Aggregator
இன்று மாவீரர் தினம்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கெஹலியவின் காலத்தில் தரமற்ற கண் சொட்டு மருந்தால் பார்வை இழந்த 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு
கெஹலியவின் காலத்தில் தரமற்ற கண் சொட்டு மருந்தால் பார்வை இழந்த 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - சுகாதார அமைச்சு
27 Nov, 2025 | 01:07 PM
![]()
(செ.சுபதர்ஷனி)
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பார்வையை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாட்டுக்கு ஆளான பாதிக்கப்பட்ட 17 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மேற்படி இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு விண்ணப்பித்த 69 பேர் பிரட்னிசோலோன் கண் சொட்டு மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என நிருபனமாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் எவ்வித சிக்கல்களும் இல்லை என ஊடகமொன்றில் வெளியாகியுள்ள செய்தித் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண் செட்டு மருந்துகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. முன்னாள் அமைச்சர் கெஹலிய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தை உபயோகித்து பார்வையை இழந்த மற்றும் பார்வை குறைபாட்டுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சுகாதார அமைச்சால் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தரமற்ற மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு பெற சுகாதார அமைச்சுக்கு சுமார் 99 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவர்களில் 17 பேருக்கு 14,700,000 ரூபா இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 69 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
பிரட்னிசோலோன் என்னும் கண் சொட்டு மருந்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் உண்மைத் தன்மைத் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த குழுவின் அறிக்கைகமைய, மருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆயிரங்களில் ஒன்று
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
மோசமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமை - ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்
மோசமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமை - ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார விசேட அறிவுறுத்தல்!
27 Nov, 2025 | 05:28 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலையாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்ககளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராயும் வகையில் வியாழக்கிழமை (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் பாராளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.
பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.மேலும்,உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்தோடு, நீர்ப்பாசன கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் புதிய தரவுகளின் அடிப்படையில் அனர்த்த சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய திட்டங்களைத் தயாரிக்குமாறும் கடும் மழை ஏற்பட்டால் நீர்ப்பாசன கட்டமைப்பை முகாமைத்துவம் செய்வதற்காக அது தொடர்பில் மிக நெருக்கமாக ஆய்வு செய்யுமாறும் ஜனாதிபதி மகாவலி மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகங்களுக்கு அறிவுறுத்தினார்.
தமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததோடு அவற்றின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.
மனித மூளை அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்
மனித மூளை அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்
மூளை எந்த வயதில் மிக இளமையாக இருக்கும்? அதிக மாற்றங்களை சந்திக்கும் 5 முக்கிய கட்டங்கள்

படக்குறிப்பு, மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அந்த காலகட்டத்தில்தான் மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்டுரை தகவல்
ஜேம்ஸ் கல்லேகர்
சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
27 நவம்பர் 2025, 01:43 GMT
மனித மூளை வாழ்க்கையில் ஐந்து தனித்துவமான கட்டங்களை கடக்கிறது. இதில் 9, 32, 66 மற்றும் 83 வயதில் முக்கியமான மாற்றங்கள் நடக்கின்றன எனக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
90 வயது வரையிலான சுமார் 4,000 பேரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் மூளைச் செல்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மனித மூளை முப்பது வயதின் தொடக்க காலம் வரை இளமைக் கட்டத்தில் (adolescent phase) நீடிக்கிறது. அக்காலகட்டத்தில், மூளை தனது "உச்ச நிலையை" அடைகிறது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனநலக் கோளாறுகளும், டிமென்ஷியாவும் (நினைவாற்றல்) ஏற்படக்கூடிய ஆபத்து வாழ்நாள் முழுவதும் ஏன் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்த முடிவுகள் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

படக்குறிப்பு, மூளை வளர்ச்சியில் ஐந்து வெவ்வேறு நிலைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
புதிய அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, மூளை தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த மாற்றம் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே மாதிரி, சீரான முறையில் நடைபெறுவது இல்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
மனித மூளை 5 கட்டங்களை கடக்கிறது. அவை,
குழந்தைப் பருவம் - பிறப்பு முதல் ஒன்பது வயது வரை
இளமைப் பருவம் - ஒன்பது முதல் 32 வயது வரை
முதிர்வயது - 32 முதல் 66 வயது வரை
முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - 66 முதல் 83 வயது வரை
முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - 83 வயது முதல்
"மூளை வாழ்நாள் முழுவதும் தனது இணைப்புகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில இணைப்புகளை வலுப்படுத்தும், சிலவற்றை பலவீனப்படுத்தும். இது ஒரே மாதிரியான, நிலையான முறை அல்ல. இடையிடையே மாற்றங்களும், புதிய கட்டங்களும் ஏற்படுகின்றன" என்று பிபிசியிடம் மருத்துவர் அலெக்சா மௌஸ்லி கூறினார்.
சிலருக்கு இந்த கட்டங்கள் வேகமாகவும், சிலருக்கு தாமதமாகவும் ஏற்படலாம். ஆனால் மாற்றம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட வயது தரவுகளில் எவ்வளவு தெளிவாகத் தனித்து நின்றது என்பது ஆச்சரியமாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட மூளை ஸ்கேன்களின் எண்ணிக்கை காரணமாக, இவை இப்போது தான் வெளிப்பட்டுள்ளன.

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முப்பதுகளின் ஆரம்பம் வரை மூளை இளமைப் பருவத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மூளையின் ஐந்து கட்டங்கள்
குழந்தைப் பருவம் – இந்த முதல் காலத்தில், மூளை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும். அதே சமயம், வாழ்க்கையின் தொடக்கத்தில் உருவான மூளைச் செல்களுக்கு இடையேயான அதிகப்படியான இணைப்புகள் (சினாப்சஸ்) மெலிந்துகொண்டிருக்கும்.
இந்தக் கட்டத்தில் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். அது, A-விலிருந்து B-க்கு நேராகச் செல்லாமல், பூங்காவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஒரு குழந்தை போல, தன்னிச்சையாக விருப்பமான இடங்களுக்கு செல்வது போல செயல்படுகிறது.

படக்குறிப்பு, குழந்தை பருவத்தில் மூளை அதன் விரைவான மாற்றங்களுக்கு உட்படுகிறது
இளமைப் பருவம் – ஒன்பது வயதிலிருந்து மூளையின் இணைப்புகள் திடீரென மாறி, மிக வலிமையான செயல்திறன் கொண்ட ஒரு கட்டத்தை அடைகின்றன. "இது ஒரு பெரிய மாற்றம்," என்று மூளை கட்டங்களுக்கு இடையிலான ஆழமான மாற்றத்தை மருத்துவர் மௌஸ்லி விவரித்து கூறுகிறார்.
இந்தக் காலத்தில் மனநலக் கோளாறுகள் தொடங்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்.
பருவமடைதல் தொடங்கும் நேரத்தில் இளமைப் பருவம் ஆரம்பிப்பது அசாதாரணமான விஷயமல்ல.
ஆனால், இது நாம் நினைத்ததை விட மிகவும் நீண்டகாலமெடுத்து முடிகிறது என்பதைக் காட்டும் புதிய ஆதாரமாக இந்த ஆய்வு அமைகிறது.
முன்பு, இளமைப் பருவம் பதின் பருவ வயதுக்குள்ளேயே முடிவடைகிறது என்று கருதப்பட்டது.
பின்னர், நரம்பியல் ஆய்வுகள் அது 20வயதுக்குப் பிறகும் தொடரும் என்று குறிப்பிட்டன. இப்போது, வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வு முடிவுகள் இளமைக்காலம் 30 வயதின் தொடக்கம் வரை நீடிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மூளை நியூரான்களின் வலையமைப்பு மிகவும் திறமையானவையாக மாறும் ஒரே காலம் இதுதான். முப்பது வயதின் தொடக்கத்தில் மூளையின் செயல்பாடு உச்சத்தை அடைகிறது என்பதை பல அளவீடுகள் காட்டுகின்றன என்று மருத்துவர் மௌஸ்லி கூறினார்.
ஆனால், ஒன்பது வயது முதல் 32 வயது வரை மூளை அதே கட்டத்தில் இருப்பது "மிகவும் ஆர்வமூட்டக்கூடியது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, மனநலக் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியாவின் ஆபத்து ஏன் வாழ்நாள் முழுவதும் மாறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள அதன் முடிவுகள் நமக்கு உதவும் என்று ஆய்வுக் குழு கூறுகிறது
முதிர் பருவம் – அடுத்து மூளை அதன் மிக நீண்ட கால கட்டத்தில் நுழைகிறது. இது முப்பது ஆண்டுகள் நீடிக்கும் நிலைத்தன்மை கொண்ட காலமாகும்.
முன்பு இருந்த வேகமான மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இந்த காலகட்டத்தில் ஏற்படும் மாற்றம் மெதுவாக இருக்கும். ஆனால் இங்கே, மூளையின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தலைகீழாக மாறத் தொடங்குகின்றன.
"இது நம்மில் பலர் நேரில் கண்ட அல்லது அனுபவித்த நுண்ணறிவு மற்றும் ஆளுமையின் சமநிலை நிலையுடன் (plateau) ஒத்துப்போகிறது," என்று மருத்துவர் மௌஸ்லி விளக்குகிறார்.

படக்குறிப்பு, முதிர்வயது என்பது மூளையின் வளர்ச்சியின் மிக நீண்ட காலம் என்றும், அது மிகக் குறைந்த மாற்றத்திற்கு உள்ளாகும் என்றும் ஆய்வுக் குழு கூறுகிறது
முதுமையின் ஆரம்பகட்டம் (Early ageing) - இது 66 வயதில் தொடங்குகிறது, ஆனால் இது திடீர் மற்றும் உடனடி வீழ்ச்சி அல்ல. மாறாக, இந்த நேரத்தில் மூளையில் உள்ள இணைப்புகளின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
முழு மூளையாக ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, மூளை படிப்படியாக ஒன்றிணைந்து செயல்படும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது, இசைக்குழு உறுப்பினர்கள் தனி நிகழ்ச்சிகளைத் தொடங்குவது போல இது செயல்படுகிறது.
மூளையின் நலனை பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இந்த வயதில் தான் வெளிப்படத் தொடங்குகின்றன.
முதுமையின் பிந்தைய கட்டம் (Late ageing) - பின்னர், 83 வயதில், நாம் இறுதி கட்டத்திற்குள் நுழைகிறோம். ஸ்கேன் செய்வதற்காக ஆரோக்கியமான மூளைகளை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்ததால், மற்ற குழுக்களை விட குறைவான தரவுகளே இதில் கிடைத்துள்ளன. இந்த சமயத்தில், மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு முந்தைய கட்டத்தைப் போலவே தோன்றுகின்றன, ஆனால் இன்னும் அதிகமாக வெளிப்படுகின்றன.
பருவமடைதல், பிற்காலத்தில் ஏற்படும் உடல்நல சிக்கல்கள் மற்றும் 30 வயதுகளின் தொடக்கத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது போன்ற "பல முக்கியமான மைல்கல்களுடன் வெவ்வேறு 'வயதுகள்' எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன" என்பது தன்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதாக மருத்துவர் மௌஸ்லி தெரிவித்தார்.

படக்குறிப்பு, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முதுமையின் பிந்தைய கட்டம் 83 வயதில் தொடங்குகிறது.
'மிக அருமையான ஆய்வு '
இந்த ஆய்வு ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாகப் பார்க்கவில்லை, அதனால் மாதவிடாய் நிறுத்தம் (menopause) எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் தகவலியல் பேராசிரியரான டங்கன் ஆஸ்டில் இதுகுறித்துப் பேசுகையில், " பல்வேறு நரம்பியல் வளர்ச்சி நிலைகள், மனநலம் மற்றும் நரம்பியல் நிலைகள் மூளை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூளை இணைப்புகளில் உள்ள வேறுபாடுகள் கவனம், மொழி, நினைவு மற்றும் பல்வேறு நடத்தைகளில் ஏற்படும் சிரமங்களை முன்னறிவிக்கின்றன"என்றார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் டிஸ்கவரி பிரெயின் சயின்ஸ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் தாரா ஸ்பைர்ஸ்-ஜோன்ஸ் இதுகுறித்துப் பேசுகையில், " வாழ்நாளில் நமது மூளை எவ்வளவு மாறுகிறது என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் அருமையான ஆய்வு இது"என்கிறார்.
மூளை வயதாவதைப் பற்றிய நமது புரிதலுடன் இந்த முடிவுகள் "நன்றாகப் பொருந்துகின்றன" என்று கூறிய அவர், ஆனால் "அனைவரும் ஒரே வயதில் இந்த மாற்றங்களை சரியாக எதிர்கொள்ள மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு