Aggregator
இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் - மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
பிரான்ஸில் கருணைக் கொலை மசோதா; நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
உடல் நலக்குறைவோடு நீண்டநாட்கள் வாழ விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் மரணத்தை விரும்பி தேர்வு செய்தவற்கு வழி வகுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் கீழவையில் நேற்று, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோர் மரணத்தை விளைவிக்கும் மருந்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா அதாவது கருணைக் கொலையை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பாவில் இதர நாடுகள் இது போன்ற சட்டத்தை இன்னும் நிறைவேற்றாத நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த முக்கியமான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து எம்பிக்களின் பலத்த கரவொலிக்கு இடையே பேசிய பிரான்ஸ் நாடாளுமன்ற துணை தலைவர் ஆலிவர் ஃபலோர்னி, “கடந்த ஒரு தசாப்தமாக குணப்படுத்த முடியாத நிலையில் நோயுற்று இருப்போர், அவரது உறவினர்களை சந்தித்திருக்கின்றேன். பலர் நீண்ட நாட்கள் வாழவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம் என்று என்னிடம் எப்போதுமே சொல்லி இருக்கின்றனர்” என்றார்.
இந்த மசோதாவின் படி, மரணத்துக்கு உதவக் கூடிய மருந்து என்று வகைப்படுத்தபட்ட மருந்தை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே எடுத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. நோயுற்றோர் தனியாக இதனை போட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அத்தகையோருக்கு ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் மரணத்துக்கான மருந்தைக் கொடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா செனட் அவைக்கும் அனுப்பப்படும். அங்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் இதில் சட்டத்திருத்தம் கோரப்படும் என்ற தெரிகிறது. எனினும், செனட்டை விடவும் தேசிய அவையே பிரான்ஸ்சில் அதிகாரம் மிக்கதாகும்.
மசோதாவில் உள்ள நிபந்தனைகள்
குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர் 18 வயதுக்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவராக பிரான்சில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
நோயாளி உண்மையிலேயே குணப்படுத்த முடியாத நோயால் துன்படுகிறார் என்பதை அறிய நோயாளியை மருத்துவக் குழு பரிசோதிக்கும். அதன் பின்னரே இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மருந்தை எடுத்துக் கொள்ள முடியும்.
தீவிர மனநலன் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள், அல்சமீர் போன்ற நரம்புச் சிதைவு கோளாறுகளால் அவதிப்படும் நோயாளிகள் இந்த விருப்பத்தை தேர்வு செய்ய முடியாது.
ஒரு நோயாளியை பரிசோதித்து மருத்துவ குழு ஒப்புதல் வழங்கிய பின்னர், எந்த மருந்தை எடுத்துக் கொண்டு அந்த நோயாளி மரணிக்க வேண்டும் என்பதற்கான மருந்தை மருத்துவர் எழுதிக் கொடுப்பார். இதனை வாங்கி வீட்டிலேயோ அல்லது மருத்துவமனைக்கு சென்றோ செலுத்திக் கொண்டு உயிரிழக்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெரும்பாலான பிரான்ஸ் மக்கள், உயிரை மாய்த்துக்கொள்ளும் விருப்பத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு மத தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டமானது மானுடவியல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர்.
இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலுக்கு வந்துள்ளன. இதே போல நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளன.
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
முல்லைத்தீவு உடுப்புக்குளம் - தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு
முல்லைத்தீவு உடுப்புக்குளம் - தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு
தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு
Published By: VISHNU
01 JUN, 2025 | 08:40 PM
உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் சோகம்: கோயில் குளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
முல்லைத்தீவில் சோகம்: கோயில் குளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published By: VISHNU
01 JUN, 2025 | 08:04 PM
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று; தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று; தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
01 JUN, 2025 | 05:19 PM
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ஞா. சிறிநேசன்
அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!
அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!
Published By: VISHNU
01 JUN, 2025 | 08:44 PM
ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.
கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.
வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.