With Wolves (இது வரலாற்று நிகழ்வுகளை ஒற்றிய படம்). அனால், தெனாலி பற்றி நான் சொன்னது சரி, தெனாலி என்றவுடன் உங்களிடம் உருவாகிய பிம்பம் கோமாளி விகடன். அனால் தெனாலி, உண்மையில் அந்த நேர அதி புத்திக்கூர்மை, சமயோசிதம, சாதுரியம் வாய்ந்த ராஜதந்திரி, உள்ளூரில் தலைசிறந்த நிர்வாகி, அரசுக்கு / அரசனுக்கு (புத்தியால்) பாதுகாவலர். இந்த (பார்வைப்) புரிவு கொண்டவர்களை இதுவரை காணவில்லை. இந்த புரிவு காணொளி தொடரால் மாத்திரமே சாத்தியம். கதையாக வாசித்தால் (தெனாலி) விகடன் எனும் திரை மறைத்துவிடும்.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
200% என் ரத்தமையா நீ.. இந்த எனது நிலைப்பாட்டால் தானே என்னவோ மூத்தமகன் முழு விஞ்ஞானி இளையவன் முழு மெய்ஞானி 😄 மக்களுக்கும் அதே. நீயே தேடு. படி அனுபவி கண்டுகொள். ஆனால் ஒரு மதத்தை விட இன்னொன்று சிறந்தது என்று சொன்னால் கோபம் வரும். உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று தான் பதில் சொல்லப்படும்.

முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சு கூறுவதென்ன?

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 04 JUN, 2025 | 05:09 PM அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார். நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது. எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிட்ட கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேற்கு மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் கொவிட்-19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கொவிட்-19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும் ஒரு பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் கொவிட்-19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றையவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் செயலாளரின் கடிதம் மேலும் கூறுகிறது. https://www.virakesari.lk/article/216593

முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார அமைச்சு கூறுவதென்ன?

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

04 JUN, 2025 | 05:09 PM

image

அலுவலக வளாகங்களில் முகக்கவசம் அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது.

எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிட்ட கடிதம், மேல் மாகாண சபையின் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அலுவலக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் பணிபுரியும் போது முகக்கவசம் அணியுமாறு அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேற்கு மாகாண தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சம்பந்தப்பட்ட கடிதத்தில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மறுபரிசீலனை செய்யுமாறும், அலுவலகங்களில் முகமூடிகளை அணியுமாறு பொதுவாக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகு, சுவாச நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறையின் கீழ் கொவிட்-19 பிற தொற்று நோய்களின் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, மழைக்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்கள் அதிகரிப்பதால், கொவிட்-19 அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுவாக, சுவாச நோய்களை தடுப்பதும் ஒரு பொதுவான வழிமுறையின்படி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த நேரத்தில் கொவிட்-19 தடுப்பு ஒரு ஆபத்தாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்றும், மேலும், நிறுவனங்களுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை வழங்குவது தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்றும், எனவே சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அத்தகைய ஆலோசனையை வழங்குவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், யாராவது தானாக முன்வந்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மருத்துவ ஆலோசனையின் பேரில் முகக்கவசம் அணிந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் செயலாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருமல், சளி (காய்ச்சல்) போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிவது முக்கியம் என்றும், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மற்றையவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்கும் செயலாளரின் கடிதம் மேலும் கூறுகிறது.

https://www.virakesari.lk/article/216593

ஆசியாவில் எயிட்ஸ் பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கை - சுகாதார பிரதி அமைச்சர்

3 months 1 week ago
04 JUN, 2025 | 03:50 PM ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கையைக் கருதலாம் எனவும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். அரசாங்கத்தின் ஆதரவை தாண்டி அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு நாட்டின் சுகாதார அமைப்பை சிறந்த முறையில் பராமரிக்க உதவியுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் மிக முக்கியமான காரணிகளாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வு சமீபத்தில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் தீவிரமாக பங்களித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம், இந்த நாட்டில் வாழும் முழு மக்களுக்கும் ஒரு சிறந்த நாட்டை - ஒரு அழகான வாழ்க்கையையும், ஆரோக்கியமான தேசத்தையும் உருவாக்குவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டிற்கு ஐந்து நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது, மேலும் அந்தக் குழு மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தியது. அங்கு, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போக்குகள் குறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக் குழுவில் டென்மார்க், யுனைடெட் கிங்டம், பின்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதிநிதிகள் உள்ளனர். இந்த நிகழ்வில் இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் தலைவர் அருணி மார்சலின், நிர்வாக இயக்குநர் டாக்டர் ருச்சிதா பெரேரா, சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216569

ஆசியாவில் எயிட்ஸ் பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் நாடாக இலங்கை - சுகாதார பிரதி அமைச்சர்

3 months 1 week ago

04 JUN, 2025 | 03:50 PM

image

ஆசியாவில் எச்.ஐ.வி பரவல் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும்  நாடாக இலங்கையைக் கருதலாம் எனவும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது எச்.ஐ.வி.யுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது இது மிகக் குறைவாக இருப்பது பாராட்டத்தக்கது என்றும் சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆதரவை தாண்டி அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு நாட்டின் சுகாதார அமைப்பை சிறந்த முறையில் பராமரிக்க உதவியுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளும் மிக முக்கியமான காரணிகளாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்தார். 

பாலியல் உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் சார்பாக இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வு சமீபத்தில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. 

தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த சுகாதார அமைச்சகம் தீவிரமாக பங்களித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம், இந்த நாட்டில் வாழும் முழு மக்களுக்கும் ஒரு சிறந்த நாட்டை - ஒரு அழகான வாழ்க்கையையும், ஆரோக்கியமான தேசத்தையும் உருவாக்குவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய நாடாளுமன்ற மன்றத்தின் பிரதிநிதிகள் குழு, நாட்டிற்கு ஐந்து நாள் ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது, மேலும் அந்தக் குழு மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் ஆய்வுகளை நடத்தியது.

அங்கு, பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போக்குகள் குறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தக் குழுவில் டென்மார்க், யுனைடெட் கிங்டம், பின்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதிநிதிகள் உள்ளனர். 

இந்த நிகழ்வில் இலங்கை குடும்பக் கட்டுப்பாடு சங்கத்தின் தலைவர் அருணி மார்சலின், நிர்வாக இயக்குநர் டாக்டர் ருச்சிதா பெரேரா, சங்கத்தின் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.42_PM.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.43_PM.

WhatsApp_Image_2025-06-04_at_3.11.44_PM.

https://www.virakesari.lk/article/216569