Aggregator

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 1 week ago
அண்ணர்... ஒரு வேலை இதையே ஒரு தமிழர் செய்திருந்தால் உங்களுடைய வார்த்தை பிரயோகங்கள் இப்படிதான் இருந்திருக்குமா? 😶

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago
03 Jun, 2025 | 01:22 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது. பிரான்ஸிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது. மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய ஏர்பஸ் விமானம் ! | Virakesari.lk

யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது

3 months 1 week ago
இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும். ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை. சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது. அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது வியாழக்கிழமை (05) காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது. இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றனர். யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது - சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் | Virakesari.lk

யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது

3 months 1 week ago

இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05)   யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும்.

ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை.

சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும்  நிகழ்ச்சித்திட்டமானது வியாழக்கிழமை (05)  காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் அருகே ஆரம்பிக்கப்பட்டு யாழ் நகர் ஊடாக பிரவேசித்து நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நிறைவு பெறவுள்ளது.

இதில் மாணவர்கள் பொதுநல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும்  என்றனர்.

யாழில் பொலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான நடைபவனி நடைபெறவுள்ளது - சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் | Virakesari.lk

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை

3 months 1 week ago
03 Jun, 2025 | 03:19 PM வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை. தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை. இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்த வகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது. இந்த காலகட்டம் முடிவடைந்த நிலையில் - அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் நிச்சமயாக வரும். எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற் பரப்பிற்குள்ளான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை | Virakesari.lk

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை

3 months 1 week ago

03 Jun, 2025 | 03:19 PM

image

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல்  வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.

தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை. இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும்.

அந்த வகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.

இந்த காலகட்டம் முடிவடைந்த நிலையில் - அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக் கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் நிச்சமயாக வரும். 

எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற் பரப்பிற்குள்ளான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் ; பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை | Virakesari.lk

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

3 months 1 week ago
03 Jun, 2025 | 04:31 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் | Virakesari.lk

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

3 months 1 week ago

03 Jun, 2025 | 04:31 PM

image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கிணங்க, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிக்க தீர்மானம் | Virakesari.lk

கிருஷாந்தி குமாரசாமி படு​கொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

3 months 1 week ago
கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக மேல்முறையீடு செய்ய செவ்வாய்க்கிழமை (03) மறுத்துவிட்டது. நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில் இருப்பதால் நிவாரணம் கோரினர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியிருந்தனர். அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வா, மனுதாரர்கள் தங்கள் சமர்ப்பிப்புகளில், மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும், இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் கூறினர். சிறைச்சாலை ஆணையர் நாயகம் சார்பாகவும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சட்டமா அதிபர் சார்பாகவும் ஆஜரான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, பல ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினார். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் விருப்பப்படி மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு குற்றவாளியும் அதை சட்டப்பூர்வ உரிமையாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது என்பதும் சட்டமா அதிபர் எழுப்பிய முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாகும். விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்றும், மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர் என்றும் சட்டமா அதிபர் வாதிட்டார். இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டே உயர்நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, அடிப்படை உரிமைகள் மனுவை மறுத்துவிட்டது. 1990களின் பிற்பகுதியில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி வழக்கு, ஒரு பாடசாலை மாணவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரை இராணுவத்தினர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை உள்ளடக்கியது. 1998 ஆம் ஆண்டு ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து, அவர்களின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது. Tamilmirror Online || கிருஷாந்தி குமாரசாமி படுகொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

கிருஷாந்தி குமாரசாமி படு​கொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

3 months 1 week ago

  கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு   ஒருமனதாக மேல்முறையீடு செய்ய செவ்வாய்க்கிழமை (03) மறுத்துவிட்டது.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில் இருப்பதால் நிவாரணம் கோரினர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்த ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வா,  மனுதாரர்கள் தங்கள் சமர்ப்பிப்புகளில், மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும், இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் கூறினர்.

சிறைச்சாலை ஆணையர் நாயகம் சார்பாகவும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சட்டமா அதிபர் சார்பாகவும் ஆஜரான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, பல ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினார். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் விருப்பப்படி மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு குற்றவாளியும் அதை சட்டப்பூர்வ உரிமையாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது என்பதும் சட்டமா அதிபர் எழுப்பிய முக்கிய ஆட்சேபனைகளில் ஒன்றாகும். விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்றும், மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர் என்றும் சட்டமா அதிபர் வாதிட்டார்.

இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டே உயர்நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, அடிப்படை உரிமைகள் மனுவை மறுத்துவிட்டது.

1990களின் பிற்பகுதியில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி வழக்கு, ஒரு பாடசாலை மாணவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரை இராணுவத்தினர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை உள்ளடக்கியது.

 1998 ஆம் ஆண்டு ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து, அவர்களின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தது.

Tamilmirror Online || கிருஷாந்தி குமாரசாமி படுகொலை: குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 1 week ago
விற்பனைக்கு வைத்திருக்கும் பொருளை… அடிக்கடி அழைந்து கொண்டு இருந்தால், வியாபாரி கோவிப்பார்தானே. 😂 சிங்களப் பயல்… பச்சை தண்ணியிலை பலகாரம் சுடப் போன ஆள் போலை இருக்கு. 🤣

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 1 week ago
நாட் கணக்கில் வாடகைக்கு எடுக்கலாம் என்றால்… பயங்கர மலிவாய் இருக்கும் போல. 😂 லாபாய்…. லாபாய்.. என்று, கூவி விற்க வேண்டியதுதான். 🤣

முல்லையில் இவ்வருடத்தில் இதுவரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; பாடசாலைகளில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

3 months 1 week ago
03 JUN, 2025 | 04:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுகின்றது. அதில் மூவர் பாடசாலை மாணவர்கள். எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நீரில்மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலைமாணவிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இருமாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையில் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாதநிலையில் காணப்படுகின்றனர். எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/216483

முல்லையில் இவ்வருடத்தில் இதுவரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; பாடசாலைகளில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

3 months 1 week ago

03 JUN, 2025 | 04:56 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுகின்றது.  அதில் மூவர் பாடசாலை மாணவர்கள். எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நீரில்மூழ்கி 17பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (01)  முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் கோவில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலைமாணவிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ரஜிதரன் கிருசிகா, சற்சொரூபநாதன் ரஸ்மிளா ஆகிய இருமாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இராஜசேகர் நிலாந்தன், சிவநேசன் பிரணவன் ஆகியோருமாக ஒரேநாளில் நான்குபேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர்.

இவ்வாறாக ஒரேநாளில் நான்குபேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையில் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாதநிலையில் காணப்படுகின்றனர். 

எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/216483

இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:53 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை (Richard Marles) தெளிவுபடுத்தினார். கடந்த காலத்தில் சமுத்திரப் பாதுகாப்பு, சட்டவிரோத வர்த்தகம், ஆள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிகளை இதன்போது ஜனாதிபதி பாராட்டினார். சுற்றுலா, முதலீட்டு நடவடிக்கைகளுக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவது, இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இங்கு தெரிவித்தார். அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருடன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், (Paul Stephens), பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் கிரகரி லோரன்ஸ் மொரியாட்டி (Gregory Laurence Moriarty), பிரதிப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சைமன் எரிக் ஓ' கொணர் ( Simon Eric O'Connor), இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் (Lalita Kapur) ஆகியோரும் இதன்போது இணைந்துகொண்டிருந்ததோடு, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டினர். https://www.virakesari.lk/article/216462

இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2025 | 03:53 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை பொருளாதார ரீதியில்  நிலையான  பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை (Richard Marles) தெளிவுபடுத்தினார்.

WhatsApp_Image_2025-06-03_at_2.53.53_PM.

கடந்த காலத்தில் சமுத்திரப் பாதுகாப்பு, சட்டவிரோத வர்த்தகம், ஆள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிகளை இதன்போது ஜனாதிபதி  பாராட்டினார்.

சுற்றுலா, முதலீட்டு  நடவடிக்கைகளுக்கு இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுவதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராட்டுவதாகவும், வர்த்தகம், பொருளாதாரம், அரசியல், சுற்றுலா மற்றும்  முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவது, இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) இங்கு தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-06-03_at_2.53.55_PM.

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருடன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், (Paul Stephens), பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் கிரகரி லோரன்ஸ் மொரியாட்டி (Gregory Laurence Moriarty), பிரதிப் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சைமன் எரிக் ஓ' கொணர் ( Simon Eric O'Connor), இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் (Lalita Kapur)  ஆகியோரும் இதன்போது இணைந்துகொண்டிருந்ததோடு, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டினர்.

WhatsApp_Image_2025-06-03_at_2.53.55_PM_

https://www.virakesari.lk/article/216462

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:33 PM தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியை ஒருவரே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்றையதினம் காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர். இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/216456

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

03 JUN, 2025 | 03:33 PM

image

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய ஆசிரியை ஒருவரே மரணமடைந்துள்ளார். அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

54.jpg

அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவன், மனைவி  இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்றையதினம் காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து  கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போதே கொலை செய்ய திட்டமிட்டிருந்த கணவர் சின்னப்பூவரசன்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216456