Aggregator

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது நியூட்டனின் வகை பௌதீக விதிகள் போன்றோ இந்த நம்பிக்கைகளை நிறுவமுடியாது. இப்படியான நம்பிக்கைகளில் ஒன்று சோதிடம். கடவுள் நம்பிக்கையும் அவ்வாறானதே. இன்னும் ஏராளமான அமானுஷ்ய விடயங்களும் இப்படியே இங்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு விடயத்தை ஒரு ஆசிரியர் எப்படி நிறுவினார் என்று ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கின்றது. நான் சிறு வயதில் இருக்கும் போது ஊரில் நடந்தது. அடுத்த பதிவில் அதை எழுதுகின்றேன். பொதுவாகவே இயற்கையில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு normal distribution ஆகவே இருக்கின்றது. முற்றிலும் எழுந்தமானமாக நூறு நூறு ஆட்களாக எடுத்து அவர்களின் பாடல் பாடும் திறமையையோ அல்லது பந்தடிக்கும் திறமையையோ கணித்தோம் என்றால், ஆச்சரியமேயில்லாமல் அவை கிட்டத்தட்ட ஒரு முடிவையே மீண்டும் மீண்டும் தரும். ஐந்து பேர்கள் நன்றாக பந்தை அடிப்பார்கள். ஐந்து பேர்களுக்கு அது சரியே வராது. ஓரளவு விளையாடக் கூடியவர்கள் என்று நடுவில் ஒரு ஐம்பது பேர்கள் இருப்பார்கள். இப்படியே தான் ஒவ்வொரு நிகழ்வின் ஒவ்வொரு தொகுதியும் இருக்கும். இதற்கும் நாள் - நட்சத்திரம் - கைரேகை போன்ற பிறப்பால் வரும் அடையாளங்கள் எவற்றுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதையே தான் நர்லிகர் அவர்களும் இன்னொரு விதமாகச் சொல்லி, அதை தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தும் இருக்கின்றார். என்னுடைய அனுபவங்களும், எண்ணமும் கூட இதுவேயாகவே எப்போதும் இருந்து வருகின்றது. இதில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையும் இருக்கின்றது. நாங்கள் பிறக்கும் கணமும், பிறப்பில் கிடைக்கும் அடையாளங்களுமே பலவற்றை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது என்றால், ஸ்மிருதிகளும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும், சாதிய பாகுபாடுகளும் கூட சரியென்று ஆகிவிடும் அல்லவா. இந்தப் பாகுபாடுகளை, தீண்டாமைகளை கைக்கொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் ஆதராமே ஒவ்வொருவரின் பிறப்பே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்பதே. தாழ்த்தப்பட்ட ஒரு வீட்டில் பிறந்தால், அதுவே தலைவிதி அல்லது கர்மவினைப் பயன் என்றும், அதை இந்தப் பிறவியில் அப்படியே வாழ்ந்து கடந்து விட வேண்டும் என்றல்லவா அவர்கள் சொல்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல், தீண்டாமைகளை எதிர்க்கும் நாங்கள், பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இன்னொரு தலைவிதியை மட்டும் சரியென்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.... அண்ணா, உலகத்தை நோக்கிய என்னுடைய ஒரு கருத்தே இது. உங்களையோ அல்லது வேறு எவரையுமோ தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கும் பார்வையில் இதை நான் எழுதவில்லை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
ஒருமாதிரி அகஸ்தியனின் புண்ணியத்தில் கடைசிக்கு முதல் இடம்.நிறையக் கேள்வி மற்றதுநிறைய புது வீரர்கள் என்பதால் பையனைக்கொப்பி பண்ணி சில மாற்றங்கள் செய்து போட்டேன் ஈயடிச்சான் கொப்பியென்று வரக்கூடாதென்று. ஆனால் என்னே ஆச்சரியம் மாற்றியதில் 90 வீதமானவை தப்பாத்தான் வந்திருக்கு. அண்மைக்காலமாக ஐபிஎல் சுவாரசியம் குறைந்ததால் எந்தப்போட்டியும் பார்ப்பதில்லை. வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் போட்டியை திறம்படநடாத்திய கிருபன் அண்ணாவுக்கும்நன்றிகள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
பார்ரா கடைசி இடத்தைக் கூட தக்க வைத்து கிருபன் வாயால் ஒரு பாராட்டு வாங்க முடியாத பாவியாகிட்டேன்.☹️அடுத்த முறை அது மகளாக இருந்தாலும் கூட்டனி கிடையாது தனத்தவில் தான்.😂மற்றும் நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
இப்போது வடக்கில் எங்கு(நீண்ட தூரங்களில்) ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தாலும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். நீண்டகால நோக்கில் மாங்குளம் பகுதியில் சகல வசதிகளுடன் மற்றும் பிரிவுகளுடன் கூடிய வடமாகாணத்துக்கான பெரிய ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். இது வன்னிப்பிரதேச அபிவிருத்தியின் அடிநாதமாக இருக்கும். இது எதிர்கால யாழ்ப்பாணத்திற்குள்ளே மக்களின் வாழ்விட நெருக்கடிகளை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அத்தோடு காலநிலை மாற்றங்களால்(துருவப்பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல்மட்டம் உயரும்போது) யாழ்ப்பாணம் கடலால் மூழ்கடிக்கப்படும்போது எமக்கு கைகொடுக்கும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
பாடப்புத்தக அறிவை விட சமூக அறிவூட்டல் வேண்டும் என நினைக்கிறேன். ஒத்துவரவில்லையா, கணவன் மீதோ மனைவி மீதோ சந்தேகமா நேரடியாகவே இருவரும் பேசி இன்ன காரணத்திற்காக உன்னைப் பிரிகிறேன் என்று தெளிவுபடுத்தி விவாகரத்து வாங்கி புதிய வாழ்க்கையை தொடங்கலாம். கொலையோ தற்கொலையோ தீர்வாகாது.

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 1 week ago
ஆர்சிபி வெற்றியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு என்ன? - நாக் அவுட் பலவீனத்தை சரி செய்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உருவாக்கிய சிறந்த விக்கெட் கீப்பர்கள் என ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கும். தோனியின் நிழலில் இருந்ததாலும், ஃபார்ம் போன்ற காரணங்களாலும் இந்தியா கிரிக்கெட்டில் சீராக அவரால் சோபிக்க முடியவில்லை. ஆனாலும் நிடாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட அவரின் கடைசி பந்து சிக்ஸர் வீடியோ யூ-ட்யூப் உள்ளவரை ரீப்ளே செய்யப்பட்டு கொண்டே இருக்கும். தற்போது ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது. லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாமிடம் பிடித்த ஆர்சிபி குவாலிஃபயர் 1 மற்றும் இறுதி போட்டியை வென்று மகுடம் சூடியது. இதில் அந்த அணியின் பேட்டிங் கோச் மற்றும் மென்டரான தினேஷ் கார்த்தின் பங்கு முக்கியமானது. அணியில் பேட்டிங் அணுகுமுறையை மாற்றியது தொடங்கி வலுவான மிடில், லோயர் ஆர்டர் மற்றும் பவுலிங் கூட்டணியை உருவாக்கியது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு வெளியில் தெரியவில்லை என்றாலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினேஷ் கார்த்திக் சோக்கர் (Choker) என்ற பட்டம் ஏன்? சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு 'சோக்கர் (Choker)' என்கிற பட்டம் உண்டு. எவ்வளவு வலுவான அணியாக இருந்தாலும், எத்தனை மேட்ச் வின்னர்களைக் கொண்டிருந்தாலும் 'நாக் அவுட்' போன்ற முக்கியமான மற்றும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் சொதப்பி விடுவார்கள் என்கிற வரலாறு அந்த அணிக்கு உண்டு. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஆர்சிபி தான் சோக்கர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, பஞ்சாப் மற்றும் புதிய அணியான லக்னௌ கூட இந்தத் தொடர் வரை கோப்பையைக் கைப்பற்றியது இல்லை. ஆனால் ஆர்சிபி அணிக்கு மட்டும் ஏன் இந்த பட்டம்? இந்தத் தொடருக்கு முன்பு வரை பெங்களூரு அணி 2009, 2011, 2016 என மூன்று இறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் பெரும்பாலான சீசன்களில் பல ஸ்டார் வீரர்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனாலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதிலும், குறிப்பாக 2016ம் ஆண்டில் கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ், வாட்சன், ஸ்டெய்ன், கோலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தபோதிலும் ஃபைனலில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆர்சிபி. அதற்கு அந்த அணியின் பேட்டிங் சொதப்பலே காரணமாக இருந்தது. டாப் 3 பிம்பத்தை மாற்றிய தினேஷ் கார்த்திக் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஆர்சிபி அணி டார் ஆர்டர் பேட்ஸ்மன்களை நம்பியே இருந்திருக்கிறது என்பது உண்மை தான். ஒரு கட்டத்தில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி என்றும் மற்றொரு கட்டத்தில் டூபிளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என்கிற மூவர் கூட்டணியைச் சார்ந்தே ஆர்சிபி அணி இருந்துள்ளது. மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங்கில் ஆர்சிபி அணி சொதப்பும் என்கிற பிம்பம் தினேஷ் கார்த்திக்கின் வருகைக்குப் பின் தான் மாறியது. 2021 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் விளையாடி இருந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு பெங்களூரு அணியால் ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த சீசனுக்கு தினேஷ் கார்த்திக்கின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. தோனியைப் போல விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷர் என்பது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான காம்போ. ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். அந்தப் பணியை சிறப்பாக செய்தும் காட்டினார். 2022 ஐபிஎல் பெர்ஃபார்மன்ஸைத் தொடர்ந்து 2022 டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். விராட் கோலி: ரூ.20 லட்சத்தில் தொடங்கிய ஆர்சிபி பயணம், 18 ஆண்டுகளாக நீடிக்கும் உறவின் பின்னணி ஆர்சிபி-யின் வெற்றி குறித்து விஜய் மல்லையா, சச்சின், யுவராஜ் சிங் கூறியது என்ன? ஆர்சிபியின் 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி ஃபினிஷராக பரிணமித்த தினேஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணிக்கு ஃபினிஷர் ரோலுக்கென்றே அழைத்து வரப்பட்டார் தினேஷ் கார்த்திக். டாப் ஆர்டர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் இந்தப் புதிய ரோலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார். மாறி வரும் விளையாட்டு சூழ்நிலைகளுக்கு தங்களது விளையாட்டு அணுகுமுறைகளை மாற்றியமைத்த வீரர்கள் வெகு சிலரே, அதில் முதன்மையானவர் தினேஷ் கார்த்திக் 2022 முதல் 2024 வரை பெங்களூரு அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆர்சிபி என்பது டாப் ஆர்டரை மட்டுமே நம்பி இருக்கும் அணி என்கிற பிம்பத்தை மாற்றியமைத்ததில் தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிய பங்கு உண்டு. ஃபினிஷராக 35 போட்டிகளில் 197 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 607 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடந்த ஐந்து வருடங்களில் 2023 தவிர்த்து 4 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2024-ல் சிஎஸ்கே அணியை வென்று ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது பெங்களூரு. எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் சுழற்சிக்கு முன்பான பெங்களூரு அணியின் ரிடென்ஷன் பட்டியலில் முன்னணியில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருந்தது. ஆனால் கரியர் ஃபார்மின் உச்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தினேஷ் கார்த்திக். பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு பேட்டிங் கோச் மற்றும் மென்டராக இணைந்தார். கோப்பை என்கிற இலக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கு மென்டராக இணைந்ததுமே கோப்பையை வெல்வது தான் குறி என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் தினேஷ் கார்த்திக், "ஆர்சிபிக்கு வரும் எவருக்கும் ஒரே குறிக்கோள் தான் இருக்கும். அது கோப்பையை வெல்வது தான். அதோடு எங்கள் ரசிகர்களையும் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். தினேஷ் கார்த்திக் 2013ம் ஆண்டு கோப்பை வென்ற மும்பை அணியின் ஒரு அங்கமாக இருந்தார். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா சென்னை அணியிடம் தோற்றது. பெங்களூரு அணியில் விளையாடிய மூன்று வருடங்களில் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை. பயிற்சியாளராக அதை வென்றாக வேண்டும் என்கிற தீர்மானத்துடன் தான் தனது பணியைத் தொடங்கினார். தெளிவான ஏல செயல்திட்டம் - ஆல்ரவுண்டர்களும் சாம்பியன் பவுலர்களும் ஆர்சிபி அணியைப் பொருத்தவரை விராட் கோலியைத் தவிர்த்து அதன் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களை அதிகமாக சார்ந்திருப்பதைக் குறைத்து, ஒரு கலவையான அணியை உருவாக்க வேண்டும் என ஏலத்தின் முன்பு திட்டமிடப்பட்டது. அதற்கு ஏற்றார் போலவே ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயால் என மூவரை மட்டுமே ரீட்டெய்ன் செய்திருந்தது. அப்போதே ரஜத் பட்டிதார் தான் கேப்டனுக்கான வாய்ப்பு என்பது தெளிவானது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் டெப்த் ஓவர்களுக்கு என மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு இந்திய பவர்பிளே பவுலர் மற்றும் ஒரு மிஸ்டரி ஸ்பின்னரைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்சிபி அணி தீர்மானித்தது. 2025 தொடருக்கான ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களின் செயல்திட்டம் பற்றிய விவாதத்தை ஆர்சிபி தனது யூ-ட்யூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதில் பில் சால்ட், லியம் லிவ்விங்ஸ்டோன், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ரோமாரியோ ஷெபர்ட் ஆகியோரை குறிவைப்பதாக ஆர்சிபி பயிற்சியாளர் குழு முடிவு செய்திருந்தது. அவ்வாறே ஏலத்தில் ஆர்சிபி தீர்மானித்த அனைத்து வீரர்களையும் எடுத்தது. இத்துடன் ஜோஷ் ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், சுயஷ் சர்மா மற்றும் குருனால் பாண்டியாவும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆர்சிபி எதிர்பார்த்ததைப் போலவே ஒரு அணியை அமைத்தது. ஜித்தேஷ் ஷர்மா எனும் துருப்புச் சீட்டு இதில் முக்கியமான தேர்வாக அமைந்தது ஜித்தேஷ் ஷர்மா. ரூ.1 கோடி அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த ஜித்தேஷ் ஷர்மா போட்டிபோட்டு பெங்களூரு அணியால் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். விக்கெட் கீப்பர், ஃபினிஷர் காம்பினேஷனை கச்சிதமாக அமைத்தது. பெங்களூருவில் தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஜித்தேஷ் ஷர்மாவைக் கொண்டு அவரே நிரப்பினார். ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டபோது ஜிதேஷ் ஷர்மா ஒரு அரை சதம் கூட அடித்திருக்கவில்லை. ஆனால் அவரின் பவர் ஹிட்டிங் திறமையில் அணி நம்பிக்கை வைத்தது. அவரை அணிக்கு அழைத்து வந்ததில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது. இந்தத் தொடரில் அவருக்கு பெரிதாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரஜத் பட்டிதார் விளையாடாத ஆட்டங்களில் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். ஆனால் அணிக்கு தேவைப்பட்டபோது ஜொலித்தார் ஜித்தேஷ் ஷர்மா. லயம் லிவிங்ஸ்டோன், குருனால் பாண்டியா, ரோமாரியோ ஷெப்பர்ட் என்கிற வலுவான ஆல்ரவுண்டர் கூட்டணியை உருவாக்கியது பெங்களூரு. அதே போல் அதன் கோர் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், சுயஷ் சர்மா என அனைவருமே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் விளையாடியுள்ளனர். ப்ளே ஆப் சுற்றுக்குத் தேவையான பிக் மேட்ச் ப்ளேயர்ஸ் காம்பினேஷனும் ஆர்சிபி அணிக்கு சரியாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜித்தேஷ் ஷர்மா கடைசி லீக் ஆட்டம், முதல் 2 இடங்களைப் பிடிக்க கட்டாயம் வெல்ல வேண்டுமென்ற நிலை. முதலில் ஆடிய லக்னௌ அணி வெற்றி பெற 227 என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது. ஆர்சிபி அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் 204 தான். அதுவும் 2010ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக வந்தது. அசாத்தியமான இலக்கை சேஸ் செய்த பெங்களூரு அணி 19வது ஓவரில் 8 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களின் அதிகபட்ச சேஸையும் பதிவு செய்தது. இறுதிப் போட்டியிலும் ஒரு கட்டத்தில் ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி தடுமாறிய நிலையில் உள்ளே வந்த ஜித்தேஷ் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் கேமியோ ஆடினார். ஆர்சிபி 190 என்கிற சவாலான இலக்கை நிர்ணயிக்க இது முக்கிய பங்கு வகித்தது. இறுதியில் பஞ்சாப்புக்கும் பெங்களூருவுக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 6 ரன்களே. ஏல செயல்திட்டம் தொடங்கி அணியில் யாருக்கு என்ன ரோல் என வரையறுத்து கொடுத்தது வரை தினேஷ் கார்த்திக்கின் பங்கு உள்ளது. தனது இரண்டாவது கோப்பையை இம்முறை பயிற்சியாளராக வென்ற தினேஷ் கார்த்திக், பெங்களூருவுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றிக்கனியை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தத் தொடர் முழுவதும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது ஆர்சிபி அணி. ஐபிஎல் எனும் மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தில் ஆர்சிபியின் ஆதிக்க காலம் தொடங்கியுள்ளதன் அறிகுறியாகவும் இதைப் பார்க்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2qwz4wqwwo

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
அணியின் விபரங்கள், மைதானங்கள் போன்ற தரவுகள் இருப்பதால் கணிப்புகள் சிலவேளை வேலை செய்யும். ஆனால் இறுதிக்கேள்விகள் @வீரப் பையன்26 சொல்வது போல “குண்டக்க மண்டக்க” கேள்விகள்தான்🤣

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months 1 week ago
போர் விமானங்களை சேதப்படுத்திய சாதாரண ட்ரோன்கள் - யுக்ரேனின் "சிலந்தி வலை"யில் ரஷ்யா சிக்கியதா? பட மூலாதாரம்,USS படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த தாக்குதல் குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், லாரா கோஸி பதவி, இருந்துபிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அசாதாரணமான திறமையுடன் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 18 மாதங்களாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதின் விளைவு தான் இந்த மிகப்பெரிய தாக்குதல். ஜூன் 1 ஆம் தேதி, 100க்கும் மேற்பட்ட யுக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் உள்ள விமானப்படைத் தளங்களைத் தாக்கி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்களை குறிவைத்தன. இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு "ஸ்பைடர் வெப்" எனக் குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டது. தாக்குதல் தொடங்கப்பட்ட தருணத்திலேயே அதன் பரவலான தாக்கத்தை உணர முடிந்தது. ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இச்சம்பவம் பற்றிய தகவல்கள் வெளி வரத்தொடங்கின. வடக்கில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள மர்மன்ஸ்க் முதல், கிழக்கில் யுக்ரேனில் இருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த அமுர் பகுதி வரை அதன் தாக்கம் பரவியிருந்தது. மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் ஆகிய ஐந்து பகுதிகளில் தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது, ஆனால் மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் மட்டுமே விமானங்கள் சேதமடைந்ததாகவும், மற்ற இடங்களில் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் கூறியது. ரஷ்யா அறிவித்த இடங்களுடன் பொருந்தக்கூடிய விமான படைத்தளங்களின் செயற்கைக்கோள் வரைபடத்தை, யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) தலைவர் வாசில் மாலியுக் பார்த்துக்கொண்டிருப்பதை, தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட படங்கள் காட்டின. இந்த தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? யுக்ரேனின் ராணுவப் புலனாய்வு அமைப்பான எஸ்பியூவின் (SBU) மூலம் ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின் அடிப்படையில், ட்ரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டு, லாரிகள் வழியாக ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. தொலைதூரத்தில் இருந்தபடியே திறக்கப்படக் கூடிய கூரைகளின் கீழ், இந்த பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் விமான நிலையங்களுக்கு இந்த லாரிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றின் ஓட்டுநர்களுக்கு லாரிகளில் என்ன பொருட்கள் உள்ளன என்பது குறித்து எதுவும் தெரியாது. அங்கு சென்றதும், இலக்குகளை நோக்கி குறிவைத்து,ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. ஒரு லாரியிலிருந்து ட்ரோன் வெளியே பறப்பதை இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று காட்டுகிறது. ரஷ்ய அரசு ஊடகமான ஆர்ஐஏ (RIA) நோவோஸ்டியிடம் பேசிய ஒரு லாரி ஓட்டுநர், தானும் மற்ற ஓட்டுநர்களும் ட்ரோன் பறப்பதைத் தடுக்க முயன்று, அதன் மீது கற்களை எறிந்ததாகக் கூறினார். ரஷ்ய டெலிகிராம் சேனலான "பாசா"வின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளின்படி, பல லாரி ஓட்டுநர்கள் ரஷ்யாவின் வெவ்வேறு இடங்களுக்கு பெட்டிகளை வழங்குவதற்காக வணிகர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறினர். சில ஓட்டுநர்கள், லாரியை எங்கு நிறுத்துவது என்பது குறித்து தொலைபேசியில் வழிகாட்டுதல்கள் கிடைத்ததாகக் கூறினர். அந்த ஓட்டுனர்கள் அவ்வாறு செய்தபோது, ட்ரோன்கள் வெளியே வருவதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். துணிச்சலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்குத் தயாராக "ஒரு வருடம், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்கள்" ஆனது என்றும் இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்பார்வையிடும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, சமூக ஊடகங்களில் கூறினார். தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஒன்று எஃஎஸ்பி (FSB-ரஷ்ய பாதுகாப்பு சேவை) அலுவலகத்திற்கு அடுத்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் சிலர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது, ஆனால் இந்தத் தாக்குதலுக்கு உதவியவர்கள் "ரஷ்ய எல்லையிலிருந்து வெளியேற்றப்பட்டு... இப்போது பாதுகாப்பாக உள்ளனர்" என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துளார். இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உஸ்ட்-குட் நகரின் உள்ளூர் அதிகாரிகள், பெலாயா ராணுவ விமானப்படை தளத்தின் மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பாக யுக்ரேன் வம்சாவளியைச் சேர்ந்த 37 வயது நபரைத் தேடுவதாக ஒரு டெலிகிராம் பதிவில் தெரிவித்தனர். ஆனால் அந்த டெலிகிராம் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய ராணுவ விமானங்களை பழுதுபார்ப்பது ரஷ்யாவிற்கு கடினமாக இருக்கும் என்று யுக்ரேன் கூறுகிறது. மரத்தால் ஆன ஒரு அறையில் டஜன் கணக்கான கருப்பு நிற ட்ரோன்கள் சேமிக்கப்பட்டுள்ளதை யுக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) பகிர்ந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. ரஷ்ய ராணுவம் குறித்து பதிவிடும் பதிவர்கள் இதை செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள ஒரு கிடங்காக அடையாளம் கண்டுள்ளனர். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ட்ரோன் நிபுணர் ஸ்டீவ் ரைட்டின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் கனரக வெடிபொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய எளிய குவாட்காப்டர்கள் என அறியப்படுகின்றது. ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் கடத்தப்பட்டு, பின்னர் செயற்கைக்கோள் அல்லது இணைய இணைப்புகள் வழியாக தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்ட விதம் தான் இந்த தாக்குதலை அசாதாரணமாக்கியது என்கிறார் ரைட். 117 ட்ரோன்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பைலட்டுகள் இருந்தனர் என்று யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார். ட்ரோன்களால் ஜிபிஎஸ்ஸைப் பயன்படுத்தி பறக்க முடியும், மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் உள்ளூர் ரஷ்ய ஜாமிங் நுட்பங்களையும் தவிர்க்கலாம் என்கிறார் ரைட். யுக்ரேன், அந்த ட்ரோன்களை எங்கிருந்து பெற்றது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் போர் தொடங்கியதிலிருந்து அது ட்ரோன் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். யுக்ரேன் உளவாளிகளாக மாறிய ரஷ்ய தம்பதி ஒரு ரப்பர் வளையத்துடன் தப்பியது எப்படி?28 மே 2025 ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிக்கிறாரா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா?21 மே 2025 "போப் உதவியுடன் அமைதி ஒப்பந்தம்" - ரஷ்யா-யுக்ரேன் குறித்து டிரம்ப் கூறியது என்ன?20 மே 2025 இலக்கு பட மூலாதாரம்,SBU படக்குறிப்பு, மரப் பெட்டியில் மறைத்து வைத்து ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டதாக எஸ்பியூ கூறுகிறது. "ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது, அது நியாயமானது" என்று ஸெலன்ஸ்கி தனது உரையில் கூறினார். யுக்ரேனின் கூற்றுப்படி, நீண்ட தூரம் ஏவக்கூடிய ரஷ்யாவின் போர் விமானங்களில் 41 விமானங்கள் குறிவைக்கப்பட்டு "குறைந்தபட்சம்" அவற்றில் 13 அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில விமானங்கள் சேதமடைந்ததாக மட்டுமே ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. மர்மன்ஸ்கில் உள்ள ஒலெனெகோர்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் உள்ள பெலாயா விமானத் தளங்களில் காணப்பட்ட சேதமடைந்த விமானங்களை, பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. நீண்ட தூர இலக்குகளை தாக்கக் கூடிய போர் விமானங்கள் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் Tu-95, Tu-22 மற்றும் Tu-160 ஆகிய போர் விமானங்களை ரஷ்யா தற்போது உற்பத்தி செய்வதில்லை என்பதால், அவற்றை பழுதுபார்ப்பது கடினம். அவற்றை மாற்றவும் முடியாது. பெலாயா விமான தளத்தில், நீண்டதூர இலக்குகளைத் தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நான்கு ரஷ்ய போர் விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பதை கேபெல்லா ஸ்பேஸால் பகிரப்பட்ட ரேடார் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. "போரின் விதிகள் மற்றும் மரபுகளுக்கு இணங்க, நாங்கள் முற்றிலும் முறையான இலக்குகளைத் தாக்கினோம். அதாவது அமைதியான எங்களது நகரங்களைத் தாக்கிய ராணுவ விமானநிலையங்கள் மற்றும் விமானங்களைத் தாக்கினோம்." என்று SBU தலைவர் வாசில் மாலியுக் கூறினார். இராணுவ புலனாய்வு விமானங்களும் குறிவைக்கப்பட்டன பட மூலாதாரம், UKRAINE PRESIDENTIAL PRESS SERVICE/EPA-EFE/SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ விமான தளங்களில் நடந்த நடவடிக்கை குறித்து யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கிக்கு பாதுகாப்பு சேவை (SSU) தலைவர் வாசில் மாலியுக் தகவல் தெரிவித்தார். யுக்ரேனிய ஏவுகணைகளை இடைமறித்து தாக்குதல் நடத்தக்கூடிய திறனை மேம்படுத்தும், ரஷ்யாவின் ராணுவ உளவு விமானமான ஏ-50 இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டது. ரஷ்யாவில் எத்தனை ஏ-50 கள் உள்ளன என்று தெரியவில்லை. ஆனால் எட்டு ஏ-50 கள் உள்ளன என்று பிப்ரவரி 2024 இல் யுக்ரேனிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடனோவ் அந்த எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். எனவே எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், ரஷ்யாவிற்கு அது பெரும் இழப்பு தான். "ஸ்பைடர் வெப்" தாக்குதல், ரஷ்யாவிற்கு 7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்பியூ சமூக ஊடகங்களில் கூறியது. ரஷ்ய அரசு ஊடகங்கள் இந்தத் தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று முக்கிய நேரங்களில் வெளியான தொலைக்காட்சி செய்திகள், பிராந்திய அதிகாரிகளின் அறிக்கைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் வெளியிட்டன. திங்கட்கிழமைக்குள், இந்தச் செய்தி செய்தித்தாள்களில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. இந்த நடவடிக்கை குறித்து இணையத்திலும் பிற இடங்களிலும் யுக்ரேனியர்கள் பரவலாகப் பாராட்டி வருகின்றனர். ஒருவர் இதை "மிகப்பெரிய சாதனை" என்று விவரித்துள்ளார். "நிச்சயமாக, எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது, ஆனால் யுக்ரேன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறும்" என்று ஸெலன்ஸ்கி டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4v07yegylo

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
கொலை செய்யப்பட்டவர் கற்பிணி பெண் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலையாளி இரு உயிர்களை கொலை செய்துள்ளார். செய்தியின் பிரகாரம் கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளார். இந்த செய்தியை நேற்று பார்த்தேன். இவற்றுக்கு என்னதான் பின்னூட்டம் வழங்குவது? வீதி விபத்து மரணங்கள் ஒரு புறம், தற்கொலை மரணங்கள் ஒரு புறம், இவற்றுடன் அவ்வப்போது கொலைகள். இந்த அவலங்களையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் வாழவேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 1 week ago
இப்போ இப்படி எல்லாம் எழுத, சொல்லப் போனால் யாரு தாத்தா ஏற்றுக் கொள்வார்கள்..சொல்லியும், எழுதியும்.இனி வேணாம் என்றே போய் விடுகிறது..

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

3 months 1 week ago
2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

3 months 1 week ago

2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.


இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இன்று காலை  இடம்பெற்றது.


இதன்பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கபட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , யாழ் மாவட்ட விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் , யாழ். பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

69901846.jpg

1758200847.jpg

285708919.jpg

1365021766.jpg

308801799.jpg


உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழ். பண்ணை கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!!

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

3 months 1 week ago
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்; 2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத்தேர்தல், அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடாக அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர். மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம். குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன், கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது. தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

3 months 1 week ago

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்;

2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத்தேர்தல், அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின்  வெளிப்பாடாக  அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர்.

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது  தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்.

குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன்,  கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது.

தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?

எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்

3 months 1 week ago
04 Jun, 2025 | 01:07 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம் | Virakesari.lk

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம்

3 months 1 week ago

04 Jun, 2025 | 01:07 PM

image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04)  பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்   ஒன்றை முன்னெடுத்தனர்.

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

IMG-20250604-WA0066.jpg

IMG-20250604-WA0063__1_.png

IMG-20250604-WA0059.jpg


குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன் போராட்டம் | Virakesari.lk