Aggregator

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
நான் அந்த பக்கங்களிலேயே மிக தெளிவாக கூறி உள்ளேன்… நான் முன் வைத்திருப்பவை… சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வை. அவை நான் எழுதியவை அல்ல. பல இடங்களில் இருந்து எடுத்த இணைப்புகளும் அதில் உள்ளன. நான் பத்திரிகையாளரும் இல்லை. சி பி சி ஐ டியும் இல்லை. ரோ செய்த, குற்றவாளிகள் தண்டிக்க படாத, பூசி மூடிய கொலையை - துப்பு துலக்க நான் ஜேம்ஸ் பாண்டு இல்லை. ரோ செய்த கொலைக்கான உண்மையை இந்திய பத்திரிகையில் தேடும் அளவுக்கு அப்பாவியும் இல்லை😂. ஆனால் சீமான் முத்துகுமாரை யார் என தெரியாது என மறுத்தது (வீடியோ ஆதாரம் இணைதேன்) முதல், சாட்டை அவரின் மனைவியை கருக்கலைத்து, மணம் முடித்து, அவர்கள் காணியில் இருந்த சாவுகட்டை அடித்து அழித்தத்து வரை, நாதகவில் முத்துகுமார் நினைவேந்தலும் இல்லை, இவ்வாறு இது சீமானின் துரோகத்தில், ரோ செய்த கொலை என்பதை காட்ட பல முதல் நிலை ஆதாரங்களாவது உள்ளன. மீதி நியாயமாக விசாரிக்கப்பட்டல் வெளிவரும். சரி விடுங்க…கொண்டைய மறைக்க மறந்தா…இப்படி ஏதாவது சப்பை கட்டு கட்டத்தான் வேணும்😂

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

3 months 2 weeks ago
மக்கள் கிளர்ச்சியா? ☹️ஜெ.வி.பி என்ற இடதுசாரி கும்பலின் நீண்ட நாள் வன்முறை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியா? உலக ,பிராந்திய வல்லர்சுகளின் துணையுடன் (யூ ரியுப்.மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்)

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
சீமான் - ரோ - முத்துக்குமார் அனைத்தும் தங்களுடைய ஊகங்களாகவே உள்ளன.மன்னிக்கவும் நான் தங்களை தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியராகவோ / செய்தியாளராகவோ கருத இயலவில்லை மேலதிகமாக தெரிந்து கொள்ள செய்தி தளங்களை தாருங்கள்.. இங்கு நற்குடி என்பது கஞ்சா கடத்துதல் /கொலை / ஊழல் இதில் ஈடுபடாது இருத்தல் ஆகும்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!

3 months 2 weeks ago
இதற்கு முன் பல பெண் நீதிபதிகள் இதே மல்லாக்கத்தில், யாழ் உயர் நீதிமன்றத்தில் கடமையாற்றி இருக்கிறார்கள். அப்போ ஒரு முறைப்பாடும் அவர்களுக்கு எதிராக எழவில்லை. உதாரணமாக உதயநிதி என்று நினைக்கிறன், பெயர் மனதில் சரியாக இல்லை. யாழ் நீதிமன்றத்தில் கடமையாற்றியவர், இவர் இராணுவத்தினரின் மக்களுக்கெதிரான கெடுபிடிகளை கண்டித்தவர், இந்த ஒரு காரணத்தினாலேயே இடம் மாற்றப்பட்டவர், மஹிந்த ஆட்சியில். நம்ம ஆட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை அதையும் ஒத்துக்கொள்கிறேன்

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
ஆஹா…அண்ணன் சீமானின் “குடி தேசியம்”. குடி என்றால் சாதிதானே? நல்லது (என சொல்லிகொள்ளும்) சாதியில் பிறந்தால்தான் நல்லியல்புகள் பொருந்தும் என்கிறீர்களா?

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 months 2 weeks ago
எந்த நெருக்கடி வந்த பொழுதும் கொண்ட கொள்கையில் தடுமாறாமல் உறுதியுடன் நின்ற புலிகளுடன் விஜையை ஒப்பிடுவதை என்வென்பது? Time to lead tittle போட்டு ஜெயலலிதா படத்துக்கு நெருக்கடி கொடுத்தவுடன் அப்பனும் மகனும் போய் ஜெயலலிதா காலில் விழுந்த விஜையை இந்திய அரசோடு மோத முடிவெடுத்த புலிகளுடன் ஒப்பிடுவதை என்னவென்பது?

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 months 2 weeks ago
அண்ணா எம்ஜியார் படத்தைப் போஐவது இரட்டை இலை வாக்குகளைம் உதயசூரியன் வாக்குகளையும் குறிவைத்துத்தான். விஜயகாந்தைப்பற்றிப் பேசியது தேதிமுக வாக்குகளை குறிவைத்துத்தான்.:ழத்தமிழர்கள் தொடர்பாக பட்டும்படாமலும் தொட்டுத்தொடாமலும் பேசியது நாதகவின் வாக்குகளைக் குறிவைத்துத்தான்.திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு காங்கிரசை விமர்சிக்காமல் இருப்பது.காங்கிரசுக்கான கூட்டணிக்கதவைத்திறந்து வைப்பதற்குத்தான்.பாஜகவை விமர்சித்து விட்டு அதன்கூட்டணிக்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் இருப்பதும் அதே கூட்டணிக்கதவை திறந்துவைப்பதற்குத்தான்.விஜை கூட்டணி அமைத்தால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு படம் நடிக்கப் போய் விடுவார்.சீமான் இந்தத் தேர்தலில் தனித்து நின்று இப்போதிருக்கும் 8 வீதம் வாக்குகளை எடுத்தால் அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
திரு ராமசந்திரனின் இன்னொரு முகம் எல்லோருக்கும் தெரியும் தோழர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். தங்கவேலு கதைத்தது உண்டு குணம் நாடி குற்றம் நாடி என்ற குறளுக்கு ஏற்ப குற்றத்தை விட குணம் அதிகமாக ...யாரும் குறைகளை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை அதுதான் உண்மை . அதற்காக செய்தது எல்லாம் சரி என்று ஆகாது..

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
இந்த லிஸ்டில்… சீமான் றோவுடன் சேர்ந்து துரோகத்தால் கொலை செய்த… நா த க வின், முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர், இணை-நிறுவனர் - இனமான வீரன் சு ப முத்துகுமாரையும் சேர்க்க வேண்டும்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
காந்தியடியே மகள் முறையான சிறுமியை அருகில் வைத்து கொண்டு நித்திரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர் என்கிறார்கள். ஒரு நடிகனுக்கு (ரஜனி) முதல்வர் காணி கொடுத்தால், அதை வெறும் உதவி என்றும், அதையே ஒரு நடிகைக்கு (அம்பிகா ராதா) கொடுத்தால் பாலியல் இலஞ்சம் எனவும் தானியங்கியாக கருதுவது. கருத்தாளரின் ஆணாதிக்க மனப்பான்மை, அன்றி வேறில்லை. எம் ஜி ஆரிடம் பண உதவி பெற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவருக்கு தவறான உதவி செய்தனர் என்கிறீர்களா? பிகு இந்தியன் என சொல்லி கொள்ளும் உங்களுக்கே இந்திய வரலாற்றை பாடம் எடுக்க கூடாது, ஆனாலும் தரவு பிழை என்பதால் சொல்கிறேன் - காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தண்டி யில் நடந்தது. வேதாரணயத்தில் அதன் ஆதரவு போராட்டம் ராஜாஜி நடத்தியது. வாரும்…இரும்…படியும்…😂

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 months 2 weeks ago
காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..? இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் . அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!! இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ? சாட்சிகள் நிலவரம் .. மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்? நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

3 months 2 weeks ago
குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி Published By: Vishnu 25 Sep, 2025 | 03:52 AM குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/226011

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

3 months 2 weeks ago
வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தரவுகளில் 50 சதவீதமானவை மாத்திரமே துல்லியமானவை : பிரதி அமைச்சர் Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 01:32 PM அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானது என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வழங்கினார். உணவுப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அடையாளம் காணவும், அவற்றை முறையாக ஆய்வு செய்யவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நோக்கமாகக் கொண்டு, 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நாடு முழுவதும் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களினால் குரங்குகள், மக்கா குரங்குகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில் போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் வழங்கிய தரவுகளில் 50 சதவீதமானவையே துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், தரவுகள் சரிபார்ப்பின் போது, குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் அளித்த தகவல்களில் 50சதவீதமானவை துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, உணவுப் பயிர்களுக்கு வனவிலங்கு சேதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்குப் பொறுப்பான குழு, கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலங்கு எண்ணிக்கையையும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, மக்கா குரங்குகள்– 5,197,517 குரங்குகள்– 1,747,623 முள்ளம்பன்றிகள் – 2,666,630 ராட்சத அணில்கள் – 4,285,745 யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226045

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

3 months 2 weeks ago
25 Sep, 2025 | 06:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226043

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

3 months 2 weeks ago

25 Sep, 2025 | 06:20 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.

இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/226043