ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து !
05 Jun, 2025 | 03:31 PM
பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும் எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார்.
பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் மார்க்கங்களில் கரையோர மார்க்கமும் ஒன்றாக இருப்பதால் குறிப்பாக இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து ! | Virakesari.lk