Aggregator

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
ஆமாம் சரி நான் என்றால் அவர்கள் இருவருடனும் கதைத்து அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து இருப்பேன் எனக்கும் வேறு ஒன்றை புதிதாக பார்த்து கொள்வேன் சரியா அண்ணை ?

என் மனதினை கொள்ளை கொண்ட பாடல்

3 months 1 week ago
முத்தமழை பாடல் வரிகள் பெண்: முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ? பெண்: கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண்: தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு: தீம் தன தோம் தன தீம் தன தோம் குழு: தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண்: காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் குழு: கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண்: என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் குழு: கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண்: கரு மை கொண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் குழு: போதும் போதும் என சென்றாயா ஆண்: காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண்: முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண்: ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண்: மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண்: நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண்: வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண்: காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண்: மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண்: காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண்: இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண்: காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ? பெண்: கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை https://padalvarigal.com/muththa-mazhai-song-lyrics-in-tamil/

என் மனதினை கொள்ளை கொண்ட பாடல்

3 months 1 week ago
Sudharshan Subramaniam's post Thug life ஒன்பது பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல், முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ! முல்லை இரவுகள் பற்றி எரியாதோ! பழைய ரஹ்மான் ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> சூஃபி வடிவத்தின் அழகு இழைந்து ஓடும் பாடல். ரஹ்மான் இப்படி ஏராளமான அழகான பாடல்கள் தந்திருக்கிறார். இது Dhee குரலில் இன்னும் அழகாக இருக்கிறது. கடவுளைப் போல காதலையும் தொழலாம். கடவுளை அறியோம். ஆனால் காதலும் காமமும் இருத்தலின் கொண்டாட்டமல்லவோ! தொழுதலுக்கு உரியதல்லவோ! பொல்லா இரவோ! சொல்லா உறவோ! இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ! காலைக் கனவினில் காதல் கொண்டேன். கண்விழித்தேன் அவன் காணவில்லை.. கண்விழித்தேன் அவன் காணவில்லை. (Chant. மந்திரம் போல repeated lines) என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை. ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன். மோகப் பனிப்போர்வையில் கரம் கோர்க்கையில் காதல் சொல்வேன். காதல் காதல் சொல்வேன். தீ குரலில் இறுதியில் தபேலா, இடைவெளியில் clap sound போலொரு ஓசையுடன் கீழ்வரும் வரிகள், அதில் காதல் எனும் இடத்தில் Dhee யின் வார்த்தை அழகுபடுத்தல். இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா! காதில் விழும் வரை காதல் பாடவா. பொல்லா இரவோ சொல்லா உறவோ. இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ. கண்ணாளா. நான் காதலி. காதலன் நீ. வேறு எல்லாம் வேஷம் என்பேன். வெறும் வேஷம் என்பேன். காதல் தான் அச்சு. மையப்புள்ளி. அதிலிருந்துதான் உலகம் விரிகிறது. Sufi whirling மாதிரி. Devinity. Beautiful 🖤" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t0/1/16/1f5a4.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> (பாடல் இணைப்பு முதலாவது கமென்டில். நல்ல Sound system இல் கேளுங்கள்) https://www.facebook.com/sudha001/posts/thug-life-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/9762230997218221/ பாடகி தீயின் குரலில் முத்தமழை பாடல்.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
Muthukrishnan Viswanaath 

505264207_24114036841525017_138466397756

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும்

தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !!

கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்...

எல்லை மீறிய பாலகிருஷ்ணன் !

இனியும் பொறுத்துப் போதல் கூடாது !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.

ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு.

மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள்.

இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி.

அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி.

இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல.

(அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை.

மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது.

அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார்.

கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று

அல்ல.

மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.)

இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள்.

சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர்.

அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?!

இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம்.

இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு.

இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன்.

மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான்.

இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது.

இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள்.

ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர்.

ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது.

ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான்.

ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர்.

ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள்.

காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள்.

இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு.

இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது.

அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள்.

தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?!

அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது !

இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார்.

வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான்.

இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல்.

ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது.

இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம்.

இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல.

ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார்.

இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட...

வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ?????

என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?!

ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார்.

அது.....

சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம்.

வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!

சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?!

வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
Muthukrishnan Viswanaath பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் ! மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !! கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்... எல்லை மீறிய பாலகிருஷ்ணன் ! இனியும் பொறுத்துப் போதல் கூடாது ! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு. மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள். இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி. அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி. இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல. (அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை. மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது. அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார். கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று அல்ல. மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.) இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள். சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர். அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ? எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?! இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம். இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு. இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன். இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன். மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான். இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது. இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள். ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர். ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது. ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான். ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர். ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள். காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள். இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு. இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது. அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள். தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?! அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது ! இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன். அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார். வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார். ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார். நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான். இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல். ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது. இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம். இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல. ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார். இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட... வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ????? என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?! ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார். அது..... சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார். அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம். வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?! சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?! வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?! -வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025

🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)

3 months 1 week ago
🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025) பதினெட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உன் நினைவுகள் நெஞ்சில் என்றும் வாழுமே! கந்தர்மடம் ஆத்திசூடியில் அவதரித்த தேவதையே ஆசிரியரின் பாசத்தில் உருவான அழகு ஓவியமே! வேம்படி பள்ளியின் அறிவு விளக்கே உயிரியல் பாடத்தில் ஒளிர்ந்த பெதுமையே! இருபத்தாறு வயதில் மணமகளாய் மலர்ந்து அத்தியடியின் மருமகளாய் வலதுகால் பதித்தாயே! யாழின் நினைவுடன் இங்கிலாந்து சென்றாய் விதியை வென்று, வாழ்வை வளமாக அமைத்தாய்! தமிழும் ஆங்கிலமும் சமநிலையில் போற்றினாய் பழமை புதுமையைச் சேர்த்து பூந்தோட்டமானாய்! மூன்று மழலைகளின் அன்புப் பாசத்தாயே கருணையும் அறிவும் வாரி அளித்த குருவே! நடனம், இசை, விளையாட்டு அனைத்தையும் படிப்புடன் சேர்த்து ஊட்டி வளர்த்த மடந்தையே! ஓயாது உழைத்து, சோராது சமைத்து பசுமை வீடாய் குடும்பத்தை நிமிர்த்தினாயே! அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த உன் வழிகாட்டலில் பிள்ளைகள் ஒளிர்ந்தனவே பெருமைகள் சேர்த்தனவே! குடும்ப மரத்தில் இன்று எட்டு மொட்டுகள் அவர்களது சிரிப்பிலும் நீயே உறைந்திருக்கிறாய்! ஒவ்வொரு புன்னகையிலும், ஒவ்வொரு கண்ணீரிலும், உன் புகழ் நிழலாக நெஞ்சங்களை நனையச் செய்கிறதே! பதினெட்டு ஆண்டுகள் பறந்து விட்டாலும், நினைவுகள் நிலவாய் நம் வாழ்வை நிறைத்தவளே! இதயத்தில் என்றும் அணையாத தீபமே எம் ஆண்டவனாய் இன்று உன்னையே வணங்குகிறோம்! - தில்லைவிநாயகலிங்கம் குடும்பத்தனர் - 🕊️ In Loving Memory of Mrs. Jeyakumary Thillaivinayagalingam (08.06.2025) Eighteen years have come and gone, Yet your light still lingers on. Born in Kandarmadam’s gentle air, To teach and lead was your family’s care. Vembadi’s halls knew your name, In bioscience, you rose to fame. At twenty-six, you joined your hand, With an engineer from Athiady’s land. From Jaffna’s soil to England’s shore, You built a life, and so much more. With heart and hope, you learned anew, A tongue, a world — yet stayed so true. Three young lives you shaped with grace, Gave them strength, a grounded place. Books, dance, keys and strings, You taught them joy in many things. A mother, guide, a soul so bright, You worked by day, loved through the night. Not once you paused to claim your due, Your children rose because of you. Now eight sweet buds bloom from your tree, Your spirit lives in their melody. Though you have gone, we feel you near, In every smile, in every tear. Eighteen years, and still you shine, Our love for you, a sacred line. Forever missed, forever dear, Your memory blossoms year by year. - Thillaivinayagalingam's Family -

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

3 months 1 week ago
முனிகளின் இராச்சியம் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, குலம், பால் என எல்லாப் பாகுபாடுகளும் கடந்த செயல்நிலையாகப் பரிணமித்தது. குல தெய்வங்களும், குலத்துக்கப்பால் யாவரையும் இரட்சிக்கும் தெய்வங்களும் உருவாயின. ஒவ்வொரு மனிதரும் தனது இருப்புப் பற்றிக் கொண்டிருந்த அச்சமும் வாழ்தலுக்கான உணவுத்தேடலும் ஏனையனவும், பாதுகாப்புச் சார்ந்த உணர்வுந்துதலை மையப்படுத்தின. இனக் குழுத்தலைவர், உயிரைக் காத்த வீரர் என தன்னை, தன்னைச் சூழ உள்ளவரைக் காத்தவர் மரியாதைக்குரியோராகவும்; பிறருக்காகத் தன்னுயிர் நீத்தவர் வழிபடு தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் ஆயினர். அத் தெய்வ உருவாக்கமும், வழிபடும் சடங்கும், கதைகளும், பாடல்களும், கூத்துகளும் சமூக மானிடவியலை புரிந்து கொள்ளவும் எழுதவும் பெரிதும் துணை நிற்கின்றன. பண்பாட்டசைவியக்கத்தை இனவரைவியலை அறியவும் எழுதவும் தூண்டின. இறந்தவர்கள் நன்மை செய்பவர், தீமை செய்பவர், நன்மையும் தீமையும் செய்பவர் என வகைப்படுத்தப்பட்டுக் கருதப்படுவதும் உண்டு. அவற்றுள் பேயாக அச்சத்துடனும் தெய்வமாக பக்தியுடனும் வணங்கப்படுகின்ற தெய்வங்களுள் ஒன்றாக முனி – முனீஸ்வரர் விளங்குகின்றார். முனி – முனீஸ்வரர் – முனியப்பர் ஈழத்துப் புலத்தில் தமிழர் வாழ்கின்ற கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் இன்றுவரை வணங்கப்படுகின்ற நாட்டார் தெய்வங்களுள் முனீஸ்வரருக்குத் தனி இடம் உண்டு. முனீஸ்வரரின் வரலாற்றை எழுத முற்படுகையில் சிலர் ‘ரிக்’ வேதத்தில் ‘முனி’ என்னும் சொல் உள்ளது என்றும் அதற்கு ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்பது பொருள் என்றும் குறிப்பிடுவர். உபநிடதங்கள், பகவத்கீதை முதலான நூல்களில் “உலக வாழ்வைத் துறந்து மௌனத்தைக் கைக்கொண்டு ஞானவழியாகிய பரமதியானத்துள் மூழ்கி விருப்பு, வெறுப்புகள் யாவும் நீங்கியவர்கள்” என முனி பற்றிக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகின்றது. முனி எனும் சொல்லுக்கு கழகத் தமிழகராதி; கோபம், இருடி, புத்தன், வில், யானைக்கன்று, அகத்தி, தவத்தோன் எனப் பலவாறு பொருள் சுட்டுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே முனிவர் எனும் சொல் பிறந்தது. முனி என்பது ஒருவரல்ல; அது பல தோற்றங்களை உடைய ஏதோ ஒன்றாகவோ அல்லது பலவாகவோ உள்ளது. பல்வேறு காரணங்களால், பெயரில் முன்னடை அல்லது பின்னடைச் சொற்களை உடைய பல முனிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் முனி பேயாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். முனி உலாவுகின்ற நேரம் நடுச்சாமப் பொழுது. அது விரும்பி உறைகின்ற ஆல், புளி மரங்களுக்குக் கிட்டவோ வெளிகளிலோ நடுச்சாமப் பொழுதை அண்மித்துச் செல்பவர் முனியிடம் அடி வாங்குவார். முனியை கண்டு ஏங்கி மரணத்தைத் தழுவிய கதைகளும் அநேகம் சொல்லப்படுகிறது. கந்த சக்ஷ்டி கவசத்தில்: “அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக லங்கிட” என வரும் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது முனி அது துன்பத்தைத் தருவது புழங்கடை முனி பிள்ளைகளைத் தின்னும் கொள்ளிவாய்ப் பேய்கள் குறளைப் பேய்கள் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர் எனும் கருத்துகளை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வளவு விடயங்களும் யாழ்ப்பாணத்து மக்களின் நம்பிக்கைகளாக இருந்து வந்துள்ளன. ‘முனி அடிக்கும், பிடிக்கும்’ எனும் தொடர் இன்று வரை வழக்கில் உள்ளது. பிள்ளைகள் குழப்படி செய்தால் பொக்காண்டியிடம் – பொக்காண்டிப்பேயிடம் – முனியிடம் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டும் வழக்கம் உள்ளது. தீய சக்திகள் புழக்கடையில் உறையும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. வயல்வெளிகளில், வெறும் வெளிகளில் தெரிகின்ற ஒளிப் பொருட்கள் கொள்ளிவாய்ப் பேய்கள் ஆகவும் பந்தத்துடன் உலாவும் முனிகள் ஆகவும் நம்பப்பட்டு வந்துள்ளன. இன்று இது ‘ஏதேன் வாயு’ என அறிவியலில் கூறுகின்றது. பொழுதுபட்டதன் பின்பு, அந்தியின் பின் இருட்டில் பெண்கள், சிறுவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் அவர்களை முனி பிடிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. யுத்த காலம் இந்த நம்பிக்கைகளைக் குறைத்துவிட்டது. யாழ்ப்பாணத்தவர் பலர் கந்தசக்ஷ்டி விரதம் பிடிக்க இந் நம்பிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம். பஞ்சமுனிகளாக வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி என்பன கூறப்படுகின்றன. இவை தவிர பதினெண்முனிகள் பற்றியும் கூறப்படுகின்றன. ஜடாமுனி, இலாடமுனி, நாதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலை முனி, நெல்லாண்டி முனி, வாள் முனி, சின்னமுத்து முனி உள்ளிட்டவை அவற்றுட் சில. இலங்கையில் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய மக்கள் தம் வாழ்வியல் சூழலோடு இணைத்து பல முனிகளை தனித்துவமாக வழிபட்டு வருகின்றனர். ரோதை முனி, தவறணை முனி, கம்பி முனி, கவ்வாத்து முனி என்பன சில உதாரணங்களாகும் (ஜெயசீலன்,எம்.,2020), (மலையகத் தமிழரின் கிராமிய வழிபாடுகள் நாட்டார் வழக்காறுகள், வ. இன்பமோகன், (பதி) குமரன் புத்தக இல்லம், கொழும்பு). தமிழகத்தைப் போலவே இங்கும் முனி எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட முனியாண்டி, முனீஸ்வரர், முனியப்பு, முனியம்மா, முனுசாமி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன. முனியைப் பேயாகக் கண்டு பயந்தோடிய தன்மையை நீங்கி முனியப்பராக, முனீஸ்வரராக – தெய்வமாக வழிபடும் மரபு பிற்காலத்தில் உருவாயிற்று. ஆயினும் அச்சத்தை விளைவிக்கின்ற ஆவேசம் மிகுந்த வீரம் மிக்க காவல் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். பயந்து ஓடுதல் பக்தியாக, வழிபாடாக, மடைபரவுவதாக மாறிற்று. கேட்பது தரும் கடவுள் எனும் நம்பிக்கையுருவாயிற்று. கொள்ளியைக் கையிலேந்தி பன்றி, யானை போன்ற மிருகங்களிடமிருந்தும் பிறமனிதர்களிடமிருந்தும் வயல்களைக் காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை நிலைபெறலாயிற்று. தனிவழியே போகும் மனிதரைக் காக்கும் தெய்வமாக, இடர் களைந்து மனதில் நம்பிக்கை தரும் தெய்வமாக முனி கொண்டாடப்படும் நிலையை இன்று அவதானிக்க முடிகிறது. வவுனியா மூலாய்மடு, பேயாடி கூழாங்குள முனியப்பர் மீது த. மனோகரன் எழுதிய பாடலில்: “பெருவீதி மருங்கிருந்து வழிகாட்டும் ஐயா போகும் வழி சீரமைந்து விட வேண்டும் நீயே காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும் பேயாடிக் கூழாங்குளம் உறையும் முனியப்பரே காவல்” எனப் பாடியுள்ளமையும் பயமின்றிப் பயணிக்க, மனவுறுதி கொள்ள, நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி நிற்பதும் இம்மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. முனிகள் பற்றிய கதைகள் தக்கன் யாகத்தினை அழிக்க சிவன் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கினார். வீரபத்திரர் யாகத்தையும், அதில் பங்கு பற்றியவர்களையும் மிகுந்த கோபத்தோடு தாக்கியளித்தார். அதேவேளை சிவபெருமான் தன்னிலிருந்து தன்னம்சமாக முனீஸ்வரரை உருவாக்கினார். அவர் காவல் தெய்வமாக நல்லவரைக் காத்தார். அவர் காலந்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். இவரிலிருந்தே ஏழு முனிகள் தோன்றினர். சிவனும் உமையும் உடனிருந்த காலத்தில் உமையை விடுத்து சிவனை மட்டுமே பிருங்கிமுனிவர் வழிபட்டார். இதனால் கோபமுற்ற உமையம்மை சிவனில் பாதியாகக் கடுந்தவம் செய்ய முற்பட்டார். வாழைத்தோட்டம் அமைத்து சிவலிங்கத்தை அதில் ஸ்தாபித்து, அபிக்ஷேகம் செய்ய முனைந்த போது நீர் இருக்கவில்லை. விநாயகரையும் முருகனையும் அழைத்து நீரெடுத்து வரப்பணித்தார். மலையில் தவம் செய்த முனிவரின் கமண்டலத்தைத் தட்டி அதிலிருந்து கமண்டலவாற்றை விநாயகர் உருவாக்க, முருகனோ மலையில் வேலூன்றி சேயாற்றை உருவாக்கினார். நீர் வரக்காணாத உமையம்மை நிலத்தில் பிரம்பாலடிக்க பிரம்பகவாறு தோன்றிற்று. வெப்பத்தால் சிவந்த அம்மை நீர் வரத்தால் பச்சை நிறத்தினலாயினாள். அன்று தொட்டு பச்சையம்மன் ஆனாள். சிவலிங்கத்துக்கு அபிக்ஷேகம் செய்து விரதமிருந்த காலத்தில் அரக்கர்கள் பலர் அத் தவத்தை குழப்ப முற்பட்டனர். அப்போது சிவனிலிருந்து பஞ்சமுனிகள் தோன்றி பச்சையம்மனுக்குக் காவலாயிருந்தனர். இன்றும் அம்மன் கோயிலில் முனிக்கு இடமுண்டு. தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்துத் தம்மைக்காக்கும் படி வேண்டிய அடியார்களைக் காப்பதற்கு முற்பட்ட பராசக்தித் தாயானவள் ‘காத்தாயி’ எனும் பெயரில் பூமியில் அவதரித்ததாகவும் அவள் அந்தகாசுரனை அழிக்க ஏழு முனிகளைப் படைத்தாள் என்றும் அவர்கள் அசுரனை அழித்துக் கலியுகத்தில் மக்களைக் காக்க அவதரித்தனர் என்றும் கூறப்படுகின்றது. பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் ஞானம் அருளுமாறு வேண்ட அவர்; குருவாக தென்திசை நோக்கி அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆக முனி ‘சிவனின் அம்சம்’ எனும் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் முனீஸ்வரன் சிவனின் அம்சம் என்பது போல சிம்ம முனி, நரசிம்ம (திருமால்) அம்சம் எனவும், நாதமுனி நாரதர் அம்சம் எனவும், வேதமுனி பிரம்மாவின் அம்சம் எனவும், ஏனைய முனிகள் ஏனைய தெய்வங்கள், தேவர்கள் அம்சம் எனவும் சொல்லும் வழக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பேயாக, சிறு தெய்வமாக இருந்த முனிக்கு முனீஸ்வரன் காயத்ரி மந்திரம், பூஜா மந்திரம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். ‘மம்மல்’ பொழுதுகளில், உச்சிப் பொழுதுகளில், சாமத்தில் தனித்துச் செல்லும் பெண்களைப் பிடித்து தான் விரும்பியதை அவர்களிடம் பெறுகின்ற பேயாகவும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்ல முட்டை, கோழி, ஆடு கேட்பவராகவும் இருந்தவர் முனி. சுருட்டுப் பற்றிய படி சாமங்களில் உலாவருபவர். அவரை நேரே காண்பவர் மீது தொற்றுபவராக அல்லது பிடித்து துன்பம் தருபவராக அல்லது இவரைக் கண்டவுடன் அதிர்ச்சியில் கண்டவர் இறந்துவிடுமளவுக்குக் கிலியை ஏற்படுத்த வல்லவராக இருந்த முனி, ஈஸ்வரனாரோடு இணைக்கப்பட்டு முனீஸ்வரனாக எல்லைக் காவல் தெய்வமாக, சுடலைக் காவலராக பைரவருக்கு சம அந்தஸ்து உள்ளவராக்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு செல்லும்போது வல்லைப் பாலம் தாண்டியவுடன் முனிக்கு ஒரு கோயில் உண்டு. வழிப்பயணம் இடரின்றித் தொடர பயணிகள் அதனை வணங்கிச் செல்வர் (இப்போது அந்த இடத்தை விநாயகரும், சீரடி பாபாவும் ஆக்கிரமித்து வருகின்றனர்). அந்த முனி வல்லைவெளி தாண்டியவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் வசித்து வந்ததாகவும் அதைத் தறித்ததன் பின் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளன. அவை யாவும் மாதமொரு முறை ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து அதனை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்பு முறையே சக்கோட்டைமுனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி என்பவைகளை அழைத்துக் கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவை வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வரும். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்பட்டால் பரிகலங்கள் அவர்களை அடித்து விடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக் கடன் வைத்து நிறைவேற்றுவர் (கணபதிப்பிள்ளை, க. 1962, ஈழத்து வாழ்வும் வளமும், 61 -62). முனியால் பீடிக்கப்பட்ட ஒருவர் நீர்நிலையை அடைந்தாலோ அல்லது நீர்ப்பொருள் ஒன்றைத் தொட்டாலோ முனி அவரை விட்டு விடும் என்றும், தூக்கத்திலே முனி ஒருவரைப் பீடிப்பின் ஈரச்சாக்கை காலால் மிதித்தவுடன் முனி விலகிச் சென்று விடும் என்றும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. சுருட்டை, கொள்ளியை அதாவது நெருப்பை விரும்பும் முனி, நீரில் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் (கோபிகா, எழுதுமட்டுவாழ்) கருதப்படுகிறது. மலையகத்தில் தொழில்துறை சார் வழிபாட்டில் முனிகளின் ஆதிக்கம் அதிகமுண்டு (ஜெயசீலன், எம்., 2020,165-173). தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் (யாழ்ப்பாண வழக்கில் இச்சொல் கள்ளுக் கொட்டிலைக் குறிக்கும்) பயிரைப் பாதுகாக்க, தொழிலாளிகளைப் பாதுகாக்க தவறணை முனி வழிபடப்படுகின்றார். போக்குவரத்து வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்து மூடையாகக் கட்டப்பட்டு கம்பிகளின் வழியே தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அக் கம்பிகள் ‘கம்பிமுனி’ எனும் தெய்வமாக, தங்களையும் தம் தொழிலையும் காக்கும் தெய்வமாக வழிபட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களால் வழிபடப்பட்ட தெய்வம் ரோதை முனி எனப்பட்டது. இவருக்கான வழிபாடு நேர்த்தியாக நடைபெறாதுவிடின் ரோதை முனி உயிர்ப் பலியோ, இரத்தப்பலியோ எடுத்து விடுவார் எனும் நம்பிக்கை வலிதானதாகக் காணப்படுகிறது. இதைவிட மோட்டுமுனி (மேட்டுமுனி) போன்ற பல முனி வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. துன்பத்திலிருந்து மக்களை காக்கும் தெய்வமாக எல்லா மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக முனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முனியின் அமைவிடங்கள் முனிவழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மலையகத் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தனிவழிபாட்டு இடங்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும் முனி ஊர்கள் தோறும் பரிவாரத் தெய்வமாகவோ தனிக் கோயிலுடையதாகவோ இன்று வரை வழிபடப்படுகின்றது. குறிப்பாக குடிமனைகள் இல்லாத வெளிகளில் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களில் தனிக்கோயில்கள் இல்லை. அம்மன் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. உதாரணமாக களுவாஞ்சிக்குடி முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம். இதே போல பெரும்படை, ஐயனார் கோயில்களிலும் முனிக்கு தனிப் பரிவாரக் கோயிலோ அல்லது படையலிடமோ காணப்படுகிறது. திருகோணமலை, வன்னிப் பிராந்தியங்களில் தனிக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலும் நாற்சந்தி, முச்சந்தி, தெருவோரங்கள், ஆளரவமற்ற இடங்கள், ஊர் எல்லைகள், சுடலை போன்ற இடங்களிலேயே முனிக்குத் தனிக்கோயில்கள் இருப்பதை வட இலங்கையில் அவதானிக்க முடிகிறது. சடங்கு முறைகள் கிராமிய வழிபாட்டு மரபில் உள்ள முனியின் தனிக் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பரிவாரமாக இருக்கும் கோயில்களில் பிரதான தெய்வத்துக்கு விளக்கு வைக்கும் நாட்களில் விளக்கு வைக்கப்படுகின்றது. அடியவர்கள் தாம் ஊரை விட்டு வெளியூர் செல்லும்போது, நெடுவழிப் பிரயாணங்களின் போது விளக்கிட்டு வணங்கிச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது. குறித்த கோயிலை ஆதரிப்போரில் ஒருவரே பூசாரியாகவும் திகழ்கின்றார். தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்ராப் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூசை, மடை பரவுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றன நிகழ்கின்றன. ஐயனார், பெரும்படை மற்றும் அம்மன் கோவில்களில் முனிக்கு தனியான வளுந்துப் பானை வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. நீண்ட கால அளவில் ஆடு, கோழி என்பனவற்றை பலியிடுதல் முட்டை, சாராயம், சுருட்டு என்பனவற்றைப் படைத்தல் என்பன முதன்மை பெற்று வந்துள்ளன. இன்னும் சில கோவில்களில் மடையில் சுருட்டு, சாராயம் வைத்தல் நடைபெறுகின்றன. அதேபோல ஆடு, கோழி பலியிடாது நேர்ந்து விடுதலும் உண்டு. உயிர்ப்பலி அருகி வருகின்றது. பூநகரி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் சைவமடை வைக்கும் மரபே காணப்படுகின்றது (தகவல்: ச. மார்க்கண்டு). நாகர்கோவில், வீரபத்திரர் கோயில், விக்ஷ்ணு கோயில் போன்றவற்றில் சைவமடையே வைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாராயம் வைத்தாலும் பருகும் பழக்கம் இல்லை (தகவல், அப்பையா அருட்சிவபாலன், கொழும்புத்துறை). பொதுவில், கை பார்க்காத கப்பல் வாழைப்பழங்களை படைக்கும் மரபும் இக்கோயில்களில் காணப்படுகின்றது (தகவல், கோடீஸ்வரன் விஜிதரன், முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்). அதேபோல கேரதீவு ஐயனார், தனங்கிளப்பு முனியப்பர் கோவில்களில் காம்பு கிள்ளாத வெற்றிலையும், நாக்கு மூக்குத் தள்ளாத பழங்களும் படைக்கும் மரபு காணப்படுகின்றது. கிராமியக் கோயில்கள் பலவற்றில் பிள்ளையார், மூலவர் போன்றவர்களை அடுத்து முனிக்கு முதன்மையளிப்பதும் மடை வைப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுவில் வட இலங்கையில் காலமாமுனிக்கே அதிக செல்வாக்கு இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும் பொதுவில் முனீஸ்வரன் என்றே சொல்லப்படுகிறது. கல், சூலம், கருங்காலிக் கட்டையின் வழி ஆரம்பத்தில் வழிபடப்பட்ட முனி இன்று முனீஸ்வரராக பெரிய மீசையும் வாளும் ஏந்திய உருவத்தோடு குதிரையுடன் கூடியவராய் உருவக் கடவுளாக வழிபடப்படுகின்றார். மட்டக்களப்பில் காளமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை அம்மன் கோயில்களில் வாள் முனிக்கும் தனியான இடமுண்டு. அரி ஓம் ஐயும் கிலியும் சௌவும் அங்கிசப் பிறை வடிவமும் ஆவென்ற வாயும் ஈ என்ற பல்லும் ஒரு கையில் கமண்டலமும் புலித்தோல் ஆசனமும் வீர மாணிக்க மாலையும் இலங்கிய மணித் தாவடமுமாக வருகின்றார் எங்கள் ஆதி கால மாமுனி அக்கினி மாமுனி அகத்திய மாமுனி குருவே மாதா பிதா….எனச் சடங்குப் பாடலும் காணப்படுகின்றது. காளமாமுனிக்கு அம்மன் ஆலயங்களில் பரிவாரக் கட்டிடம் உள்ளது (தகவல், பூசாரி கிருபைரத்தினம் சர்வேஸ்வரன், ஆரையம்பதி). முனிக்கு அங்கும் தனிமடை உண்டு. அம்மனுக்குரிய மடையையொத்த மடை, சடங்குகள் என்பன நடைபெறுகின்றன. மந்திரச் சடங்குகளில் காளமாமுனி, வாள்முனி, ஆதிமுனி என்பன முதன்மையாகின்றன. கழிப்புச் சடங்குகளில் காளமாமுனியை ஆட்டி, பின் படையல் படைப்பர். சுடலையில் வைரவருக்கு சமமாக விசேக்ஷமாக முனிக்கும் படையல் வைப்பர். இந்தக் கருத்துகள், மத்திய இந்திய வரலாற்றில் முதன்மை பெற்றிருந்த சைவப் பிரிவுகளில் தாந்திரீக சைவங்களை, குறிப்பாக காளாமுக, கபாலிக சமயங்களை, அவற்றின் சுடலை வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. முனி, கோயிற் சடங்கில் கலையாடி வாக்குச் சொல்லும் மரபு இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபில் முனி பொதுவாக கலையாடினாலும் சொத்தி முனியின் ஆட்டம் தனித்துவமானது. கருப்பு நிறத்தில் கீழ் ஆடையும் மேலே கருப்புக் கம்பளியும் போர்த்தி கண்ணாடி போட்டு கையில் பொல்லுடன் ஆடுதல் சிறப்பம்சமாகும். கண்ணாடி போடும் வழக்கம் எப்போது வந்தது என்பதை அறிய முடியாது விடினும், அதற்கு நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாறே உண்டு என்பது தெளிவு. இந்தக் கம்பளி, கண்ணாடி, பொல் என்பன மடையில் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசையை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. முனியாக தெய்வமாடுபவர் தனக்குத் தானே கசையால் அடித்தபடி கலை ஆடுவதும் குறி சொல்வதும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பண்புகளோடு சொத்தி முனி ஒரு காலைக் கெந்தியபடி அல்லது குறண்டிக் குறண்டி ஆடுவது வழக்கம். முனி ஆடும்போது, விரல் மொத்தத்தில் உள்ள திரியை எண்ணெய்யில் தோய்த்து பந்தம் போல கொழுத்திக் கொடுக்கப்படும். ஆடுபவர் அதனை வாங்கி வாய்க்குள் வைப்பதாகவும், மீளவும் கொழுத்திக் கொடுக்க மீள வாய்க்குள் வைப்பதாகவும், 18 திரிவரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நீறு போடுகின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. நீறு இடுவதன் ஊடாகத் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகின்றது. மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வழக்கங்கள் மாறுபடுகின்றன. கலை ஆடுபவர் புலித்தோல் ஆடை, உருத்திராக்கம், யோக தண்டம், கமண்டலம், சூலம் என்பனவற்றை தாங்கியபடியே முனியாக ஆடுவார். குறி சொல்லி நீறிடுவார். இங்கு முனி ஆட்டங்கள் பல வகையாக உள்ளன. வாள்முனி வாளேந்தி ஆடுதல் இதற்கு உதாரணமாகும். சடங்கின் போது பாடப்படும் காவியப் பாடல்களில் ஆதிமுனி, காளமாமுனி, வாள்முனி பற்றிய குறிப்புகள் வருவதையும் காண முடிகின்றது. முடிவுரை முனி பேயாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழில் துறை சார் தெய்வமாக இலங்கை வாழ் மக்களிடம் சமய, சமூக, வாழ்வியல் புலத்தில் செல்வாக்குப் பெற்று நிற்கின்றது. பெண்களை, வழிப்போக்கர்களை பிடிப்பதாக – அடிப்பதாக – படையல் கேட்பதாக – படைத்தால் நன்மை செய்வதாக நம்பப்பட்ட முனி, ஈஸ்வரனுடன் இணைக்கப்பட்டு தெய்வமாக்கப்பட்டது. பயிர் பண்டங்களை, ஊரை, நோய் நொடியில் இருந்து மனிதர்களை காக்கும் குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழிலில் ஏற்படும் இடர்களை நீக்கி பாதுகாப்புத் தரும் முனியாக என்றும் வழிபடப்பட்டு வருகின்றது. வழிமறித்து அடிப்பதும், காறித் துப்பினால் விலகுவதும், வணங்கினால் வழித்துணையாய் வருவதுமாக நம்பப்பட்ட முனி, முனீஸ்வரனாக பெரும் தெய்வமாக்கப்பட்டு வருதலை அவதானிக்க முடிகிறது. ஆடு, கோழி பலியிடப்பட்டு வழிபடப்பட்டு வந்த யாழ்ப்பாணக் கோட்டை முனியப்பர் இன்று பெரும் தெய்வமாகி – ஆகமக் கோயிலாக மூன்று கால பூஜை நடைபெறும் தெய்வமாக விளங்குதலும், வடமராட்சி சுப்பர்மடம் முனீஸ்வரன் கோயிலின் மேல்நிலை ஆக்கமும் இதற்குத் தக்க சான்றுகளாகின்றன. கொள்ளி, நெருப்பு, சுருட்டு, திரி வழி நெருப்பை உண்ணும் தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுவதோடு, நீரினைக் கண்டால் விலகிச் செல்லும் தெய்வமாகச் சுட்டப்படுவதும் சமூக மெய்யியல் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எங்கும் வழிபடப்படும் இத்தெய்வம் தமிழகத்தில் ‘பொடிகாட்’ முனீஸ்வரனாகவும் மலேசியாவில் ‘ஸ்டெதஸ்கோப்’ முனியாகவும் இன்று விளங்குகின்றது. மலையகத்தில் தவறணை முனி, கம்பி முனி, ரோதை முனி என வழிபடப்படுவது துயரம் நிறைந்த மலையக வரலாற்றின் பெருஞ்சான்றாகின்றது. முனி என்பது ஒரு தெய்வமல்ல; அவை பல. இன்றும் முனிகளின் இராச்சியம் தேசமெங்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. https://www.ezhunaonline.com/kingdom-of-sages/

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 1 week ago
2,3ம் வகுப்புகளில், வட்டவடிவமான மஞ்சள் சிவிலிக்கூட்டில் பொன்சில் தீட்டும் போது அதில் எழுதியிருக்கும் made in Germany என்பதை வாசிக்கும் போது அந்த நாட்டை பற்றி கற்பனை செய்வேன். அந்த நாட்டில் வசிக்க வாய்ப்பு வரும் என்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. உண்மைதான் குமாரசாமி. யேர்மனிய உற்பத்திகளுக்கு உலக நாடுகளில் நல்ல மதிப்பிருக்கிறது. கொத்தனார் சுத்துமாத்து செய்து யேர்மனியின் பெயரைக் கெடுக்காமல் இருந்தால் போதும்😜

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

3 months 1 week ago
புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) Bookday தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8 புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) அ. குமரேசன் 1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால் அதை உருவாக்கிய எழுத்தாளர் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் அரசியல் நோக்கத்திற்கு இரையாவதைப் புரிந்துகொண்டு, அல்லது உலகில் அப்போது நடந்த ஏதேனும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனசாட்சியின்படி மறுத்தாரா? அல்லது நாவலுக்கு சொந்த நாட்டில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்தாரா? கதையையும், கதை வெளியான கதையையும் தெரிந்துகொண்டால் இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கும். ரஷ்ய நாட்டவரான போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் (Boris Pasternak) (1890–1960) ‘தடை வேலிகளுக்கு மேலே மேகங்கள்’, ‘மேகங்களின் நடுவே இரட்டை நட்சத்திரம்’, ’இரண்டாவது பிறப்பு’, ‘கருத்துகளும் வெவ்வேறு வகைகளும்’ ஆகியவை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியவர். தனது காலகட்டத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, மக்களின் அவலம், முதலாம் உலகப் போர், ஜார் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி, ஆட்சியைத் தூக்கி எறிந்து சோசலிச சோவியத் யூனியன் ஆட்சிக்கு அடிப்படை அமைத்த புரட்சி, கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர், சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த அசைவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை நேரடி அனுபவங்களாக உள்வாங்கினார். அவற்றில் அவருக்கு மாறுபட்ட சிந்தனைகளும்இருந்தன. அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி அவர் முதலாவதாகவும் கடைசியாகவும் எழுதிய நாவல் இது. 1950ஆம் ஆண்டுகளில் நாவலைப் பகுதி பகுதியாக எழுதி, அப்போதைய வழக்கப்படி இலக்கிய மேடைகளில் வாசித்து வந்தார். முழுப் புத்தகமாகத் தொகுக்கப்பட இருந்த நிலையில் சோவியத் அரசு அதை அச்சிடவும் வெளியிடவும் தடை விதித்தது. ஜார் அரசின் கீழ் நாட்டு மக்கள் வறுமையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது, அதற்கு எதிராக ஆவேசத்துடன் போராட்டங்கள் வெடித்தது. இவற்றைத் தொடக்கப் பகுதியில் சரியாகப் பதிவு செய்த நாவல், பின்னர் புரட்சி என்றாலே கொடூரமான வன்முறைகள் என்றும், மாற்றங்களுக்கான திட்டங்களை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், அரசாட்சியிலும் சமூக வாழ்விலும் கட்டுப்பாடுகளின் பெயரால் கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்வதன் மீது மோகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சோசலிசக் கட்டுமானத்தின் மேல் மனநிறைவின்மையை வளர்க்கிறது என்றும் தடைக்கான காரணம் கூறப்பட்டது. கடத்தப்பட்டு வெளியீடு சில நண்பர்களின் உதவியோடு தொகுப்பு இத்தாலிக்குக் கடத்தப்பட்டது. அங்கே புத்தகமாக அச்சிடப்பட்டு 1957இல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு கவனிக்கத்தக்க ஒரு தகவல் – நாவலை வெளியிட்ட ஜியாங்கியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி ஒரு இடதுசாரிப் பதிப்பாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்ட நாவலை வெளியிட்டதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நூலை அச்சிட்டு வெளியிட வைப்பதற்கு சிஐஏ வேலை செய்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடத்தி வந்த கெடுபிடிப் போரில் நாவலும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பல மொழிகளிலும் கொண்டுவரப்பட்டது. நாவலுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள நிலைமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, சோவியத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டுகள் குவிந்தன. இலக்கியப் படைப்பு என்ற முறையில் எதிர்க் கருத்துகளும் வந்தன. முன்னும் பின்னுமாகப் போகும் கதையின் நடை குழப்பத்தைத் தருகிறது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்திற்கும் மூன்று பெயர்கள், பல இடங்களில் அவர்கள் வருகிறபோது ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் குறிப்பிடப்படுகிறது, அது வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. மனித உணர்வுகளும் உறவுகளும் தொடர்பான சித்தரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற அங்கீகாரத்துடன், வரலாற்றைத் திரித்துக்கூறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆயினும், 1958இல் கூடிய நோபல் பரிசுத் தேர்வுக்குழு ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) மிகச் சிறந்த நாவல் என்று அறிவித்தது. நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இலக்கியத் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு சோவியத் யூனியன் மேல் இருந்த அரசியல் காழ்ப்பு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது என்று கூறலாம். சோவியத் யூனியனில் உயர்ந்து பறந்த செங்கொடியும், அங்கே மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளும் தங்களுடைய நாடுகளிலும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் என்ற அச்சம் முதலாளித்துவக் கும்பல்களுக்கு இருந்தது. ஆகவே சிவப்புச் சிந்தனையைத் தாக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப்பட்டது. போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) இன்னொரு பக்கத்தில், பாஸ்டர்னாக் தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் எழுதியிருந்தாலும் கூட, அதற்குத் தடை விதித்திருக்கக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. நாவலைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களை நிகிதா குருசேவ் அரசாங்கமோ, கம்யூனிஸ்ட் கட்சியோ, இலக்கிய அமைப்புகளோ வலுவாகச் செய்து மக்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். மாறாகத் தடை விதித்ததால், சோசலிசத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காது என்ற எண்ணத்தைப் பரப்புவதற்குத் தோதான சூழல் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. மருத்துவக் கவிஞன் ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் கதைச்சுருக்கம் வருமாறு: மருத்துவரான யூரி ஷிவாகோ ஒரு கவிஞனும் கூட. மன்னராட்சிக் கொடுமைகளைக் கண்டு வளர்ந்தவன் உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பையும் சந்திக்கிறான். மக்களின் கிளர்ச்சி பெரும் புரட்சியாக மாறுவதையும் காண்கிறான். டோன்யா என்ற பெண்ணை மணந்துகொள்கிறான். முதல் உலகப்போரின்போது ராணுவ மருத்துவராகப் பணியாற்ற ஆணையிடப்படுகிறது. மருத்துவ முகாமில் லாரா என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஒரு புரட்சிகர இளைஞனின் மனைவி லாரா. அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் அவனை தேடுகிறவளான அவள் ஷிவாகோ மீதும் அன்பு வைக்கிறாள். புரட்சியை நிலைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஷிவாகோவின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த நடவடிக்கைகளை ஏற்க மறுக்கிறான். தன் மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற அவன் தன் காதலைப் பாதுகாக்கவும் போராடுகிறான். கொந்தளிப்பான நிலைமைகளால் துரத்தப்பட்டவனாக வேறோர் இடத்தை அடையும் அவன் தன் எழுத்தாக்கங்களில் ஆறுதல் கொள்கிறான். கவிதைகளை வெளியிட முயல்கிறான். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது. லாரா–ஷிவாகோ இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன. லாரா தனது கணவனைத் தேடிச் செல்கிறாள், ஷிவாகோ தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. (இதனிடையே நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மத நிறுவனங்களின் பிடியிலிருந்து அரசு அமைப்புகள் விடுவிக்கப்பட்டன. சமுதாயத்திலும் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.ஆனால், அவற்றை எதிர்மறையாகவே நாவல் சித்தரிக்கிறது). பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தொடர்கின்றன. சோவியத் படையிலிருந்து வெளியேறும் யுரி ஷிவாகோ இறுதியில் மாஸ்கோ நகருக்குத் திருமபுகிறான். மனைவியும் மகனும் வேறெங்கோ இருக்க, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான், அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் யுரி மகிழ்ச்சியாக இல்லை. 1929ஆம் ஆண்டில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒருநாள் சாலையில் செல்லும்போது டிராம் விபத்தில் இறக்கிறான் ஷிவாகோ. பல ஆண்டுகளுக்குப் பிறகு யூரியின் சிறுவயது நண்பர்கள் அவனது கவிதைகளைத் தேடியெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். அந்தக் கவிதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலும் ஏக்கங்களும் நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஒரு சோகமான காவியமாகப் பேசப்படுகிறது. இலக்கியத்துக்காகவா அரசியலுக்காகவா? ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) சோவியத் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் எழுதப்பட்ட ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக மேற்கத்திய நாடுகளின் அரசுகளாலும் திறனாய்வாளர்களாலும் பார்க்கப்பட்டது. சோவியத் இலக்கியத்திற்கே எதிரான ஒரு குரலாகவும் இந்த நாவலுக்கான பரிசு கருதப்பட்டது. அரசின் அழுத்தத்தை மீறி பாஸ்டர்நாக் தனது படைப்புக்காக நின்றார் என்று போற்றும் குரல்கள் ஒலித்தன. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது, மறுபகுதி உள்நோக்கமும் இருந்தது. “நோபல் பரிசு வழங்கப்பட்டதில் அரசியல் காரணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், அதன் ஆழமான தத்துவார்த்த சிந்தனைகள், கவித்துவமான மொழி மற்றும் மனித உணர்வுகளை சித்தரிக்கும் விதம் ஆகியவை இலக்கியப்பூர்வமாகப் பாராட்டுக்குரியவை. அன்று நிலவிய உலகளாவிய அரசியல் சூழல் நாவலின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கலாம்,” என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நாவல் புரட்சியின் உன்னத நோக்கங்களை சிறுமைப்படுத்தியது, சுரண்டல் சக்திகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பேசியது என்ற விமர்சனமும் முன்னுக்கு வந்தது.தனிமனிதனின் உணர்வுகள், காதல் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நாவல் புரட்சியின் பொதுவான இலக்குகளை விட தனிமனிதனின் சுதந்திரம் முக்கியமானது என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறது. இது புரட்சியின் கூட்டு உணர்வுக்கு எதிரானது என்று போராட்டக்களத்தில் நின்றவர்களால் பார்க்கப்பட்டது. நாவலின் கதாநாயகனான ஷிவாகோவின் கவிதைகளில் மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது சோவியத் அரசு வளர்க்க முயன்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அமைந்தது. அதே போல், நிலப்பிரபுத்துவ கால சமூக அமைப்பின் மீதான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்று மாற்றங்களுக்காக நிற்பவர்கள் கூறினார்கள். நம் ஊரில் கூட, எதற்கெடுத்தாலும் “அந்தக் காலத்திலேயெல்லாம்” என்று காலாவதியாகிப் போன கலாச்சார, சமூக நிலைகள் மறுபடியும் வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறவர்ளையும், பழைய சடங்குகளை நியாயப்படுத்திப் புதுப்பிக்க விருமபுகிறவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?. முடிவுரையாகச் சொல்வதென்றால், படைப்புச் சுதந்திரம் மிக முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) நாவலை அன்றைய சோவியத் அரசு தடை செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். அவர்கள் நாவலை கடுமையாக விமர்சித்திருக்கலாம், அதன் கருத்துக்களை மறுத்திருக்கலாம், ஆனால் தடை நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலானது..அதே நேரத்தில் ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தனிமனித நோக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது புரட்சிக்கு எதிரானவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் சோவியத் யூனியனும் அதன் மாண்புகளும் தகர்க்கப்பட்டதற்கு ஆதரவான மனநிலையை வளர்த்ததில் இப்படிப்பட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் பங்கிருக்கிறது எனலாம். போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) மறைந்தபிறகு, 1965இல் ஓமர் ஷெரீப் மையப்பாத்திரத்தில் நடிக்க, டேவிட் லீன் இயக்கத்தில் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) திரைப்படமாகவும் வந்தது. உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று பல அமைப்புகளும் சான்றளிக்க, திரையரங்க வசூலிலும் உலக சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்றாக தன்னைப் பதித்துக்கொண்டது. நாவலுக்குச் சற்றும் குறையாமல் சோவியத் அரசைக் குறைகூறியது. ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கிய முயற்சிகளில் ஒன்றாகவும் அடையாளம் பெற்றது. https://bookday.in/books-beyond-obstacles-boris-pasternak-doctor-zhivago-novel-oriented-article-written-by-a-kumaresan/

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months 1 week ago
அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்ட கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கவில்லை – சுங்க இயக்குநர் விளக்கம் June 8, 2025 12:45 pm சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும், 323 கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்று சுங்க ஊடகப் பேச்சாளர் கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை சுங்கத்தால் இன்று (08) கூட்டப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதாகக் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல்கள், இரசாயனங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், கால்நடை தீவனம், இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், சிமெந்து, இரும்பு குழாய்கள், உரங்கள் மற்றும் மரம் ஆகியவை இருந்தன. இந்த கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கூடுதலாக, இந்த கொள்கலன்கள் இந்தோனேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதில் நாங்கள் பின்பற்றிய வழிமுறையின் காரணமாக, இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்ததாக நாங்கள் நம்புகிறோம். இந்தப் பொருட்களை விடுவிப்பதற்கான இறக்குமதிக் குறிப்புகளில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. “நாங்கள் ஸ்கிரீனிங் யூனிட் என்ற ஒரு குழுவை நிறுவி, அந்தக் குழுவிற்கு அளவுகோல்களை வழங்கி, ஆய்வு இல்லாமல் சட்டப்பூர்வமாக விடுவிக்கக்கூடிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அந்தக் குழுவிற்கு வழங்கியுள்ளோம் அவர்களின் நடைமுறை, இந்தக் குழுவில் சுமார் 25-30 ஆண்டுகளாக சுங்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் நிறைய அறிவும், தெளிவும் உள்ளது. குழுவினரின் அறிவையும் நாங்கள் வழங்கிய அளவுகோல்களையும் பயன்படுத்தி, அதன் அளவுகோல்களுக்கு இணங்கும் கொள்கலன்களை விடுகிக்கின்றோம். ஜூலை 2024 இல் இந்த முறையை செயல்படுத்தத் தொடங்கினோம். ஜனவரி 2025 இல் தான் மேற்குறித்த 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. அதுவரை, பல சந்தர்ப்பங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் இந்த வழியில் விடுவிக்கப்பட்டுள்ளன.” எவ்வாயிறும், குறித்த கொள்கலன்களில் ஆயுதங்கள், தங்கம் மற்றும் போதைப் பொருள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனவே இந்தத் தேர்வு முறையை நாங்கள் பின்பற்றியதால், இந்தக் கொள்கலன்களில் எதுவும் இல்லை என்று நாங்கள் நம்பிக்கையுடன் கூறமுடியும். இருப்பினும், இது தொடர்பாக நிறைய விவாதங்கள் நடந்ததால், இதற்காக ஒரு பிந்தைய அனுமதி தணிக்கை நடத்த இலங்கை சுங்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பிந்தைய அனுமதித் துறை ஏற்கனவே ஒரு தணிக்கையை நடத்தி வருகிறது. மேலும், நிதி அமைச்சகத்தின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு இந்த முழு செயல்முறையையும் விசாரித்துள்ளது. சுங்க இயக்குநர் ஜெனரல் உட்பட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிற்குச் சென்று விவரங்களை வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறைக்கும் நாங்கள் விவரங்களை வழங்கியுள்ளோம், எனவே எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. “மேலும் இந்த கொள்கலன்களை விடுவிக்கும் செயல்பாட்டில் வேறு எந்த தரப்பினரிடமிருந்தும் எந்த உத்தரவும் அல்லது செல்வாக்கும் இல்லை. நான் அதை முற்றிலும் உறுதியாகக் கூற முடியும்.” என்றார். இதேவேளை, அண்மையில் நாடாளுமன்றில் பேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சுங்க ஆய்வு செய்யாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சும் இதனை முற்றாக மறுத்திருந்தது. 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியுள்ளார். இதேவேளை, 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka-customs-issues-clarification-on-contents-of-controversial-containers/

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 1 week ago
இரும்பு டுசல்டோர்ப் என்டாலும் கட்டின கொத்தனார் தூத்துகுடி எல்லோ🤣🤣🤣… “இதுவரை சுட்டு வீழ்த்தப்படாத” ரபேலுக்கும் நடந்தது தெரியும்தானே🤣.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
ஒரு சில கடும் போக்கு இஸ்லாமிய நாடுகள் அவ்வாறான சட்டங்கள. இருக்கலாம். மற்றய நாடுகளில் அப்படியான சட்டங்கள் இல்லையெனினும் திருமண ஒப்பந்தத்தை மீறும் இவ்வாறான செயல்கள் உலகில் எங்கும் விரும்பபடுவதில்லை. அதை சமூகரீதியில் அங்கீகரிப்பதும் இல்லை. சட்டப்படி பிரிந்து போவதே இதற்கான அறிவார்ந்த தீர்வு. இவ்வாறான சைக்கோதனமன கொலைகள் உலகம் முழுவதும் நடந்தே உள்ளன. ஆனால் ஒரு சமூகமாக அதை கொண்டாடும் மனநிலை கொலையாளியை ஒரு வீரனாக பாராட்டும் செயல்கள் என்பது அவமானகரமானது என்பதே எனது நிலைப்பாடு.