Aggregator
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
அதிசயக்குதிரை
களைத்த மனசு களிப்புற ......!
இரசித்த.... புகைப்படங்கள்.
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சுய அறிமுகம் பற்றி
ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
Photo, SUNDAY TIMES
இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்கட்சிகள் தம் அரசியல் செயற்பாட்டினை வடகிழக்கிலும் முன்னெடுத்து வந்தன. ஆயினும், இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முடியாமற் போய்விட்டது. இப்பின்புலத்தில் எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலது சாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது.
ஆயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தப்பின்னரும் வலதுசாரி கட்சிளும் இடதுசாரி கட்சிகளும் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி. – தே.ம.ச. (என்பிபி). தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. இதேபோல் மலையகத்தில், பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய திருப்புமுனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடாந்து தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கின் தமிழ் தேசியம் எனும் தரிசனம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கின் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன் அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிடவில்லையென்பதை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கின. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையகத் தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம், ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர்.
ஆனால், நடந்துள்ளது என்னவெனில் தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ். மாவட்டத்தின் பதினேழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் எனக் கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப் வகித்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. ஆனால், வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும், நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது .
கட்சி
யாழ் மாநகர சபை
வல்வெட்டி துறை நகர சபை
பருத்தித்துறை நகரசபை
சாவகச்சேரி நகர சபை
நெடுந்தீவு பிரதேச சபை
இ.த.க.
13
5
4
6
6
அ.இ.த.கா.
12
7
5
6
தே.ம.ச.
10
3
2
3
3
ஜ.த.தே.கூ.
2
2
ஈ.ம.ஜ.க.
4
அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம் (பருத்திதுறை, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்திச் துறை நகரசபை மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களையும் பெற்றுள்ளது (கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜே.வி.பி./ தே.ம.ச. அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது).
கட்சி
வலிகாமம் மேற்கு பிரதேச சபை
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
சாவகச்சேரி பிரதேச சபை
நல்லூர் பிரதேச சபை
இ.த.க.
10
13
13
8
7
அ.இ.த.கா.
6
6
7
7
தே.ம.ச.
4
5
6
6
3
ஜ.த.தே.கூ.
3
ஈ.ம.ஜ.க.
6
ஐ.தே.க.
3
கட்சி
ஊர்காவற்துறை பிரதேச சபை
வேலணை பிரதேச சபை
வலிகாமம் வடக்கு பிரதேச சபை
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
பருத்தித்துறை பிரதேச சபை
இ.த.க.
2
8
11
8
11
9
தே.ம.ச.
3
4
9
6
9
4
அ.இ.த.கா.
3
6
5
ஐ.தே.க.
சு.கு
2
ஜ.த.தே.கூ.
5
5
4
த.ம.கூ.
4
ஈ.ம.ஜ.க.
3
கட்சி
காரைநகர் பிரதேச சபை
தே.ம.ச
2
இ.த.க
2
அ.இ.த.கா
2
சு.கு
2
ஜ.த.தே.கூ
2
சுருக்கம்
இ.த.க. – இலங்கை தமிழரசு கட்சி
அ.இ.த.கா. – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி
ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி
சு.கு. – சுயாதீன குழு
ஜ.த.தே.கூ. – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
த.ம.கூ. – தமிழ் மக்கள் கூட்டணி
ஈ.ம.ஜ.க. – ஈழ மக்கள் ஜன நாயக கட்சி
இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடதுசாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளூராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜே.வி.பி./ தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் (Cadre) கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்டுகின்றனர். அதன்படி பார்க்கும்போது ஜே.வி.பி./ தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜே.வி.பி. தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும். மறுபுறம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பக்கச்சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப் பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்? தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டிவைத்து தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களையும் ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜே.வி.பி./ தே.ம.ச. மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்?
எவ்வாறு வடகிழக்கில் ஜே.வி.பி./ தே.ம.ச. தன் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும். ஆனால், இவ்விரு கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகர சபை, தலவாகெல்லை – லிந்துள்ள நகர சபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய, கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களாவர். இவர்கள் மலையகக் குடியிறுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால் மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை தம்பால் வென்றெடுக்க முடியும் . மேலும், இந்தியா வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை ஜே.வி.பி./ தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறானதாக அமையும். வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையகக் கட்சிகளின் பால் மலையக இளைஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்?
கட்சி
நுவரெலியா மாநகர சபை
ஹட்டன் – டிக்கோயா நகர சபை
தலவாக்கலை – லிந்துலை நகர சபை
மஸ்கெலியா பிரதேச சபை
ஐ.தே.க
3
2
தே.ம.ச
12
6
4
7
இ.தொ.கா
2
2
ஐ.ம.ச
4
5
2
6
சு.கு
3
2
ம.ம.மு
3
கட்சி
நோர்வூட் பிரதேச சபை
அம்பகமுவ பிரதேச சபை
அகரப்பத்தனை பிரதேச சபை
கொட்டகலை பிரதேச சபை
தே.ம.ச
6
8
4
5
இ.தொ.கா
6
2
4
5
ஐ.ம.ச
5
6
4
4
கட்சி
நுவரெலியா பிரதேச சபை
கொத்மலை பிரதேச சபை
ஹங்குரன்கெத்த பிரதேச சபை
வலப்பனை பிரதேச சபை
தே.ம.ச
7
22
20
30
இ.தொ.கா
6
8
இ.பொ.மு
4
7
ஐ.ம.ச
17
9
15
சு.கு
5
குறிப்பு – இடம் கருதி சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;.
ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி
ம.போ.மு. – மக்கள் போராட்ட முன்னணி
தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி
இ.தொ.கா. – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இ.பொ.மு. – இலங்கை பொதுசன முன்னணி
ஐ.ம.ச. – ஐக்கிய மக்கள் சக்தி
சு.கு – சுயாதீன குழு
ம.ம.மு. – மலையக மக்கள் முன்னணி
வடகிழக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைததுக் கொள்வதும் சவாலாக அமையும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் விளைவாக உருவாக்கிக் கொண்ட பிரதிநிதிகளை ஜே.வி.பி. களப்பணியார்களாக மாற்றிவிடும். எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது வடக்கு மற்றும் மலையக கட்சிகள் பாரிய சவாலை எதிர்க்கொள்ள நேரிடும். மாகாண சபையில் இதையொத்த வெற்றியை ஜே.வி.பி. பெறுமாயின் சுயர்நிர்ணய உரிமை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் ஏற்றுள்ளதாக தேசமும் சர்வதேசமும் கருதும். எனவே, தமிழ் கட்சிகள் புதிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
பெ.முத்துலிங்கம்
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!
June 6, 2025
தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார்.
குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.”
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார்.
தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.
ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள் அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.
மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!
பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
https://newuthayan.com/article/வட்டுவாகல்_பாலம்_சீரமைப்பு_ஓகஸ்ட்_மாதம்_ஆரம்பமாகும்!
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.
எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!