Aggregator
இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!
27 Nov, 2025 | 05:14 PM
![]()
இலங்கைக்குக் அருகில் வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த தாழ் காற்றழுத்தம், இன்று (27) சில நேரங்களுக்கு முன் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய சூறாவளிக்கு "டித்வா"(Ditwah) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பெயர் யேமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டது. யேமனில் உள்ள சொகோத்ரா தீவின் பிரசித்தி பெற்ற டிட்வா லகூனை குறிக்கும் இந்தப் பெயர், அப்பகுதியின் தனித்துவமான கடல்சார் மற்றும் கரையோர சுற்றுச்சூழலை வெளிப்படுத்துகிறது.
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. ESCAP ‘புயல்கள் தொடர்பான குழு’ முன்பே அங்கீகரித்துள்ள நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து சூறாவளிகளுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் யேமன் பரிந்துரைத்த பெயராக ‘டித்வா’, அந்த நாட்டு கரையோர மரபையும் கடல் வளங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இதேவேளை, இலங்கையின் கடல் பகுதியில் குறித்த சூறாவளி நீடிப்பதாலும் மற்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலத்தின் ஒரு பாதி இலங்கையின் நிலப்பகுதியில் நீடிப்பதாலும் இதன் நகர்வு தற்போது வரை குழப்பமான நிலையில் உள்ளதாகவும் எங்கு கரையை கடக்கும் என்பது தற்போது பெரும் சந்தேகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்திய வானிலை மையம் இது குறித்து இப்போது வரை கரைய கடக்கும் இடம் பற்றி தெரிவிக்கவில்லை ஆனால் நிகழ்வானது சென்னை வரை பயணிக்கும் போல் வரைபடத்தில் காண்பித்துள்ளனர்.

அமைதியாக ஆனால் 'அதிரடியாக' நீக்கப்பட்ட சரித் அசலன்க
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
சீரற்ற வானிலை; நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிப்பு!
சீரற்ற வானிலை; நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிப்பு!
27 Nov, 2025 | 05:03 PM
![]()
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே 75 பிரதான வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதிகளை சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீரற்ற வானிலை காரணமாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், வடமத்திய, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வீதிகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன், மலைப் பிரதேசங்களில் பல மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு பாதுகாப்பாகப் பயணிக்க 24 மணி நேர அவசரகால சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார்.
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள்
புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள்
புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்….
தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நியூசிலாந்து
நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன.
நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிருந்தன.
திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் பசுமைக்கட்சி உறுப்பினர் டேவிட்சூ பிறிட்ஜ் ஏற்கவே செனட்டில் மாவீரர் நாளை கௌரவித்து உரையாற்றிய போது தமிழர்களின் நாட்காட்டியில் மாவீரர் நாள் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றெனவும் கண்ணியம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா
பிரித்தானியாவை பொறுத்தவரை லண்டன் எக்ஸல்மண்டபம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையம் ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது .
அதேபோல ஸ்கொட்லாந்து உட்பட்ட ஏனைய முக்கிய இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
பிரித்தானியாவில் அரசியல் கட்சிகளின் பிரபலங்களும் நினைவேந்தல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் ஆளும் தொழிற்கட்சியின் முன்னாள் நிழல் நிதியமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் ஆகியோர் தமது செய்திகளை காணொளியில் வெளியிட்டனர்.
அதேபோல தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிடலை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டிருந்தார்.
காணொளி - https://youtu.be/cpRrbAbCruM



பிரான்ஸ்
பிரான்சில் இன்று பல நகரங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
முதன்மை நிகழ்வு தலைநகர் பரிசின் புறநகரப் பகுதியான லே போர்த் மார்லி பகுதியில் உள்ள பிரமிட் பெரு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதேநேரத்தில் கப்டன் கஜன், லெப்.கேர்ணல் நாதன் மற்றும் கேர்ணல் பரிதி ஆகியோரின் வித்துடல்கள் உள்ள பந்தன் கல்லறை தோட்டத்தில் மதியம் 12.35 க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது.
இதனைவிட போர்தோ, நீஸ், லியோன் , தூலூஸ் , ஜியான் உட்பட்ட பல முக்கிய நகரங்களிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.
இதேபோல சுவிற்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி , டென்மார்க் , நோர்வே மற்றும் சுவிடன் உட்பட்ட நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
புலம்பெயர் நாடுகளில் அதிகமான ஈழத்தமிழ் மக்கள் வசிக்கும் கனடாவிலும் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
https://ibctamil.com/article/heroes-day-event-in-the-diaspora-1764243639
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
இன்று மாவீரர் தினம்!
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
விடுதலைப் புலி பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் – சரத் வீரசேகர
27 Nov, 2025 | 04:19 PM
![]()
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில்,
நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், அதாவது விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பிரபாகரனின் பிறந்த நாளில், நாட்டின் பிரிவினைக்காக, தனிநாடு கோரி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளை 'வீரர்கள்' போல கொண்டாடுவதற்கு இடமளிப்பது அரசாங்கத்தின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. ஆனால், இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டது.
எந்தத் தாயும் தனது பிள்ளைப் பயங்கரவாதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும், வீட்டில் ஒரு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குழுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துவது பிரிவினைவாதத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கும் சமமாகும்.
தினகரன் பத்திரிகை இந்த 'புலிகளின் அரசியல்' பற்றி விரிவான பிரச்சாரத்தை வழங்குகிறது. நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன், மீண்டும் ஒரு போரைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? இத்தகைய செயல்பாடுகளால் நல்லிணக்கம் ஏற்படுமா? இது மேலும் பிரிவினையைத் தான் உருவாக்கும். இவற்றை நிறுத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கனடாவுக்குச் சென்று, கனடா தமிழ் காங்கிரஸ் நடத்திய நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசும்போது, கனடாவில் வீதியை மூடி போராட்டங்கள் நடத்திய டயஸ்போரா தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உலகின் ஒரே நாடற்ற இனம் தமிழர்கள் என்றும், அது தமக்கு ஒரு துரதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நாட்டிலும் ஒரு தனி நாட்டை அல்லது தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் கூறுகிறார். இது மீண்டும் விடுதலைப் புலிகளுக்குத் தலைதூக்க இராசமாணிக்கம் பகிரங்கமாக அழைப்பு விடுப்பது போல் தெரிகிறது. அவர் ஒருமித்த நாட்டிற்கு (Unitary State) சத்தியப்பிரமாணம் செய்தவர் என்பதால், அவர் ஒரு தனிநாடு பற்றிப் பேசினால், அவரால் பாராளுமன்றத்திற்கு வர முடியாது.
எமது இராணுவம் 295,000 அப்பாவி தமிழ் மக்களை மீட்டே இந்தப் போரில் வெற்றி பெற்றது. அந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீண்டும் குடியேற்றினோம்.
தமிழ் மக்களுக்கு அன்பு காட்டுவதாகக் கூறும் இந்தத் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அப்போது உதவி செய்ய வந்தார்களா?
இன்று வடக்கிலும் வெளிநாடுகளிலும் அமர்ந்துகொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முயற்சிக்கும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இது தேசத்துரோகச் செயலாகும்.
மட்டக்களப்பு, வவுணதீவில் அண்மையில் தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டதைக் கண்டோம். இது பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றம் என்பதால், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தால் பிணை கிடைக்காது. ஆனால், அதைத் தவிர வேறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் மட்டும் 528 பௌத்த நினைவுச்சின்னங்கள் / தொல்லியல் தளங்கள் உள்ளன. வேறு எந்தப் பகுதியிலும் இத்தகைய எதிர்ப்பு இல்லை. இந்தப் பகுதிகளில் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது, 'இவை எமது பூர்வீக நிலம்' என்று காட்டுவதற்கே. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அரசாங்கம் உடனடியாக இந்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
27 Nov, 2025 | 04:06 PM
![]()
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!
குருதி கொடை முகாம்களுக்கு புலனாய்வுப் பிரிவினர் கெடுபிடி!
வல்வெட்டித்துறையில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடைமுகாமை முன்னெடுத்தமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இரத்ததானச் சங்கத்தின் ஊடாக இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கதலைவர் பா.வீரசுரேந்திரன் தெரிவித்ததாவது, வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தர்களது ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட 83ஆவது இரத்ததான முகாம் நேற்று 26ஆம் திகதி புதன்கிழமை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இரத்த தான முகாம்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் தற்போது பெரும் குருதித்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை ஈடுசெய்வதற்கு பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தோம். ஆனால் இந்தப் பணிகளுக்கு புலனாய்வுத் துறையால் பெரும் நெருக்குவாரங்கள் வழங்கப்படுகின்றன.
குறித்த இரத்ததான முகாம் ஆரம்பமானது முதல் வல்வெட்டித்துறை பொலிஸ் தரப்பு தொடங்கி புலனாய்வுப் பிரிவினர் வரை மாறிமாறி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எமக்கு மன உளைச்சலைத் தரும் வகையில் இந்தச்செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. கெடுபிடிகள் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படுமாக இருந்தால் அந்த நாளுடன் இரத்ததான சேவையில் இருந்து முற்றாக விலகிவிடுவேன் என்றார்.
இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை !
இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை !
27 Nov, 2025 | 05:45 PM
![]()
இலங்கைக்கு வரும் விமானங்கள் அவசர வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாவிட்டால் அவை இந்தியாவின் திருவனந்தபுரம் (Trivandrum) அல்லது கொச்சி (Cochin) விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுரா கருணாதிலக தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! | Virakesari.lk