3 months ago
11 JUN, 2025 | 01:41 PM

மின்சாரக் கட்டணம் இன்று நள்ளிரவு (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் உயர்வடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/217159
3 months ago
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பு 11 JUN, 2025 | 02:19 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர். “மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார். இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன். மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என்றார். ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எங்களையும், எங்கள் வாழ்விடங்களையும், எங்கள் வளங்களையும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க உங்களை வேண்டுகின்றோம்" கடந்த ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை நாம் சாத்வீக முறையில் தொடர்பாடல்கள் வழியாகவும், போராட்டங்கள் மூலமாகவும், பல துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பல அரச நிறுவனங்களுடன் மாவட்ட, மாகாண மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாகவும் எமது நாட்டையும் எமது மாவட்டத்தையும் எமது வாழ் விடங்களையும் எமது வளங்களையும் எமது வாழ்வாதாரங்களையும் பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும், மகிழ்வுடன் வாழவும் முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் இதுவரைக்கும் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் பல்வேறு தளங்களிலும், பல்வேறு விடயங்களிலும், திட்டமிட்ட முறையில் நடைபெறும் பல பயங்கரமான அழிவுகளை சந்தித்துவருகிறோம். எங்களுக்குரிய மனித உரிமைகள் அனைத்தும் இழந்த நிலையில், நம்பிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நிலையில் உங்கள் ஆட்சியில் வாழ நேரிட்டிருப்பது வேதனைக்குரிய, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலையாக உள்ளது. எமது மாவட்டத்தில் நடைபெறும் சரியான முறையில் திட்டமிடப்படாத திட்டங்களும், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காத திட்டங்களும், நாட்டில் உள்ள பல்வேறு சட்டதிட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் திட்டங்களும், எமது மனித உரிமைகளை மீறும் திட்டங்களையும், எமது வாழ்விடங்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்கள் அனைத்தையும் உடன் நிறுத்தி, மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் நீண்ட வாழ்வினை பாதிக்காத, வளங்களை பாதுகாக்கின்ற, வதிவிடங்களை அழிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத திட்டங்களை மட்டும் முன்னெடுக்குமாறு இலங்கை நாட்டு மக்களாகிய நாம் அன்புடன் கேட்டு நிற்கின்றோம். இப்போது எமது மாவட்டத்தில் எமது வாழ்வினை அழித்துக்கொண்டிருக்கும் திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் சில... 1. மன்னார் தீவில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் (பல நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் அனுமதியுடன் ஆதரவுடன் செய்து வருகிறது. உதாரணம் தாழ்வுபாடு, கீரி, தரவன் கோட்டை, சாந்திபுரம், சவுத்பார், சிலாவத்துறை, காயாக் குழி போன்ற சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2. வெளிநாட்டு தனியார் கொம்பனிகளினால் எமது இலங்கை நாட்டையும், மன்னாரையும் முற்றாக அழித்து எங்கள் வளங்கள் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல மன்னார் தீவிலும், மன்னார் பெரும் நிலப்பரப்பிலும் மேற்கொள்ளப்படும், மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வளங்களை அழிக்கும், மனிதன் வாழும் உரிமைகளை அழிக்கும் பல கனிய மணல் அகழ்வு திட்டங்கள். இரண்டு நிறுவனங்களால் கனிய மண் அகழ்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்படுகிறது. 3. பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வரும் கடல் வளங்கள், அத்துமீறிய இந்திய மீனவர்கள் வருகை, சட்டங்களுக்கு எதிரான மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், திட்டமிடாத அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுதல் போன்ற செயல்களால் கடல் வளங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. 4. மக்களின் வாழ்விடங்களும் காணிகளும் அபகரிக்கப்படுதல். மக்களின் தேவை கருதியும், அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படும் வகையில் காணிகள் இன்னும் பங்கிட்டு கொடுக்கப்படாமல் காலங்கள் பிற்போடப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். (இதுவரை 4000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதற்கு காணிகள் கேட்டும், 800 க்கு மேற்பட்ட இளையோர் சுய தொழில்கள் தொடங்க காணிகள் கேட்டும், மன்னார் மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள்.) இவை போன்ற பல பாரிய அழிவுகளை இலங்கைக்கும் எமது மாவட்டத்துக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும், பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த கண்டன, எதிர்ப்பு ஊர்வலத்தில் நீங்கள் ஆட்சி செய்யும் இலங்கை நாட்டின், மன்னார் மாவட்டத்தின் மக்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217154
3 months ago
நாளின் முடிவில் புள்ளிகள் வெளிவரும். அடியார்கள் அமைதி காக்கவும்🤣. என்னதான் வெய்யில் அடித்தது எண்டாலும் லோர்ட்ஸ் ஆடுகளம் வழமைபோல் ஆரம்பநாளில் முதல் செசனில் பந்து வீசும் அணிக்கு சார்பாகவே அமைந்துள்ளது.
3 months ago
LUNCH Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Day 1 - Session 1: South Africa chose to field. Australia (23.2 ov) 67/4 Current RR: 2.87 • Min. Ov. Rem: 65.4 • Last 10 ov (RR): 34/2 (3.40) South Africa
3 months ago
அது தான் சொல்கிறேன், மொழியியல், எழுத்தியல் போன்ற ஆய்வாளரை தொல்லியலுக்கு பொறுப்பாக நியமிக்க, அந்த மொழியியல், எழுத்தியல் தான் தொல்லியல் என்று, மொழியியல், எழுத்தியல் ஆய்வாளரை வசைபாடுபவர்ளுக்கு, அரங்கு ஏற்படுத்தி கொடுத்தது யார்? திமுக. துறை சார் தொல்லியல் ஆய்வாளரை பொறுப்பாக நியமித்து இருந்தால், இதுக்கு இடம் இல்லை / குறைவு. நான் சொல்லியதே (கிட்டத்தட்ட அதை போல) நடத்தது என்பதை, இருபக்கமும் எவ்வாறு அணுகியது என்பதை பொதுவெளிக்கு அறிவித்ததில் இருந்து வெளிப்படையாக தெரிவது. கவனிக்காதது அவரவரின் பிரச்சனை. அமரநாத்தை மாறி, மாறி, விட்டு, விட்டு நியமித்தாலும், இறுதியில் ஆய்வின் அறிக்கை வந்துள்ளது தானே. அதிலே தானே கேள்விகள். அமரநாத்தை (அல்லது அவரை போன்ற நிபுணத்துவம் உள்ள ) பொதுவாக தொடர்ச்சியாக ஒருமாநிலத்துக்கு நியமிக்க முடியாது. ஏனெனில் தொல்லியல் துறையில் எந்த நாட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது மிகப் பெரிய குறைபாடு, அமெரிக்காவில் கூட. இந்தியாவில் (அதை போன்ற பெரிய நிலப்பரப்பு நாடுகளில்) ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தொல்பொருள் ஆய்வு நடப்பது, எனவே எது மிக கூட வாய்ப்பாக தெரிகிறது என்பதை பொறுத்து தான் நியமனம். இப்படியே (சர்வதே) தொல்லிய துறைகள் குறிப்பிட்ட நாடு உடன், குறித்த capacity இல் சேர்ந்து ஆய்வு செய்யும் போதும் நடப்பது. இந்திய தொல்லியல் துறை ஒவொரு மாநிலத்துக்கும், (சர்வதேச) தொல்லியல் ஆய்வு நடப்பதை போலவே செயற்படுகிறது, ஏனெனில் பெரிய நிலப்பரப்பு. எல்லாவற்றிலும் அடிப்படை பிரசனை நிபுணத்துவம், அனுபவம் பெற்றவர்கள் என்பவ்வர்களை விரல்விட்டு எண்ணலாம். ஆக குறைந்தது இந்த விடயத்தில், தமிழ் நாடு அதிர்ச்சியான ஆச்சரியம் அடைந்தது. தமிழ்நாடு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பியது. தமிழ்நாடு சொல்வதில் இருந்து தெரிவது. (தமிழ்நாடு நம்பியதுக்கு ரொமிலா தபர் காரணமாக இருக்கலாம். அவர் சொல்லியது தமிழ் நாடு இலக்கியங்களில் தங்கி இராது, துறைசார் (தொல்லியல்) ஆய்வை கீழடியில் செய்து உள்ளது என்று. அப்படி நடந்து இருந்தால் தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அர்த்தம்) எனவே தொல்லியல் துறை அரங்கேறுவது தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அடையக் கூடிய முடிவு. அதை அரசியல் ஆகிக் கொண்டு இருக்கும் வேளை, இதை உணர்ந்த இந்திய தொல்லியல் துறை, கேட்கப்பட்டது அரசியல் அல்ல, துறைசார் சம்பந்தமான விடயம் என்பதை அறிக்கை விட்டு தெளிவு படுத்தியது. கேட்கப்படத்துக்கு, பாலகிருஷ்ணனின் பதில் அரசியல் ஆக இருந்தது, எவரோ இந்த கீழடி ஆய்வு அறிக்கை வெளிவருவதை விரும்பவில்லை என்று. குறிப்பு: (தொல்லியலில் இவ்வளவு விஞ்ஞானம் இருந்த்தும் எம்மவர்கள் அல்லது வேறு நாடுகளிலோ, அது அவ்வளவு கவர்ச்சி இல்லை. (மிக) கூடிய பரந்த அறிவும் (விஞ்ஞானம், மருத்துவம், சமூக விஞ்ஞானம், humanities, கணிதமும்), திறமையும் வேண்டிய துறையில், மிக குறைந்த சம்பளம், அத்துடன் புழுதியில், கணிசமான சந்தர்ப்பங்களில் இரவு வேலை, வேலையும் ஏற்ற இறக்கம் மிக கூட. மறுவளமாக, எமது / தென்னாசிய / ஏன் மேற்கு சமூகத்தில் கூட தொல்லியல் என்றால் தோண்டுதல் என்பதே. அப்படி இருப்பவரை எவராவதும் இப்போதும் கணக்கில் எடுப்பது இல்லை. தொல்லியல் கிட்டத்தட்ட thankless career. எனவே ஒருவரையும் குறை சொல்லவும் முடியாது தொல்லியலை தொழிலாக எடுக்காததற்கு. ஆனால், தொல்லியலில் BSc செய்தவர்களுக்கு பலவேறு துறைகள் கதவை திறக்கும்.)
3 months ago
டெஸ்ட் சாம்பியன் பைனல்: ஆஸ்திரேலியா செய்துள்ள மாற்றம் தென் ஆப்ரிக்காவை குழப்பும் உத்தியா? பட மூலாதாரம்,X/JAY SHAH கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஜூன் 2025, 02:12 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணி மோதுகிறது. 1998 ஐசிசி நாக்அவுட் சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பின் தென் ஆப்ரிக்கா இதுவரை ஐசிசி சார்பில் எந்த கோப்பையையும் வென்றதில்லை. ஆஸ்திரேலியா Vs தென் ஆப்ரிக்கா ஐசிசி சார்பில் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவதும் இதுதான் முதல்முறையாகும். லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி நடப்பதும் இதுதான் முதல்முறையாகும். ஆனால் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்காவும் மோதுவது முதல்முறை அல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்பே இரு அணிகளும் இதே லார்ட்ஸ் மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளதாக வரலாறு இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா தகுதி பெற்று, கோப்பைக்காக போராடுவது இது முதல்முறையாகும். ஆஸ்திரேலியா ஆதிக்கம் இந்த லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் சந்தித்து 15 போட்டிகளை டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்க அணி 18 போட்டிகளில் 6 வெற்றிகள், 8 தோல்விகள், 4 டிரா செய்துள்ளது. நூற்றாண்டு வரலாறு 1912ம் ஆண்டில் முத்தரப்பு டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இடையே நடந்தது. அந்த நேரத்தில் இந்த 3 அணிகள்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடியவை. அப்போது 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்ரிக்கா அணியும் இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் விளையாடின. 113 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்தத் தொடரில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது 27 ஆண்டுகளாக காத்திருப்பு ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய அவமானத்துடன் இருக்கிறது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் 2022-23ம் ஆண்டில் டெஸ்ட் தொடரில் விளையாடின. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக இரு அணிகளும் தங்களுக்குள் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. அந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என்று தொடரைக் கைப்பற்றியது. இதுவரை இரு அணிகளுக்குள் 101 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் தென் ஆப்ரிக்க அணி 26 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 54 வெற்றிகளுடன் ஆதிக்கம் செய்கிறது. 21 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன, வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 வெற்றிகளும், தென்ஆப்ரிக்க அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. பொதுவான இடத்தில் 1912ல் நடந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் 2-0 என வென்றுள்ளது. இந்த இரு வெற்றிகளும் லார்ட்ஸ், மான்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளன. ஆகவே கடந்த காலங்களில் இருந்து ஒப்பீடு செய்தால், டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செய்து வந்துள்ளது தெரியவருகிறது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள், கடந்த கால வெற்றிகள், அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வீரர்கள் வருகையால் தென் ஆப்ரிக்க அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளதால், கடந்த கால வரலாற்றை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை அந்த அணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். அனுபவம் ஆஸி.க்கு வலிமை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் பெரும்பாலானவர்கள் இதற்கு முன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடிய அனுபவம் உடையவர்கள். இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி விளையாடலாம், எப்படி கையாளலாம் என்பதை நன்கு தெரிந்தவர்கள். அதனால்தான் கடந்த 4 ஆண்டுகளில் ஐசிசி சார்பில் நடந்த 3 விதமான போட்டித்தொடர்களில் 4 கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பந்துவீச்சில் உலகின் தலைசிறந்த வீரர்களான பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணியும், பேட்டிங்கில் அனுபவம் மிக்க ஸ்டீவ் ஸ்மித், இரு பைனல்களில் சதம் அடித்த டிராவிஸ் ஹெட்டும் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாகும். இதில் பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லேயான், மிட்ஷெல் ஸ்டார்க் கூட்டணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 4 பேரும் சேர்ந்து தலா 250 விக்கெட்டுகள் குவித்துள்ளனர். ஆனால், ரபாடா மட்டும் தனித்து 327 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவை குழப்பும் ஆஸ்திரேலியா புதிய உத்தியா? ஆனால், இந்த பைனலில் தென் ஆப்ரிக்க அணியை குழப்பும் விதத்தில் பேட்டிங் வரிசையையே ஆஸ்திரேலிய அணி மாற்றி அமைத்திருக்கிறது. காயத்தால் பல மாதங்கள் ஓய்வில் இருந்து அணிக்குத் திரும்பிய கேமரூன் க்ரீன் பந்துவீச முடியாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் முதல்முறையாக உஸ்மான் கவாஜாவுடன் சேர்ந்து லாபுஷேன் தொடக்க வீரராகக் களமிறங்குகிறார். 3வது வீரராகக் களமிறங்கும் டிராவிஸ் ஹெட் நடுவரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவை அனைத்தும் ஆஸ்திரேலிய அணி பரிசோதனைக்காகச் செய்துள்ளதா அல்லது தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களைக் குழப்பும் வகையில் மாற்றி அமைத்துள்ளதா என்பது தெரியவில்லை. இளம் படையுடன் தென் ஆப்ரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை இதுபோன்ற பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் உத்தி, திறன், தாக்குதல் குறித்து அறிந்திருக்கவில்லை, முதல்முறையாக பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்கிறது. மார்க்ரம், ரிக்கெல்டனுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்குவார். டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், கேப்டன் பவுமா, முல்டர், டேவிட் பெடிங்காம் நடுவரிசையில் களமிறங்குவார்கள். ஐபிஎல்லில் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் பந்துவீச்சை சந்தித்த அனுபவத்தை இந்தத் தொடரில் பயன்படுத்தலாம். ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சுதான். கடந்த முறை இதே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டர்களை சிதைத்து பெரிய வெற்றியை ரபாடா பெற்றுக் கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் ரபாடாவின் மின்னல் வேக, ஈட்டிபோல் இறக்கும் பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ரபாடா தவிர்த்து லுங்கி இங்கிடி, மார்கோ யான்சென், முல்டர் உள்ளனர். டேன் பாட்டர்ஸ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சேகவ் மகராஜ், மார்க்ரம் மட்டுமே உள்ளனர். வழக்கமாக ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகள் கூக்கபுரா பந்துகளில்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவை. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில், டியூக் பந்து பயன்படுத்தப்படுகிறது. டியூக் பந்தில் ரபாடாவின் பந்துவீச்சு பெரிய அளவுக்கு சிறப்பாக இருக்கும் என நம்பப்படுவதால், அவர் தென் ஆப்ரிக்காவுக்கு துருப்புச்சீட்டாக இருப்பார். லாபுஷேனுக்கு புதிய பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை கவனத்தை ஈர்த்திருப்பவர் லாபுஷேன். முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கும் லாபுஷேன் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக ஒன்டவுனில் இருந்து மாறி லாபுஷேன் பேட் செய்கிறார். லாபுஷேனின் சமீபத்திய சர்வதேச ஃபார்ம் கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் உள்நாட்டில் ஆடிய ஆட்டம், அடித்த சதம் நம்பிக்கையை அளித்து அணியில் இடம் பெறவைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் லாபுஷேனின் அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பலமாகும். ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக லாபுஷேனை தொடக்க வீரராகக் களமிறக்கி பரிசோதிக்கிறது. கேமரூன் க்ரீன் 3வது வீரராக களமிறங்குகிறார், அவரால் பந்துவீச முடியாததால் பேட்டராக பயன்படுத்தப்படுகிறார். கூடுதல் வேகப்பந்துவீச்சாளருக்காக பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.காயத்திலிருந்து மீண்டு ஹேசல்வுட் வந்துள்ளதால், ஸ்காட் போலந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், வெப்ஸ்டர் ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு லேதன் லயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஆகியோர் உள்ளனர். நடுவரிசை பேட்டிங்கில் கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ்ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே ஆகியோர் உள்ளனர். ப்ளேயிங் லெவன் ஆஸ்திரேலிய அணி விவரம் (உத்தேச அணி) உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், கேமரூன் க்ரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரே, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான், ஜோஷ் ஹேசல்வுட் தென் ஆப்ரிக்க அணி விவரம் (உத்தேச அணி) எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், டேவிட் பெடிங்காம், கெயில் வெர்னே, மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானம் இங்கிலாந்தில் கோடைகாலம் தொடங்கியிருக்கிறது. ஆதலால் பகல்நேரத்தில் நல்ல வெப்பம் நிலவும், அதேசமயம், மாலை நேரத்தில் இடியுடன் மழையும் வரலாம். ஜூன் மாதத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமான ஆட்டங்கள் ஆடிய அனுபவம் ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இல்லை ஆதலால் காலநிலையை அறிந்து பந்துவீச இரு அணிகளுக்கும் சிறிது நேரம் ஆகலாம். ஆடுகளம் வறண்டிருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், இரு அணிகளிலும் இருக்கும் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் துருப்புசீட்டாக இருப்பார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு ஆடுகளம் இருக்கலாம். ஆனால், 2 நாட்களுக்கு ப்பின் ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrnxv4207po
3 months ago
அமெரிக்கப் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியரே. அவர்களைவிட இன்று அங்குள்ள அனைவரும் குடியேறிகளே. நான் சொல்லவில்லை அமெரிக்க சரித்திரமே சொல்கிறது.
3 months ago
அவர்களெல்லாம் தலைமைத்துவ போட்டியில் மும்முரமாக இருக்கின்றனர், இதுகளுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமேது. ஏதாவது ஓய்வு நேரம் கிடைத்தால் இவை பற்றி அறிக்கை விடுவார்கள்.
3 months ago
அவர் இப்பத்தான் கூகிள் சீட் போடுறதைப்பற்றி யோசிக்கிறார்போல!!😜
3 months ago
ஆறு பேருக்கு 20 புள்ளிகள் போல. கோசான்தான் மிச்சத்தைச் சொல்ல வேண்டும். அவர் ஒன்றும் சொல்லாவிடில், இத்தோடு நிறுத்திக் கொள்ளுவம்.
3 months ago
முற்று முழுதாக முட்டை கிடைக்க சந்தர்ப்பம் மிக மிக அதிகம். கோசான் செய்து வைத்த வேலை அப்பிடி.
3 months ago
ஆஹா, செம்பாட்டானுக்கு தொடக்க நாளே இரண்டு முட்டையா??
3 months ago
தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று அவுஸ்ரேலியாவை துடுப்பெடுத்தாடப் பணித்துள்ளார்கள்
3 months ago
கிருபன் இப்பொழுதே முதல் இடத்தில் 20 புள்ளிகளுடன் இருக்கிறார். வாழ்த்துகள் கிருபன்.
3 months ago
3 months ago
போட்டி இன்னும் ஒரு மணி நேரத்தில். கோசான் மேடைக்கு வரவும். பட்டியல காட்ட மாட்டியல் போல.
3 months ago
3 months ago
சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம் பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். எனசமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் தோன்றுகின்றன. இதற்கான நீதி விசாரணை நடத்தப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டாலும் அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அத்துறையில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டவர்களால் நடத்தப்பட்டால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலைளுக்கு முகம் கொடுத்து வலிகளை சுமந்து அரசியல் நீதிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதி கிட்டும். தேசிய மக்கள் சக்தி இதற்கான கதவுகளை திறக்குமா? அல்லது நாட்டின் இறைமை எனக் கூறி நீதிக்கான தடைகளை விதிக்குமா? என்பதே எமது கேள்வி. தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது. இப்புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் அக்காலத்தில் சமாதான தேவதையாக காட்சியளித்த சந்திரிக்கா மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியாக தற்போது அனுர குமார தலைமையில் பதவியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்களே. தற்போது அகழப்படும் சமூக புதைகுழியை விட மேலும் பல சமூக புதைகுழிகள் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு எல்லாம் விசாரணையை நடத்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் துணியவில்லை. அகழ்வு மற்றும் ஆராய்வு அறிக்கைகளை எல்லாம் பாதாள கிடங்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழர் தாயகப் பூமியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் அதன் சூழவுள்ள வளவுகள் மற்றும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளிலும் சமூக புதை குழிகள் இருக்கலாம். அவ் அந்நில பிரதேசங்களும் ஆய்வுக்கூட்படுத்தப்படல் வேண்டும். வன்புணர்வின் பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி தொடர்பில் மரண தண்டனை கைதியான கோப்ரல் சோமரத்னா என்பவரால் 600 மேற்பட்டோர் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டார் எனக் கூறியதன் பின்னர் அதனோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டோர் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல பதவி உயர்வுகளும் அரச சலுகைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக புதைகுழியை ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டு அக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாய் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளையும் அரச சலுகை கைகளையும் அரசு மீளப்பெறல் வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை. மனிதாபிமான வகையில் மீட்பு யத்தமே நடந்தது எனக் கூறும் முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா போன்றவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகரா போன்றவர்கள் மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவும் செம்மணி சமூக புதைகுழி காட்சிகளை கண்ட பின்னர் தாமத நிலைப்பாட்டை மாற்றி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரம் நாற்காலிகளில் அமர்ந்த பின்னர் அரச சுகங்களுக்காக இனப்படுகொலை ஆட்சியாளர்களை பாதுகாத்து அரசியல் போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்தவர்களும் தம் மனசாட்சிகளை தொட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மனித குலத்துக்கு எதிரான திட்டமிட்ட இன படுகொலை 2009 இறுதி யுத்தத்திற்கு முன்னரும் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தியுடமைக்கு மிக ஆணித்தரமான சாட்சியாகவே செம்மணி சமூக புதைகுழி காட்சி தருகின்றது. இது மனித நேயம் கொண்ட மனசாட்சி உள்ளோரை நிச்சயமாக தட்டி எழுப்போம். இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் தமிழர்களை கொன்று குவித்ததும், காணாமலாக்கப்பட்டு சமூக புதைகளுக்குள் தள்ளியதும், ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து சிறைகளில் அடைத்ததும் இலட்சக்கணக்கானோரை புலம்பெயர வைத்ததும் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் அதன் அரசியல் வழிதடத்தையும் அழிப்பதற்காகவே. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பேரினவாத சக்திகள் அரசியல் முள்ளிவாய்க்காலில் எம்மை மூழ்கடிக்கவே திட்டங்கள் தீட்டத்தொடங்கியுள்ளதோடு அவர்களின் அரசியல் முட்கம்பி வேலிக்குள் நிரந்தரமாக அடைத்து வைக்கவும் துடிக்கின்றனர். போராளிகள் விதையான மண்ணில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நிலத்திலிருந்தும் எழுகின்ற குரலை தமிழர் தேச அரசியலுக்கான குரலாக ஏற்று கொள்கை அடிப்படையில் அரசியலை முன்னோக்கி நகர்த்த ஒன்று படுமாறு தமிழ் தேச அரசியல் தலைமைகளை கேட்கின்றோம். https://akkinikkunchu.com/?p=328398
3 months ago
சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம்

பட்டலந்த அறிக்கையை அரசியலுக்காக தூசி தட்டி வெளியில் எடுத்தவர்கள் தமிழர்களுக்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பு, இனப்படுகொலை விடயங்களை பகிரங்கமாக கையாள்வதற்கு முன்வர மாட்டார்கள். எனசமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (11.06.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செம்மணி சமூக புதைகுழியில் தோண்டத் தோண்ட கொலை செய்து புதைக்கப்பட்ட அல்லது உயிரோடு புதைத்து கொல்லப்பட்டோரின் உடல் எச்சங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் தோன்றுகின்றன.
இதற்கான நீதி விசாரணை நடத்தப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டாலும் அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப அத்துறையில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டவர்களால் நடத்தப்பட்டால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலைளுக்கு முகம் கொடுத்து வலிகளை சுமந்து அரசியல் நீதிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதி கிட்டும்.
தேசிய மக்கள் சக்தி இதற்கான கதவுகளை திறக்குமா? அல்லது நாட்டின் இறைமை எனக் கூறி நீதிக்கான தடைகளை விதிக்குமா? என்பதே எமது கேள்வி.
தற்போது அகழப்படும் செம்மணி சமூக புதைக்குழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க ஆட்சி காலத்துக்குரியது.
இப்புதைகுழியை மூடி மறைக்கவும் கொலையாளிகளை பாதுகாக்கவும் அக்காலத்தில் சமாதான தேவதையாக காட்சியளித்த சந்திரிக்கா மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியாக தற்போது அனுர குமார தலைமையில் பதவியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவர்களே.
தற்போது அகழப்படும் சமூக புதைகுழியை விட மேலும் பல சமூக புதைகுழிகள் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு எல்லாம் விசாரணையை நடத்த எந்த ஒரு ஆட்சியாளர்களும் துணியவில்லை.
அகழ்வு மற்றும் ஆராய்வு அறிக்கைகளை எல்லாம் பாதாள கிடங்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழர் தாயகப் பூமியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படை முகாம்கள் அதன் சூழவுள்ள வளவுகள் மற்றும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளிலும் சமூக புதை குழிகள் இருக்கலாம். அவ் அந்நில பிரதேசங்களும் ஆய்வுக்கூட்படுத்தப்படல் வேண்டும்.
வன்புணர்வின் பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி தொடர்பில் மரண தண்டனை கைதியான கோப்ரல் சோமரத்னா என்பவரால் 600 மேற்பட்டோர் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்டார் எனக் கூறியதன் பின்னர் அதனோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டோர் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல பதவி உயர்வுகளும் அரச சலுகைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் சமூக புதைகுழியை ஆட்சியாளர் ஏற்றுக் கொண்டு அக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாய் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுகளையும் அரச சலுகை கைகளையும் அரசு மீளப்பெறல் வேண்டும்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை. மனிதாபிமான வகையில் மீட்பு யத்தமே நடந்தது எனக் கூறும் முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர சில்வா போன்றவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகரா போன்றவர்கள் மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவும் செம்மணி சமூக புதைகுழி காட்சிகளை கண்ட பின்னர் தாமத நிலைப்பாட்டை மாற்றி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவர்கள் மட்டுமல்ல தமிழர்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரம் நாற்காலிகளில் அமர்ந்த பின்னர் அரச சுகங்களுக்காக இனப்படுகொலை ஆட்சியாளர்களை பாதுகாத்து அரசியல் போராட்டத்தையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்தவர்களும் தம் மனசாட்சிகளை தொட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மனித குலத்துக்கு எதிரான திட்டமிட்ட இன படுகொலை 2009 இறுதி யுத்தத்திற்கு முன்னரும் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தியுடமைக்கு மிக ஆணித்தரமான சாட்சியாகவே செம்மணி சமூக புதைகுழி காட்சி தருகின்றது. இது மனித நேயம் கொண்ட மனசாட்சி உள்ளோரை நிச்சயமாக தட்டி எழுப்போம்.
இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர் தாயகத்தில் தமிழர்களை கொன்று குவித்ததும், காணாமலாக்கப்பட்டு சமூக புதைகளுக்குள் தள்ளியதும், ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து சிறைகளில் அடைத்ததும் இலட்சக்கணக்கானோரை புலம்பெயர வைத்ததும் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல தமிழரின் தாயகத்தையும் தேசியத்தையும் அதன் அரசியல் வழிதடத்தையும் அழிப்பதற்காகவே.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பேரினவாத சக்திகள் அரசியல் முள்ளிவாய்க்காலில் எம்மை மூழ்கடிக்கவே திட்டங்கள் தீட்டத்தொடங்கியுள்ளதோடு அவர்களின் அரசியல் முட்கம்பி வேலிக்குள் நிரந்தரமாக அடைத்து வைக்கவும் துடிக்கின்றனர்.
போராளிகள் விதையான மண்ணில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நிலத்திலிருந்தும் எழுகின்ற குரலை தமிழர் தேச அரசியலுக்கான குரலாக ஏற்று கொள்கை அடிப்படையில் அரசியலை முன்னோக்கி நகர்த்த ஒன்று படுமாறு தமிழ் தேச அரசியல் தலைமைகளை கேட்கின்றோம்.
https://akkinikkunchu.com/?p=328398
3 months ago
செம்மணிப் மனிதப் புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்து June 11, 2025 செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன. முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன. ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை. பின்னர் கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழகப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது. விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது. அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார். https://www.ilakku.org/government-should-cooperate-in-uncovering-the-truth-about-the-semmani-mass-grave-sumanthiran-urges/