Aggregator

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
வைத்தியசாலை படுக்கைகள் ஒரு சுகாதாரத்துறையின் வளர்ச்சியின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எத்தனை வைத்திய்சாலை படுக்கைகள் உள்ளன என)

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
நிங்களோ , நானோ யரையும் ஊருக்கு போகாதீர்கள், வராதீர்கள் என்று சொல்ல இயலாது.சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் தங்கள் தனிப்பட்ட விடையங்களுக்காக போய் வருகிறார்கள்..அதனையும் விட புலத்தில் இருப்பவர்களுக்கும் ஊருக்கு போய் செய்து விட்டு வர வேண்டி வேலைகள், தேவைகள் நிறைய இருக்கிறது.அப்படியான ஒரு நிலையில் சந்தர்ப்பம் சூழ் நிலையில் திடிரென்று நோய் வாய் பட்டு விட்டால் வைத்தியசாலைக்கு போகும் யாரும் கட்டில், தலைகணி , பாய், என்று எல்லாம் கொண்டா போக முடியும்..? உதாரணத்திற்கு,,,, என்னை எடுத்து கொண்டால்நான் ஊரை விட்டு வந்ததிற்கு இன்னும் ஊர் பக்கம் போகவே இல்லை..ஆனால் எனக்கும் போக வேண்டிய நிலை இப்போ ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.அப்படியான தருணத்தில் ஊருக்கு போய் திடிரென்று ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு தான் போக வேண்டும்.அந்த தருணத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்....? கொஞ்சம் நடை முறையை யோசித்து பாருங்கள்.எப்போது என்ன மாதிரி மனிதர்களின் உடல் நிலைகள் மாறும் என்று இல்லை..

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
அது மனிதாபிமானமற்ற செயல், ஆனால் இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும் (மிக குறைந்த வளங்கள் உள்ள தற்போதய் நிலையில் அட்கு அவசியமாகிறது). புலம்பெயர் தமிழர்கள் உணவுச்சங்கிலியில் உயரத்தில் இருப்பவர்கள், தமது விளம்பர பொழுது போக்கிற்காக உதவி செய்வது (அனைவரும் அல்ல ஆனால் தாம் செய்த சிறிய செயல்களை கூட பொதுவெளியில் இணையம் போன்றவற்றினூடாக விளம்பரம் செய்பவர்களே இத்தகையானவர்கள்) பின்னர் அதனைவிட பலமடங்கு அனுகூலங்களை கொள்ளை அடிப்பவர்களாக மாறுகின்றனர் (அந்த மக்களை சுரண்டுபவர்கள்).

அனுரவுக்கு காத்திருக்கும் சவால்! வடக்கு நிலைமையை நேரில் ஆராயும் மனித உரிமை ஆணையாளர்

3 months 1 week ago
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவிப்பு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தில் வடக்குக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளதாக தகவல்

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

3 months 1 week ago
லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை: மூன்றாவது நாளாக போராட்டம், ஆயுதப்படை வீரர்களை குவித்த டிரம்ப் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டல் ஹேய்ஸ் பதவி, பிபிசி செய்திகள் 9 ஜூன் 2025, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர். பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட வன்பொருட்களை விற்பனை செய்யும் கடை) வெளியே, கூரை போடுதல், பழுதுகளை சரி செய்வது மற்றும் வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளுக்கு உதவுவதாக அறிவித்துக் கொண்டு இரண்டு சிறிய வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன. இந்த பகுதியில் 82% க்கும் மேற்பட்டோர் ஹிஸ்பானிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு தினக்கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக பரவிய வதந்திகள் காரணமாக, அந்தக் கடை குடியேற்றப் போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் மறுநாள் முதலில் மேற்கூறிய சம்பவம் நடந்தது. அந்த சமூகத்தில் வசிக்கும் பலர், அப்பகுதியில் குடியேற்ற அமலாக்கத் துறையின் வாகனங்களைக் கண்டதாக பிபிசியிடம் கூறினர். அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது. பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது. "தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது. பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது. அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது. "தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. "உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள்" என தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு சிறிய டொயோட்டா பிக்அப் டிரக்கின் உள்ளே சாய்ந்தபடி, ஜுவான் கூறினார். பாரமவுண்டில் ஒரு கார் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட பரபரப்பான சூழல், லாஸ் ஏஞ்சலிஸ் முழுவதும் கலவரங்கள் பரவுவதற்கு காரணமானது என்று பெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலிபோர்னியா தேசிய காவல்படையை அழைத்தார். இது வழக்கமாக மாநில ஆளுநரால் முடிவு செய்யப்படும் ஒன்று. அந்த நேரம், நகரத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் வெடித்ததால், அந்த வன்பொருள் கடைக்கு எதிரே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வணிகப் பூங்காவை தேசிய காவல்படை வீரர்கள் பாதுகாத்தனர். அந்த பகுதியில், ஹம்வீ வாகனங்களை (ராணுவ பாணியிலான) நிறுத்தி, போராட்டக்காரர்களை நேரடியாக எதிர்கொண்டது தேசிய காவல்படை. மோதலின் போது மெக்சிகன் கொடிகள் மற்றும் பதாகைகளை அசைத்து போராட்டக்கார்கள் கூச்சலிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்பினார். "உங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை!' என்று லாஸ் ஏஞ்சலிஸ் அணியின் தொப்பி அணிந்த ஒருவர் வீரர்களை நோக்கி கத்தினார். அதே நேரத்தில், மற்றொரு போராட்டக்காரர் ஸ்ப்ரே பெயிண்டால் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை பற்றி ஆபாசமாக எழுதினார். பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதியில் தங்களுடைய அலுவலகங்களில் ஒன்று உள்ளது. அதிகாரிகள் அதை "செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த பகுதியை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்" என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் "வன்முறையாளர்கள்" சிலர் உள்ளனர், அவர்கள் தப்பிக்க முடியாது என்று, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறத் தயாராகும் போது, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES முந்தைய இரவில் தனது நகரத்தை மாற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நம்ப முடியாமல், டோரா சான்செஸ் குழம்பி இருந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து 'சேப்பல் ஆஃப் சேஞ்ச்' தேவாலயத்தில் அவர் கூடியிருந்தார். அந்த தேவாலயம் முந்தைய நாள் நடந்த போராட்டம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்தது. இந்த ஹிஸ்பானிக் சமூகம் பல ஆண்டுகளாக எப்படி புத்துயிர் பெற்று, அண்டை வீட்டார்கள் ஒருவரையொருவர் அறிந்து கவனித்துக் கொள்ளும் நெருக்கமான சமூகமாக மாறியது என்பது குறித்து, டோராவும் தேவாலயத்தில் இருந்த மற்றவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். "இந்தப் போராட்டங்கள் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு திருப்புமுனையாக இருந்தது," என்று டோரா குறிப்பிட்டார். சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி லாஸ் ஏஞ்சல்ஸில். வேறு எந்த இனக்குழுவையும் விட ஹிஸ்பானியர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் மக்கள்தொகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வந்த குடியேறிகள், இங்குள்ள வரலாறு மற்றும் கலாசாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நகரம் "புகலிட நகரம்" என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. அதாவது, குடியேற்றம் குறித்த அமெரிக்க பெடரல் அரசின் நடவடிக்கைகளுடன் (federal immigration enforcement) இந்த நகர நிர்வாகம் ஒத்துழைக்காது. பல நாட்களாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதற்றம், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் குறிவைத்தபோது வெடித்தது போல தோன்றியதாக அங்குள்ள சிலர் கூறினர். "எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது", "இவர்கள் என் மக்கள்"என்று பாரமவுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மரியா குட்டியர்ரெஸ் கூறினார். மரியா மெக்சிகோவில் பிறந்ததாகவும், ஆனால் சிறுமியாக இருந்ததிலிருந்து இங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இங்குள்ள பலரைப் போலவே, அவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறுகிறார். "இது லாஸ் ஏஞ்சலிஸ்", என்று கூறிய மரியா, "இது நம் அனைவரையும் பாதிக்கிறது.", "இங்கே, ஏறக்குறைய அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது, அல்லது அவர்கள் ஆவணமில்லாத ஒருவரை அறிந்திருக்கிறார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15n12097yyo

விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!

3 months 1 week ago
விரட்டியதால் வந்த விபரீதம்: நாயோடு குழியில் விழுந்த புலி..! Published By: VISHNU 09 JUN, 2025 | 02:38 AM தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது. இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழிக்குள் இருந்தாலும், விரட்டி வந்த நாயை புலி தனக்கு இரையாக்கிக் கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/216971

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார் (நாங்களும் இங்கே தான் என்று எப்படி சொல்லவதாம்🤣)

குடலில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாவை அழிக்க 'மல மாத்திரை' உதவுமா?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GSTT கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, மருத்துவம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 8 ஜூன் 2025 ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட "poo pills" பயன்படுத்த பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மல மாதிரிகளில் ஆபத்தான எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள குடலில் கவனம் செலுத்தும் விதமாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் இந்த மாத்திரைகளை பரிசோதித்து வரும் டாக்டர் பிளேர் மெரிக் கூறுகிறார். மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்கள், அவை தங்கியிருக்கும் குடலில் இருந்து வெளியேறி, உடலில் வேறு இடங்களில் குறிப்பாக சிறுநீர்ப்பாதை அல்லது ரத்த ஓட்ட தொற்றுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். "'உங்கள் குடலில் இருந்து சூப்பர்பக்ஸை அகற்ற முடியுமா?' என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது," என்கிறார் டாக்டர் மெரிக். 'மல மாத்திரைகள்' என்ற வார்த்தையைக் கேட்டு, இது அபத்தமான யோசனையாக இருப்பதாக கருதவேண்டாம். மலம் மாற்று அறுவை சிகிச்சை, டிரான்ஸ்-பூ-ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், C. difficile எனப்படும் கடுமையான குடல் பாக்டீரியா தொற்றின்போது, மல மாற்று அறுவை சிகிச்சைகள் சூப்பர்பக்ஸையும் அகற்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்து எதிர்ப்பு பாக்டீரியா தொற்று பாதித்த நோயாளிகளை மையமாகக் கொண்டு ஆறு மாதங்களாக புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நோயாளிகளுக்கு, மல வங்கிக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன. பெறப்படும் மல நன்கொடைகள் ஒவ்வொன்றும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், மலத்தில் இருக்கும் செரிக்கப்படாத உணவுகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய மலம் உலர்த்தி பொடியாக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது. மாத்திரையின் உள்ளே செலுத்தப்படும் இந்த மலத் துகள்கள், வயிற்றின் வழியாக சேதமின்றிச் சென்று குடலை அடைந்து, அங்கு கரைந்து அதன் உள்ளிருக்கும் மலத்துகள்கள் வெளியாகும். பெரிய அளவிலான ஆய்வுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் 41 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த மல மாத்திரையை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயாராக இருப்பதாகவும், தானம் பெறப்பட்ட பாக்டீரியாக்கள் குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகும் நோயாளிகளின் குடலில் இருப்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதிகரித்து வரும் சூப்பர்பக்ஸின் தாக்குதலை சமாளிக்க மல மாத்திரைகள் உதவும். மேலும், குடலின் உட்புறத்தில் உணவு மற்றும் இடத்திற்கான போட்டியில் சூப்பர்பக்ஸும், தானம் செய்யும் பாக்டீரியாக்களும் நுண்ணுயிர் போருக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் "நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகள்" இருப்பதாக டாக்டர் மெரிக் கூறுகிறார். அத்துடன், உடலில் இருந்து அவற்றை முற்றிலுமாக அகற்றலாம் அல்லது "பிரச்னைகளை ஏற்படுத்தாத அளவிற்கு அவற்றைக் குறைக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார். இந்த சிகிச்சைக்குப் பிறகு குடல் பாக்டீரியாக்கள் மிகவும் மாறுபட்டதாக மாறும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது சிறப்பான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும், இது "நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடும்". எனவே புதிய தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது கடினம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. "இந்த ஆய்வு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, அனைத்து பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதை உணர்த்தும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது," என்று டாக்டர் மெரிக் தெரிவித்தார். நாம் பிறந்த சில மணிநேரங்களில் நம் உடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள், நுரையீரல் தொற்றுடன் இளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை பாதியாகக் குறைப்பதாக, இந்த வார தொடக்கத்தில் விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர். நமது உடலின் செல்கள், நமக்குள் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இது கிரோன் நோய் முதல் புற்றுநோய், மன ஆரோக்கியம் வரை அனைத்திலும் நுண்ணுயிரியலை உட்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. விரிவான ஆய்வுகளில் சூப்பர்பக்ஸுக்கு எதிராக மல மாத்திரைகள் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டால், ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருத்துவ நடைமுறைகள் உடலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும். "இந்த நபர்களில் பலருக்கு மருந்து எதிர்ப்பு உயிரிகளால் அதிக அளவிலான தீங்கு ஏற்படுகிறது," என்று டாக்டர் மெரிக் சொல்கிறார். தற்போது 450க்கும் மேற்பட்ட நுண்ணுயிரியல் மருந்துகள் உருவாக்கத்தில் இருப்பதாக, பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) தெரிவித்துள்ளது. "அவற்றில் சில வெற்றி பெறும், எனவே மிக விரைவில் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் பாதிப்புகளை சமாளிக்கமுடியும் என நான் நினைக்கிறேன்," என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் கிறைசி செர்காகி கூறினார். "எதிர்காலத்தில், நுண்ணுயிரியல் சிகிச்சைகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்ற முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3q0lp8w0jo

குடலில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாவை அழிக்க 'மல மாத்திரை' உதவுமா?

3 months 1 week ago

சூப்பர்பக்ஸ், பாக்டீரியாக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பி

பட மூலாதாரம்,GSTT

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்

  • பதவி, மருத்துவம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 8 ஜூன் 2025

ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட "poo pills" பயன்படுத்த பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.

இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம்.

ஆண்டிபயாடிக் மருந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மல மாதிரிகளில் ஆபத்தான எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள குடலில் கவனம் செலுத்தும் விதமாக இந்த மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளதாக கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் இந்த மாத்திரைகளை பரிசோதித்து வரும் டாக்டர் பிளேர் மெரிக் கூறுகிறார்.

மருந்துகளை எதிர்க்கும் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் பாக்டீரியாக்கள், அவை தங்கியிருக்கும் குடலில் இருந்து வெளியேறி, உடலில் வேறு இடங்களில் குறிப்பாக சிறுநீர்ப்பாதை அல்லது ரத்த ஓட்ட தொற்றுகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

"'உங்கள் குடலில் இருந்து சூப்பர்பக்ஸை அகற்ற முடியுமா?' என்பதைத் தெரிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது," என்கிறார் டாக்டர் மெரிக்.

'மல மாத்திரைகள்' என்ற வார்த்தையைக் கேட்டு, இது அபத்தமான யோசனையாக இருப்பதாக கருதவேண்டாம். மலம் மாற்று அறுவை சிகிச்சை, டிரான்ஸ்-பூ-ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசைல் பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், C. difficile எனப்படும் கடுமையான குடல் பாக்டீரியா தொற்றின்போது, மல மாற்று அறுவை சிகிச்சைகள் சூப்பர்பக்ஸையும் அகற்றுவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர்.

ஆண்டிபயாடிக், மருந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருந்து எதிர்ப்பு பாக்டீரியா தொற்று பாதித்த நோயாளிகளை மையமாகக் கொண்டு ஆறு மாதங்களாக புதிய ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த நோயாளிகளுக்கு, மல வங்கிக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பெறப்படும் மல நன்கொடைகள் ஒவ்வொன்றும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், மலத்தில் இருக்கும் செரிக்கப்படாத உணவுகள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, எஞ்சிய மலம் உலர்த்தி பொடியாக்கப்பட்டு உறைய வைக்கப்படுகிறது.

மாத்திரையின் உள்ளே செலுத்தப்படும் இந்த மலத் துகள்கள், வயிற்றின் வழியாக சேதமின்றிச் சென்று குடலை அடைந்து, அங்கு கரைந்து அதன் உள்ளிருக்கும் மலத்துகள்கள் வெளியாகும்.

பெரிய அளவிலான ஆய்வுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக லண்டனில் உள்ள கைஸ் மற்றும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனைகளில் 41 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த மல மாத்திரையை எடுத்துக்கொள்ள நோயாளிகள் தயாராக இருப்பதாகவும், தானம் பெறப்பட்ட பாக்டீரியாக்கள் குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகும் நோயாளிகளின் குடலில் இருப்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

அதிகரித்து வரும் சூப்பர்பக்ஸின் தாக்குதலை சமாளிக்க மல மாத்திரைகள் உதவும். மேலும், குடலின் உட்புறத்தில் உணவு மற்றும் இடத்திற்கான போட்டியில் சூப்பர்பக்ஸும், தானம் செய்யும் பாக்டீரியாக்களும் நுண்ணுயிர் போருக்குச் செல்லக்கூடும் என்பதற்கும் "நம்பிக்கைக்குரிய சமிக்ஞைகள்" இருப்பதாக டாக்டர் மெரிக் கூறுகிறார்.

அத்துடன், உடலில் இருந்து அவற்றை முற்றிலுமாக அகற்றலாம் அல்லது "பிரச்னைகளை ஏற்படுத்தாத அளவிற்கு அவற்றைக் குறைக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு குடல் பாக்டீரியாக்கள் மிகவும் மாறுபட்டதாக மாறும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது சிறப்பான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும், இது "நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கக்கூடும்". எனவே புதிய தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவது கடினம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"இந்த ஆய்வு ஊக்கம் கொடுப்பதாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, அனைத்து பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முற்றிலும் அவசியமானவை என்பதை உணர்த்தும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது," என்று டாக்டர் மெரிக் தெரிவித்தார்.

நாம் பிறந்த சில மணிநேரங்களில் நம் உடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள், நுரையீரல் தொற்றுடன் இளம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை பாதியாகக் குறைப்பதாக, இந்த வார தொடக்கத்தில் விஞ்ஞானிகள் காட்டியுள்ளனர்.

நமது உடலின் செல்கள், நமக்குள் வாழும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இது கிரோன் நோய் முதல் புற்றுநோய், மன ஆரோக்கியம் வரை அனைத்திலும் நுண்ணுயிரியலை உட்படுத்தும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

விரிவான ஆய்வுகளில் சூப்பர்பக்ஸுக்கு எதிராக மல மாத்திரைகள் செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டால், ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருத்துவ நடைமுறைகள் உடலை மேலும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றும்.

"இந்த நபர்களில் பலருக்கு மருந்து எதிர்ப்பு உயிரிகளால் அதிக அளவிலான தீங்கு ஏற்படுகிறது," என்று டாக்டர் மெரிக் சொல்கிறார்.

தற்போது 450க்கும் மேற்பட்ட நுண்ணுயிரியல் மருந்துகள் உருவாக்கத்தில் இருப்பதாக, பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனமான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) தெரிவித்துள்ளது.

"அவற்றில் சில வெற்றி பெறும், எனவே மிக விரைவில் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் பாதிப்புகளை சமாளிக்கமுடியும் என நான் நினைக்கிறேன்," என்று மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் கிறைசி செர்காகி கூறினார்.

"எதிர்காலத்தில், நுண்ணுயிரியல் சிகிச்சைகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்ற முடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp3q0lp8w0jo

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

3 months 1 week ago
09 JUN, 2025 | 11:44 AM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216991

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

3 months 1 week ago

09 JUN, 2025 | 11:44 AM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/216991

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

3 months 1 week ago
காஸாவுக்கு கிரெட்டா துன்பர்க் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை சிறைபிடித்ததா இஸ்ரேல்? பட மூலாதாரம், FREEDOM FLOTILLA COALITION படக்குறிப்பு, நிவாரணப் படகில் சென்றவர்கள் கைகளை உயர்த்திய நிலையில் உள்ள புகைப்பட்ம கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற மேட்லீன் படகில் இஸ்ரேலியப் படைகள் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. உயிர்க் கவசம் அணிந்தபடியுள்ள தன்னார்வலர்கள் கைகளை உயர்த்திய நிலையில் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. எகிப்து கரையில் இருந்து கிளம்பிய அந்தப் படகில் காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பர்க் உள்ளார். "தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி வந்ததால்" படகை வழிமாறிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் முன்னர் தெரிவித்திருந்தது. காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிசிலியில் இருந்து புறப்பட்ட படகு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ள எஃப்.எஃப்.சி, "இஸ்ரேல் தாக்குதலுக்கான சாத்தியத்திற்கும் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் பயணிக்கும் செயற்பாட்டாளர்கள் குழு படகு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேலின் முற்றுகையை மீறும் எந்த முயற்சிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்திருந்தார். "மேடலெய்ன் படகு காஸா கரையைச் சேராமல் தடுக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐடிஎஃப்-ற்கு (இஸ்ரேலியப் பாதுகாப்பு படை) உத்தரவிட்டுள்ளேன்" என ஞாயிறு அன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2007-ல் இருந்து அமலில் உள்ள இஸ்ரேலின் முற்றுகையின் நோக்கம் ஹமாஸிற்கு ஆயுதங்கள் செல்லாமல் தடுப்பதே என கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடல் முற்றுகை என்பது சட்டவிரோதமானது என எஃப்.எஃப்.சி வாதிடுகிறது. கட்ஸின் கருத்து, பொதுமக்களுக்கு எதிராக சட்டவிரோதமாக படைகளைப் பயன்படுத்துவதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும் அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என எஃப்.எஃப்.சி கூறுகிறது. "எங்களை மிரட்ட முடியாது. உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என எஃப்.எஃப்.சியின் ஊடக அலுவலர் ஹே ஷா வியா தெரிவித்துள்ளார். காஸா: இடிபாடுகளுக்கு நடுவே பக்ரித் தொழுகை நடத்திய மக்கள் முழு சிகிச்சை கிடைக்காமல் ஜோர்டானில் இருந்து திரும்பி அனுப்பப்படும் காஸா குழந்தைகள் காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் காஸா அணுகுமுறையால் நெருக்கடியை சந்திக்கும் இஸ்ரேல் பட மூலாதாரம்,FREEDOM FLOTILLA COALITION படக்குறிப்பு, மேட்லீன் படகில் பயணித்த செயற்பாட்டாளர்கள் "மேட்லீன் பொதுமக்கள் பயணிக்கும் படகு, ஆயுதம் ஏந்தாமல் உலகம் முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைச் சுமந்து கொண்டு சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காஸாவை சென்றடையும் எங்களின் முயற்சியைத் தடுக்க இஸ்ரேலுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என அவர் தெரிவித்துள்ளார். மேட்லீன் படகு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இதில் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன் மற்றும் துருக்கியின் குடிமக்கள் உள்ளனர். 2010-ல், காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பலான மாவி மர்மராவில் பயணித்த 10 பேரையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர். மூன்று மாத தரை வழி முற்றுகைக்குப் பிறகு இஸ்ரேல் குறிப்பிட்ட அளவிலான நிவாரணங்களை மட்டும் தற்போது காஸாவிற்குள் அனுமதித்து வருகிறது. அதனையும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கிறது. இதற்கு நிவாரணக் குழுக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாலத்தீனர்களுக்கு வாழ்வா, சாவா என்கிற வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார். "ஒன்று பட்டினியால் சாகுங்கள் அல்லது கிடைக்கின்ற சொற்ப உணவைப் பெற முயற்சித்து கொல்லப்படுங்கள் என்கிற இரு கடுமையான வாய்ப்புகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது" என்றார் வோல்கர் துர்க். 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய எல்லை கடந்த தாக்குதலில் 1,200 கொல்லப்பட்டும் 251 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதன் பிறகு காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி தற்போது 20 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை காஸாவில் 54,880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. "கிரேட்டா மற்றும் மற்றவர்கள் விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றனர். அவர்கள் ஒரு லாரிக்கும் குறைவான நிவாரணப் பொருட்களையே எடுத்து வந்தனர், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இஸ்ரேலில் இருந்து காஸாவிற்கு 1,200 லாரிகள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளன. இதனுடன் கூடுதலாக காஸா ஹியுமானிடேரியன் ஃபவுண்டேஷன் மூலமாக காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு 11 மில்லியன் சாப்பாடு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திங்கள் காலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், "காஸா பகுதிக்கு நிவாரணங்களை வழங்க பல வழிகள் உள்ளன. அதில் இன்ஸ்டாகிராம் செல்ஃபிக்கள் அடங்காது" என்றும் அது தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ld179rv8qo

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
இந்தக் கோணத்தில் எனது சிந்தனை போகவில்லை. எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படுபவர்களை விரட்ட முடியாதே அண்ணை. நான் எதிர்காலத்தில் என்று தான் யோசித்தேன்.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 1 week ago
எனக்கு இதன் பின்னணி தெரியவில்லை, பொதுவாக வேலைக்கு வருபவர்கள் வேலை செய்யும் எண்ணத்துடன் வருவதில்லை, இது ஆசிய இனத்தவர்களுக்குள் உள்ள விடயமா அல்லது இது ஒரு பிரபஞ்ச உண்மையா என தெரியவில்லை. மேலை நாடுகளில் கூட இந்தநிலை காணப்படுகிறது, தாம் ஊதியம் பெறுகிறோம் அதற்கு வேலை செய்ய வேண்டும் என பார்க்கமாட்டார்கள், மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேலை செய்தல் அல்லது வேலையினை தவிர்த்தல் புத்திசாலித்தனம் என நினைக்கின்றமை, நான் வேலையிடத்தில் பொதுவாக கூறும் நகைச்சுவை வேலை செய்ய கூடாது எனபதற்காக வெளிக்கிட்டு வேலைக்கு வருகிறார்கள் என🤣. முக்கியமான வேலைகளில் கூட எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியமாதிரி வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர் குறித்த பிரிவினர் மேலை நாடுகளில் வந்து மிக சிரமமான நடைமுறைகளை கூட மனம் கோணாமல் செய்பவர்களாக இருக்கின்றார்கள். 9 - 4 ?

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
எங்கோ கோடிக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள செவ்வாய்கிரகமும், வியாழன் கிரகமும், சனிக்கிரகமும் எப்படி பூமிக்கு தேடிவந்து ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் தேடிப்பிடித்து அவர்கள் வாழ்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அது பூமியை நோக்கி பயணிக்கும் மீடியம் என்ன? குறிப்பிட்ட மக்களை தாக்கி முடிய அது எப்படி தான் தாக்க வேண்டிய அடுத்தவர்களை தேடி செல்கிறது என்பதை ஆதாரங்களுடன் எவரவது விளக்க முடியுமா?

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
ஏன் உங்களுங்கு என் மேல் இப்படி ஒரு கொலைவெறி? பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதில்லை எனும் ஒரு முடிவு வைத்துள்ளேன் (அதனால் இப்படியான கொலைவெறித்தாக்குதலில் தப்பிவிடுகிறேன்), படம் நல்ல படம் என அனைவரும் குறிப்பிட்டாலே பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதுண்டு(கமல், ரஜனி, அஜித், விஜய், சூரியா...........). ஆனால் குடும்பத்தினருக்காக சில பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க சென்று நித்திரை கொண்டு அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு (அவர்களின் இரசனையினை இழிவுபடுத்துவது போல அவர்கள் கருதுகிறார்கள் என கருதுகிறேன்) தற்போது அதனையும் தவிர்ப்பதுண்டு. மணிரத்தினத்தினம், சங்கர் போன்ற கடந்த தலைமுறை இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும், தாத்தா வயதில் கல்லூரிகளில் படித்து அல்லது படிப்பித்து, கல்லூரிக்காதல் என நடித்துகொண்டிருக்கும் தமிழ் திரையுலக தாத்தாக்களின் கொடுமைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க இந்த மாதிரியான இயக்குனர்களே தேவை.