Aggregator
பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!
Published By: Digital Desk 2
11 Aug, 2025 | 05:46 PM
![]()
யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவை இலாப நோக்கமின்றிக் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தினோம். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பே இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களை ஊக்குவித்தது" என்றனர்.
உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் பன்மொழிப் பதிப்பகங்களைக் காணவும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசவும், புத்தக வெளியீடுகளில் பங்குபெறவும், நாடக நிகழ்வுகளைக் காணவும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சிக்கு அப்பால் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்
கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்
11 Aug, 2025 | 05:14 PM
![]()
இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த வியாழக்கிழமை (07) அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட துறையின் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.
ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உயர் தரத்தை எதிர்பார்க்கும் சந்தைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருவாடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது.
இக்கலந்துரையாடலின் போது, பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டில் உயர்தரமான கருவாட்டினைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அவர்களின் முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டது. மேலும், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் கருவாடு உற்பத்தியின் போது காணப்படும் தரம் தொடர்பான பிரச்சினைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார். "இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, உயர்தரமான கருவாடு உற்பத்தியை உருவாக்குவதும், அதன் மூலம் ஏற்றுமதி சந்தையை வலுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாகும்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார்
தொழில்நுட்ப அறிவை வழங்குதல்: உயர்தரமான கருவாடு உற்பத்திக்காகத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
தனியார் துறையை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்ற தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தனியார் துறைக்குத் தேவையான வசதிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குதல்.
தரத்தை மேம்படுத்துதல்: நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் கருவாடு உற்பத்தியின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குதல்.
இக்கலந்துரையாடலில் உற்பத்தியாளர்கள், உயர்தரமான கருவாட்டை உற்பத்தி செய்ய முன்வருவதாக இணக்கம் தெரிவித்தனர். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் கருவாட்டுத் தொழிற்துறையை சர்வதேச மட்டத்தில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது.
கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் | Virakesari.lk
அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு
அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு
11 Aug, 2025 | 04:38 PM
![]()
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு | Virakesari.lk
கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை
கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை
11 Aug, 2025 | 05:16 PM
![]()
கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோஷமிடுவது சர்வசாதாரணம்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன் கச்சதீவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
வட பகுதிக்கு அல்லது முன்னர் வடக்கில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பைக் கொடுப்பதற்கு தீவுகள் முக்கியமானதொரு காரணமாகும். மன்னார் துவங்கி காரைதீவு (காரைநகர்), வரையுள்ள இரணைதீவு, பாலைதீவு, நெடுந்தீவு, கச்சதீவு, புங்குடுதீவு, கற்கடதீவு, எழுவைதீவு, நயினாதீவு. மண்டைதீவு, ஆகியவை இவை. இவற்றுள் மன்னார், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை தரைவழிப்பாதையால் இலங்கைப்பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் எல்லாத்தீவுகளிலும் மக்கள் வசிப்பதில்லை. குறிப்பாக நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கச்சதீவில் மக்கள் வசிப்பத்தில்லை. வருடத்தில் ஒரு முறை மட்டும் இடம் பெறும் கத்தோலிக்க மக்களின் புனித அந்தோனியார் திருநாளுக்கு மட்டும் மக்கள் இலங்கையின் குறிப்பாக வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போவார்கள்.
வடக்கில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மத சகோதரர்களும் கணிசமானளவு தொகையினர் இங்கு வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் திருநாட் காலங்களில் மக்கள் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் முக்கிய ஏற்பாடுகளுக்கு இலங்கைக் கடற்படையினர் பொறுப்பாயிருப்பார்கள்.
கச்சதீவுத் திருநாளுக்கு சில வாரங்குளுக்கு முன் யாழ்ப்பாணச் செயலகத்தில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத்தரப்பினர் யாழ் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் கூடி திருநாளுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவது வழக்கம்.
திருநாள் இல்லாத மற்ற நாட்களில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் கடற்தொழில் செய்பவர்கள் சற்று ஓய்வெடுக்க அல்லது வலைகளைக் காயப்போட இங்கு வந்து போவார்கள். இந்தியக் கடற்தொழிலாளர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து போவதாலும் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தோனியார் கோயிலுக்கு இவர்களும் வந்து வழிபட்டுச்செல்வார்கள்.
நேர்த்திக்கடன் போன்ற கடன்கள் செய்வதற்கும் சில சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் வழங்குவதற்கும் வருவார்கள். இந்தப் பின்ணனியிலும் கணிசமானளவு இந்தியக் கடற்தொழிலாளர்கள் வருவதாலும் கச்சதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்ற ஒரு மயக்கம் உருவானது
ஆயினும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே கச்சதீவில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்றிருந்தது. இவ்வாலயம் யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவுப் பங்கின் கீழ் இருந்தது. நெடுந்தீவுப் பங்கில் உள்ள பங்குத் தந்தைதான் இவ்வாலயத்திற்கு நேரடிப் பொறுப்பாயிருந்து வந்துள்ளார்.
கச்சதீவு திருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுப் பக்கத்திலிருந்து பங்குத்தந்தையின் பணிப்புரையில் கச்சதீவு மூப்பர்' என்றழைக்கப்பட்ட (மூப்பர் அல்லது கணக்குப்பிள்ளை என்னும் கத்தோலிக்க ஆலய நிர்வாக முறை 16ம் நூற்றாண்டில் புனித சவேரியார் காலத்திலிருந்து ஒரு ஆலயத்தில் குரு நிரந்தரமாத் தங்குவதில்லை யென்றால் அவ்விடங்களில் ஆலயப்பராமரிப்பு, மக்களின் ஆன்மீக நலன் சம்பந்தமான விடயங்களுக்கு இந்த மூப்பரே பொறுப்பாயிருப்பார்.
பங்குத்தந்தை வரும் போது இவரே அனைத்துக்கும் பொறுப்பு கூறுபவராக இருப்பார். இப்போது அனேகமான ஆலயங்களில் வதிவிடப்பங்குத்தந்தை இருப்பதால் பெரும்பாலும் இந்த மூப்பர் முறை நடைமுறையில் இல்லை.) அல்லது வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்பவர் யாத்திரிகளது தேவைகளையும் கவனிப்பார். சில உதவியாளர்களுடன் சென்று அங்குள்ள சிற்றாலயம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்வார்.
பங்குத்தந்தையும் சில நாட்களுக்கு முன் சென்று இப்பணிகளை மேற்பார்வை செய்வார். இவ்வாறு செய்த பழைய மூப்பர்களின் வாரிசுகள் இப்போதும் நெடுந்தீவில் உள்ளனர். அண்மைக்காலங்களில் கடற்படையினர் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் பலவற்றை கடற்படையினர் செய்துவருகின்றனர்.
யுத்தகாலத்தில் கச்சதீவு திருநாள் ஒழுங்காக இடம் பெற்றிருக்கவில்லை. இங்கு ஒரு தற்காலிக கடற்படை முகாமும் இருந்தது. யுத்தம் முடிவடைந்தபின் யாத்திரைகள் கிரமாக இந்திய இலங்கை யாத்திரிகாகளுடைய பங்குபற்றுதலுடன் இடம் பெற்று வருகின்றன.
யாழ்மறை மாவட்ட ஆயரின் பணிப்புரையில் நெடுந்தீவுப் பங்குத்தந்தையே வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். யாழ் ஆயரின் அழைப்பின்பேரில் தான் இந்தியாவின் தங்கச்சி மடம் பங்குத்தந்தையும் வேறு சில குருக்களும் துறவிகளும் வருகின்றனர். இந்திய யாத்திரிகளது எண்ணிக்கை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் யாழ் கச்சேரியில் நடக்கும் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது.
இந்திய யாத்திரிகள் கணிசமானளவு வருகின்றமையால் இந்திய குருக்களுக்கும் கூட்டுத்திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கணிசமான பங்கு வழங்கப்படுகின்றது. கச்சதீவுப்பெருநாள் ஏற்பாடுகளும், வழிபாட்டு ஒழுங்கமைப்பும் இலங்கை அரசினதும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் பணிப்புரையிலேயே நடைபெற்றுவருகின்றது.
நிறைவாக கச்சதீவு கடந்த பல தசாப்தங்களாக (யுத்தகாலம் நீங்கலாக) இந்திய இலங்கை யாத்திரிகள் ஏறக்குறைய சரிக்குச்சரி எண்ணிக்கையில் வந்துபோனமையாலும், திருநாள் இல்லாத வருடத்தின் எஞ்சிய நாட்களின் இரு நாட்டுக்கடற்தொழிலாளரும் கச்சதீவுக்குச் சர்வசாதாரணமாக வந்து ஓய்வெடுத்து இங்கிருந்த அந்தோனியார் சிற்றாலயத்தில் வணங்கிச் சென்றதாலும் அரசியல், புவியியல் ரீதியில் கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி குறிப்பாக இந்திய தரப்பில் கேட்கப்பட்டுவந்தது.
இப்பகுதியில் இலங்கைக் கடலில் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதால் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என்று தமிழக அரசியல் தரப்பிலும் இந்திய மத்தி அரசிலும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
உண்மையில் 1974ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் அதில் இந்தியா உரிமை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்தமையாகாது. ஏனெனில் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லை.
இந்த பின்னியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மிளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை அப்போதே யாழ் ஆயராக இருந்த கலாநிதி. ณ. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயரில்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவுப் பங்குப் பதிவேடுகள் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம் யபரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எனவே ய இந்தியப் பிரதமரின் கூற்றாகிய 1974 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதுதான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் தி.மு.க கட்சியும் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளியாக இருந்தது என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
புதிய, 2016ம் ஆண்டு தற்போதைய ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பொறுப்பேற்றபின் பல வருடங்களாக குறிப்பாக போர்க்காலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் ஒரு பல்லாயிரக்கணக்கான யாத்திரிகள் கலந்துகொள்ளும்படியான ஒரு ஆலயம் கட்டவேண்டிய தேவையை உணர்ந்து கடற்படையினரிடம் அனுசரணையைக் கோரியபோது.
அவர்களது அனுசரணையில் ஒரு புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்திய யாத்திரிகர்களும் வருகின்றனர் மற்றும் கடற்தொழிலாளரும் இங்கு மற்ற நாட்களில் வந்து ஓய்வெடுக்கவும் தமது வலைகளைக் காயப்போடவும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து பேணப்படுகின்றது என்றுள்ளது.
கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை | Virakesari.lk
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை
மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை
பதிவேற்றுனர்: அன்பரசி
திகதி: 11 Aug, 2025

மன்னார் நகரத்தின் சுற்றுச் சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காற்றாலைத் திட்டம் மற்றும் மன்னார் தீவையே முற்றாக அழிக்கக்கூடிய கனியமண் அகழ்வுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகக் கைவிடக்கோரி, இன்று மன்னாரில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்திற்கான அவசியம் என்ன?
மன்னார் பகுதியில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டமானது, அப்பகுதியின் சூழலியல் சமநிலையை முற்றாகப் பாதிக்கும் வகையிலும், அங்குள்ள மக்களின் மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதேபோல, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படவுள்ள கனியமண் அகழ்வானது, ஒரு வளமான நிலப்பரப்பை முற்றிலுமாக அழித்து, எதிர்காலத்தில் மன்னார் தீவு என்ற ஒன்றே இல்லாத நிலையை உருவாக்கும் ஒரு பாரிய அழிவுத் திட்டம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவே மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடி வருவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
வலுச்சேர்த்த தமிழ் தேசியப் பேரவை
மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் வகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியப் பேரவையின் தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் துரைராஜா ஜோன்சன் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்தனர்.
தமது அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் வாழ்வுரிமையையும், மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதே தமது முதன்மையான கடமை எனத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், இந்த அழிவுத் திட்டங்களை அரசு கைவிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தனர்.







மன்னாரைக் காக்க மாபெரும் மக்கள் போராட்டம் - வலுச்சேர்த்த...