Aggregator

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு!

3 months ago

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு!

adminJune 12, 2025

3-scaled.jpg?fit=1170%2C557&ssl=1

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/216681/

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

3 months ago
வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்! இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது! adminJune 12, 2025 மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது. அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர், எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும் என்றார்.வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார் https://globaltamilnews.net/2025/216689/

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

3 months ago

வீட்டு திட்டத்தை விரைந்து கட்டி முடியுங்கள் – பயனாளிகளுக்கு ஆளுநர் அறிவித்தல்!

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது!

adminJune 12, 2025

0-1-1.jpg?fit=1170%2C786&ssl=1

மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வீட்டு திட்ட பயணிகளுக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது.

அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர்,

எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும் என்றார்.வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும்  பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கையிலையே வடமாகாணத்தில் மாத்திரமே வீட்டு திட்டத்திற்கு தலா 18 இலட்சம் வழங்கப்படுகிறது

  இலங்கையில், வடமாகாணத்திலையே வீட்டு திட்டத்திற்காக அதிக தொகையாக 18 இலட்ச ரூபாய் வழங்கப்படுவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாண அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் வீட்டு திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.

வடக்கில் உள்ள உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல் முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம்.

 இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் என தெரிவித்தார்

https://globaltamilnews.net/2025/216689/

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
நேற்று BBC Radio 4 இல் ஆஸி கொமென்ரேற்றர் ஜிம் மக்ஸ்வெல் இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றார். பார்ப்போம்!

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months ago
323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம் - ஜனாதிபதியும் உண்மையை மறைப்பதற்கு முயற்சி; முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 12 JUN, 2025 | 07:44 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது ஜனாதிபதி இலங்கை சுங்கத்தை தெரிவிக்காமல் விட்டார். சுங்கம் நிதி அமைச்சின் கீழ் இருப்பதால் ஜனாதிபதி திட்டமிட்டே அதனை மறைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ்ர அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள்தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை. மாறாக சுங்க தொழிறசங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது. ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்களை விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார். ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.அதேநேரம் இந்த சம்பவம் இடம்பெற்றது. இதுதொடர்பில் பலரும் வினவியபோது எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்த, சுங்க பணிப்பாளர், 6 மாதங்களுக்கு பின்னர் குறித்த கொள்கல்களில் ஆபத்தான் பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? ஏனெனில் தற்போது அந்த பொருட்கள் விடுக்கப்பட்டு முடிந்துள்ளன. அதேநேரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய பொசன் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிட்டு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி இதனை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுங்கம் ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழே இருக்கிறது. அதனாலே சுங்க தொழிற்சங்கம் இது தொடர்பில் ஆரம்பமாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டால் இறுதியில் ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டி ஏற்படுகிறது. எனவேதான் ஜனாதிபதி ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது சுங்க திணைக்களத்தை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/217186

சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையே மத ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியுள்ளன - தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணையின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

3 months ago
11 JUN, 2025 | 07:40 PM (நா.தனுஜா) 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்' எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நாட்டில் பதிவான மத அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இன மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் தொடர்வதற்கு தனியுரிமை மனநிலை (சகல வசதிகள், சலுகைகள், உரிமைகளை அனுபவிப்பதற்கான உரித்து தனக்கே உண்டு எனும் பக்கச்சார்பான மனநிலை) மற்றும் மக்கள் மத்தியில் தொடரும் அச்சம் ஆகிய இரண்டுமே பிரதான காரணமாக இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அதுவே பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுபோன்ற தனியுரிமை மனநிலை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் நிலவக்கூடும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் இந்துக்களை முன்னிலைப்படுத்தும் சிவசேனை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இத்தகைய தனியுரிமை மனநிலை ஆழமான அச்சத்தை விதைப்பதுடன், அது மதரீதியிலான ஒடுக்குமுறைகள் மற்றும் கலவரங்களுக்கு வழிகோலுகின்றது. குறிப்பாக ஏனைய இன, மத சமூகங்களின் செயற்பாடுகளின் விளைவாக தமது இன, மத அடையாளர்கள் தேசிய ரீதியில் அழிவடைந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் சில சமூகங்கள் மத்தியில் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை உயர்வு மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கிவரும் அவர்களது ஆதிக்கம், கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் தமிழர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியைக் கோரல் என்பன மேற்குறிப்பிட்டவாறு மாற்று இன, மத சமூகங்கள் மத்தியில் தத்தமது அடையாளம் தொடர்பிலான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன' என மத அடிப்படையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்தவொரு நபரினதோ அல்லது குழுவினதோ மத அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையிலோ அல்லது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளக்கூடியவாறோ 2023 நவம்பர் தொடக்கம் 2024 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்பன இவ்வறிக்கையில் ஆழமான சட்டப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இக்காலப்பகுதியில் அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்குப் புறம்பாக மத அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்களும், அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(ஏ) பிரிவுகளுக்குப் புறம்பாக விரும்பிய மதம் அல்லது நம்பிக்கையைப் பிற்பற்றும் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. அவற்றில் அநேகமானவை கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களைப் பதிவுசெய்தல் தொடர்பானவையும், முஸ்லிம்களின் ஆடைகள் சார்ந்தவையும், இந்துக்களின் மத நிகழ்வுகளின்போது அவற்றுக்கு இடையூறு விளைவித்தல், அச்சுறுத்தல் விடுத்தல் என்பனவுமாகும். மேலும் பெரும்பாலான மத ரீதியிலான அடக்குமுறைச் சம்பவங்களின்போது அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தவறியுள்ளமை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை குறித்தும் இவ்வறிக்கையில் அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் அரச கட்டமைப்புக்களுக்குள் வேரூன்றியிருக்கும் பேரினவாதம் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217210

சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையே மத ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியுள்ளன - தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணையின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

3 months ago

11 JUN, 2025 | 07:40 PM

image

(நா.தனுஜா)

'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அது மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் மத ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'அச்சத்திலிருந்து வன்முறைக்கு: இலங்கையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான தாக்குதல்கள்' எனும் தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நாட்டில் பதிவான மத அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இன மற்றும் மத ரீதியிலான வன்முறைகள் தொடர்வதற்கு தனியுரிமை மனநிலை (சகல வசதிகள், சலுகைகள், உரிமைகளை அனுபவிப்பதற்கான உரித்து தனக்கே உண்டு எனும் பக்கச்சார்பான மனநிலை) மற்றும் மக்கள் மத்தியில் தொடரும் அச்சம் ஆகிய இரண்டுமே பிரதான காரணமாக இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தாமே இந்நாட்டின் பூர்வகுடிகள்' எனும் சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையே 'நாட்டிலுள்ள நிலங்கள் தமக்குச் சொந்தமானவை, சமூக கலாசார விடயங்களில் தாமே மேலாதிக்கம் உடையவர்கள்' எனும் மனநிலையை அவர்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும், அதுவே பொருளாதார ரீதியிலான பிரிவினைகளுக்கு வழிகோலியிருப்பதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதுபோன்ற தனியுரிமை மனநிலை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்கள் மத்தியிலும் நிலவக்கூடும் எனவும், வட, கிழக்கு மாகாணங்களில் இந்துக்களை முன்னிலைப்படுத்தும் சிவசேனை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இத்தகைய தனியுரிமை மனநிலை ஆழமான அச்சத்தை விதைப்பதுடன், அது மதரீதியிலான ஒடுக்குமுறைகள் மற்றும் கலவரங்களுக்கு வழிகோலுகின்றது. குறிப்பாக ஏனைய இன, மத சமூகங்களின் செயற்பாடுகளின் விளைவாக தமது இன, மத அடையாளர்கள் தேசிய ரீதியில் அழிவடைந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் சில சமூகங்கள் மத்தியில் உண்டு. முஸ்லிம்களின் சனத்தொகை உயர்வு மற்றும் பொருளாதாரத்தில் மேலோங்கிவரும் அவர்களது ஆதிக்கம், கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் தமிழர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியைக் கோரல் என்பன மேற்குறிப்பிட்டவாறு மாற்று இன, மத சமூகங்கள் மத்தியில் தத்தமது அடையாளம் தொடர்பிலான அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன' என மத அடிப்படையிலான தாக்குதல்கள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்தவொரு நபரினதோ அல்லது குழுவினதோ மத அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவகையிலோ அல்லது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளக்கூடியவாறோ 2023 நவம்பர் தொடக்கம் 2024 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் என்பன இவ்வறிக்கையில் ஆழமான சட்டப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இக்காலப்பகுதியில் அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவுக்குப் புறம்பாக மத அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்குமுறைச் சம்பவங்களும், அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1)(ஏ) பிரிவுகளுக்குப் புறம்பாக விரும்பிய மதம் அல்லது நம்பிக்கையைப் பிற்பற்றும் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் சம்பவங்களும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

அவற்றில் அநேகமானவை கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களைப் பதிவுசெய்தல் தொடர்பானவையும், முஸ்லிம்களின் ஆடைகள் சார்ந்தவையும், இந்துக்களின் மத நிகழ்வுகளின்போது அவற்றுக்கு இடையூறு விளைவித்தல், அச்சுறுத்தல் விடுத்தல் என்பனவுமாகும்.

மேலும் பெரும்பாலான மத ரீதியிலான அடக்குமுறைச் சம்பவங்களின்போது அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தவறியுள்ளமை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை குறித்தும் இவ்வறிக்கையில் அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் அரச கட்டமைப்புக்களுக்குள் வேரூன்றியிருக்கும் பேரினவாதம் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு வழிகோலியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217210

கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்

3 months ago
கீழடி விவகாரம் - மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கீழடி அகழாய்வு அறிக்கையில் போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லையென மத்திய அமைச்சர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சர் இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அறிக்கையின் இப்போதைய நிலை என்ன? கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் ஒரே ஒரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் கருத்து நரேந்திர மோதி தலைமையிலான அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். "அவை (அறிக்கையின் முடிவுகள்) அறிவியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளர் தந்த ஆய்வு முடிவுகளை ஏற்பதற்கு முன்பாக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் கூடுதல் தகவல்களுடன், ஆதாரங்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும். ஒரே ஒரு கண்டுபிடிப்பு (வரலாற்றின்) போக்கை மாற்றிவிடாது. பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சரியானதல்ல. இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடிவடையட்டும்" என்றார் கஜேந்திர சிங் ஷெகாவத். கீழடி அகழாய்வு அறிக்கை மீது, இந்தியத் தொல்லியல் துறை சில கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பியிருந்தது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது. பட மூலாதாரம்,WWW.KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, ஒரே ஒரு கண்டுபிடிப்பு (வரலாற்றின்) போக்கை மாற்றிவிடாது. பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என மத்திய அமைச்சர் பேச்சு எதிர்வினையாற்றிய தங்கம் தென்னரசு கஜேந்திர சிங் ஷெகாவத்தின் இந்தக் கருத்துக்கு தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக எதிர்வினையாற்றினார். "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது. 5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?" என்று கேள்வியெழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்" என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@TTHENARASU/X படக்குறிப்பு, அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிவு ஆய்வும் பணியிட மாற்றமும் மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது. தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 - 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் வெளிவந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, வேறொரு கண்காணிப்பாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வு நடந்தது. இதற்குப் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு, பல கட்டங்களாக கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வுக்குப் பிறகு அமர்நாத் ராமகிருஷ்ணா கவுகாத்திக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு கோவாவுக்கும் பிறகு சென்னைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் தென்னிந்தியக் கோவில்களின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் தொல்லியல் பொருட்கள் பிரிவின் இயக்குநராக அவர் செயல்பட்டு வருகிறார். பட மூலாதாரம்,WWW.KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது என தங்கம் தென்னரசு பேச்சு இந்திய தொல்லியல் துறையின் கேள்விகள் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. இது தொடர்பான கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்துத்தான் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது. 1. கீழடியில் நிலவியதாகச் சொல்லப்படும் மூன்று காலகட்டங்களுக்கும் சரியான பெயர்களை (nomenclature) வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 2. முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின் (Accelerator Mass Spectrometry) படி உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிவதாகவும் அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. 3. அறிவியல்ரீதியாக கிடைத்த தேதிகளுக்கு ஆழத்தைக் குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல. பண்பாட்டு அடுக்குகளின் எண்களையும் தரவேண்டும். அப்போதுதான் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 4. அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வரைபடங்களுக்குப் பதிலாக மேம்பட்ட வரைபடங்களை வழங்க வேண்டும். கிராமத்தின் வரைபடம் தெளிவில்லாமல் உள்ளது. ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடும் வரைபடம், பண்பாட்டு அடுக்குகளின் வரைபடம், எங்கு தோண்டப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வரைபடங்கள் தேவை என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, தான் சமர்ப்பித்த அறிக்கையே மிகத் தெளிவானது என்றும் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டியதில்லை என்றும் இந்தியத் தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்ததாக தகவல்கள் வெளியாயின. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார். "இது போன்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது, அதனை ஆய்வு செய்யும் அதிகாரி, ஏதாவது சான்றுகள் தேவை எனக் கருதினால் இதுபோலக் கேள்வி எழுப்புவார்கள். இது அறிக்கையையும் கேள்வி எழுப்பும் அதிகாரியையும் பொறுத்தது. காலக் கணிப்பைப் பொறுத்தவரை, அது அறிவியல் ரீதியில் செய்யப்பட்டு அதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் சந்தேகமில்லை" என்கிறார் மொஹாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்சின் தொல்லியல் துறை பேராசிரியரான முனைவர் பர்த் சௌஹான். கீழடி அகழாய்வின்போது முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளில் ஆய்வுக்கான மாதிரிகளாக 88 கரிமப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அதில் 23 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது தவிர, கீழடியில் கிடைத்த மிருக எலும்பின் மாதிரிகள் டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. படக்குறிப்பு, அமர்நாத் ராமகிருஷ்ணன் (கோப்புப் படம்) அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அறிக்கையில் என்ன தகவல்கள் இடம்பெற்றுள்ளன? கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன: 1. கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும். 2. கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. 3. கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது. 4. கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருப்பது தென்னிந்திய தொல்லியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சங்கப் பாடலான பட்டினப்பாலையில் குதிரை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எச்சங்கள் முதல் முறையாக கீழடியில்தான் கிடைக்கின்றன. 5. இரண்டு அகழாய்வுகளிலும் சேர்த்து மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. 'திசன்' போன்ற பிராகிருத வார்த்தைகளும் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த பிராகிருத வார்த்தைகள் இலங்கையின் தாக்கத்தில் வந்தவை. இங்குள்ள தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்து, அசோக பிராமியின் தாக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக இலங்கையில் கிடைத்த பிராமி எழுத்துகளோடு ஒத்துப்போகக்கூடியவை என்றது அறிக்கை. 6. வைகை நதிக் கரையில் அமைந்த ஒரு நகர நாகரீகத்தின் ஆரம்ப கட்டத் தகவல்களை மட்டுமே இந்தத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் அளித்திருக்கின்றன என்றும் அந்தத் தொல்லியல் தளத்தில் மேலும் பல ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74npd0xw2ko

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

3 months ago
முதலும் சிலர் சொன்னார்கள் இவர்கள் இருவரும் கொலைகாரனை கொண்டாடுவது பற்றி அப்போது நான் காணொளி பார்த்திருககவில்லை. இருவரும் மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதியற்ற கேவலமானவர்கள்

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
பொதுவாக 2ஆம் நாள் இலகுவாகவும் 3 ஆம் நாள் ஒப்பீட்டளவில் ஓரளவு இலகுவாகவும் அதன் பின்னர் நிலமை கடினமாகவும் மாறிவிடும், அதனால் 2 ஆம் நாளின் பெரும்பகுதியினை தென்னாபிரிக்கா முழுமையாக விளையாடினால் தென்னாபிரிக்கா வெல்ல வாய்ப்பு நிறைய உள்ளது, 2 ஆம் நாளும் மேக மூட்டமாக இருந்தால் தென்னாபிரிக்காவின் நிலை கடினமாகிவிடும், ஆனால் தற்போது கூட தென்னாபிரிக்கா நிலை கடினமாகவே உள்ளது, வெற்றி வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.

வடக்கு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற உரையாடல்

3 months ago
தனது சமூத்தில் நடந்த ஒரு கொடூர குற்ற சம்பவத்தை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் அந்த கொலையை ஒரு திரைப்பட காட்சியை போல் funny யாக வர்ணித்து உரையாடுவதும், தனது நண்பியிடம், “நீங்களே வெட்டின சந்தோசத்துல் இருக்கினீர்கள் போல” என சிரிப்பை அடக்கமுடியாத மகிழ்சசியுடன் உரையாடுவதும் அதை சமூக வலைத்தளத்தில் பகிர்வதும் ஒரு civilised சமுதாயத்தில் இயல்பானது என்று நினைக்கின்றீர்களா?

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months ago
Visitharan Praisoody· நல்லூர் பிரதேச சபையில் தமிழரசுக்கு 7 ஆசனங்களும், மணிவண்ணன் தரப்பிற்கு 6 ஆசனங்களும் கிடைத்திருந்த நிலையில், முதல் இருவருடங்களை தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இறுதி இரு வருடங்களை தமிழரசுக்கும் என்று ஆட்சி அதிகார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. நல்ல முடிவு!

தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!

3 months ago
தங்கள் தங்கள் இடத்திலேயே காலங்காலமாக வழிபாடுகளை நடத்தி வந்த விகாரைகள் இருக்க, இங்கு ஏன் ஏறி எழுந்து வருகிறார்கள்? எங்கிருந்தாலும் வழிபாடு ஒன்றுதானே. இங்கு இருக்கிற, வந்து பிரச்சனைகளை தூண்டுகிற பிக்குக்களையும் சோதனை செய்ய வேண்டும். ஆயுதங்களும் கொண்டுவந்திருப்பார்கள். பிரச்சனை செய்வதற்கென்றே ஓசியில பஸ் சேவை, உணவு வசதி, தங்குமிட வசதியெல்லாம் கொடுத்து சமூக நல்லிணக்கத்தையும் கெடுத்து, சீர்கேடுகளையும் வளர்க்கிறார்கள்.

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months ago
உந்த சுமந்திரன் கொசுறு, எல்லோரையும் கட்சியை விட்டு விரட்டியது, தானே எல்லா அதிகாரத்தையும் சுவீகரித்துக்கொள்வதற்காகவே. பாராளுமன்றத்தேர்தலில் கூட எல்லோரையும் கொலைகாரர், கள்ளர் என்று என்னென்னவோ எல்லாம் விமர்ச்சித்தவர். ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்றவர் டக்கிலஸின் காலடியில் கட்சியை விழவைத்தார், அங்கே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு வழியின்றி பாதை மாறி விக்கியர் வீட்டு கதவை தட்டியுள்ளார். இது அவரின் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கே மக்களுக்காகவல்ல. மக்கள் கவனமாக செயற்படவேண்டும். மக்களாலேயே இந்த மாற்றம் ஏற்படுத்த முடிந்தது. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த வாக்குகளை, கிடைத்த செல்வாக்கை சுமந்திரன் தனதாக்கி அறிக்கை விடக்கூடாது.

அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு?

3 months ago
Columnsசிவதாசன் அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு? சிவதாசன்கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை. தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர் ஒரு வெள்ளையரல்லாததால் நடந்திருக்க வாய்ப்புண்டு. பாராளுமன்றத்தில் அமைச்சர் மீது பாய்ந்தவர்களில் முதலானவர் எல்கின் – சென்.தோமஸ் – லண்டன் சவுத் தொகுதிக்கான கன்சர்வேட்டிவ் உறுப்பினர் ஆன்ட்றூ லோட்டன். இவர் ஒரு தீவிர வெள்ளைத் தேசியவாதி. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகுவதற்கு முன்னர் True North மற்றும் Rebel Media ஆகிய ஊடகங்களில் பணியாற்றியவர். 2022 இல் ட்றூடோ அரசுக்கு எதிராக ஒட்டாவா நகரை முடக்கிய பாரவண்டி ஊர்வல ஒழுங்கமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர். இவரது தீவிர வலதுசாரிக் கொள்கைக்காக, தேர்தலுக்கு முன், கட்சியிலிருந்து இவரை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் பியர் பொய்லியேவ் அதை மறுத்திருந்தார். இவரது உடல் மொழியும், சமூக ஊடகப் பதிவுகளும் இவரது நோக்கம் அமைச்சர் ஆனந்தசங்கரியை மானபங்கப்படுத்துது ஒன்றே என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகியது. ஆனால் அவர் கேட்ட கேள்விகள் அடாத்தானவையல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். “எல்லைகளைப் பலப்படுத்துவோம்” என்ற சுலோகத்துடன் வந்து குதித்த அமைச்சர் துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் பற்றி அறியாமல் இருப்பது கொஞ்சம் இடிக்கும் ஒரு விடயம் தான். ஒரு முன்னாள் வானொலி talkshow host என்ற வகையில் லோட்டன் தனது வாய்ப் பலத்தை உறுதியாகக் காட்டியிருந்தார். இப்போது அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. ஒன்று கேட்ட கேள்விக்கான பதிலைக் கொடுத்து கேட்டவரது வாயை அடைப்பது அல்லது குதர்க்க (witty) மறுமொழியால் அவரை அவமானப்படுத்தி இருக்க வைப்பது. (பிரித்தானிய மற்றும் காலனித்துவ இலங்கை பாராளுமன்றங்கள் இவற்றுக்குப் பேர் போனவை). ஆனால் அமைச்சர் உறைந்து போன – Fight or Flight நிலையில் – அவர் flight ஐத் தேர்ந்தெடுத்து ‘எனக்குத் தெரியாது’ என ஒப்புக்கொண்டார். அவர் செய்தது சரி எனப் பின்னர் பல அனுபவம் மிக்க விமர்சகர்களும் கூறியிருந்தார்கள். இச்சம்பவத்தில் மூக்குடைபட்டுப்போனது கன்சர்வேட்டிவ் கட்சியும் அதன் தலைவர் பொய்லியேவும் தான். புதிதாக வந்திருக்கும் ஒரு அமைச்சரிடம் கேள்வியை நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாக சுருக்கெழுத்தகளில் (accronnym) கேட்டது நிச்சயமாகக் கபட நோக்கம் கொண்டது என்பது எந்த முட்டாளுக்கும் புரிந்திருக்கும். “For that, my answer would be WABQ” என்றுவிட்டு (வட் ஏ புல்ஷிட் குவெஸ்டியன்) அமைச்சர் போயிருக்கலாமோ என ஒருகணம் தோன்றியது; நமக்கேன் வம்பு? ஆனால் கன்சர்வேட்டிவ் ஊடகங்களான குளோபல் ரீ.வி., நாஷனல் போஸ்ட் பத்திரிகை தமது வழமையான சாக்கடை ஊடக வியாபாரத்தைச் செய்திருந்தன. இரண்டுமே கடந்தகால செயற்பாட்டாளர் ஆனந்தசங்கரியைப் பாராளுமன்றத்துள் இழுத்து வந்து குதற முயற்சித்தனர். “2009 இல் வான்கூவரில் கரைதட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்த ‘விடுதலைப்புலி பயங்கரவாதிகளை’ அப்போதைய ஹார்ப்பர் அரசு திருப்பி அனுப்பவிடாமல் தடுத்தவர் தான் இந்த அமைச்சர். “எல்லைகளைப் பலப்படுத்துவதற்கு” இவர் எப்படித் தகுதியானவர்?” என இவ்வூடகங்கள் ஓலமிட்டன. இவற்றுக்கு அமைச்சர் சரியான பதிலைக் கூறியதும் வேதாளங்கள் மீண்டும் மரமேறிவிட்டன. லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்ணியும் தன்பங்கிற்கு அவரது statesmanship ஐச் செவ்வனே காட்டியிருந்தார். அமைச்சர் ஆனந்தசங்கரி “highest standard of intergrity with meticulous record” உள்ளவர் என்ற சாரத்தில், அப்பதவிக்கான தனது தேர்வு சரியானதே எனக்கூறியது சாமானியர்களுக்கானதல்ல. அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தமது வாழ்வை செயற்பாட்டாளர்களாகவே (activists) ஆரம்பிப்பது வழக்கம். அனுபவமின்மை காரணமாகவோ மிதமிஞ்சிய அட்றீனலின் சுரப்பு காரணமாகவோ அல்லது ‘தமக்கு எல்லாம் தெரியும்’ (nascisisistic) என்ற மமதையின் காரணமாகவோ இவர்கள் அவ்வப்போது மேற்கொள்ளும் கொக்கரிப்புகள், பின்னர் அரசியல்வாதிகளாக அவர்கள் உருமாற்றம் கொள்ளும்போது, வரிசையில் நின்று வருத்தம் தருவது புதிய விடயமல்ல. ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜே தணிகாசலம் மாணவ செயற்பாட்டாளராக இருந்தபோது விடுதலைப் புலிகள் பற்றிக்கூறியவை பின்னர் பூமெராங்க் ஆக வந்து அவரை வதைத்தது சிறந்ததொரு உதாரணம். அமைச்சர் ஆனந்தசங்கரியின் இக்கட்டான நிலை குறித்து தமிழ்ச்சமூகமாக நாம் கண்ணீர் வடிக்கவோ அல்லது அடிதடிகளில் இறங்கவோ தேவையில்லை. அவர் ஒரு வெள்ளையாராக இருந்திருப்பின் பாராளுமன்றத்திற்கு உள்ளூம் புறமும் நடந்துவரும் விடயங்கள் வித்தியாசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற அனுமானத்தில் தான் எம்மில் பலரது அனுதாபங்கள் இருக்கிறது. **** 2009 இல் வான்கூவரில் கரை தட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்று கூறி ஹார்ப்பர் அரசும் அதன் முன்னணி நட்சத்திரம் ஜேசன் கெனியும் அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியபோது மனித உரிமைகள் சட்டத்தரணி பாபரா ஜாக்மன் உதவியுடன் வழக்குத் தொடர்ந்து அக்கப்பலைத் திருப்பி அனுப்பாமல் செய்த பெருமை கனடியத் தமிழர் பேரவைக்கும் அதன் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை போன்றோருக்குத்தான் சேரும். அப்போது பேரவையின் சட்ட ஆலோசகராக ஆனந்தசங்கரி இருந்தார். இக்கப்பல்களில் வந்தவர்கள் விடுதலைப்புலிகள் என நிரூபிக்க ஹார்ப்பர் அரசுக்கு பலமான ஆதாரம் தேவைப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய பேராசிரியர் றொஹான் குணரட்ணவின் நிபுணத்துவ சாட்சியம் (expert witness) பெறப்பட்டது. அவ்வழக்கின்போது பேரா.குணரட்ணவின் சாட்சியம் நம்பத்தகுந்தது அல்ல என அவருக்கு எதிராக முன்னாள் விடுதலிப் புலி உறுப்பினரான ககுஸ்தன் அரியரட்ணத்தைச் சாட்சியமாக வைத்து வழக்கை வென்று இக்கப்பல்வாசிகள் அனைவரையும் கனடாவில் குடியமர்த்தியதில் கனடிய தமிழர் பேரவைக்கும் அமைச்சர் ஆனந்தசங்கரிக்கும் பாரிய பங்குண்டு. அப்போது ஆனந்தசங்கரி ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்லாது தமிழ் செயற்பாட்டாளராகவே இதைச் செய்திருந்தார். ஹார்ப்பர் அரசு கூறியதைப்போல் இக்கப்பல்களில் வந்தவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் அல்லர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்ட விடயத்தை இப்போது ஓலம் வைக்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வசதியாக மறைத்துவிட்டனர். பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் அமைச்சர் ஆனந்தசங்கரி தனது சமூகம் சார்ந்து ஆற்றிய நடவடிக்கைகள் குறித்து அவர் எவரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை. தனது இந்நடவடிக்கைகள் குறித்தும், மனைவியின் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது சமூக உடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் அகற்றப்படாமல் இப்போதும் அப்படியே உள்ளன. இவையெல்லாவற்றையும் பார்த்துப் பிழிந்தெடுத்த பிறகுதான் சட்ட பரிபாலனம் அவருக்கு இவ்வமைச்சுக்கான பரிந்துரைப்பைச் செய்திருக்கும். இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும் அவரோடு ஒத்தூதும் விமர்சகர்களும் இருக்கிறார்கள். **** அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, எறிந்த சில அம்புகள் திரும்பி வந்து அவரைத் தாக்கிய சம்பவங்களுமுண்டு. இவற்றையெல்லாம் கிண்டியெடுக்குமளவுக்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் பலருக்கு விவேகம் இல்லையாதலால் ஊடகங்கள் அப்பணியைச் செய்துள்ளன. அவற்றிலொன்று: “கனடிய தேசிய பாதுகாப்பு ஆணையங்களான ‘சீஸிஸ்’ மற்றும் ‘ஆர்.சீ.எம்.பி’ போன்றவை சன் சீ கப்பலில் வந்த அகதிகளைத் தொடர்ந்தும் மிரட்டிக்கொண்டிருக்கின்றன” என்ற ஆனந்தசங்கரியின் கூற்று. இப்போது தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும், ‘சீஸிஸ், ஆர்.சி.எம்.பி’ போன்ற ஆணையங்களை மேற்பார்வை செய்யும் அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது தமிழ்ச் சமூகம் சம்பந்தப்படும் எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் “அவரது கடமையுணர்வு நாட்டையா அல்லது அவரது சமூகத்தையா சார்ந்து நிற்கும்?” என அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. இதற்குப் பதில் தரும் வகையில் அமைச்சர் “ஒரு உள்ளகப் பாதுகாப்பு அமைச்சராக, என் சமூகம் சார்ந்த விடயங்களில் நான் முடிவுகளை எடுப்பதிலிருந்து என்னை விலத்தி வைக்கும் ஒப்பந்தத்தை நெறிமுறை ஆணையருடன் (ethics commissioner) செய்துள்ளேன்” என அவர் அறிவித்துள்ளார். அதுவே அவருக்கும் அவர் சார்ந்த சமூகத்திற்கும் பொருத்தமான ஒரு விடயமாகும். ஆனால் அமைச்சர் இச்சத்தியத்தைக் காப்பதற்கு நமது சமூகம் இடம் கொடுக்குமா? இங்குதான் நமது (தென்னாசிய) நண்டுக் கலாச்சாரத்தின் பாதிப்புகள் தலைகாட்ட வாய்ப்புண்டு. “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நான் முயற்சிப்பேன்” என்ற தேர்தல் காலக் கோஷங்களோடு சில அரசியல்வாதிகளும், “இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிக்கூண்டுகளில் நிறுத்துவேன்”; “தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை” எனப் பல அரசியல்வாதிகளும் அவ்வப்போது கோஷமெழுப்பி வருகிறார்கள். இக்கூற்றுகள் வெள்ளைத்தோல் அரசியல்வாதிகளின் வாய்களிலிருந்து வந்துவிட்டால் “அவர்களே கூறிவிட்டார்கள், நம்மாள் இன்னும் வாயே திறக்கேல்லை” என்பது போன்ற அழுத்தங்கள் பொழியத் தொடங்கிவிடும். வாக்குக் கனவுகளுடன் இம்மேடைகளில் ஏற வரிசைகளில் நிற்கும் நமது அரசியல்வாதிகளுக்கு -ஆரம்பிப்பவர்களும், அனுபவசாலிகளும் – . அமைச்சரின் இந்த அனுபவம் சிறந்ததொரு பாடத்தைக் கற்பித்திருக்கும் என நினைக்கிறேன். கமாக நாமும் எமது எதிர்பார்ப்புகளில் சாமர்த்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்பிரதிநிதிகள் தமிழர்களை மட்டுமல்ல பரந்த கூட்டு சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்; தமிழராக இருப்பது பெருமைதான் என்பதோடு எமது நடவடிக்கைகள் எல்லைப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர் ஆனந்தசங்கரியின் இத்துர்ப்பாக்கியமான நிலைக்கு அவரது கடந்தகால நடவடிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவை எமது சமூகத்தின்பால் நடைபெற்றவையாயின் அவரது இடரில் எமக்கும் பங்குண்டு. இத் தேவையற்ற சம்பவத்திற்கு மூலகாரணம் இனத்துவேஷம். இது ஒட்டுமொத்த வெள்ளையரல்லாத இனங்கள் அனைத்தையுமே அவமதிக்கும் ஒரு சம்பவம். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கு எமது அதிருப்தியைத் தெரிவிப்பது அவசியம். (Image Credit: WS) https://marumoli.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/#google_vignette

அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு?

3 months ago

Screen-Shot-2025-06-11-at-12.19.45-AM.pn

Columnsசிவதாசன்

அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு?

சிவதாசன்

கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர் ஒரு வெள்ளையரல்லாததால் நடந்திருக்க வாய்ப்புண்டு.


பாராளுமன்றத்தில் அமைச்சர் மீது பாய்ந்தவர்களில் முதலானவர் எல்கின் – சென்.தோமஸ் – லண்டன் சவுத் தொகுதிக்கான கன்சர்வேட்டிவ் உறுப்பினர் ஆன்ட்றூ லோட்டன். இவர் ஒரு தீவிர வெள்ளைத் தேசியவாதி. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகுவதற்கு முன்னர் True North மற்றும் Rebel Media ஆகிய ஊடகங்களில் பணியாற்றியவர். 2022 இல் ட்றூடோ அரசுக்கு எதிராக ஒட்டாவா நகரை முடக்கிய பாரவண்டி ஊர்வல ஒழுங்கமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர். இவரது தீவிர வலதுசாரிக் கொள்கைக்காக, தேர்தலுக்கு முன், கட்சியிலிருந்து இவரை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் பியர் பொய்லியேவ் அதை மறுத்திருந்தார்.

இவரது உடல் மொழியும், சமூக ஊடகப் பதிவுகளும் இவரது நோக்கம் அமைச்சர் ஆனந்தசங்கரியை மானபங்கப்படுத்துது ஒன்றே என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகியது. ஆனால் அவர் கேட்ட கேள்விகள் அடாத்தானவையல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். “எல்லைகளைப் பலப்படுத்துவோம்” என்ற சுலோகத்துடன் வந்து குதித்த அமைச்சர் துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் பற்றி அறியாமல் இருப்பது கொஞ்சம் இடிக்கும் ஒரு விடயம் தான். ஒரு முன்னாள் வானொலி talkshow host என்ற வகையில் லோட்டன் தனது வாய்ப் பலத்தை உறுதியாகக் காட்டியிருந்தார். இப்போது அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. ஒன்று கேட்ட கேள்விக்கான பதிலைக் கொடுத்து கேட்டவரது வாயை அடைப்பது அல்லது குதர்க்க (witty) மறுமொழியால் அவரை அவமானப்படுத்தி இருக்க வைப்பது. (பிரித்தானிய மற்றும் காலனித்துவ இலங்கை பாராளுமன்றங்கள் இவற்றுக்குப் பேர் போனவை). ஆனால் அமைச்சர் உறைந்து போன – Fight or Flight நிலையில் – அவர் flight ஐத் தேர்ந்தெடுத்து ‘எனக்குத் தெரியாது’ என ஒப்புக்கொண்டார். அவர் செய்தது சரி எனப் பின்னர் பல அனுபவம் மிக்க விமர்சகர்களும் கூறியிருந்தார்கள்.

இச்சம்பவத்தில் மூக்குடைபட்டுப்போனது கன்சர்வேட்டிவ் கட்சியும் அதன் தலைவர் பொய்லியேவும் தான். புதிதாக வந்திருக்கும் ஒரு அமைச்சரிடம் கேள்வியை நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாக சுருக்கெழுத்தகளில் (accronnym) கேட்டது நிச்சயமாகக் கபட நோக்கம் கொண்டது என்பது எந்த முட்டாளுக்கும் புரிந்திருக்கும். “For that, my answer would be WABQ” என்றுவிட்டு (வட் ஏ புல்ஷிட் குவெஸ்டியன்) அமைச்சர் போயிருக்கலாமோ என ஒருகணம் தோன்றியது; நமக்கேன் வம்பு?

ஆனால் கன்சர்வேட்டிவ் ஊடகங்களான குளோபல் ரீ.வி., நாஷனல் போஸ்ட் பத்திரிகை தமது வழமையான சாக்கடை ஊடக வியாபாரத்தைச் செய்திருந்தன. இரண்டுமே கடந்தகால செயற்பாட்டாளர் ஆனந்தசங்கரியைப் பாராளுமன்றத்துள் இழுத்து வந்து குதற முயற்சித்தனர். “2009 இல் வான்கூவரில் கரைதட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்த ‘விடுதலைப்புலி பயங்கரவாதிகளை’ அப்போதைய ஹார்ப்பர் அரசு திருப்பி அனுப்பவிடாமல் தடுத்தவர் தான் இந்த அமைச்சர். “எல்லைகளைப் பலப்படுத்துவதற்கு” இவர் எப்படித் தகுதியானவர்?” என இவ்வூடகங்கள் ஓலமிட்டன. இவற்றுக்கு அமைச்சர் சரியான பதிலைக் கூறியதும் வேதாளங்கள் மீண்டும் மரமேறிவிட்டன. லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்ணியும் தன்பங்கிற்கு அவரது statesmanship ஐச் செவ்வனே காட்டியிருந்தார். அமைச்சர் ஆனந்தசங்கரி “highest standard of intergrity with meticulous record” உள்ளவர் என்ற சாரத்தில், அப்பதவிக்கான தனது தேர்வு சரியானதே எனக்கூறியது சாமானியர்களுக்கானதல்ல.

அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தமது வாழ்வை செயற்பாட்டாளர்களாகவே (activists) ஆரம்பிப்பது வழக்கம். அனுபவமின்மை காரணமாகவோ மிதமிஞ்சிய அட்றீனலின் சுரப்பு காரணமாகவோ அல்லது ‘தமக்கு எல்லாம் தெரியும்’ (nascisisistic) என்ற மமதையின் காரணமாகவோ இவர்கள் அவ்வப்போது மேற்கொள்ளும் கொக்கரிப்புகள், பின்னர் அரசியல்வாதிகளாக அவர்கள் உருமாற்றம் கொள்ளும்போது, வரிசையில் நின்று வருத்தம் தருவது புதிய விடயமல்ல. ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜே தணிகாசலம் மாணவ செயற்பாட்டாளராக இருந்தபோது விடுதலைப் புலிகள் பற்றிக்கூறியவை பின்னர் பூமெராங்க் ஆக வந்து அவரை வதைத்தது சிறந்ததொரு உதாரணம்.

அமைச்சர் ஆனந்தசங்கரியின் இக்கட்டான நிலை குறித்து தமிழ்ச்சமூகமாக நாம் கண்ணீர் வடிக்கவோ அல்லது அடிதடிகளில் இறங்கவோ தேவையில்லை. அவர் ஒரு வெள்ளையாராக இருந்திருப்பின் பாராளுமன்றத்திற்கு உள்ளூம் புறமும் நடந்துவரும் விடயங்கள் வித்தியாசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற அனுமானத்தில் தான் எம்மில் பலரது அனுதாபங்கள் இருக்கிறது.

****

2009 இல் வான்கூவரில் கரை தட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்று கூறி ஹார்ப்பர் அரசும் அதன் முன்னணி நட்சத்திரம் ஜேசன் கெனியும் அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியபோது மனித உரிமைகள் சட்டத்தரணி பாபரா ஜாக்மன் உதவியுடன் வழக்குத் தொடர்ந்து அக்கப்பலைத் திருப்பி அனுப்பாமல் செய்த பெருமை கனடியத் தமிழர் பேரவைக்கும் அதன் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை போன்றோருக்குத்தான் சேரும். அப்போது பேரவையின் சட்ட ஆலோசகராக ஆனந்தசங்கரி இருந்தார். இக்கப்பல்களில் வந்தவர்கள் விடுதலைப்புலிகள் என நிரூபிக்க ஹார்ப்பர் அரசுக்கு பலமான ஆதாரம் தேவைப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய பேராசிரியர் றொஹான் குணரட்ணவின் நிபுணத்துவ சாட்சியம் (expert witness) பெறப்பட்டது. அவ்வழக்கின்போது பேரா.குணரட்ணவின் சாட்சியம் நம்பத்தகுந்தது அல்ல என அவருக்கு எதிராக முன்னாள் விடுதலிப் புலி உறுப்பினரான ககுஸ்தன் அரியரட்ணத்தைச் சாட்சியமாக வைத்து வழக்கை வென்று இக்கப்பல்வாசிகள் அனைவரையும் கனடாவில் குடியமர்த்தியதில் கனடிய தமிழர் பேரவைக்கும் அமைச்சர் ஆனந்தசங்கரிக்கும் பாரிய பங்குண்டு. அப்போது ஆனந்தசங்கரி ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்லாது தமிழ் செயற்பாட்டாளராகவே இதைச் செய்திருந்தார். ஹார்ப்பர் அரசு கூறியதைப்போல் இக்கப்பல்களில் வந்தவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் அல்லர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்ட விடயத்தை இப்போது ஓலம் வைக்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வசதியாக மறைத்துவிட்டனர்.

பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் அமைச்சர் ஆனந்தசங்கரி தனது சமூகம் சார்ந்து ஆற்றிய நடவடிக்கைகள் குறித்து அவர் எவரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை. தனது இந்நடவடிக்கைகள் குறித்தும், மனைவியின் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது சமூக உடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் அகற்றப்படாமல் இப்போதும் அப்படியே உள்ளன. இவையெல்லாவற்றையும் பார்த்துப் பிழிந்தெடுத்த பிறகுதான் சட்ட பரிபாலனம் அவருக்கு இவ்வமைச்சுக்கான பரிந்துரைப்பைச் செய்திருக்கும். இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும் அவரோடு ஒத்தூதும் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.

****

அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, எறிந்த சில அம்புகள் திரும்பி வந்து அவரைத் தாக்கிய சம்பவங்களுமுண்டு. இவற்றையெல்லாம் கிண்டியெடுக்குமளவுக்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் பலருக்கு விவேகம் இல்லையாதலால் ஊடகங்கள் அப்பணியைச் செய்துள்ளன. அவற்றிலொன்று: “கனடிய தேசிய பாதுகாப்பு ஆணையங்களான ‘சீஸிஸ்’ மற்றும் ‘ஆர்.சீ.எம்.பி’ போன்றவை சன் சீ கப்பலில் வந்த அகதிகளைத் தொடர்ந்தும் மிரட்டிக்கொண்டிருக்கின்றன” என்ற ஆனந்தசங்கரியின் கூற்று. இப்போது தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும், ‘சீஸிஸ், ஆர்.சி.எம்.பி’ போன்ற ஆணையங்களை மேற்பார்வை செய்யும் அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது தமிழ்ச் சமூகம் சம்பந்தப்படும் எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் “அவரது கடமையுணர்வு நாட்டையா அல்லது அவரது சமூகத்தையா சார்ந்து நிற்கும்?” என அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. இதற்குப் பதில் தரும் வகையில் அமைச்சர் “ஒரு உள்ளகப் பாதுகாப்பு அமைச்சராக, என் சமூகம் சார்ந்த விடயங்களில் நான் முடிவுகளை எடுப்பதிலிருந்து என்னை விலத்தி வைக்கும் ஒப்பந்தத்தை நெறிமுறை ஆணையருடன் (ethics commissioner) செய்துள்ளேன்” என அவர் அறிவித்துள்ளார். அதுவே அவருக்கும் அவர் சார்ந்த சமூகத்திற்கும் பொருத்தமான ஒரு விடயமாகும்.

ஆனால் அமைச்சர் இச்சத்தியத்தைக் காப்பதற்கு நமது சமூகம் இடம் கொடுக்குமா? இங்குதான் நமது (தென்னாசிய) நண்டுக் கலாச்சாரத்தின் பாதிப்புகள் தலைகாட்ட வாய்ப்புண்டு. “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நான் முயற்சிப்பேன்” என்ற தேர்தல் காலக் கோஷங்களோடு சில அரசியல்வாதிகளும், “இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிக்கூண்டுகளில் நிறுத்துவேன்”; “தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை” எனப் பல அரசியல்வாதிகளும் அவ்வப்போது கோஷமெழுப்பி வருகிறார்கள். இக்கூற்றுகள் வெள்ளைத்தோல் அரசியல்வாதிகளின் வாய்களிலிருந்து வந்துவிட்டால் “அவர்களே கூறிவிட்டார்கள், நம்மாள் இன்னும் வாயே திறக்கேல்லை” என்பது போன்ற அழுத்தங்கள் பொழியத் தொடங்கிவிடும். வாக்குக் கனவுகளுடன் இம்மேடைகளில் ஏற வரிசைகளில் நிற்கும் நமது அரசியல்வாதிகளுக்கு -ஆரம்பிப்பவர்களும், அனுபவசாலிகளும் – . அமைச்சரின் இந்த அனுபவம் சிறந்ததொரு பாடத்தைக் கற்பித்திருக்கும் என நினைக்கிறேன்.

கமாக நாமும் எமது எதிர்பார்ப்புகளில் சாமர்த்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்பிரதிநிதிகள் தமிழர்களை மட்டுமல்ல பரந்த கூட்டு சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்; தமிழராக இருப்பது பெருமைதான் என்பதோடு எமது நடவடிக்கைகள் எல்லைப்படுத்தப்பட வேண்டும்.

அமைச்சர் ஆனந்தசங்கரியின் இத்துர்ப்பாக்கியமான நிலைக்கு அவரது கடந்தகால நடவடிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவை எமது சமூகத்தின்பால் நடைபெற்றவையாயின் அவரது இடரில் எமக்கும் பங்குண்டு. இத் தேவையற்ற சம்பவத்திற்கு மூலகாரணம் இனத்துவேஷம். இது ஒட்டுமொத்த வெள்ளையரல்லாத இனங்கள் அனைத்தையுமே அவமதிக்கும் ஒரு சம்பவம். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கு எமது அதிருப்தியைத் தெரிவிப்பது அவசியம். (Image Credit: WS)

https://marumoli.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/#google_vignette

கிழக்கில் தமிழரசுக்கட்சியின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு

3 months ago
M. A. Sumanthiran https://www.facebook.com/share/16Undgtm51/ Nadeshan Thusyanathan மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் 11.06.2015 காலை 09.40 மணிக்கு இடம்பெற்றது. அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த கௌரவ சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த கௌரவ மாசிலாமணி சண்முகலிங்கம் அவர்கள் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த கௌரவ நவரெத்தினராசா ரகுநாதன் (ரகு) அவர்கள் வழிமொழிந்தார். வேறு தெரிவுகள் எதுவும் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அத்தோடு பிரதி முதல்வராக கௌரவ வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் போட்டிக்கு மத்தியில் மொத்த 34 வாக்குகளில் 18 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
பிந்திய தகவல் 3ம் நாள் இரவு இடியுடன் கூடிய மழைக்கு வாய்புண்டாம். நான் 4ம் நாள் டிக்கெட் வாங்கும் போதே நினைத்தேன்🤣. ஒன்றில் மழை குழப்பும் அல்லது 3ம் நாளே நேட்ச் கிட்டதட்ட முடிந்து விடும் போல உள்ளது😔

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
அவர்கள் பந்து வீச்சை நம்பினார்கள். அது போலவே அவுஸ்திரேலியா சுருண்டது. நாளைக்குத்தான் தெரியும் எத்தனை ஓட்டங்கள் அடிக்கப் போகினம் என்று. நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தது அவர்களுக்குப் பின்னடைவு. டெம்பா நிக்கிறபடியா, கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. நாளைக்குப் பந்து பெரிசா திரும்பாது என்று நினைக்கிறேன். முதல் பத்துப் பரிமாற்றத்துக்கு தப்பினால், பிறகு நின்று ஆடலாம்.