Aggregator

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
ஓம்…பொதுவாகவே லோர்ட்சில் முதல் நாள் முதல் பேட்டிங் விரும்பபடுவதில்லை. அத்தோடு இன்று மேகமூட்டம் வேறு. ஆனாலும் ஆரம்ப ஆட்டக்காரர்கள், 1 டவுனை தவிர அடுத்து வீழந்த 3 விக்கெட்டும் shot selection தவறியதாலே அவுட் ஆகின. இரெண்டாவதாக பேட்டிங் எடுத்ததின் பிரதிகூலம், 4 வதாக பேட் பண்ண வேண்டி வரும். முதல் இனிங்சில் சறுக்கினாலும், அவுசின் பேட்டிங் வரிசை, தென்னாபிரிகாவினதிலும் வலிமையானகாக தெரிகிறது. குறைந்த பட்சம் முதல் இனிங்சில் 300 ஐ நெருங்காவிடில் தெ.ஆ 4ம் இனிங்சில் 250+ அடித்து வெல்ல வேண்டி வரலாம். கஸ்டமாய் இருக்கும். அநேகமாக முடிவு வருவது உறுதி என நினைக்கிறேன். 3 ம் நாள் சில சமயம் மழை தூறலாக பெய்யலாம். ஆனால் பாதிக்காது. போட்டி சம நிலை என போட்டவர்களுக்கு 20 புள்ளிகள் லம்பாக போக போகுதோ? பயத்தில ஆள் இந்த பக்கம் வரவே இல்லை🤣

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months ago
செம்மணி தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகள்! இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
மேக மூட்டமாக இருந்தமையாலா தென்னாபிரிக்கா பந்து வீச்சை தெரிவு செய்த்தது? வேலை கடுமையாக இருந்தமையால் இடையில் ஒரு சிறிது நேரம் மட்டுமே பார்க்கமுடிந்தது, இரண்டாம் நாள் தேனீர் இடைவேளை வரையாவது தென்னாபிரிக்க துடுப்பாடாவிட்டால் போட்டியில் இலகுவாக தோற்றுவிடும். இந்த ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு காயும் போது சமச்சீரற்று காயும் போது பந்து வெவ்வேறு உயரத்தில் எழுந்து வரும், பொதுவாக முதலாவது இனிங்ஸ் கடினமாக இருந்தாலும் முதல் துடுப்பாடவே விரும்புவர் ஏனெனில் 4 ஆவது இனிங்ஸ் மிகவும் கடினமாகிவிடும்.

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
எனக்கு முதலில் ஒன்றுமே விளங்கவே இல்லை அநுரகுமார திசாநாயக்கவின் திக்விஜயம் எப்படி சிறப்பாக அமைந்திருக்கும் ? பாராட்டுக்கள் யாருக்கு ? இப்போது தான் விளங்கியது எல்லா சிறப்புக்களும் பாராட்டுக்களும் அங்கே உள்ள ஈழதமிழர்க்கே

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
கிருபர் ஜீ க்குப் பின்னால் நிற்பவர்கள் ஒன்றில் முன்னால் நிற்பவர்களை அழைத்துக் கொண்டு பின்னே செல்பவர்கள் அல்லது முன்னாலே நிற்பவரைத் தள்ளிக் கீழே வீழ்த்துபவர்கள். 😇 எது நடந்தாலும் கிருபன் ஜீக்கு ஆபத்து தான் 🤣 என்ன நடக்குது என்று பாப்போம் 😅 .

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months ago
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம் செய்வது அவசியம் : பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து 11 JUN, 2025 | 07:40 PM இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்திப்பதுடன் செம்மணி மனித புதைகுழு அகழ்வுபப்பணிகளையும் நேரில் பார்வையிட வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடல் தொடர்பில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய கூட்டத்தொடர் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வழியொன்றை ஏற்படுத்தித் தரும் என நாம் நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இந்த ஜூன் மாதம் மூன்றாவது வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது கடற்த 9 வருட காலப் பகுதியில் உயர்ஸ்தானிகரால் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதுடன் அது வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்காலில் கடந்த காலத்திலும் தற்போதும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சாட்சியமளிக்கவும் உரையாடவும் முக்கிய வாய்ப்பொன்றை வழங்குவதாக உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அடையாள வழக்கின் முழுமையாக நிருபிக்கப்பட்ட ஆவணங்கள் மத்தியில் செம்மணி புதைகுழி மற்றும் கிரிஷாந்தி குமாரசுவாமி படுகொலை என்பன குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு 3 நாட்கள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறித்தும் பாரம்பரிய தமிழ் பிராந்தியமான திருகோணமலைக்கு மட்டுமே விஜயம் செய்யவுள்ளமை பிரித்தானிய தமிழர் பேரவை அறிந்தவுடன் அது செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவும் அந்தப் பிராந்தியங்களில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கலந்துரையாடவும் வலியுறுத்தி உயர்ஸ்தானிகருக்கு கடந்த மே 27 ஆம் திகதி கடிதமொன்றை எழுதி அனுப்பி வைத்திருந்தது.. அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மற்றும் ஆடைகள் களையப்பட்ட நிலையில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக 17 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை என்பன தொடர்பில் வோல்கர் டர்க் செம்மணிக்கு விஜயம் செய்வதற்கும் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கலந்தாலோசனைகளுடன் இணைந்த நீதி மற்றும் பொறுப்புப்கூறலுக்கு உறுதிப்படுத்துவதற்கும் நெறிமுறை ரீதியான கடப்பாட்டுக்குரியவராகிறார். பிரித்தானிய தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகருருடன் இதுவரை ஏற்படுத்தியிருந்த தொடர்பாடல்களைின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 திகதியிடப்பட்ட கடிதமானது ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தோல்வியானது இலங்கை மாதிரியை தம்மைப் பிணைக்கும் நீதியிலிருந்து தப்பிக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியாக்குவதுடன் இலங்கையை அதன் மோசமான மாதிரியிலிருந்து நல்ல மாதிரிக்கு மாற்றுவதற்கான அவசியத்திலிருந்து வழுவுவதாக உள்ள அதேசமயம் இது மற்றைய நாடுகள் பின்பற்றுவதற்கு ஒரு தடையாக அமைவதாக எச்சரிக்கிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதியிடப்பட்ட மின்அஞ்சலானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் தீர்மானத்துக்காக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட பொதுப் பிரேரணை குறித்து அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உயர்ஸ்தானிகராலயத்தின் மந்தமான முன்னேற்றம்தொடர்பில் கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 10 திகதியிடப்பட்.ட கடிதமானது புதிய தேசிய மக்கள் சக்தி ( ஜே.வி.பி) அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டு அதன் சிங்கள அடிப்படைவாதக் கொள்கைகள் சம்பந்தமாக மேற்கோள்காட்டி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு வழியமைத்துத் தர வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்துகிறது. அதேசமயம் இந்த வருடம் மே மாதம் 27 திகதியிடப்பட்ட கடிதமானது இலங்கைக்கு இந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்ஸ்தானிகர் விஜயம் செய்ய உத்தேசித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணிக்கு விஜயம் செய்து உள்நாட்டுப் போர் நிறைவுபெற்று 16 வருடங்களாகியும் துன்பத்தை அனுபவித்து வரும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் காண்பதற்கும் தோண்டியெடுக்கப்படும் புதைகுழிகளை பார்வையிடவும் வேண்டிய அவசியம் உள்ளடங்கலானவை குறித்து வலியுறுத்தியுள்ளது. உயர்ஸ்தானிகரோ அல்லது சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கம் அதனது சுத்தமான இலங்கை என்ற வேடங்களுடன் மனித உரிமைகளை மதிப்பதில் சரியான பாதையில் செல்வதாக நிலவும் பொது எண்ணக்கருவுக்கு ஈர்க்கப்படாது ஐக்கிய நாடுகள் சபையில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் சாதுர்யமாக இருக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. . மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது உள்ளக குற்றவியல் மற்றும் விசாரணை பொறிமுறை மூலம் போர் குற்றங்களாலும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்செயல்களாலும் படுகொலைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்கூறலையும் வழங்கும் என நம்பி தம்மைக் கைவிடுமா என தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் ஐக்கிய மனித உரிமைகள் உயர்ஸ்தானகராலயத்தின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 60 ஆவது கூட்டத்தொடர் தமிழர்களுக்கான நீதி, சமாதானம் நாட்டுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சம் என்பவற்றைப் பெற்றுத் தரவதற்கு வழியேற்படுத்தித் தரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது உயர்ஸ்தானிகருக்கு இலங்கையின் படுகொலைத் தளங்கள், மனிதப் புதைகுழிகள், மறைந்துள்ள சித்திரவதை கூடங்கள், சட்டவிரோத தடுப்பு நிலையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகம் என்பன தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இலங்கையின் 77 வருட வரலாற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச சமூகத்தினரும் மோதல்களுக்கான வடிவங்கள் மற்றும் மூல காரணங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் என்பதையும் இலங்கையில் அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை ஸ்தாபிப்பதனூடாகவே சுழற்சிமுறையில் வன்முறை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் ஒப்புக்கொள்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/217211

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர் டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ; நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப உதவிகள்

3 months ago
11 JUN, 2025 | 07:24 PM ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்துக்கான இந்த களப் பயணத்தின்போது, ஒவ்வோர் அமைச்சுக்கும் சென்று திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217206

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர் டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ; நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்ப உதவிகள்

3 months ago

11 JUN, 2025 | 07:24 PM

image

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் உலகளாவிய மாற்றத்துக்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தினது திட்டங்களின் முன்னுரிமைகளை இனங்கண்டு அதற்கு ஆதரவளிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றால் செயற்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய மாற்றத்துக்கான இந்த களப் பயணத்தின்போது, ஒவ்வோர் அமைச்சுக்கும் சென்று திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, டோனி பிளேயர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் ஆலோசனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜலீல் ரஷீத், ஆசிய பசுபிக் பணிக்குழாமின் அரசதுறை இணைப்புத் தலைவர் எனா ஏடின், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கமத்தொழில் தொழில்நுட்பம் ) பீ.எம்.வீ.எஸ் பஸ்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக கீகியனகே, இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் / பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.08_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.08_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.07_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.06_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.06_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.05_PM.

WhatsApp_Image_2025-06-11_at_6.14.05_PM_

WhatsApp_Image_2025-06-11_at_6.14.04_PM_

https://www.virakesari.lk/article/217206

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
கிருபன் 20 சுவி 20 ஈழப்பிரியன் 20 வாதவூரான் 20 ரசோதரன் 20 எப்போதும் தமிழன் 20 வீரப்பையன் 10 ஏராளன் 10 புலவர் 10 வசி 10 வாத்தியார் 10 அல்வாயான் 10 பிரபா 10 கோஷான் 10 கந்தப்பு 10 நுணாவிலான் 00 செம்பாட்டான் 00 மேலுள்ளவாறு போட்டால் எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும் ஆண்டவரே!

சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 months ago
தற்போதைய சிறுவர்கள் காய்கறிகள், பழங்களை உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்; பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 11 JUN, 2025 | 06:07 PM தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை வேகமாக தவிர்த்து வருகின்றனர். சுற்றுச்சூழலில் சத்தான மற்றும் சிறந்த பொருட்கள் காணப்பட்டாலும், பள்ளிகளில் அவை குறித்து எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், சிறுவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை விரும்புவதில்லை. பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்துக்காக இன்று (11) காலை பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சுகாதார அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊடகங்களும் ஊட்டச்சத்து தொடர்பான சரியான செய்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து என்பது சுகாதாரத் துறையுடன் மட்டும் தொடர்புடைய ஒரு விடயம் அல்ல. மாறாக பல அமைச்சகங்களின் தலையீட்டின் மூலம் வெற்றிகரமாக அடைய வேண்டிய ஒரு விடயம். இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து மாதம் 'காய்கறிகள் மற்றும் பழங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளின் கீழ் நான்கு முக்கிய விடயங்களை அடையாளம் கண்டு சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், ஒரு வகை கீரை மற்றும் இரண்டு வகையான பழங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கிய விடயமாகும். முடிந்தவரையில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல், குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தெரிவு செய்தல் என்பன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன என்றார். இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, யுனிசெஃப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர்கள், துணை இயக்குநர்கள், மாகாண சுகாதார சேவை இயக்குநர்கள், பிராந்திய சுகாதார சேவை இயக்குநர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு, அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217204