3 months 1 week ago
எண் சோதிடம். பிறந்த எண்ணில் மட்டுமே தங்கி இருக்கவில்லை பிறந்த திகதி பிறந்த தேதி மாதம் வருடம் மூன்றும் கூட்டிய எண் இப்படி நிறைய இருக்கிறது நான் படித்து 45. ஆண்டுகள் மறந்து விட்டது ஆனால் சோதிடம். ஒரு அரிய கலை அதை சொல்வது கடினம் ஒவ்வொரு மனிதனின் குறிப்பு கைரேகை எண் சோதிடம். இவற்றை பொய் என்று உங்களால் நிறுவ முடியுமா?? இவற்றை சொல்பவர் இந்த விடயங்களை அறிவு அற்றவர் என்று ஏன் இருக்க முடியாது??
3 months 1 week ago
புத்தகத்தை படித்து எடுத்தார்கள் சோதிடத்தை சொல்லி இல்லை,....
3 months 1 week ago
இவரை கருதவில்லை. பொதுவாக சொன்னேன். தொலைக்காட்சியில் சிலரை பார்த்துள்ளேன். இணையத்திலும் பார்த்துள்ளேன்.
3 months 1 week ago
இப்படிச் சொல்வதால் இது கிரகோரியன் நாட்காட்டியின் படியே செயல்படுகின்றது என்று ஒரு அர்த்தமும் வருகின்றதல்லவா, அண்ணா.............. இதை நாங்கள் ஆங்கில கலண்டர் என்றும் சொல்லுகின்றோம். அப்படியாயின் தமிழ் நாட்காட்டி, இஸ்லாமிய நாட்காட்டி, ஐரோப்பாவில் கிரகோரியனுக்கு முன்னிருந்த ஜீலியன் நாட்காட்டி, இன்னும் உலகெங்கும் இருக்கும் ஆயிரம் நாட்காட்டிகள் போன்றவற்றுடன் ஒரு தொடர்பும் மனிதர்களுக்கு இல்லையா............. அரசியலில் சிறப்பாக செயல்படமாட்டார்கள் என்ற குணாம்சம் ஏதாவது ஒரு எண்ணுக்கு, சில எண்களுக்கு இருக்கின்றதா................ தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அரசியலில் உருப்படவே போவதில்லை என்னும் நிலையிலும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்............. அவர்களின் எண்கள் என்னவாக இருக்கும் என்ற ஒரு ஆவல்தான்...................🤣. ராமதுரை அவர்கள் சொன்னது போலவே சோதிடத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட தெரிவு/விருப்பம் என்று போவது தான் சிறப்பு போல...........👍.
3 months 1 week ago
https://en.m.wikipedia.org/wiki/Jayant_Narlikar
3 months 1 week ago
சோதிடர்கள் சோதிடத்தில் Phd எடுத்துள்ளார்கள். இவர்கள் எதை நிறுவி Phd எடுத்தார்கள்??
3 months 1 week ago
எண் சோதிடம். சொல்கிறது 8 ஆம். நம்பர் அரசியலில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அது எம் ஜி ஆர் க்கு உண்மை இல்லையா??? இந்த எண் சோதிடம் மக்களை வைத்து ஆராய்ந்து எழுதப்பட்டது அதாவது முதலாவது நம்பரின். ஆயிரம் பேரை ஆராய்ந்து எழுதியது தான் முதலாவது நம்பருக்கான. பலன்கள் இப்படி தான் மற்றைய எண்களும். அனேகமாக அது உண்மை போலிருக்கும்.
3 months 1 week ago
சாதாரணமாக நன்றி என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியாதுள்ளது, @கிருபன் . எவ்வளவு ஒரு பெரிய காரியத்தை தனி ஆளாக செய்துள்ளீர்கள்................🙏🙏. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். @நந்தன் எப்பவோ எங்களை எல்லாம் முந்திக் கொண்டு போய்விட்டார். அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அதிகமான நாட்கள் இரண்டாம் இடத்தில் இருந்தவர் @புலவர் என்றே நினைக்கின்றேன்...............👍. அடுத்த போட்டி எப்ப....................❤️.
3 months 1 week ago
இல்லை ....சோதிடம். உண்மை ஆனால் அது எவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை .....தெரியாத காரணத்தால் அவர்கள் சொல்வது பிழை அதாவது சோதிடர்கள். பொய்யார்கள். விளங்கியதா ???
3 months 1 week ago
🤣............ பல வருடங்களின் முன் இங்கு அமெரிக்காவில் ஒரு நண்பனின் வீட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களது குழந்தையின் பிரசவம் நடைபெற வேண்டி வந்தால், அது அடுத்த 17ம் திகதி என்று மருத்துவரால் ஒரு நாள் குறிப்பிடப்பட்டது. அவர்கள் 17 வேண்டவே வேண்டாம் என்றும், 18ம் திகதி என்று மாற்ற முடியுமா என்றும் கேட்டார்கள். அந்தப் பிள்ளை வளர்ந்து இன்று அமோகமாக இருக்கின்றது. எனக்கும் ஒரு மகள் போலவே. ஆனால் பிறந்த திகதி 17, 18, 19,........ இதில் எது என்று எனக்கு ஞாபகமில்லை. பெற்றோர்களினதும், எங்கள் எல்லோரினதும் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் மகள் என்றும் நல்லாவே இருப்பார். எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து முடித்திருப்பாரோ.................😜. தமிழில் மிக இலகுவான, தரமான அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் என்றால் அது திரு. என். ராமதுரை அவர்கள். 2018ம் ஆண்டில் மறைந்தார். 'தினமணிசுடர்' ஆசிரியராக இருந்தார். அவருடைய இணைய தளம் இன்றும் இயங்குகின்றது: https://www.ariviyal.in/ வானவியல் சம்பந்தமாகவும் பல எளிமையான கட்டுரைகள் அவருடைய தளத்தில் இருக்கின்றது. உதாரணமாக சனிப்பெயர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை. ராமதுரை அவர்கள் மிகவும் தன்மையான ஒரு மனிதர் போல. அவர் தடாலடியாக எதையும் நிராகரிக்கவில்லை, ஆனால் சோதிடம் ஒரு அறிவியல் அல்ல. அதை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட இஷ்டம் என்று கேள்வி - பதில் பகுதிகளில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் முன்னரே எனக்கு இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்னர் சுத்தமாகவே இவை மனித மனங்களின் அடியில் என்றும் தங்கியிருக்கும் அச்சங்களின் ஒரு வகையான வெளிப்பாடுகள் என்று தான் தோன்றுகின்றது. திருக்கோணேஸ்வரர் கோவிலின் கீழே நின்று முகம் பார்த்து பலன் சொல்பவர்களைப் பற்றிய என் அனுபவத்தை கடந்த வருடம் இலங்கை போய் வந்து இங்கு களத்தில் எழுதியிருந்தேன். மனிதர்களுக்கு என்றே சில பொதுவான குணங்கள் இருக்கின்றன போல. அவற்றை இந்த சோதிடர்கள், ஒரு அனுபவமுள்ள விற்பனைப் பிரதிநிதி போல, நம்பத்தகுந்த வகைகளில் சொல்லுகின்றார்கள், எழுதுகின்றார்கள் போல.
3 months 1 week ago
நன்றி கிருபன். பங்குனி 7ம் திகதி இந்தத் திரியைத் திறந்ததில் இருந்து, இன்றுவரை சிறப்பாக வழிநடத்திச் சென்று, சிறப்புற முடித்து வைத்தமைக்கு மிக்க நன்றி. மூன்று மாதங்கள் கிருபன். எப்படித்தான் பொறுமையாக இருந்தீர்களோ தெரியவில்லை.
3 months 1 week ago
@நந்தன் கூகிள் ஷீற்றில் பதில்களை தெரிவு செய்ய முக்காலமும் தெரிந்த முனிவர் ஒருவரின் சிஷ்யை உதவியதாகத் தகவல்😜 நீங்களும் சட்ஜீபிடியை விட்டுவிட்டு கூகிள் ஷீற்றைப் பாவித்திருக்கலாம்!
3 months 1 week ago
புதிய இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்றது மகிழ்ச்சி. கோழியின் தொடரில் 7/8 அரை சதங்கள் மேல் அடித்து தனது திறமையை தொடர்ந்து காண்பித்துள்ளார். @கிருபன் ஜின் போட்டி முடிவுகளை அவ்வப்போது பார்ப்பது ஆட்டநிலவரத்தை இணைய தளத்தில் பார்ப்பதை விட சுவாரசியத்தை கொடுத்தது. சாய் சுதர்சன் போல @நந்தன் கடைசிவரை மற்றைய ஆட்டக்காரர்களால் ஓட்ட எண்ணிக்கையில் எட்டிப்பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார். இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யாது என அறிய ஆவல். சட்ஜீபிடி/செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் போட்டியில் பங்குபற்றலாமா என பார்த்தேன். கேள்விக்கொத்து மிக பெரிதாக காணப்பட்டதால் நேரம் போதவில்லை.
3 months 1 week ago
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது இடத்தில் நகர்ந்த @புலவர் ஐயாவுக்கும், நான்காவது இடத்திற்குச் சென்ற @செம்பாட்டான் க்கும், ஐந்தாவது இடத்தை இறுதி நாளில் எட்டிப் பிடித்த @கந்தப்பு வுக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பல நாட்களாக முன்னணியில் நின்ற @suvy ஐயா, @செம்பாட்டான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! தொடர்ச்சியாக பல நாட்களாக இறுதி நிலையில் நின்ற @goshan_che க்கும், பின்னர் இறுதி நிலையை பிறருக்கு பலநாட்கள் விட்டுக்கொடுக்காமல் நிற்கும் @Ahasthiyan க்கும் நன்றிகள்! யாழ்களப் போட்டி வெற்றியாளர் @நந்தன் க்கான £5 காசோலையை ஐபில் 2025 இல் இறுதி நிலையில் நிற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர் @வீரப் பையன்26 ரொக்கெட்டில் சென்று கையளிப்பார்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @கந்தப்பு , @Eppothum Thamizhan , @vasee , @செம்பாட்டான் , @வீரப் பையன்26 போன்றோருக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய @suvy ஐயா,@ஈழப்பிரியன் ஐயா, @alvayan , @வாத்தியார் க்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.
3 months 1 week ago
முன்னூற்றுக்கு மேற்பட்ட பயணிகளையும், பொதிகளையும் ஏற்றிக்கொண்டு 45,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தை கடலுக்கு மேலால் 1,500 அடி உயரத்தில் பாணந்துறை தொடக்கம் கட்டுநாயக்கா வரை பறப்பது புத்திசாலித்தனமான ஒரு செயலா?
3 months 1 week ago
இதில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் சோதிடம் கேட்டு இந்திய இலங்கை மக்கள் தங்களுக்கு என்று உயர்ந்த வாழ்க்கையை அமைத்து கொண்டனர். சோதிடம் கேட்காத இதர மக்கள் பரதேசிகளாக வாழ்கின்றார்கள்.
3 months 1 week ago
இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Abhishek Sharma (SRH) 141 Runs ஆறு பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன. 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Abhishek Sharma (SRH) 141 Runs எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR 35/5 3.4 35 5 4.4 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR 35/5 3.4 35 5 4.4 @vasee மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav (MI) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Suryakumar Yadav (MI) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Chennai Super Kings எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.
3 months 1 week ago
அவர் செய்து வைச்ச செய்கை அப்பிடி. எனக்கு இனி புள்ளிகள் இல்லை. மற்றவைதான் ஏதாவது பண்ண வேணும். அது நடக்கிற காரியமா.
3 months 1 week ago
எனது வாழ்வில் ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கை பூச்சியமாகவே இருந்தது. காரணம் குடும்ப அங்கத்தவர்களது உயிரிழப்பு. சொத்துக்கள் இருந்தும் நிர்க்கதியாகியிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு உறவுடன் எண்கணித சாத்திரியிடம் அழைத்து செல்லப்பட்டேன். அன்று அவர் கூறிய எனக்கான ஆருடங்கள் சரியானதாகவே இருக்கின்றது. நான் வெளிநாடு செல்வேன் என ஒரு துளி கூட எதிர்பார்க்கவில்லை.அதற்கான அவசியமும் இருந்திருக்கவில்லை. அதிலும் இன்று நான் செய்யும் வேலை பற்றி கனவிலும் சிந்தித்தது இல்லை. சாத்திரகாரர் நீ உனது சொத்துக்களை அனுபவிக்க மாட்டாய் எனவும் வேலையோ ஒரு இடத்தில் நின்று/ இருந்து செய்யும் வேலையும் ஆக இருக்காது எனவும் கூறினார். நானும் அவரை நக்கலாக பார்த்து விட்டுத்தான் சுபாஸ் கபேயில் ஐஸ் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் அந்த சாத்திரி சொன்னது நிஜவாழ்வில் நடக்கின்றது. நான் எழுதியது மற்றவர்கள் சாத்திரங்களை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல. என் அனுபவம் மட்டுமே.
3 months 1 week ago
yes