Aggregator

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவித்தல்!

3 months ago

07 AUG, 2025 | 06:52 PM

image

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்று வெள்ளிக்கிழமை (07) முடிவடைகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 19 ஆம் திகதி முடிவடையும்.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/222078

நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

3 months ago
நாடு முழுக்க சிறைச்சாலை கட்டினாலும் போதாது போலிருக்கே. இப்போதானே ஆரம்பம்!

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

3 months ago
தமிழினத்தைக் கொன்றழித்து அவர்கள் உடல்களைப் புதைக்க, பொலீசுக்கு அனுமதி கொடுத்து அரசுக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன், எனக்கே அல்வாவா.🤨

நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

3 months ago
சிறிலான்கா நாட்டை பிரிக்க நினைத்த தமிழ் பயங்கரவாதிகளை இல்லாது செய்த சிங்கள மாவீரர்களை தண்டித்தால் பெளத்த மத விரோத செயல்

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

3 months ago
ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது. ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும். Journalist Kumanan is being continuously threatened by the TID. Last year, his parents were already threatened. Following that, Kumanan was summoned for questioning, after which there was no further contact. Now, he has been summoned for questioning again, with false claims related to “ Facebook post related to LTTxxe .” being cited as the reason. We cannot stand by and watch the TID investigate an independent journalist like Kumanan, who continuously brings important issues like chemmani to the world. NoAt this time, it is highly condemnable that a journalist, who provides news based on media ethics, is being threatened and subjected to false accusations. We cannot let this go , everyone must oppose this terrible repression by the government in its entirety. https://x.com/JDSLanka/status/1953344960842833923?t=ri0qqy_2hxV42Dt6eiTExA&s=19

ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்

3 months ago

ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது.

ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.

மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.

Journalist Kumanan is being continuously threatened by the TID. Last year, his parents were already threatened. Following that, Kumanan was summoned for questioning, after which there was no further contact.

Now, he has been summoned for questioning again, with false claims related to “ Facebook post related to LTTxxe .” being cited as the reason.

We cannot stand by and watch the TID investigate an independent journalist like Kumanan, who continuously brings important issues like chemmani to the world.

NoAt this time, it is highly condemnable that a journalist, who provides news based on media ethics, is being threatened and subjected to false accusations. We cannot let this go , everyone must oppose this terrible repression by the government in its entirety.

https://x.com/JDSLanka/status/1953344960842833923?t=ri0qqy_2hxV42Dt6eiTExA&s=19

தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?

3 months ago
யாழ் களத்தில் சில குழப்பவாதிகள் குழப்பி அடிப்பதுபோல் அக்காலத்துப் புலவர்களும் குழப்பி அடிக்கிறார்களே சாமி.🤔

ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்

3 months ago
எல்லாம் ஒரு புருடா தான் இறந்த தலைவன் இருக்கிறார் என்ற மாதிரி,நரி பரி ஆக மாறியது போல பனங்காட்டு நரி சிங்கமாக மாறிவிட்டது இதுவும் ஒரு கருத்து ...உலகமே பொய் கருத்துகளின் உறைவிடமாக மாறி வெற்றி நடை போடுகிறது🤣

சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்

3 months ago

சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்

7 Aug 2025, 1:14 PM

Anbumani Ramadoss PMK

சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர்.

அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ்.

முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது.

https://minnambalam.com/anbumani-trying-to-snatch-pmk-from-me-through-deceitful-means-ramadoss/#google_vignette

சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ்

3 months ago
சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிக்க முயற்சிக்கும் அன்புமணி: ராமதாஸ் 7 Aug 2025, 1:14 PM சூது செய்து தம்மிடம் இருந்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சிப்பதாக அவரது தந்தையும் பாமக நிறுவனர் -தலைவருமான டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புமணியை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடுமையாக உழைத்து தண்ணீருக்குப் பதில் வியர்வையை ஊற்றி பாமகவை வளர்த்தேன். பாமக எனும் ஆலமரத்தின் கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்சிக்கின்றனர். அன்புமணி என்னை சந்திக்க வந்ததாகவும் நான் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார். இது பச்சை பொய். சூது செய்து பாமகவை என்னிடம் இருந்து பறிப்பதற்கு அன்புமணி முயற்சிக்கிறார். அன்புமணியிடம் கட்சியை தந்துவிட்டு நான் டம்மியாக இருக்க முடியாது என்றார் ராமதாஸ். முன்னதாக பாமகவின் சிறப்பு பொதுக்குழுவை ஆகஸ்ட் 17-ந் தேதி கூட்டுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அன்புமணி பாமகவின் பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளது. https://minnambalam.com/anbumani-trying-to-snatch-pmk-from-me-through-deceitful-means-ramadoss/#google_vignette

2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?

3 months ago
2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன? 2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன. ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது. பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது. அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர். இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை. பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன. இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது. இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை. https://akkinikkunchu.com/?p=335891

2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?

3 months ago

2015 ஆம் ஆண்டை நினைவூட்டும் ஜெனீவா கூட்டத் தொடர்!; தமிழர் நிலைப்பாடு என்ன?

ranil-maithri-1.jpg

2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன.

ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.

பத்து வருடங்களின் பின்னர் மீண்டும் அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.

அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.

இந்தக் குறிவைப்பில் ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் சிலவற்றின் சார்பில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை.

பொதுவெளியில் தமது நிகழ்ச்சிநிரல் பற்றிய தடயங்கள் அதிகம் வெளிப்படாத வகையில் செயற்படவேண்டும் என்ற திட்டத்தோடு இவை இயங்குகின்றன.

இந்த மறைபொருளான நிகழ்ச்சிநிரல் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களிடம் இது பற்றிக் கேட்டால், அக் கேள்விகளைச் சதிக் கோட்பாடுகளாக கருதி அவற்றைத் தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு பலரிடம் 2015 இல் காணப்பட்டதைப் போலவே தற்போதும் காணப்படுகிறது.

இருந்தாலும், இது குறித்த விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்படவேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ள பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானம், தமிழர்கள் எதிர்ப்பார்ப்பது போன்று அமையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

இப் பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை ஒத்த கருத்தியல் மீண்டும் எழக்கூடும் என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கக் கூடிய அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமில்லை.

https://akkinikkunchu.com/?p=335891

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!

3 months ago
ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.! ஆகஸ்ட் 07, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (07.08.2025) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. மன்னார் காற்றாலை மின் கோபுரங்கள் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். https://www.battinatham.com/2025/08/blog-post_37.html

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!

3 months ago

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு.!

ஆகஸ்ட் 07, 2025

AVvXsEjtWOEmQGteKdQPUMcsnKWYuSVbb1eXDK-Ds37Ko6MEYLk8tsefDMjjIlATdIBm6jk05sBweSVZu6Zi2-9uCdffzXBcgiFmhifmZRw3rTBViuE20674wbJPyUyD6HAqjL03GwH2_S0qS4y-ISnhoSrGwmGMNIHlGon4o8co0Fum-HwIBfcACgodLJkiXIf-

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (07.08.2025) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மன்னார் காற்றாலை மின் கோபுரங்கள்

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

https://www.battinatham.com/2025/08/blog-post_37.html