Aggregator

'2 நாட்களாக உணவில்லை' - கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

3 months ago
பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 'கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. +94 773727832 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,UGC திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானியார் சுபைர், சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதே பயணத் திட்டம். வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இலங்கை வந்து சேர்ந்தோம். திட்வா புயல் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறிவிட்டார்கள். 24 மணிநேரங்களைக் கடந்தும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர்கள் கூட இங்கு சிக்கியுள்ளனர்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கடந்த 2 நாட்களாக, உறங்குவதற்கான இடமோ, உணவு மற்றும் தண்ணீரோ வழங்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் முறையான தகவல்கள் எதுவும் கூறவில்லை." என்கிறார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவிகள் ஏதும் கிடைத்ததா எனக் கேட்டபோது, "இந்திய தூதரக அதிகாரிகள் இன்று மதியம் தான் வந்து எங்களை சந்தித்தனர். தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். ஆனால் எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறினார். பட மூலாதாரம்,UGC கொழும்பு விமான நிலையத்திலிருந்து பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி, "உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களுக்கு மேலாக எங்களால் எப்படி இருக்க முடியும். விமான நிலையத்தில் இந்திய ரூபாயை ஏற்க மறுக்கிறார்கள். அதற்காக போராட்டம் கூட நடத்தினோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்தித்து உதவுவதாக கூறினர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு இல்லாமல் இங்கு சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்" என்று கூறினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மகேஸ்வரி, "இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டன எனக் கூறுகிறார்கள். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார். நவம்பர் 27 அன்று அபுதாபியிலிருந்து இலங்கை வந்துசேர்ந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சதீஷ்குமார், "இந்திய தூதரக அதிகாரிகள் வந்து அளித்த உணவு இங்கு இருந்த பாதி பேருக்கு கூட போதவில்லை. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. நான் இந்தியாவுக்கு வர சில நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது இங்கேயே 3 நாட்கள் கழிந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்" என்று கூறினார். இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@IndiainSL படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை விமான நிலையம் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். "'ஆபரேஷன் சாகர்பந்து' தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் C-130 விமானம் - கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றடைந்தது" என்று எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்." என்று கூறினார். மேலும், "இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqdrnll3ro

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

3 months ago
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 பேர் பாதிப்பு 29 Nov, 2025 | 01:04 PM சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 182 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து சனிக்கிழமை (29) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 294 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9602 குடும்பங்களை சேர்ந்த 29809 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.14 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 612 குடும்பங்களை சேர்ந்த 1825 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 360 குடும்பங்களை சேர்ந்த 1056நபர்களும், தம்பலகாமம் 369 குடும்பங்களை சேர்ந்த 1149 நபர்களும்,மொறவெவ 105 குடும்பங்களை சேர்ந்த 321 நபர்களும்,சேருவில 173 குடும்பங்களை சேர்ந்த 582 நபர்களும், வெருகல் 398 குடும்பங்களை சேர்ந்த 1272 நபர்களும், மூதூர் 4024 குடும்பங்களை சேர்ந்த 11754 நபர்களும்,கிண்ணியா 2375 குடும்பங்களை சேர்ந்த 7763 நபர்களும்,கோமரங்கடவல 41 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களும் , பதவிஸ்ரீபுர 371 குடும்பங்களை சேர்ந்த 1187 நபர்களும், குச்சவெளி 1795 குடும்பங்களை சேர்ந்த 5720 நபர்களும், கந்தளாய் 203 குடும்பங்களை சேர்ந்த 710 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231911

நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

3 months ago
தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை Nov 29, 2025 - 05:43 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m

நாடு முழுவதும் தடைப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

3 months ago

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

Nov 29, 2025 - 05:43 PM

தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. 

ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. 

நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. 

மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. 

சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. 

அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். 


இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

3 months ago
இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்வு 29 Nov, 2025 | 03:50 PM இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 248 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் சுழற்புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231940

படுபட்சி நாவல்: விசாரணை

3 months ago
கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் நட்சத்திரன் செவ்விந்தியன் ஈழத்தின் முதலாவது விமானத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து தமிழன் என்பதற்காக டிலுக்ஸன் மோகனுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றுதான் டிலுக்சன் மோகன் என்கிறவர் குறைந்தது மூன்று பேட்டிகளில் அடித்துச் சொல்லியுள்ளார். இதற்கு முதல் ஈழத்தில் யாராவது ஒரு விமானத்தை உருவாக்கவில்லையா என்று யாருமே கேட்கவில்லை. உண்மை என்னவென்றால் ஈழத்தில் இதற்கு முதலே ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல. ஈழத்தின் முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கியவரே ஒரு தமிழர்தான். இலங்கை வான் படை Wing Commander N.குணரத்தினம் என்பதே அவர் பெயர். Sri Lanka Air Force's own locally manufactured aircraft is the result of years of hard work in designing, manufacturing and test flying. Pazmany PL2 aircraft project was started in year 1977 and the aircraft made its maiden test flight on 11th April 1980. This twin seater aircraft has taken part in many a fly-past since entering the Sri Lanka Air Force service. Pazmany PL2 aircraft was built by the Aircraft Engineering Wing of the Sri Lanka Air Force, under the personal supervision of Wing Commander N. Gunarathnam. This was the first instance in the history that an aircraft has been completely built in Sri Lanka. இதற்கு முதல் பரீட்சார்த்தமாக பறந்த விமானங்களை உருவாக்கியவர் பிலிப் றே விஜயவர்த்தன இவரது விமானங்கள் பறந்திருந்தாலும் சிவில்/ இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் குணரத்தினத்தின் விமானம் வான் படையால் பயன்படுத்தப்பட்டதால் இவரே இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். உண்மை வரலாறு இப்படி இருக்க இப்போது சோபாசக்தி முற்றிலும் தன் ஆக்கத்தை எழுதிக்கொடுத்த படுபட்சி என்கிற திருட்டு இலக்கியப்பிரதி மூலம். “ நாவலாசிரியர்” அவதாரம் எடுத்துள்ள டிலுக்சன் மோகன் அடித்து விட்டுள்ள அண்டப்புழுகுகள், ஆகாசப்புழுகுகளை ஒவ்வொன்றாக ஆதாரங்கள், தரவுகள், தருக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறோம். ரமணன் சந்திரசேகரமூர்த்திக்கு வெடிப்புழுகன் டிலுக்சன் வழங்கிய யூரியுப் பேட்டிதான் அண்மையது. அதில் ரத்மலானையில் தான் Aeronautical Engineering படித்து முடித்தேன் என்று சொல்லியுள்ளார். முன்னதாக Jaffna Monitor க்கு வழங்கிய பேட்டியில் தான் Ratmalana Aeronautical Engineering College ல் படித்ததாகச் சொல்லியுள்ளார். அப்படி ஒரு Engineering கொலீஜே இலங்கையிலில்லை. இலங்கையில் இன்று வரைமும் Aeronautical Engineering ல் BSe பட்டம் பெற இரண்டே இரண்டு இடங்களே உண்டு. 1. Kotelawela Defence University (KDU) 2. மொரட்டுவப் பல்கலைக்கழகம். இந்த இரண்டு இடங்களிலும் இவர் படித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர் அப்படிச் சொல்லவும் இல்லை. இவரின் LinkedIn பக்கத்தில் Skyline Aviation Sri Lanka வில் படித்ததாகவும் ஒரு Associate Degree பெற்றதாகவும் பதிவு உள்ளது. அங்கு டிப்ளோமா பட்டங்களே உண்டு. BSc இல்லை. ஆனால் தனது இணையத்தில் தனக்கு ஒரு BSc( Aeronautical Engineering) உண்டு என்னு அண்டப்புபுழுகை அவிட்டுவிட்டுள்ளார். இனிமேல் தான் வடிவேலுவின் கிணற்றைக் காணோம் வகையான டிலுக்சனின் அண்டப்புழுகு கொமடிகளுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம். சிரிக்க தயாராகிக் படிக்க வாருங்கள். காமெடி 1. ஈழயுத்தம் முடிந்தபின் தான் Ratmalana Aeronautical Engineering College ல்( அப்படி எதுவுமே ஈழத்தில் இல்லை) படித்துக்கொண்டிருக்கும்போது தான் விமானம் செய்யும் யோசனையை சொன்னதால் நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடித்து விசாரித்தாங்களாம். பிறகு இரண்டாம் விசாரணை Air Force வைத்ததாம். தான் இலங்கையின் முதல் விமானத்தை உருவாக்கப் போவதாகச் சொன்னபோது இலங்கையின் முதல் விமானத்தை இராவணற் தான் உருவாக்கியதாக Air Force சொன்னதாம். பிறகு மூன்றாம் விசாரணையை Air Force Wing Commander செய்தாராம். அவர் தன் ஆசையைக் கேட்டபின் இலங்கையின் முதல் விமானத்தை புலிகள் செய்து விட்டார்கள் என்று சொன்னாராம். உண்மையிலேயே இலங்கை வான்படை தளபதிகளோ உத்தியோகத்தர்களோ விசாரணை செய்திருந்தால் இந்த காமெடிகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இலங்கையின் முதல் விமானத்தை யார் உருவாக்கியது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அவர்களுடைய மியூசியங்களில் தமிழ் Wing Commander குணரத்தினம் உருவாக்கிய Pazmany PL‑2 light aircraft ஐ மட்டுமல்ல பிலிப் றே விஜயவர்த்தன உருவாக்கிய பல விமானங்களை மட்டுமல்ல அதற்கு முதல் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்ட பறந்த , பறக்க எத்தனித்த பல நூறு விமானங்களையும் பார்த்திருப்பார்கள். ஆக இவை டிலுக்சனதும் ஆட்டிலறியை தோளில் வைத்து அடித்ததாக கதை எழுதிய சோபாசக்தியினதும் அண்டப்புழுகுகள். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம். Archive

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

3 months ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·proednsoSta0mufc51gmtai900h1m153h7cu2a0galmg306cf38at338 fgh · #கேவலமான #உண்மைகள் !!!!!! படித்தேன்!!!பகிர்ந்தேன்!!!! 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம். 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க? 16. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்......!

மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன் - டிரம்ப்

3 months ago
'19 நாட்டவரின் கிரீன் கார்டு மறுசரிபார்ப்பு' - அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்களுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,Pete Marovich/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு வர இந்த நடவடிக்கை அவசியம் என்று எழுதியுள்ளார். இதனால், அமெரிக்காவின் 'குடியேறுபவர்களுக்கான விதிகள்' கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். இதை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறியிருக்கும் டிரம்ப், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியரான ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்று அறியப்பட்டிருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் 'ஆபரேஷன் அலைஸ் வெல்கம்' (Operation Allies Welcome) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை அமெரிக்கா அனுமதித்தது. டிரம்ப் என்ன எழுதினார்? முன்னாள் அதிபர் ஜோ பைடனை விமர்சித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதிய டிரம்ப், முந்தைய நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு தீங்கு விளைவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், "அமெரிக்காவிற்கு பயனில்லாதவர்கள், நம் நாட்டை நேசிக்க முடியாதவர்கள் உள்பட, நம் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்களும் மானியங்களும் ரத்து செய்யப்படும். அமைதியை சீர்குலைக்கும் புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள். மேலும் பாதுகாப்பு அபாயமாக இருப்பவர்கள் அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் ஒத்துப்போகாத வெளிநாட்டு நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள்" என்றும் அவர் எழுதியிருந்தார். ஆனால், எந்த நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படும் என்று அவர் விளக்கம் தரவில்லை. மற்றொரு பதிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து விமானத்தில் மீட்கப்பட்ட மக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "லட்சக்கணக்கான மக்கள் எந்த விசாரணையும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இதை நாம் சரிசெய்வோம்" என்றும் எழுதியிருந்தார். பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு, அமெரிக்காவில் "எந்த நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரும்" நாடு கடத்தப்படுவார் என்று ட்ரம்ப் கூறினார். அதே நாளில், பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் வரை, ஆப்கான் குடிமக்கள் அளித்த அனைத்து குடியேற்ற மனுக்களின் செயலாக்கத்தையும் அமெரிக்கா நிறுத்திவைத்தது. வியாழக்கிழமை, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) 19 அபாயகரமான நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களின் கிரீன் கார்டுகளை மீண்டும் சரிபார்ப்பதாகத் தெரிவித்தது. அந்த அறிக்கையில், புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி கேட்டபோது, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையாகத் தடை விதித்தும், மேலும் 7 நாடுகளின் குடிமக்களுக்கு பகுதியளவில் நுழைவு தடை விதித்தும் 2025 ஜூன் மாதம் வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியது. ஆப்கானிஸ்தான், மயான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வட்டோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, இரான், லிபியா, சொமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புரூண்டி, கியூபா, லாவோஸ், சியார்ரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரீன் கார்ட் எப்படி மீண்டும் சரிபார்க்கப்படும் என்று யுஎஸ்சிஐஎஸ் விளக்கம் கொடுக்கவில்லை. 'மூன்றாம் உலக நாடுகள்' தனது சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவில் சமூக சீர்கேடு அதிகரிப்பதற்கு அகதிகளை குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்காவிற்கு பலம் சேர்க்கும் சொத்தாக அல்லாத எவரையும் வெளியேற்றுவேன் என்று கூறினார். தேங்க்ஸ்கிவ்விங் செய்தியாக வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய டிரம்ப், "சோமாலியாவிலிருந்து வந்த லட்சக்கணக்கான அகதிகள் மின்னசோட்டாவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டார்கள்" என்று கூறினார். "அமெரிக்காவை முழுமையாக சரிசெய்ய, அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன்" என்றும் அவர் எழுதினார். 'மூன்றாம் உலகம்' என்ற சொல் முன்னர் ஏழை நாடுகளையும், வளரும் நாடுகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. டிரம்பின் அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை, யுஎஸ்சிஐஎஸ் யாரும் இன்னும் வழங்கவில்லை. டிரம்ப் தனது பதிவில் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாகத் தொடர்புபடுத்தவில்லை. டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடைகளையும் விதித்தார். அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெரமி மெக்கின்னி, வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு குறித்த அதிபர் டிரம்பின் பதில் புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குகிறது என்று கூறினார். பிபிசி உலக செய்திகளின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய ஜெரமி மெக்கின்னி தாக்குதல்காரர்களின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார். "இதுபோன்ற வழக்குகள் நிறம், இனம் அல்லது தேசியத்தைப் பார்ப்பதில்லை. மனநோயோ தீவிர சித்தாந்தமோ எந்த பின்னணியிலிருந்தும் ஒருவருக்கு உருவாகலாம்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Scott Eisen/Getty Images படக்குறிப்பு,ஜோ பைடன் தவறான முடிவுகள் எடுத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார் இந்தியர்களை பாதிக்குமா? டிரம்பின் முடிவு பற்றிப் பேசிய முன்னாள் தூதர் வீணா சிக்ரி, அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லாததால், இந்தியர்கள் கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார். "மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களையும் தடை செய்வதாக அவர் (டிரம்ப்) கூறியிருக்கிறார். அவர் தனது முதல் பதவிக் காலத்தில் இதனைச் செய்தார். பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் அத்தகைய பட்டியலில் இருந்தன" என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். இம்முறை ஒரு பட்டியல் ஏற்கெனவே தயாராக இருக்கிறது. ஆனால், அதில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள் என்பதுதான் தெரியவில்லை. மேலும் பேசிய வீணா சிக்ரி, "பாகிஸ்தானின் பெயர் முன்னதாக அந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார். திட்டவட்ட விவகார நிபுணர் பிரம்மா செல்லனேய், கடந்த ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார். "அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் இதுபோன்ற சம்பவங்களில் சுடப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது" "ஆனால் முன்பு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வுக்காக பணியாற்றிய ஒரு ஆப்கானிஸ்தான் அகதியால் நடத்தப்பட்ட ஒரு சம்பவம் அதிபர் டிரம்பை கோபப்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து குடியேற்றத்தை நிறுத்துவேன் என்று சமூக ஊடகங்களில் அறிவிக்கும் அளவுக்கு அது அவரைக் கோபப்படுத்தியிருக்கிறது" என்றும் அவர் கூறினார். "சொமாலிய மக்களுக்கு இந்த குற்றவாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அவர்கள் மீதும் தங்கள் கோபத்தை அவர்கள் கொட்டியிருக்கிறார்கள். ஒரு நபரின் செயலுக்காக ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் மக்களையும் குறைசொல்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். வாஷிங்டன் டிசி தாக்குதலில் சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் ரஹ்மானுல்லா லகன்வால் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்ததால் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஆப்கானியர்களில் அவரும் ஒருவர். 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது அவர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்தது. லகன்வால் முன்பு சிஐஏவுடன் இணைந்து பணியாற்றியவர் என்று சிஐஏ இயக்குநர் தெரிவித்தார். பிபிசியின் அமெரிக்க துணை நிறுவனமான சிபிஎஸ்-ன்படி, லகன்வால் 2024 இல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dzg24dwdko

மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன் - டிரம்ப்

3 months ago

'19 நாட்டவரின் கிரீன் கார்டு மறுசரிபார்ப்பு' - அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்களுக்கு பாதிப்பா?

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், கிரீன் கார்டு, இந்தியா

பட மூலாதாரம்,Pete Marovich/Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு வர இந்த நடவடிக்கை அவசியம் என்று எழுதியுள்ளார்.

இதனால், அமெரிக்காவின் 'குடியேறுபவர்களுக்கான விதிகள்' கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.

இதை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறியிருக்கும் டிரம்ப், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியரான ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்று அறியப்பட்டிருக்கிறது.

2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் 'ஆபரேஷன் அலைஸ் வெல்கம்' (Operation Allies Welcome) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை அமெரிக்கா அனுமதித்தது.

டிரம்ப் என்ன எழுதினார்?

முன்னாள் அதிபர் ஜோ பைடனை விமர்சித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதிய டிரம்ப், முந்தைய நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு தீங்கு விளைவித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், "அமெரிக்காவிற்கு பயனில்லாதவர்கள், நம் நாட்டை நேசிக்க முடியாதவர்கள் உள்பட, நம் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்களும் மானியங்களும் ரத்து செய்யப்படும். அமைதியை சீர்குலைக்கும் புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள். மேலும் பாதுகாப்பு அபாயமாக இருப்பவர்கள் அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் ஒத்துப்போகாத வெளிநாட்டு நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள்" என்றும் அவர் எழுதியிருந்தார்.

ஆனால், எந்த நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படும் என்று அவர் விளக்கம் தரவில்லை.

மற்றொரு பதிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து விமானத்தில் மீட்கப்பட்ட மக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "லட்சக்கணக்கான மக்கள் எந்த விசாரணையும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இதை நாம் சரிசெய்வோம்" என்றும் எழுதியிருந்தார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், கிரீன் கார்டு, இந்தியா

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு,வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார்.

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும்

வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு, அமெரிக்காவில் "எந்த நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரும்" நாடு கடத்தப்படுவார் என்று ட்ரம்ப் கூறினார்.

அதே நாளில், பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் வரை, ஆப்கான் குடிமக்கள் அளித்த அனைத்து குடியேற்ற மனுக்களின் செயலாக்கத்தையும் அமெரிக்கா நிறுத்திவைத்தது.

வியாழக்கிழமை, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) 19 அபாயகரமான நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களின் கிரீன் கார்டுகளை மீண்டும் சரிபார்ப்பதாகத் தெரிவித்தது.

அந்த அறிக்கையில், புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.

பிபிசி கேட்டபோது, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையாகத் தடை விதித்தும், மேலும் 7 நாடுகளின் குடிமக்களுக்கு பகுதியளவில் நுழைவு தடை விதித்தும் 2025 ஜூன் மாதம் வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியது.

ஆப்கானிஸ்தான், மயான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வட்டோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, இரான், லிபியா, சொமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

புரூண்டி, கியூபா, லாவோஸ், சியார்ரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிரீன் கார்ட் எப்படி மீண்டும் சரிபார்க்கப்படும் என்று யுஎஸ்சிஐஎஸ் விளக்கம் கொடுக்கவில்லை.

'மூன்றாம் உலக நாடுகள்'

தனது சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவில் சமூக சீர்கேடு அதிகரிப்பதற்கு அகதிகளை குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்காவிற்கு பலம் சேர்க்கும் சொத்தாக அல்லாத எவரையும் வெளியேற்றுவேன் என்று கூறினார்.

தேங்க்ஸ்கிவ்விங் செய்தியாக வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய டிரம்ப், "சோமாலியாவிலிருந்து வந்த லட்சக்கணக்கான அகதிகள் மின்னசோட்டாவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டார்கள்" என்று கூறினார்.

"அமெரிக்காவை முழுமையாக சரிசெய்ய, அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன்" என்றும் அவர் எழுதினார்.

'மூன்றாம் உலகம்' என்ற சொல் முன்னர் ஏழை நாடுகளையும், வளரும் நாடுகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

டிரம்பின் அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை, யுஎஸ்சிஐஎஸ் யாரும் இன்னும் வழங்கவில்லை. டிரம்ப் தனது பதிவில் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாகத் தொடர்புபடுத்தவில்லை.

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடைகளையும் விதித்தார்.

அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெரமி மெக்கின்னி, வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு குறித்த அதிபர் டிரம்பின் பதில் புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குகிறது என்று கூறினார்.

பிபிசி உலக செய்திகளின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய ஜெரமி மெக்கின்னி தாக்குதல்காரர்களின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.

"இதுபோன்ற வழக்குகள் நிறம், இனம் அல்லது தேசியத்தைப் பார்ப்பதில்லை. மனநோயோ தீவிர சித்தாந்தமோ எந்த பின்னணியிலிருந்தும் ஒருவருக்கு உருவாகலாம்" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், கிரீன் கார்டு, இந்தியா

பட மூலாதாரம்,Scott Eisen/Getty Images

படக்குறிப்பு,ஜோ பைடன் தவறான முடிவுகள் எடுத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார்

இந்தியர்களை பாதிக்குமா?

டிரம்பின் முடிவு பற்றிப் பேசிய முன்னாள் தூதர் வீணா சிக்ரி, அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லாததால், இந்தியர்கள் கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார்.

"மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களையும் தடை செய்வதாக அவர் (டிரம்ப்) கூறியிருக்கிறார். அவர் தனது முதல் பதவிக் காலத்தில் இதனைச் செய்தார். பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் அத்தகைய பட்டியலில் இருந்தன" என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இம்முறை ஒரு பட்டியல் ஏற்கெனவே தயாராக இருக்கிறது. ஆனால், அதில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள் என்பதுதான் தெரியவில்லை.

மேலும் பேசிய வீணா சிக்ரி, "பாகிஸ்தானின் பெயர் முன்னதாக அந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார்.

திட்டவட்ட விவகார நிபுணர் பிரம்மா செல்லனேய், கடந்த ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார்.

"அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் இதுபோன்ற சம்பவங்களில் சுடப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது"

"ஆனால் முன்பு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வுக்காக பணியாற்றிய ஒரு ஆப்கானிஸ்தான் அகதியால் நடத்தப்பட்ட ஒரு சம்பவம் அதிபர் டிரம்பை கோபப்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து குடியேற்றத்தை நிறுத்துவேன் என்று சமூக ஊடகங்களில் அறிவிக்கும் அளவுக்கு அது அவரைக் கோபப்படுத்தியிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

"சொமாலிய மக்களுக்கு இந்த குற்றவாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அவர்கள் மீதும் தங்கள் கோபத்தை அவர்கள் கொட்டியிருக்கிறார்கள். ஒரு நபரின் செயலுக்காக ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் மக்களையும் குறைசொல்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

வாஷிங்டன் டிசி தாக்குதலில் சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல்

ரஹ்மானுல்லா லகன்வால் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்ததால் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஆப்கானியர்களில் அவரும் ஒருவர்.

2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது அவர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்தது.

லகன்வால் முன்பு சிஐஏவுடன் இணைந்து பணியாற்றியவர் என்று சிஐஏ இயக்குநர் தெரிவித்தார்.

பிபிசியின் அமெரிக்க துணை நிறுவனமான சிபிஎஸ்-ன்படி, லகன்வால் 2024 இல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dzg24dwdko

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months ago
டிட்வா புயல் தாக்கம் - மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு Nov 29, 2025 - 03:28 PM நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmik4ctpl025qo29njdj0gnzv

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

3 months ago
இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி 29 Nov, 2025 | 12:00 PM இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை நீர் நிறைந்துள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. படாங்க் டோறு நகரில் அடையாளம் காணப்படாத உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு வானூர்தி மூலம் உதவி மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231901

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

3 months ago

இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி

29 Nov, 2025 | 12:00 PM

image

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை நீர் நிறைந்துள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. படாங்க் டோறு நகரில் அடையாளம் காணப்படாத  உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்  மின்சாரம் மற்றும் வீதிகள்  சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு வானூர்தி மூலம் உதவி மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/231901

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

3 months ago
ஹொங்கொங் தீ விபத்து : 128 பேர் உயிரிழப்பு, 200 பேர் மாயம் 29 Nov, 2025 | 01:52 PM ஹொங்கொங்கில் கடந்த புதன்கிழமை (29) ஏற்பட்ட பாரிய தீ பரவலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ பரவலில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 200 பேர் காணாமல் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதன்கிழமை (26) தீ பரவியது. இதன் காரணமாக கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற பொருட்கள் காரணமாக மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீபரவல் ஹாங்காங்கில் 1948 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவலை விட மிகப்பெரிய தீ விபத்தாகும். ஹொங்கொங் அரசு பாதிக்கப்பட்ட மக்கள் உதவ 300 மில்லியன் நிதி ஒதக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231919

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

3 months ago
102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு! Nov 29, 2025 - 11:56 AM சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijws59p025fo29nw65thb5j

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

3 months ago

102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

Nov 29, 2025 - 11:56 AM

102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmijws59p025fo29nw65thb5j

இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் வேண்டுகோள்

3 months ago
Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:53 AM அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும். காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261 மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377 கப்பல் அனுப்புதல் - 021 2223063/ 021 2222261 குருநகலை - 037 2229617/ 037 2223873 அநுராதபுரம் - 025 2222261/ 025 2236424 கண்டி - 081 2203100/ 081 2222261 பதுளை - 055 2222124/ 055 2222261 அம்பாந்தோட்டை - 047 2222016/ 047 2220261 கருப்பு - 034 2222261/ 034 2236529 இரத்னபுர - 045 2226592/ 045 2222261 திருகோணமலை - 026 2231385/ 026 2222600 காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267) மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில் இரத்த தானம் வழங்க முடியும். https://www.virakesari.lk/article/231874

இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்த மத்தியஸ்தானம் வேண்டுகோள்

3 months ago

Published By: Digital Desk 3

29 Nov, 2025 | 12:53 AM

image

அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும்.

காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261


மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377


கப்பல் அனுப்புதல் - 021 2223063/ 021 2222261


குருநகலை - 037 2229617/ 037 2223873


அநுராதபுரம் - 025 2222261/ 025 2236424


கண்டி - 081 2203100/ 081 2222261


பதுளை - 055 2222124/ 055 2222261


அம்பாந்தோட்டை - 047 2222016/ 047 2220261


கருப்பு - 034 2222261/ 034 2236529


இரத்னபுர - 045 2226592/ 045 2222261


திருகோணமலை - 026 2231385/ 026 2222600


காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267)


மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில்  இரத்த தானம் வழங்க முடியும்.

https://www.virakesari.lk/article/231874

சித்தாந்த வினா விடை

3 months ago
சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார்.  இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) அருணைவடிவேல் முதலியார் மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல்  கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும்,   ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும்,  'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும்,  'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை., “பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்”  என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள்,  முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது.  அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும்.  இவ்வாறாக நாம் காணும்பொழுது,  முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது? ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு  அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும்.  அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும், “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன?  ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர்.  அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும்  சிவாகமங்களை இகழ்ந்து  நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும்.  மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும்  "புறப்புறம், புறம், அகப்புறம், அகம்"  என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன.  அவற்றுள்  புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. புறச் சமயங்கள்  :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. அகப்புறச் சமயங்கள்  :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன.  'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? ஆசிரியர்:  'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு  புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன.  வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன.  வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன.  வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன .  சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை,  ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது.  மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா? ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்'  (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால்  இப்பெயர் பெற்றது.  இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html