Aggregator

ஊழல் ஒழிப்பு ஆவணங்களுடன் வெளியேறிய ரணில்! பிள்ளையானின் சகாக்களிடம் விசாரணை!

3 months 1 week ago
நிதி ஒதுக்கீடு அடிப்படையில் செயல்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்... தொழிற்சங்கப் பலத்தை அரசியல் நோக்கில் காண்பிக்க விரும்பும் ஒரு சிறிய குழுவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிப்பு ஊழல் எதிர்ப்பு குழுவில் அநுரகுமார மற்றும் ஆனந்த விஜேபாலின் பங்கேற்பு புதிதல்ல – பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் உள்ளிட்ட மூவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கடும் விசாரணை

Imagine Dragons - Thunder

3 months 1 week ago
James Brown - It's A Man's Man's Man's World [Chorus] This is a man's world This is a man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 1] You see, man made the cars To take us over the road Man made the train To carry the heavy load Man made the electric light To take us out of the dark Man made the boat for the water Like Noah made the ark [Chorus] This is a man's, man's, man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 2] Man thinks about our little bitty baby girls And our baby boys Man make them happy 'Cause man make them toys And after man make everything Everything he can Do you know that man makes money To buy from other man [Chorus] This is a man's world This is a man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 1] You see, man made the cars To take us over the road Man made the train To carry the heavy load Man made the electric light To take us out of the dark Man made the boat for the water Like Noah made the ark [Chorus] This is a man's, man's, man's world But it wouldn't be nothing Nothing without a woman or a girl [Verse 2] Man thinks about our little bitty baby girls And our baby boys Man make them happy 'Cause man make them toys And after man make everything Everything he can Do you know that man makes money To buy from other man [Chorus] This is a man's world But it wouldn't be nothing, nothing Not one little thing without a woman or a girl [Outro] He's lost in the wilderness He's lost in bitterness He's lost, lawd have mercy now, in loneliness

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட நான்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளிற்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

3 months 1 week ago
உலகம் எங்கே போகிறது? அவர்களை தண்டிக்கக்கூடாது, மற்றவர்களை அவர்கள் தண்டிக்கலாம், தடை செய்யலாம். யார் இவர்கள்? அடாவடி புரியும் வல்லரசுகளின், வாலரசுகளின் சட்டம், நீதியது.

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 1 week ago
விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள்!! விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்...விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள்!! | விடு...விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள்!! #TruthAboutSumanthiran வாட்ஸாப் குழுவில் இணைய கீழே தரப்பட்டுள்ள லிங்க்இனை அழுத்துங்கள்...www.facebook.com/watch?v=1043105188007639

இந்தியாவின் நிதியுதவியில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

3 months 1 week ago
ம், உங்களுக்கு உதவிகளை செய்கிறோம், அதனால் அத்துமீறி உங்கள் கடல் வலயங்களில் மீன்பிடியில் ஈடுபடும் நம் கடற்தொழிலாளரை அனுமதியுங்கள். இவ்வாறே இலங்கை அரசும் எங்கள் நிலத்தில் கடந்து கொள்கிறது, பிச்சை கொடுத்து அடிமையாக்குவது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
தன் இனத்தையே கொத்துக்கொத்தாக கொலை செய்த, செய்ய உதவிய பலபேர் தேர்தலில் நின்று அந்த மக்களாலேயே வெல்ல வைக்கப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றனர் என்றால்; இதுவும் சாத்தியமே.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
ஒரு சின்ன கதை . ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் அருகில் இருந்த லாண்டரி(சலவை ) கடைக்கு தாயார் சிறுவனிடம் அவசரமாக மூன்றுநாட்களில் தேவை என விடுதியில் படித்த அக்கா வின் வெள்ளை ஆடைகளை சலவைக்கு கொடுப்பார். அவரும் கொண்டு சென்று எண்ணிப்பார்த்து 9 (உருப்படி)என்று சொல்வார். மூன்றாம் நாள் பையன் சென்று காஸைக் கொடுத்து வாங்கி வர தாயார் பட்டணத்தில் உள்ள மகளின் விடுதிக்கு கொண்டு சென்று , தின்பண்டங்களும் வாங்கிக்கொண்டு மகளைப்பார்த்து வருவார் . இது தொடந்து சில வருடங்களாக நடந்தது அடிக்கடி உருப்படி 9 ஆகி இருக்கும் .எண்ணிக்கை 9ஆனால் பையன் இன்னொமொன்று சேர்த்து தாருங்கள். அந்த தாத்தா என்னை ஒன்பது என்று கூப்பிடுகிறார் என்பான் . அங்கு கடைக்காரரின் அப்பா நல்ல வயதானவர் அருகில் இருந்த வாங்கிலிருந்து கவனித்து கொண்டு இருப்பர் . ஒருநாள் பையனுடன் தாயார் சென்றார் . எண்ணிக்கை 9 ஆகி இருந்தது . தாத்தா தாயிடம் கேடடார் பையனின் பிறந்த திகதி என்னவென்று என்று ..அவர் 18 என்றார். பின்னர் இவர் நெருப்பு ராசி நேர்மையான பையன் .உயர்கல்வி கற்பான் மூன்று நான்கு மொழித்தேர்ச்சி பெறுவான் என்றார் காலம் உருண்டது அவன் வளர்ந்து சிறந்த கல்விமானாக வாழ்ந்தான் வெளிநாட்டில் சென்று தமிழ் ஆங்கிலம் சிங்களத்துடன் அந்நாடு மொழி கற்று பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக கடமை செய்தான் . ஏற்கனவே மெக்கானிக்கல், சிவில், இன்ஜினியர் பிஎச் டீ வரை படித்தார் அந்நாட்டு யூனிவெர்சிற்றி ப்ரொபசர். ஒன்பதுக்கு அன்றாட வாழ்வுக்கும் தொடர்பு உண்டா? நல்ல விடயங்கள் அந்த நம்பர் இல் நடக்குமா ? .

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
இந்த கருத்துகள் சோதிடர் பற்றியது இது முறறிலும். உண்மை ஆனால் சோதிடம். என்பது வேறு சோதிடர் ....இது பொய் ...அடுத்தது சோதிடம். உண்மை அது எவருக்கும் தெரியாது பிறகு எப்படி சொலல முடியும்???

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
இன்னொரு சோதிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது நாங்கள் நிற்கின்ற புகைபடம் ஒன்றை பார்த்துவிட்டு இன்னொருவர் கோபபட்டாலோ அல்லது சபித்தாலோ எங்களுக்கு கான்சர் போன்ற நோய்கள் வரலாம் அல்லது கார் விபத்து விமான விபத்து கூட வரலாம் .அதனால் நான் நிற்கின்ற குரூப் படங்களை ஒருவருக்கும் அனுப்பி போடாதையுங்கோ என்று நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு சொல்லிவைத்துள்ளேன்.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
போதை மாத்திரைகள் என்றால் இவை fentanyl மாத்திரைகளா......... அழிந்தது முழுநாடும். இவை பவுடர் அல்லது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியமானவை. இதை பல நாடுகள் இன்று உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவே பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்கின்றது. சிரியா செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும் இது ஒரு பெரும் பிரச்சனை. சமீபத்தில் கண்மூடித்தனமாக அமெரிக்கா கனடாவை இந்த விடயத்தில் குற்றம் சாட்டியது. இது இலங்கை அரசையே மீறிய ஒன்று. அமெரிக்காவில் இது அமெரிக்க அரசையே மீறிய ஒன்று. இந்த விடயங்களில் அவரவர்களே அவரவர் குடும்பங்களுக்கு பொறுப்பும், காவலும். அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன. இங்கு இருக்கும் பலர் இவற்றை உங்களின் வாழ்க்கைகளில் ஒரு தடவை கூட கண்டிருக்கமாட்டீர்கள். ஆனாலும் அவை வந்து போய்க் கொண்டிருந்தன.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
பல வருடங்களுக்கு முன்பு இன்டோனேசியாவில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு போதை பொருள் கடத்திவந்து விற்பனை கோஷ்டியின் தலைவர் ஈழதமிழ் வம்சாவளி அவர் கைது செய்யபட்டு இன்டோனேசிய அரசால் மரண தண்டனை நிறைவேற்றபட்டார்

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
கொலையை செய்த சுகிர்தரன் விடுதலையாகி தேர்தலில் நின்றால் மிக பெரிய வெற்றியை பெற்று கொள்வார் என்றே தெரிகின்றது.ஹீரோவாக போற்றி புகழபடுகின்றார்

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 1 week ago
இதுவரை எத்தனைபேர் பங்குபற்றியுள்ளார்கள? கோஷான் .அடுத்த ஐபிஎல்லுக்கு போட்டியை நடத்துபவர்களுக்கு ரெண்டர் விடவேண்டிவரும். கிலருபன்ஜீக்கும் கோஷானுக்கும்தான் கடும்போட்டி வரும்

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ அப்படித்தான் ஜோதிடமும் உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள் பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 1 week ago
ஒருவர் உலகில் அதிக செல்வம் மிக்கவர். மற்றவர் உலகில் அதிக அதிகாரம் மிக்கவர். டொனால்ட் டிரம்ப் அவர்களின் கொள்கைகள் புதிய விடயங்கள் இல்லை. குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பூமி வெப்பம் அடைதல் போன்ற விடயங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இவை எல்லாம் தெரிந்துகொண்டே மாஸ்க் டிரம்ப்புடன் கை கோர்த்தார்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் வந்ததில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
இல்லை ....ஒருபோதும் இல்லை நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் எண் சோதிடப்படி தான் செய்யப்படுகிறதா?? இல்லை ..அவர்களுக்கு எண் சோதிடம் என்றால் என்ன என்றே தெரியாது பூனை இடம் போனால் கூடாது என்றார்கள் இது அனுபவம் சோதிடமில்லை ஒரு அலுவலாக. போகிறோம்,.வழியில் காணும் நண்பர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் அந்த காரியம் தோல்வியாக முடியும் இது நம்பிக்கை சோதிடமில்லை நீங்கள் எண் சோதிடம் படித்து உள்ளீர்களா ?? இல்லை என்றால் எப்படி பிழை என்று கூற முடியும் ??? முடியாது,.....அப்படி சொன்னால் அது பிழை ஆகும் மேலும் பூச்சியம். தொடக்கம் ஒன்பது வரை பத்து எண்களில் உலகிலுள்ள அனுவருக்கும். சொல்வது சரியா?? என்று எப்படி கேட்க முடியும் ??? இந்த கோடானுகோடி எண்கள் மேற்படி பத்து எண்களில் தான் உருவாகிறது அந்த எண்கள் இல்லாமல் ஒரு எண்ணை கூற முடியுமா??? முடியாது,........ஒருவராலும். முடியாது இந்த பத்து எண்களிலிருந்து கோடிக்கணக்கில் எண்கள் பிறக்கும் என்றால்,....ஏன் இந்த பத்து எண்களை வைத்து கோடிக்கணக்கானவர்களில். பலனை கூற முடியாது ......முடியும் நான் நம்புகிறேன் உங்களை நம்பும்படி கூறவில்லை ..... முதலாவது எண்ணில் பிறந்தவர் முதலாவது எண்காரர் என்பது தவறு சிலசமயம். அவர் பிறந்த தேதி,..மாதம் வருடம் ...ஆகியவற்றின் கூட்டு எண். ஐந்து என்றால் ஐந்தாவது எண் ஆக இருக்க முடியம் அதாவது 1விட. வல்லமையுள்ளதாக இருக்கும் ஆகவே அவர் ஐந்தாவது எண்காரர். ஆவார் மேலும் இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் சோதிடர். சொன்னது பிழை என்கிறார்கள்,......எற்றுக்கொள்ளலாம். ...உங்களை போல் அவருக்கும். எண் சோதிடம் தெரியவில்லை .....இதை வைத் எப்படி எண் சோதிடம். பிழை என்று கூறலாம் ?? பௌதிகத்தில். ஒரு பெயில். பண்ணி விட்டார் பௌதிகம். பிழை ஆகுமா?? அல்லது அவருக்கு பௌதிகம். தெரியவில்லலையா ???

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
சாருவின் விமர்சனம் இது. சாரு இப்படி எழுதியிருக்கின்றாரே என்பதற்காக இந்தப் படம் வேறு எவருக்கும் இப்படியே தோன்றும் என்றும் இல்லை. முன்னர் சாரு திட்டித் தீர்த்த சில படங்கள் எனக்கு பிடித்தும் இருந்தன. அவர் கொண்டாடிய சில படங்கள் கொடுமைகளாகவும் இருந்தன. ஆனாலும் எழுத்தில், விமர்சனத்தில் சாரு எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் பிடித்திருக்கின்றது. கமலுக்கும் சாருவிற்கும் ஏற்கனவே ஆகாது. இப்பொழுது புதிதாக என்ன ஆகிவிடப் போகின்றது................ https://charuonline.com/blog/?p=15790 ********************************************** தக் லைஃப் – விமர்சனம் June 6, 2025 ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம். மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. சில உதாரணங்களைத் தருகிறேன். அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு வயது என்று வைத்துக்கொள்லலாம்) வளர்க்கிறார். இருபது இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்திருப்பார். அமரனுக்கு ஏழு வயது என்றால் அப்போது சக்திவேலுக்கு முப்பத்திரண்டு இருக்கலாம். அப்படியானால் அது தந்தை மகன் உறவுதானே? ஆனால் படத்தில் அண்ணன் – தம்பி என்று வருகிறது. அதற்கு ஒரு ஆபாசமான காரணம் இருக்கிறது. சக்திவேலின் காதலியான இந்திராணியை (த்ரிஷா) அமரனும் காதலிக்கிறார். தந்தை மகன் உறவு என்றால் சித்தியைக் காதலிப்பது ஆசாரமல்ல, தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்று அண்ணன் தம்பி உறவு என்று நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இதற்கு ஒரு மூலக்கதை இருக்கிறது. சக்திவேலும் இன்னொரு தாதாவும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதில் இன்னொரு தாதா போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறான். துப்பாக்கிச் சூடு. அதில் சிறுவன் அமரனைத் தூக்கி வைத்துக்கொண்டு தப்பிக்கிறார் சக்திவேல். அப்போதுதான் அமரனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார். அந்தச் சம்பவத்தில் அமரனின் நாலு வயது தங்கை சந்திரா காணாமல் போய் விடுகிறாள். உன் தங்கையைக் கண்டு பிடித்துக் கொடுப்பது என்று சொல்லும் சக்திவேல் பல டான்ஸ் பப்களில் தேடி இந்திராவைக் கண்டு பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து தன் காதலியாக வைத்துக்கொண்டு விடுகிறார். இந்த இந்திராதான் அமரனுக்கும் சக்திவேலுக்கும் முட்டிக் கொள்வதற்குக் காரணம். சக்திவேல் ஊரே நடுங்கும் தாதா. அப்படிப்பட்டவரின் காதலியான இந்திராணியிடம் எவ்வளவு சொத்தும் பணமும் இருக்க வேண்டும்? ஆனால் சக்திவேல் இறந்து விட்டார் என்று நம்பப்படும் காலகட்டத்தில் அமரன் இந்திராணியிடம் “நீ என்னோடு வந்து விடு, இல்லாவிட்டால் போய் விடு” என்று சொல்லும் சமயத்தில் இந்திராணி ஏதோ ஒரு அனாதையைப் போல “நான் எங்கே போவது?” என்று பசப்புகிறாள். எப்படி இருக்கிறது கதை? தான் காதலித்த சக்திவேல் இறந்ததாக நம்பப்படும் சமயத்தில் தன்னைப் பெண்டாள நினைக்கும் அமரனை இந்திராணி செருப்பால் அல்லவா அடித்திருக்க வேண்டும்? அப்படி நடக்கவில்லை. சக்திவேல் எப்போது தொலைவார், இன்னொருத்தனிடம் போகலாம் என்று காத்துக்கொண்டிருப்பவளைப் போல் நடந்து கொள்கிறாள் இந்திராணி. நம்பவே கேவலமாக இருக்கிறது. இப்படித்தான் படம் முழுவதுமே காதில் பூ சுற்றுகிறார்கள். இன்னொரு காட்சி. சக்திவேல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். வெளியே வந்ததும் வீட்டுக்குப் போகாமல் நேராக காதலி வீட்டுக்குப் போகிறார். அங்கே ஒரு வாரம் ஜாலி பண்ணி விட்டு மனைவியிடம் செல்கிறார். அங்கே மனைவி ஜீவா (அபிராமி) தன் கணவன் ஒரு வாரம் காதலி வீட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்து, ஏதோ தன்னை விட்டுவிட்டுத் தனியாக சினிமாவுக்குப் போய் வந்தவனோடு ஊடல் கொள்வது போல் சிணுங்குகிறார். யோவ், நீங்களெல்லாம் என்ன சங்க காலத்திலா வாழ்கிறீர்கள்? சங்க காலத்துத் தலைவிதான் வேசி வீட்டுக்குப் போய் வந்த கணவனோடு அப்படி ஊடல் கொள்வதாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன. நிஜத்தில் என்ன நடக்கும் தெரியுமா சினிமா உலக லெஜண்டுகளே? துடைப்பக்கட்டையால் கணவனைப் பின்னி எடுத்து விடுவார்கள். அல்லது, விஷம் வைத்துக் கொன்று விடுவார்கள். மணி & கமல், நீங்கள் இருவரும் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? எந்தப் பாத்திரத்திலும், எந்தக் காட்சியிலும் பார்வையாளர்கள் ஒன்றவே முடியவில்லை என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். சக்திவேலின் அண்ணனுக்கு (நாஸர்) சக்திவேலின் மீது பொறாமை. அதேபோல் சக்திவேலின் அடியாட்கள் நாலைந்து பேருக்கும் அவர் மீது எரிச்சல். சக்திவேல் கைலாஷ் (இமயமலை கைலாஷ்) போகிறார். அங்கே ஒரு மலை உச்சியில் வைத்து அந்த நான்கு பேரும் – அடியாட்களும் அண்ணனும் – சேர்ந்து. நேருக்கு நேராகவே சண்டையிட்டு, துப்பாக்கியால் சுட்டு, என்னென்ன எழவோ செய்து அவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். போட்டுத் தள்ளும் முயற்சியின்போது அமரனும் வந்து விடுகிறான். அவன்தான் இந்த சதித்திட்டம் போட்டதே. அவன்தான் சக்திவேலை மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விடுவது. இடைவேளை ஸ்லைட் காண்பிக்கப்படுகிறது. மீதிக் கதையை நீங்களே யூகித்து விடலாம். எந்த த்ரில்லும் கிடையாது. மீதிக் கதையை யூகித்து விட்டீர்களா? கீழே விழுந்த சக்திவேல் பிழைத்து எழுந்து வந்து எல்லோரையும் பழி வாங்குகிறார். அண்ணன்மாரே, இந்தக் கதை எந்த லெஜண்டின் கற்பனையில் உருவானது? இன்னொரு பைத்தியக்காரத்தனம், கேளுங்கள். அமரன் தன்னை இருபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்த தன் தந்தை போன்ற சக்திவேலை ஏன் தீர்த்துக்கட்ட முயல்கிறார் தெரியுமா? சக்திவேலின் அண்ணன் அமரனிடம் “உன் தந்தையைக் கொன்றது சக்திவேல்தான்” என்கிறார். உடனே அமரன் அதை நம்பி சக்திவேலைக் கொலை செய்ய முயல்கிறார். டேய், டேய், டேய், காதில் பூ சுற்றுவதற்கும் ஒரு அளவில்லையா லெஜண்டுகளா? ஏன், அமரனுக்கு சுயபுத்தியே இல்லையா? யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் முட்டாப்பயலா அமரன்? கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே இப்படித்தான் வருகின்றனர். ஊரே நடுங்கும் தாதாவான சக்திவேல் இப்படித்தான் தன்னைக் கொலை செய்யத் திட்டமிடும் அடியாட்களைத் தன் வலது கரமாக வைத்துக்கொண்டு திரிவாரா? அமரனைப் போலவே சக்திவேலுக்கும் ஆட்டாம்புழுக்கை அளவுக்குக் கூட மூளை இல்லை என்பது போலவே இருக்கிறது கதையமைப்பு. இதற்கிடையில் ஒரு அடியாள் எப்போது பார்த்தாலும் எல்லா அடியாட்களிடமும் சக்திவேல் பற்றி பொல்லாங்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். அமரன் உட்பட. இது சக்திவேலுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று? சக்திவேல் ஒரு ‘தக்’ என்கிறார்கள். ஆனால் அவரோ ரமண மகரிஷி மாதிரியே நடந்து கொள்கிறார். ஒரே ஒரு காட்சியில் இந்திராணியிடம் லவ்ஸ் பண்ணும்போது மட்டுமே ரமணராக இல்லாமல் நவீன கால சாமியாராக மாறுகிறார். கடைசி காட்சியில் சக்திவேல் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாராக மாறி விடுகிறார். தாடிதான் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கிறது. அது ஒன்றுதான் வித்தியாசம். படத்தில் ஒரே ஒரு ரிலீஃப் என்றால் முத்தமழை பாடல் இல்லாததுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூலில் படித்தேன். எனக்கு எம்.எஸ். பற்றி ஒரு நீண்ட நாள் கேள்வி இருந்தது. இவர் ஏன் காமத்துப் பால் கீர்த்தனைகளை பக்தி ரசமாகப் பாடுகிறார் என்று. அந்த நூலில்தான் என் சந்தேகம் தீர்ந்தது. எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் ஒரு உத்தரவு போட்டாராம். “நீ எப்போதுமே – எந்தக் கீர்த்தனையாக இருந்தாலும் – பக்தி ரசம் ததும்பவே பாட வேண்டும்” என்று. நம் சின்மயியும் அதே பாணியில் முத்த மழை பாடலை பக்தி ரசம் ததும்பப் பாடியதை தக் லைஃப் விழாவில் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. நல்ல காலம். படத்தில் அந்தக் கொடுமை இல்லை. (கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு போன்ற பாடல்களைக் கொடுத்த ரஹ்மானும் மணி ரத்னமுமா இப்படி முத்த மழை போன்ற பக்திப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்!) மணி ரத்னமும் கமல் ஹாசனும்தான் திரைக்கதையாம்! ஒரு படத்தில் திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக விளங்கும். சமீபத்தில் செக்டார் 36 என்று ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். தெரிந்த கதை. தெரிந்த சம்பவங்கள். தெரிந்த முடிவு. எல்லாமே செய்தித்தாள்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்பட்ட சம்பவங்கள். ஆனாலும் படத்தில் ஒரு நொடி கூட தொய்வு இல்லை. முப்பதுக்கு மேற்பட்ட சிறார்களை வெட்டிக் கொன்ற சீரியல் கில்லரான ஒரு இளைஞன் போலீஸிடம் தன் தரப்பு நியாயத்தை விளக்குகிறான். அப்போது அவன் பேசும் வசனம், அப்போது அந்த நடிகனின் நடிப்பு இரண்டும் உலகத் தரம். அந்த நடிகரின் பெயர் விக்ராந்த் மாஸே. செக்டார் 36 திரைப்படக் கலையைக் கற்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. ஏனென்றால், இதன் கதை, சம்பவங்கள், முடிவு எல்லாமே செய்தித்தாள்களில் விலாவாரியாக அலசப்பட்டது. இருந்தாலும் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும், நடிப்பும், வசனமும். நம்முடைய லெஜண்டுகள் பழைய பெருங்காய டப்பாக்களாகி விட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், தக் லைஃப் போன்ற ஒரு கொடூரமான தலையிடி படத்தை சமீப காலத்தில் பார்த்ததில்லை. இன்னொரு குறிப்பும் தர வேண்டும். இந்தப் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தை மாமனாரின் இன்ப வெறி போன்ற பிட் படங்களோடு ஒப்பிடுகிறார். இந்திராணி விஷயத்தில் அமரன் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால், மாறன் சொல்வது சரிதான். சந்தேகமில்லை, இது ஒரு மாமனாரின் இன்ப வெறி படம்தான். என்ன, கொஞ்சம் ஆடம்பரமாக எடுத்திருக்கிறார்கள்.