Aggregator

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 07 JUN, 2025 | 02:58 PM உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315 மீற்றர் நீளத்தைக் கொண்டது. நில அதிர்வுகளையும், அதிக காற்று அழுத்தங்களையும் தாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் இப்பாலத்தின் வழியாக பயணிக்கக்கூடியதாகும். இந்தப் பெருமைமிகு புதிய பாலம், ஜெர்மனியின் லியோன்ஹார்ட் ஆண்ட்ரா & பார்ட்னர் மற்றும் வியன்னா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216860

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

3 months 1 week ago
இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன? பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் நேர்மையான சட்ட நெறிமுறையும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகளாகியுள்ள நிலையில், போரினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுவோரின் மனித புதைக்குழிகள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் இதுவரை 20ற்கும் அதிகமான மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இறுதியாக நடத்தப்பட்ட அகழ்வு பணிகள் வரை ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏற்கனவே ஐந்து எச்சங்களுடன், மனித மண்டையோட்டு எச்சங்களும், கால், கை, எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.'' என சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் மேலும், 18ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த பகுதியை மனித புதைக்குழியாக அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கொன்றை வலிந்து காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இந்தப் பகுதி மனித புதைக்குழி காணப்படும் பகுதியாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றத்தில் நாங்கள் விண்ணப்பத்தை செய்திருந்தோம், இதை மனிதப் புதைக்குழியாக அறிவிக்குமாறு. கௌரவ நீதவான் இது சம்பந்தமாக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் ஆகியோரிடம் அறிக்கைகளை கோரியிருந்தார். போலீஸாரிடமும் சில விடயங்களை வினாவியிருந்தார். அதனடிப்படையில் அவர்களின் அறிக்கைகளை வைத்துக்கொண்டு, இது மனிதப் புதைக்குழி என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும் என்று சொல்லியும், இந்த விடயத்தில் அக்கறை கொண்டவர்களை சுழற்சி முறையிலும் பாதுகாப்புக்காக நியமிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். அதன் பின்னர் நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் அந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.'' என அவர் கூறுகின்றார். சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி படக்குறிப்பு,முல்லைத்தீவு புதைக்குழி யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலுள்ள மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வு பணிகள் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நான்காம் நாள் அகழ்வு பணிகள் நிறைவடையும் தருவாயில், ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மே 15ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. யாழ்ப்பாணம், செம்மணியில் அமைந்துள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில், ஜூன் 2ஆம் தேதி, மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வினை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணம் - செம்மணியவில் உள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய மனித புதைகுழியில், நிலம் அளவீட்டின் பின்னர், மே 15ஆம் தேதி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள் முல்லைத்தீவில் தோண்டப்படும் மனித புதைகுழி - கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது? மனிதப் புதைகுழிகள்: இலங்கை போரில் சரணடைந்தவர்கள் கொன்று புதைப்பா? சர்வதேச விசாரணை கோரும் தமிழர்கள் இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் புதிய தகவல் மே 16ம் தேதி அன்று அகழ்வு முடிந்ததும், குழியிலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டன, மேலும் மழைக்காலம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வு ஜூன் 2ம் தேதி மீண்டும் ஆரம்பமானது. சிந்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 13ம் தேதி கட்டுமானப் பணிகளின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த நீதிபதி ஏ.ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20ம் தேதி அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 15 ஆம் தேதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய, மே 15 ஆம் தேதி, அகழ்வுக்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, புதைகுழிக்குச் சென்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெனகநாதன் தற்பரன், காணாமல் போனவர்களுக்கும் மனித புதைகுழிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அகழ்வுக்கு உதவும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. சிந்துப்பாத்தி மனித புதைக்குழிக்கு அருகில் போராட்டம் படக்குறிப்பு,இலங்கை மனிதப் புதைகுழி யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. சிந்துப்பாத்தி மனித புதைக்குழி அகழ்வானது, சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தின் பின்னர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் உறவினர் சங்கமான நாங்கள், தற்போது யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தியில் நடந்து கொண்டிருக்கும் மனித புதைக்குழி அகழ்வு குறித்த எங்கள் தீவிரமான கவலையை வெளிப்படுத்துகிறோம் மற்றும் எங்கள் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்கிறோம். ''முன்னதாக, இலங்கையில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்ப் பகுதிகளில் 22 க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக மன்னார் சதொச மனித புதைக்குழி, திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழி மற்றும் கொக்குத்தோடுவாய் மனித புதைக்குழிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன. பல மனித புதைக்குழிகள் இன்னும் முழுமையாக அகழப்படவில்லை. ஏற்கனவே அகழப்பட்ட இடங்களிலும், உண்மை அல்லது நீதியாவது வழங்கப்படவில்லை. விசாரணைகள் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளன.'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இந்த தோல்விகள் காரணமாக, காணாமல் போனவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், உள்ளூர் விசாரணைகளை நம்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, காணாமல் போனவர்களையும் மனித புதைக்குழி அகழ்வுகளையும் விசாரிக்க சர்வதேச ஆதரவும், நேர்மையான சட்ட நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்பதைக் கோருகிறோம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் கோரிக்கைகள் என்ன? படக்குறிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்) ''செம்மணி சிந்துப்பாத்தியில், இதுவரை 14க்கும் மேற்பட்ட மனித உடல்களின் எச்சங்கள் அகழப்பட்டுள்ளன, அதில் சில சிறிய குழந்தைகளின் உடல்களும் அடங்கும். இந்த தகவல்கள், பலர் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.'' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ''சர்வதேச சட்டத்தின்படி, பலரது உடல் எச்சங்கள் அடங்கிய மற்றும் சட்டவிரோதக் கொலைகளுடன் தொடர்புடைய எந்த ஒரு பிணைத்தளமும் மனித புதைக்குழியாக கருதப்பட வேண்டும். எனவே, இந்த இடத்தை அதிகாரபூர்வமாக மனித புதைக்குழியாக அறிவித்து, அகழ்வுப் பணி செம்மணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.'' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை தவிர மேலும் சில கோரிக்கைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் முன்வைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. 1. செம்மணி சிந்துப்பாத்தியில் நடைபெறும் அகழ்வை அதிகாரப்பூர்வமாக மனித புதைக்குழி விசாரணையாக அறிவிக்க வேண்டும். 2. அகழ்வு சர்வதேச நிபுணர்கள் மேற்பார்வையின் கீழ், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். 3. எல்லா ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அகழ்வு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும். 4. பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, அகழ்வைப் பார்வையிடவும், தகவல் வெளியிடவும் முழு அனுமதி வழங்கப்பட வேண்டும். 5. விரைவில் இலங்கைக்கு வரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியை நேரில் பார்வையிட்டு, உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து வெளிவரும் மனிதப் புதைக்குழிகள் பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP படக்குறிப்பு, இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியாக பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம் யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழி யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைக்குழி கிளிநொச்சி - மனிதப் புதைக்குழி கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைக்குழி முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள் மன்னார் - மன்னார் மனிதப் புதைக்குழி மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைக்குழி கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி கொழும்பு - கோகந்தர மனிதப் புதைக்குழி கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைக்குழி மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைக்குழி மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி கண்டி - அங்கும்புர மனிதப் புதைக்குழி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி மன்னார் மனிதப் புதைக்குழியும் அமெரிக்காவில் விசாரணையும் படக்குறிப்பு, பீட்டாவின் அறிக்கை மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்குச் சொந்தமானவை என பீட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விசாரணைகள் தொடர்பிலும் தமிழர்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த மனித எச்சங்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடந்த கால அரசாங்கங்கள் நிராகரித்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, தொடர்ச்சியாக அவ்வப்போது இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ''மன்னார் சதொச, திருகேதீஸ்வரம், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புதைக்குழி விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 57 புதைக்குழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், 23, 24 புதைக்குழிகள் அகழப்பட்டுள்ளன.'' எனவும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். அரசாங்கத்தின் பதில் என்ன? பட மூலாதாரம்,HARSHANA NANAYAKARA யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த மனிதப் புதைக்குழி தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqe3wqp7gno

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

3 months 1 week ago

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் நேர்மையான சட்ட நெறிமுறையும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகளாகியுள்ள நிலையில், போரினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுவோரின் மனித புதைக்குழிகள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இதுவரை 20ற்கும் அதிகமான மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இறுதியாக நடத்தப்பட்ட அகழ்வு பணிகள் வரை ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏற்கனவே ஐந்து எச்சங்களுடன், மனித மண்டையோட்டு எச்சங்களும், கால், கை, எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.'' என சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன்

மேலும், 18ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பகுதியை மனித புதைக்குழியாக அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கொன்றை வலிந்து காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இந்தப் பகுதி மனித புதைக்குழி காணப்படும் பகுதியாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றத்தில் நாங்கள் விண்ணப்பத்தை செய்திருந்தோம், இதை மனிதப் புதைக்குழியாக அறிவிக்குமாறு. கௌரவ நீதவான் இது சம்பந்தமாக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் ஆகியோரிடம் அறிக்கைகளை கோரியிருந்தார். போலீஸாரிடமும் சில விடயங்களை வினாவியிருந்தார். அதனடிப்படையில் அவர்களின் அறிக்கைகளை வைத்துக்கொண்டு, இது மனிதப் புதைக்குழி என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும் என்று சொல்லியும், இந்த விடயத்தில் அக்கறை கொண்டவர்களை சுழற்சி முறையிலும் பாதுகாப்புக்காக நியமிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். அதன் பின்னர் நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் அந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.'' என அவர் கூறுகின்றார்.

சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,முல்லைத்தீவு புதைக்குழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலுள்ள மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வு பணிகள் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நான்காம் நாள் அகழ்வு பணிகள் நிறைவடையும் தருவாயில், ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மே 15ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

யாழ்ப்பாணம், செம்மணியில் அமைந்துள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில், ஜூன் 2ஆம் தேதி, மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வினை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணம் - செம்மணியவில் உள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய மனித புதைகுழியில், நிலம் அளவீட்டின் பின்னர், மே 15ஆம் தேதி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

மே 16ம் தேதி அன்று அகழ்வு முடிந்ததும், குழியிலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டன, மேலும் மழைக்காலம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வு ஜூன் 2ம் தேதி மீண்டும் ஆரம்பமானது.

சிந்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 13ம் தேதி கட்டுமானப் பணிகளின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த நீதிபதி ஏ.ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20ம் தேதி அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 15 ஆம் தேதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, மே 15 ஆம் தேதி, அகழ்வுக்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, புதைகுழிக்குச் சென்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெனகநாதன் தற்பரன், காணாமல் போனவர்களுக்கும் மனித புதைகுழிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அகழ்வுக்கு உதவும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சிந்துப்பாத்தி மனித புதைக்குழிக்கு அருகில் போராட்டம்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,இலங்கை மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. சிந்துப்பாத்தி மனித புதைக்குழி அகழ்வானது, சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தின் பின்னர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் உறவினர் சங்கமான நாங்கள், தற்போது யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தியில் நடந்து கொண்டிருக்கும் மனித புதைக்குழி அகழ்வு குறித்த எங்கள் தீவிரமான கவலையை வெளிப்படுத்துகிறோம் மற்றும் எங்கள் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்கிறோம்.

''முன்னதாக, இலங்கையில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்ப் பகுதிகளில் 22 க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக மன்னார் சதொச மனித புதைக்குழி, திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழி மற்றும் கொக்குத்தோடுவாய் மனித புதைக்குழிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

பல மனித புதைக்குழிகள் இன்னும் முழுமையாக அகழப்படவில்லை. ஏற்கனவே அகழப்பட்ட இடங்களிலும், உண்மை அல்லது நீதியாவது வழங்கப்படவில்லை. விசாரணைகள் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளன.'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இந்த தோல்விகள் காரணமாக, காணாமல் போனவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், உள்ளூர் விசாரணைகளை நம்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, காணாமல் போனவர்களையும் மனித புதைக்குழி அகழ்வுகளையும் விசாரிக்க சர்வதேச ஆதரவும், நேர்மையான சட்ட நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்பதைக் கோருகிறோம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் கோரிக்கைகள் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

''செம்மணி சிந்துப்பாத்தியில், இதுவரை 14க்கும் மேற்பட்ட மனித உடல்களின் எச்சங்கள் அகழப்பட்டுள்ளன, அதில் சில சிறிய குழந்தைகளின் உடல்களும் அடங்கும். இந்த தகவல்கள், பலர் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.'' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

''சர்வதேச சட்டத்தின்படி, பலரது உடல் எச்சங்கள் அடங்கிய மற்றும் சட்டவிரோதக் கொலைகளுடன் தொடர்புடைய எந்த ஒரு பிணைத்தளமும் மனித புதைக்குழியாக கருதப்பட வேண்டும். எனவே, இந்த இடத்தை அதிகாரபூர்வமாக மனித புதைக்குழியாக அறிவித்து, அகழ்வுப் பணி செம்மணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.'' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தவிர மேலும் சில கோரிக்கைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் முன்வைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1. செம்மணி சிந்துப்பாத்தியில் நடைபெறும் அகழ்வை அதிகாரப்பூர்வமாக மனித புதைக்குழி விசாரணையாக அறிவிக்க வேண்டும்.

2. அகழ்வு சர்வதேச நிபுணர்கள் மேற்பார்வையின் கீழ், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. எல்லா ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அகழ்வு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும்.

4. பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, அகழ்வைப் பார்வையிடவும், தகவல் வெளியிடவும் முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

5. விரைவில் இலங்கைக்கு வரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியை நேரில் பார்வையிட்டு, உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து வெளிவரும் மனிதப் புதைக்குழிகள்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

படக்குறிப்பு, இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியாக பதிவாகியுள்ளன.

  1. யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்

  2. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழி

  3. யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைக்குழி

  4. கிளிநொச்சி - மனிதப் புதைக்குழி

  5. கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைக்குழி

  6. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி

  7. முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்

  8. மன்னார் - மன்னார் மனிதப் புதைக்குழி

  9. மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி

  10. குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி

  11. கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை

  12. கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைக்குழி

  13. கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி

  14. கொழும்பு - கோகந்தர மனிதப் புதைக்குழி

  15. கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைக்குழி

  16. மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி

  17. இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைக்குழி

  18. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி

  19. மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி

  20. கண்டி - அங்கும்புர மனிதப் புதைக்குழி

  21. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி

  22. கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி

  23. அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

மன்னார் மனிதப் புதைக்குழியும் அமெரிக்காவில் விசாரணையும்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு, பீட்டாவின் அறிக்கை

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்குச் சொந்தமானவை என பீட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பிலும் தமிழர்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த மனித எச்சங்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடந்த கால அரசாங்கங்கள் நிராகரித்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, தொடர்ச்சியாக அவ்வப்போது இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

''மன்னார் சதொச, திருகேதீஸ்வரம், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புதைக்குழி விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 57 புதைக்குழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், 23, 24 புதைக்குழிகள் அகழப்பட்டுள்ளன.'' எனவும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் பதில் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம், இலங்கை அரசு

பட மூலாதாரம்,HARSHANA NANAYAKARA

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த மனிதப் புதைக்குழி தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpqe3wqp7gno

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை ஏற்றி சென்ற லொறியின் சாரதி கைது

3 months 1 week ago
07 JUN, 2025 | 05:43 PM சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216878

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை ஏற்றி சென்ற லொறியின் சாரதி கைது

3 months 1 week ago

07 JUN, 2025 | 05:43 PM

image

சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216878

இந்திய நிறுவனங்களின் ஏற்பாட்டில் பொருளாதாரக் கலந்துரையாடல்

3 months 1 week ago
07 JUN, 2025 | 10:32 PM (எம்.மனோசித்ரா) 'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார். மேலும் இந்திய மற்றும் இலங்கை வங்கிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்புரையாற்றியதோடு, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரதீப் ராமகிருஷ்ணன், கேர்எட்ஜ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி பராக் கஸ்தூர் மற்றும் என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடரமணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கிப்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பு, கடன் மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் அதன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்திய சமீபத்திய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் போது கிப்ட் சிட்டி மூலம் சர்வதேச மூலதன சந்தைகளை அணுக விரும்பும் நிறுவனங்களுக்கான பட்டியலிடல் தேவைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் தேசிய பங்குச் சந்தை வழங்கியது. மேலும் நிதி மற்றும் முதலீடு தொடர்பான களங்களில் கூட்டு முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இந்த நிகழ்வு ஒரு ஊக்கியாக அமைந்தது. https://www.virakesari.lk/article/216876

இந்திய நிறுவனங்களின் ஏற்பாட்டில் பொருளாதாரக் கலந்துரையாடல்

3 months 1 week ago

07 JUN, 2025 | 10:32 PM

image

(எம்.மனோசித்ரா)

'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும கலந்து கொண்டார்.

மேலும் இந்திய மற்றும் இலங்கை வங்கிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்புரையாற்றியதோடு, குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரதீப் ராமகிருஷ்ணன், கேர்எட்ஜ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி பராக் கஸ்தூர் மற்றும் என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடரமணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கிப்ட் சிட்டி சுற்றுச்சூழல் அமைப்பு, கடன் மதிப்பீட்டு வழிமுறைகள் மற்றும் அதன் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்திய சமீபத்திய ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதன் போது கிப்ட் சிட்டி மூலம் சர்வதேச மூலதன சந்தைகளை அணுக விரும்பும் நிறுவனங்களுக்கான பட்டியலிடல் தேவைகள் பற்றிய கண்ணோட்டத்தையும் தேசிய பங்குச் சந்தை வழங்கியது.

மேலும் நிதி மற்றும் முதலீடு தொடர்பான களங்களில் கூட்டு முயற்சிகளை மேலும் முன்னேற்றுவதற்கு இந்த நிகழ்வு ஒரு ஊக்கியாக அமைந்தது.

https://www.virakesari.lk/article/216876

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
திட்டமிட்டு கூட்டிச்சென்று கொலை செய்துவிட்டு உடலை மறைத்தோ அல்லது ஓடி ஒளிந்தோ கொள்ளாமல் காவல் நிலையம் சென்று விடயத்தை சொல்லி சட்டத்திடம் சரணடைந்தவருக்கு கட்டுக்கதைகள் என்ற உங்கள் சந்தேகம் பொருந்துமா? (இதில் எழுத இனி எதுவுமே இல்லை என்று நினைத்தேன். உங்கள் நீண்ட கருத்தால் இக்கேள்வி வருகிறது)

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்றுடன் நிறைவு : 19 முழுமையான எனித என்புத்தொகுதிகள் அடையாளம்! 07 JUN, 2025 | 10:07 PM யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள மனித புதைகுழியின் பரீட்சார்த்த அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக நடைபெற்றது. கடந்த ஒன்பது நாட்களாக பரீட்சார்த்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இன்றைய நிலையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிறைவு நாளில் 19 என்பு தொகுதிகளும் முழுமையாக அகழ்வு பணி செய்யும் இடத்திலிருந்து அகழப்பட்டு பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்படும். குறித்த பகுதி குற்றம் நிகழ்ந்த பிரதேசமான மனிதப் புதைகுழியாக நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரியின் கோரிக்கைக்மைய தொடர்ந்து 45 நாட்களுக்கு மேற்கொள்ள அதற்கான செலவு பாதீட்டை கால தாமதமின்றி ஒப்படைக்க கூறிய அடிப்படையில் பாதீடு இன்று கையளிக்கப்பட்டது. நிதிகளை வழங்கும் அரச நிறுவனங்களிடம் பாதீடு கையளிக்கப்பட்டு இரண்டு வார கால அவகாசத்தில், உத்தேச திகதியாக ஜூன் மாதம் 20ஆம் திகதி மீளவும் அகழ்வாய்வு பணியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பாதீட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டு நிதி அனுசரணை வந்த பின்னர் குறித்த திகதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானித்து. இது குறித்து அகழ்வில் பங்குபற்றும் தரப்பினருக்கு அறிவிக்கப்படும். அகழ்வு பணிகள் இன்று ஆரம்பித்த நேரத்தில் ட்ரோன் கமராவின் உதவியுடன் மேலுமொரு மனித புதைகுழி இருக்குமென சந்தேகப்படும் பகுதியில் படங்கள் எடுக்கப்பட்டு தற்போது ஆய்வுக்காக பேராசிரியர் ராஜ் சோமதேவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/216887

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
நிறை குடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் என்று வாலி எழுதி (அந்த வாலிதான் @வாலி நம் கள உறவோ நானறியேன்) சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஒரு வரி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்களுக்கு அந்த சுபதினம் வரவில்லை. அந்த ஏமாற்றத்தையே இந்த படமும் தந்தது.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
அப்போ இந்திராணி - அமரனின் சொந்த சகோதரியா? இந்திராணியை கண்டுபிடித்து சக்திவேல் தன் துணைவியாக வைத்து கொள்ள, அவர் மீது யாரெனெ தெரியாமல் அமரன் மையல் கொள்கிறார்? இது இருவருக்கும் தெரிய வருகிறதா? முடிவு எப்படி கையாளப்படுகிறது? இதுதான் கதை என்றால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், அல்லது பழைய பாலசந்தர் இயக்கத்தில் பழைய ரஜனி பின்னி இருப்பார்கள். விமர்சனங்களை பார்த்தால் இந்த நெருடலான கதையை பக்குவமாக கையாளாமல், சில்பா ஷெட்டி கணவன் எடுக்கும் “இந்தியன் ஆண்டியும் காலேஜ் பையனும்” ரேஞ்சில் எடுத்துள்ளார்கள் போலுள்ளது🤣.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
விசாரணயின் பின்பே எதையும் சொல்ல முடியும் என்பது சரியே. ஆனால் தலையோடு பொலிஸ் நிலையம் போய் கொலையை ஒப்பு கொண்டதால் - கொலையை இன்னார், இன்ன காரணதுக்காக செய்தார் என்பது வெள்ளிடமலை ஆகவே அந்த கொலையை கண்டிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அந்த இளைஞர் இப்படி போட்டோக்களை அனுப்பி சீண்டி இருந்தால் கொலையில் அவரின் பங்கும் உள்ளது. ஆனால் அவர் கொலையாளியை கொலை செய் என நேரடியாக தூண்டியிராத விடத்து, அவர் வழக்கில் ஒரு சாட்சியே ஒழிய குற்றவாளி அல்ல. நீங்கள் கூறியது போல் அவருக்கு அறிவுரை செய்ய மட்டுமே முடியும். வாசித்த சம்பவங்கள் உண்மையானல் - திருமணம் முடித்து விட்டு கொழும்பில் தனியாக போய் இருந்த கணவன் கணவனிடம் மணவிலக்கு பெறாமல் அவர்களை விட வயது குறைந்த இளைஞரிடம் உறவு வைத்து, கருவையும் உருவாக்கி கொண்ட மனைவி அப்படி ஒரு உறவில் இருந்தது மட்டும் அல்லாமல் கணவனுக்கே போட்டோ அனுப்பி சீண்டிய காதலன் இவர்கள் யாருமே சுத்தம் இல்லை. ஆனால் கணவன் பல நாட்களாக திட்டமிட்டு கொலை செய்தது இதை வேறு கட்டத்துக்கு கொண்டு போய்விட்டது. ஒரு நல்ல நண்பன் இருந்து - அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால் கூட “தூக்கி போட்டு விட்டு, உன் வாழ்க்கையை பார்” என அவன் சொல்லி இருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். ஆனால் சமூகமே “வெட்டுடா, கொல்லுடா, உன் மானத்தை மீள பெறுடா” என பினூட்டம் இடுகிறதெனில் அந்த சமூகத்தில் இப்படி ஒரு அறிவுரை கணவனுக்கு கிடைக்கவும் வாய்ப்புகள் குறைவு. பிகு இங்கே பலர் சொல்வது போல இந்த மனைவி முழு அப்பாவியாகவும் இருக்கலாம். இவை எல்லாம் கணவனின் கட்டுகதைதாகவும் இருக்கலாம்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததால் - இவரின் தன்மானம் பாதிக்கப்பட்டதல்லவா? மனைவியை கொலை செய்து அந்த தன்மானத்துக்கு ஏற்பட்ட அழுக்கை, மனைவியின் ரத்தத்தால் கழுவி நீக்கி உள்ளாராம். இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. அல்பேனியாவில் இரத்த- சண்டை blood feud என பரம்பரை பரம்பரையாக மாறி மாறி கொல்லுவார்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினரை மறு குடும்பம் கொன்றதால் அந்த அகெளரவத்தை போக்க, மறு குடும்ப ஆணில் ஒருவரை கொல்வது. இப்படி சங்கிலி போல் மாறி மாறி கொல்வது. இதை நடைமுறை செய்ய அங்கே கானூன் எனும் மரபுவழி சட்டம் கூட உள்ளது. மாபியாங்கள், காங்குகள் மாறி மாறி கொல்வது கூட இப்படி ஒரு அடிப்படையில்தான். இப்படி ஒரு தனிநபர் கொல்லுவது அவரின் மனநிலை சம்பந்த பட்ட விடயம் என கருதி கடந்து போனாலும், இதை சமூகமாக பெருமளவில் ஆதரிக்கும் போக்கு - அந்த சமூகம் தாலின்பானிய படுத்தபடுகிறது என்பதன் அறிகுறியே.

உங்களுக்கு தெரியுமா?

3 months 1 week ago
25 Most Populous Countries in The World (2025) 1. 🇮🇳 India - 1,463,865,525 (1.46B) 2. 🇨🇳 China - 1,416,096,094 (1.42B) 3. 🇺🇸 United States - 347,275,807 (347M) 4. 🇮🇩 Indonesia - 285,721,236 (286M) 5. 🇵🇰 Pakistan - 255,219,554 (255M) 6. 🇳🇬 Nigeria - 237,527,782 (238M) 7. 🇧🇷 Brazil - 212,812,405 (213M) 8. 🇧🇩 Bangladesh - 175,686,899 (176M) 9. 🇷🇺 Russia - 143,997,393 (144M) 10. 🇪🇹 Ethiopia - 135,472,051 (135M) 11. 🇲🇽 Mexico - 131,946,900 (132M) 12. 🇯🇵 Japan - 123,103,479 (123M) 13. 🇪🇬 Egypt - 118,365,995 (118M) 14. 🇵🇭 Philippines - 116,786,962 (117M) 15. 🇨🇩 DR Congo - 112,832,473 (113M) 16. 🇻🇳 Vietnam - 101,598,527 (102M) 17. 🇮🇷 Iran - 92,417,681 (92M) 18. 🇹🇷 Turkey - 87,685,426 (88M) 19. 🇩🇪 Germany - 84,075,075 (84M) 20. 🇹🇭 Thailand - 71,619,863 (72M) 21. 🇹🇿 Tanzania - 70,545,865 (71M) 22. 🇬🇧 United Kingdom - 69,551,332 (70M) 23. 🇫🇷 France - 66,650,804 (67M) 24. 🇿🇦 South Africa - 64,747,319 (65M) 25. 🇮🇹 Italy - 59,146,260 (59M) Source: World Population Review

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமல்ல. பாடசாலை வாசலில் போதைப்பொருள் விற்பதைத் தடுக்க எல்லோரும் நடவடிக்கை எடுக்கலாம். இதில் காவல்துறை, தமிழ் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என்று எல்லொரும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிசயக்குதிரை

3 months 1 week ago
ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு.. இளைஞனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி. இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு. இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான். தாத்தா அவனை கோபமா பார்த்தார். “இந்த புத்தகம் பயங்கரமானது. இதோட விலை ரூ. #500 ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது. இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க. நீ இந்த புத்தகத்தைப் படி. ஆனா ஒரு நிபந்தனை. கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”. இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான். நிசப்தமான இரவு. 11 மணி. இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான். கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை. மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது. கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு. விதி அவனையும் விடவில்லை. காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது. இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது. கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது அதில் இருந்த ஒரு வரியால்....... . ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ????? ? ? ? ? ? ? விலை ரூ.#15