Aggregator

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு!

3 months 1 week ago

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு!

யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தினர் வசமிருந்த கிலோ கணக்கான தங்கம் தற்போது நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்த காலத்தில் வடக்கில் மீட்கப்பட்டவையாகும். இவை தங்கமாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எவ்வளவு தங்கம் உள்ளது என்பதனை ஆராய்ந்து அந்த அறிக்கையை பெற்ற பின்னர் அரசாங்கத்தால் மக்களுக்கு அந்த தங்கத்தை தங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கலாம்.

அத்துடன் யுத்த நிலைமையால் நிருபிக்க முடியாத பகுதியும் இருக்கலாம். மக்கள் பெற்றுக்கொள்ளாதவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அவற்றில் அந்த தங்கத்தின் பகுதியை போட்டும், அரசாங்கத்தினால் நிதி வழங்கியும் வடக்கிற்கான விசேட அபிவிருத்தி நிதியத்தை அமைக்கவும், அதற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ரீதியிலும் வாழும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தால் நாட்டில் இருந்து சென்ற மக்களுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

https://www.samakalam.com/யுத்த-காலத்தில்-மீட்கப்-2/

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

3 months 1 week ago
சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது adminJune 6, 2025 சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டைப் பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும்உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது. பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/216410/

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

3 months 1 week ago

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது

adminJune 6, 2025

annarasa.jpg?fit=1170%2C659&ssl=1

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டைப் பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும்உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது.

பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ்  அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/216410/

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 1 week ago
06 JUN, 2025 | 10:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார். ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024 தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும். ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இதோடு ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க். மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார். ‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216740

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 1 week ago

06 JUN, 2025 | 10:29 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது  ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

“எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். 

உடனடியாக நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.

trump_musk11.jpg

ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024  தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.

ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

இதோடு  ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.

மேலும் அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால்ர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார்.  அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன்இ ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1இ300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட்  அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.  ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.

‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த  டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட் நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216740

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

3 months 1 week ago
Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 11:16 AM காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. 14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது. காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன. இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216640

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

3 months 1 week ago

Published By: RAJEEBAN

05 JUN, 2025 | 11:16 AM

image

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும்.

யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.

காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும்,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன.

இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216640

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months 1 week ago
2009 ஆம் ஆண்டுக்கு முன் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த பொருட்கள் தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன : 300 கொள்கலன்கள் குறித்து அர்ச்சுனா வெளியிட்ட பரபரப்பு தகவல் Published By: VISHNU 06 JUN, 2025 | 06:39 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன. 2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெற்றி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர். இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும். அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர். அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது. 2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர். எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர். இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன். ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார். https://www.virakesari.lk/article/216732

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி புதைகுழியில் கைக்குழந்தைகள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 18 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 06 JUN, 2025 | 06:36 AM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால், அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதுவரையில் ஆடை, அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால், வெற்று உடல்களாகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக காணப்படலாம் எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/216733

தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு

3 months 1 week ago
Published By: VISHNU 05 JUN, 2025 | 09:55 PM யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ' பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்' உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின் விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது. பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/216729

தையிட்டி பிரச்சினை குறித்து தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 09:55 PM

image

யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ' பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்' உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின்  விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/216729

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் மேலும் ஒரு புகார் - குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் என்ன நடந்தது?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி 5 ஜூன் 2025 இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது. "இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்களின் தகவலை மேற்கோளாகக் கொண்டு, அதானி குழுமத்தின் முக்கியப் பிரிவான அதானி எண்டர்பிரைசஸுக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பல எல்பிஜி சரக்கு கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டார். இரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அல்லது நபரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்த நேரத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது. அறிக்கை என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது. ஆசியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி, தன் மீதான கடந்த கால குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கன் ஜர்னல் தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் கௌதம் அதானி மீது மோசடி மற்றும் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது. புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம் நடத்தும் விசாரணை அதானிக்கு பெரும் சவாலானதாக மாறக்கூடும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்றும் செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் கப்பல்களின் நகர்வுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். கப்பல்களை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகையில், கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் போது, பொதுவாக தங்களது அடையாளத்தை மறைத்து இயக்கும் கப்பல்கள் பயன்படுத்துவதைப் போன்ற சில நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்பிஜி சரக்கு கப்பல்களைக் கண்காணிக்கும் லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸில் கடல்சார் ஆபத்து ஆய்வாளராக இருக்கும் டோமர் ரானன், கப்பலின் உண்மையான இருப்பிடம் அல்லது அடையாளத்தை மறைக்க, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மீது குறுக்கீடு செய்வது பொதுவான முறை என்று விளக்குகிறார். கப்பலின் நிலை குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பு தான் இந்த தானியங்கி அடையாள அமைப்பு (AIS). கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதானிக்காக எல்பிஜியை எடுத்துச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய எஸ்எம்எஸ் பிரதர்ஸ் சரக்குக் கப்பலில் இதேபோன்ற செயல்முறை காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது. லாயிட்ஸ் லிஸ்டின் கடல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆய்வு செய்த இந்த இதழ், அந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தெற்கு இராக்கில் உள்ள கோர் அல்-ஜுபைரில் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டறிந்தது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இராக்கில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை என அறிக்கை கூறுகிறது. எனினும், இராக்கின் டோன்புக் பகுதியில் உள்ள எல்பிஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்எம்எஸ் ப்ரோஸுடன் பொருந்தக் கூடிய ஒரு கப்பலின் படங்களை செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இந்தச் செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்களைப் பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இரானில் நின்ற கப்பல் உண்மையில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதானி குழுமம் பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் கூறியுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கை குறித்து, அதானி குழுமம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது. "அதானி குழும நிறுவனங்களுக்கும், இரானிய எல்பிஜிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது. இரானிய எல்பிஜி தொடர்பான தடைகளைத் தவிர்க்க அல்லது அதில் ஈடுபட திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்தும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை முற்றிலும் தவறான கணிப்புகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. "அதானி குழுமம் இரான் மீதான அமெரிக்கத் தடைகளை வேண்டுமென்றே மீறுகிறது என்ற கூற்றை நாங்கள் மறுக்கிறோம். கொள்கை ரீதியாக, அதானி குழுமம் அதன் எந்த துறைமுகத்திலும் இரானிய சரக்குகளைக் கையாளுவதில்லை. இதில் இரானில் இருந்து வரும் எந்தவொரு பொருளோ அல்லது இரானியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களும் அடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. "இரானியர்களுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலையும் அதானி குழுமம் நிர்வகிக்கவோ அல்லது எந்த வசதிகளையும் வழங்கவோ இல்லை. இந்தக் கொள்கை எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது." வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல், நேரடியாக தங்களால் கையாளப்படவில்லை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது என்றும் அதானி குழுமம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதை காட்டும் ஆவணங்களால் இந்தக் கூற்றை அக்குழுமம் உறுதிப்படுத்துகிறது. எஸ்எம்எஸ் ப்ரோஸ் உள்ளிட்ட எந்தக் கப்பலையும் இயக்கவில்லை என்றும், அவை எங்களுடைய சொத்துகள் அல்ல என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் அதானிக்கு எதிரான பழைய வழக்குகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில், கௌதம் அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய கூட்டாளி என்று விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தனது நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, அந்த விஷயத்தை மறைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் கூறியது. அமெரிக்காவில் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் இந்தியத் தொழிலதிபர் அதானி தான். கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மேலும் 6 பேர் மீது , சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, நியூயார்க்கின் கிழக்கு மாகாணத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது. கௌதம் அதானியின் சில பிரதிநிதிகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அதில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து விவாதம் நடந்ததாகவும், கடந்த மாதம் தான் புளூம்பெர்க் தனது அறிக்கைகளில் ஒன்றில் கூறியது. வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் தனது அறிக்கையில் இந்த சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதானி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில், அதானி குழும உரிமையாளர்களான கௌதம் அதானி மற்றும் வினோத் அதானி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, 2020 முதல் தனது 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்து 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதும் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் 37 போலி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவை பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானியின் நிகர சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அல்லது ரூ.6.63 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார். ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lk2e27xj1o

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் மேலும் ஒரு புகார் - குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் என்ன நடந்தது?

3 months 1 week ago

கௌதம் அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி

5 ஜூன் 2025

இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது.

"இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணித்த சில சரக்கு கப்பல்களின் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கும் கப்பல்கள் வழக்கமாக பயன்படுத்துவதை ஒத்ததாக இருந்தது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இவை, தடையில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்களின் தகவலை மேற்கோளாகக் கொண்டு, அதானி குழுமத்தின் முக்கியப் பிரிவான அதானி எண்டர்பிரைசஸுக்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பல எல்பிஜி சரக்கு கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே மாதம் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டார்.

இரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அல்லது நபரும் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் அறிவித்த நேரத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

அறிக்கை என்ன சொல்கிறது?

முந்த்ரா துறைமுகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முந்த்ரா துறைமுகம் அதானி குழுமத்தால் இயக்கப்படுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பணக்காரரான கௌதம் அதானி, தன் மீதான கடந்த கால குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கன் ஜர்னல் தனது அறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்காவில் கௌதம் அதானி மீது மோசடி மற்றும் லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புரூக்ளினில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலகம் நடத்தும் விசாரணை அதானிக்கு பெரும் சவாலானதாக மாறக்கூடும் என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவர் என்றும் செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து பாரசீக வளைகுடாவிற்குச் செல்லும் கப்பல்களின் நகர்வுகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

கப்பல்களை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகையில், கப்பல்களின் நகர்வுகளைக் கண்காணிக்கும் போது, பொதுவாக தங்களது அடையாளத்தை மறைத்து இயக்கும் கப்பல்கள் பயன்படுத்துவதைப் போன்ற சில நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எல்பிஜி சரக்கு கப்பல்களைக் கண்காணிக்கும் லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸில் கடல்சார் ஆபத்து ஆய்வாளராக இருக்கும் டோமர் ரானன், கப்பலின் உண்மையான இருப்பிடம் அல்லது அடையாளத்தை மறைக்க, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மீது குறுக்கீடு செய்வது பொதுவான முறை என்று விளக்குகிறார்.

கப்பலின் நிலை குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பு தான் இந்த தானியங்கி அடையாள அமைப்பு (AIS).

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதானிக்காக எல்பிஜியை எடுத்துச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய எஸ்எம்எஸ் பிரதர்ஸ் சரக்குக் கப்பலில் இதேபோன்ற செயல்முறை காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது.

லாயிட்ஸ் லிஸ்டின் கடல் தேடல் தளத்தைப் பயன்படுத்தி கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) ஆய்வு செய்த இந்த இதழ், அந்தக் கப்பல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி தெற்கு இராக்கில் உள்ள கோர் அல்-ஜுபைரில் நங்கூரமிட்டிருப்பதைக் கண்டறிந்தது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், இராக்கில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) அதன் இருப்பிடத்தில் காணப்படவில்லை என அறிக்கை கூறுகிறது.

எனினும், இராக்கின் டோன்புக் பகுதியில் உள்ள எல்பிஜி முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்எம்எஸ் ப்ரோஸுடன் பொருந்தக் கூடிய ஒரு கப்பலின் படங்களை செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது.

இந்தச் செய்தி அறிக்கையில், செயற்கைக்கோள் படங்களைப் பகுப்பாய்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளனர். இரானில் நின்ற கப்பல் உண்மையில் எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதானி குழுமம் பதில்

அதானி குழுமம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் கூறியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கை குறித்து, அதானி குழுமம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்துள்ளது.

"அதானி குழும நிறுவனங்களுக்கும், இரானிய எல்பிஜிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை ஆதாரமற்றது. இரானிய எல்பிஜி தொடர்பான தடைகளைத் தவிர்க்க அல்லது அதில் ஈடுபட திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்தும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை முற்றிலும் தவறான கணிப்புகள் மற்றும் ஊகங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"அதானி குழுமம் இரான் மீதான அமெரிக்கத் தடைகளை வேண்டுமென்றே மீறுகிறது என்ற கூற்றை நாங்கள் மறுக்கிறோம். கொள்கை ரீதியாக, அதானி குழுமம் அதன் எந்த துறைமுகத்திலும் இரானிய சரக்குகளைக் கையாளுவதில்லை. இதில் இரானில் இருந்து வரும் எந்தவொரு பொருளோ அல்லது இரானியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களும் அடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"இரானியர்களுக்குச் சொந்தமான எந்தவொரு கப்பலையும் அதானி குழுமம் நிர்வகிக்கவோ அல்லது எந்த வசதிகளையும் வழங்கவோ இல்லை. இந்தக் கொள்கை எங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது."

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கப்பல், நேரடியாக தங்களால் கையாளப்படவில்லை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது என்றும் அதானி குழுமம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கப்பல் ஓமனின் சோஹர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதை காட்டும் ஆவணங்களால் இந்தக் கூற்றை அக்குழுமம் உறுதிப்படுத்துகிறது.

எஸ்எம்எஸ் ப்ரோஸ் உள்ளிட்ட எந்தக் கப்பலையும் இயக்கவில்லை என்றும், அவை எங்களுடைய சொத்துகள் அல்ல என்று அதானி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. எனவே, இந்தக் கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான பழைய வழக்குகள்

கௌதம் அதானி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையில், கௌதம் அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய கூட்டாளி என்று விவரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தனது நிறுவனங்களில் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெறுவதற்காக அதானி 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் வழங்கி, அந்த விஷயத்தை மறைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் கூறியது.

அமெரிக்காவில் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதல் இந்தியத் தொழிலதிபர் அதானி தான்.

கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் மற்றும் மேலும் 6 பேர் மீது , சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டதாக, நியூயார்க்கின் கிழக்கு மாகாணத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

கௌதம் அதானியின் சில பிரதிநிதிகள் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சில அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அதில் கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது குறித்து விவாதம் நடந்ததாகவும், கடந்த மாதம் தான் புளூம்பெர்க் தனது அறிக்கைகளில் ஒன்றில் கூறியது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் தனது அறிக்கையில் இந்த சந்திப்பைக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அதானி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது.

இதில், அதானி குழும உரிமையாளர்களான கௌதம் அதானி மற்றும் வினோத் அதானி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, 2020 முதல் தனது 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை மோசடி செய்து 100 பில்லியன் டாலர்கள் சம்பாதித்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மீதும் அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் 37 போலி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும், அவை பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குள், அதானியின் நிகர சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக அல்லது ரூ.6.63 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார்.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lk2e27xj1o

சுய அறிமுகம் பற்றி

3 months 1 week ago
இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது ஒரு உணவக மேலாளராக பணியாற்றுகிறேன். திட்டமிடல், மனித வள மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் சிறந்த அனுபவம் உள்ளேன். பொழுதுபோக்காக புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன் மற்றும் சமூக சேவைகளில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 3. வணக்கம்! என் பெயர் நந்தினி. நான் ஒரு பயோடெக் பட்டதாரி மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவள். பல்கலைக்கழகத்தில் என் திட்ட வேலை நேரத்தில் நோய் எதிர்ப்பு முறை குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். உயிரியல், மருந்தியல் மற்றும் ஆய்வுக் கோட்பாடுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னுடைய குறிக்கோள் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி, ஆரோக்கிய உலகை உருவாக்க உதவுவது. 4. வணக்கம். என் பெயர் கார்த்திக். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். கலைஞர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். சிஎன்சி இயந்திரங்கள், CAD மற்றும் தொழிற்துறை தானியங்கி அமைப்புகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டை விரும்புகிறேன். பொழுதுபோக்காக வாகனங்களை பழுது பார்க்கும் ஆர்வம் உள்ளது. நான் திட்டமிடும் திறமையுடன் கூடிய குழு நபியாக இருக்கிறேன். 5. வணக்கம், என் பெயர் ஸ்ரீதேவி. நான் ஒரு ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். தமிழும் ஆங்கிலமும் மொழிப் பயிற்சி அளிப்பதில் சிறந்த அனுபவம் உள்ளது. மாணவர்கள் வளர்ச்சி என் முக்கிய கவனம். நான் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நேர்த்தியான வகுப்புகள் மற்றும் மாற்றுத் போக்குகள் என் பயிற்சியின் சிறப்பாக இருக்கின்றன. 6. வணக்கம்! என் பெயர் விஜய். நான் Chennaiயைச் சேர்ந்த IT நிபுணர். Cloud computing மற்றும் data securityயில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக ஒரு மத்திய நிறுவனத்தில் System Administrator ஆக பணியாற்றுகிறேன். வேலை நேரத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கமும் நேர்த்தியும் எனது அடையாளங்கள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவன். 7. என் பெயர் அனுஷா. நான் ஒரு கிராபிக்ஸ் டிசைனர். Photoshop, Illustrator மற்றும் Canva போன்ற மென்பொருட்களில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கலை மற்றும் வடிவமைப்பில் சிறந்த விழிப்புணர்வு உள்ளவள். வாடிக்கையாளர் தேவைகளை புரிந்து, தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்குவது எனது சிறப்பு. சமூக ஊடக கம்பெயின்கள் மற்றும் பிராண்டிங் பற்றிய தெளிவும் எனக்கு உள்ளது. 8. வணக்கம், நான் ராஜேஷ். நான் ஒரு இளம்வயது தொழில் முனைவோர். Ecommerce தளங்களை உருவாக்கி விற்பனையை மேம்படுத்துவதில் ஆர்வம் உள்ளது. Shopify மற்றும் WordPress தளங்களில் சிறந்த அனுபவம். வாடிக்கையாளர் பக்கவாதம், சந்தை ஆய்வு மற்றும் மாறும் நுகர்வோர் பழக்கங்களை புரிந்து கொள்ளும் திறன் எனக்குள்ளது. அடிக்கடி புத்தகங்களை வாசித்து வழிகாட்டுதல்களை செயல்படுத்துவேன். 9. என் பெயர் லதா. நான் புள்ளியியல் பட்டதாரி. தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறனில் சிறந்தவள். Excel, SPSS, R மற்றும் Python போன்ற கருவிகளில் வேலை செய்துள்ளேன். சமூக ஆய்வுகளுக்கான தரவுகளை சேகரித்து, தீர்வுகளை பரிந்துரைக்கும் அனுபவம் உள்ளது. திட்டமிடல் மற்றும் நேர நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவள். 10. வணக்கம்! என் பெயர் இம்ரான். நான் ஒரு கணக்காளர். Tally, QuickBooks மற்றும் GST தொடர்பான நடவடிக்கைகளில் அனுபவம் உள்ளது. நிறுவன நிதி மேலாண்மை, வருமான வரி தாக்கல் மற்றும் ஆண்டுத் திட்டங்களில் சிறந்த பங்கு வகித்துள்ளேன். ஒழுங்கும் நம்பிக்கையும் எனது வேலை நெறிமுறைகள். நேரம் காப்பதும், தவறின்றி கணக்கிடுதலும் எனது பலம்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
நம்ம தலைவன் கழுவி ஊத்துவான்னு நினைச்சேன் ஆனா இப்டி காரி துப்புவான்னு எதிர்பார்க்கலே!!

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 1 week ago
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) உஸ்மன் கவஜா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கேசல்வோட் போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago
இரண்டுமே மூழ்கப்போகிற படகுகள். அதில் இரு பகுதியினரும் ஏறி சவாரி செய்யத்துடிக்கின்றனர். அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் கூட்டுச்சேர தூது, நாமே மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள், அடுத்த கட்சிகளின் ஆதரவில் ஆட்சியைப்பிடிக்க எந்தப்பேயோடும் கூட்டுச்சேர அழைப்பு. எங்கே இருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் பிழைத்த மாதிரித்தான். சுமந்திரன் அனுரவில் கடுப்பான கடுப்பில் இருக்கிறார். வாழ்த்து சொன்னார், நேரில் போய்ப்பார்த்தார், படம் பிடித்தார், அச்சுறுத்தல் விடுத்தார் ஒன்றுக்கும் அனுராவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அவரோ விடுகிற மாதிரியில்லை. தமிழ் மக்கள்யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுடனேயே அனுரா சேர்ந்து கொள்வார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவருக்கு தேவையில்லை, இவர்களோடு சேர்த்து இவர்களது எஜமானர்களையும் மக்கள் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.

ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார்

3 months 1 week ago
நல்ல முடிவு! பேரினவாத கட்சிகள் வேறு, ஈ. பி. டி .பி. கட்சி வேறல்ல. டக்கிளஸ், இப்போ தனித்து விடப்பட்டுள்ளார், அதில தமிழ்மக்கள் பாசம் பெருகி ஓடுவதுபோல் அறிக்கை, நிபந்தனை வேறு அவருக்கு.