2 months 4 weeks ago
10 AUG, 2025 | 09:19 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இருப்பினும் அத்தீர்மானத்தின் திருத்தப்படாத வரைபு மற்றும் அதன் மீதான வாக்கெடுப்புக்கான திகதி என்பன இன்னமும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222190
2 months 4 weeks ago
10 AUG, 2025 | 09:19 AM

(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இருப்பினும் அத்தீர்மானத்தின் திருத்தப்படாத வரைபு மற்றும் அதன் மீதான வாக்கெடுப்புக்கான திகதி என்பன இன்னமும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/222190
2 months 4 weeks ago
முல்லைத்தீவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரே பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியுள்ளனர், இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை- கஜேந்திரகுமார் Published By: RAJEEBAN 09 AUG, 2025 | 06:36 PM இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எங்களிற்கு கிடைத்த தகவலின் படி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொலை. அவ்வாறே எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் முகாமிற்கு சென்ற பிறகு அவரை கொலை செய்துதான் குளத்தில் போட்டிருக்கின்றார்கள் என அங்கிருக்ககூடியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வடக்குகிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில், ஒன்றிற்கு இரண்டு என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். ஒரு இராணுவசிப்பாய் இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில்தான் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அங்கு கொலை நடந்தால் கூட இராணுவத்திற்கு தெரியாமல் நடக்க முடியாத நிலைதான் அங்கு காணப்படுகின்றது. அதுதான் அங்கு காணப்படுகின்ற யதார்த்தம், ஆகவே இந்த நிலையிலே, ஒரு இனப்படுகொலையையே செய்திருக்கின்ற ஒரு இராணுவம் 16 வருடங்களாக அந்த இனப்படுகொலை தொடர்பாக எந்த வித பொறுப்புக்கூறலும் நடக்காமலிருக்க, அந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களே பக்கத்து பக்கத்து வீடுகளில் முகாம்களில் தங்கியியுள்ளனர். பெண்களை துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில வீதியில் நடந்து செல்கின்றார்கள். பிள்ளைகளை கடத்தி துஸ்பிரயோகம் செய்தவர்களே பக்கத்தில் வந்து நிற்கின்றார்கள். அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்கள், சிவில் பாதுகாப்பு படையினர் என தெரிவித்துவிட்டு முன்பள்ளிகளில் படிப்பிக்கின்றார்கள். ஆகவே அவர்கள் செய்த நேரடிகுற்றங்களிற்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது ஒன்று. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்;துகொண்டுள்ள நிலையிலே தொடர்ந்தும் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் அந்த மக்கள் மத்தியில் இருப்பது என்பது, அந்த மக்களை இன்னும் இன்னும் மிக மோசமான ஒரு மனஉளைச்சலிற்கு, அவர்களின் மனதை உடைக்கின்ற ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். இராணுவத்தினர் முழுமையாக பொறுப்புக்கூறவைக்கின்ற வரைக்கும், இராணுவத்தில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட முழுப்பேரும் அதிலிருந்து முழுமையாக அகற்றப்படும் வரையிலாவது அந்த இராணுவம் வடக்குகிழக்கிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைப்பதற்கு காரணம் எங்களிற்கு ஏதோ விசர் என்பதற்காக இல்லை. அவர்கள் அங்கிருக்க கூடாது , அந்த மக்களிற்கு அவர்கள் அங்கிருப்பதே ஒரு ஆபத்து. இராணுவம் தொடர்ந்தும் அதே இனப்படுகொலை வெறியில் இருக்கின்ற வரைக்கும், முல்லைத்தீவில் - வடக்குகிழக்கில் இருக்கின்ற எந்தவொரு தமிழ் மக்களிற்கும் பாதுகாப்பு இருக்கப்போவதில்லை. https://www.virakesari.lk/article/222181
2 months 4 weeks ago
நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வது வாழ்க்கை முறை. தாலிக்கொடியை கோயிலுக்கும் அணியாவிட்டால் அதை ஏன் கழுத்தில் கட்டவேண்டும்? கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் மேலாடையை நீக்க வேண்டும் என கடவுள் பணித்ததாக தெரியவில்லை. ஆனால், அது ஆலயங்களில் விதிமுறையாக உள்ளது.
2 months 4 weeks ago
ஶ்ரீதரன் தனதும் தனது மனைவியினதும் சொத்து/வருமான விபரத்தை 3 ஆண்டுகள் மட்டும் சமர்ப்பித்துள்ளார். அதில் கடைசியாக வழங்கப்பட்ட அறிக்கையில் 31 மார்ச் 2024 திகதி வரைக்கும் உள்ள விபரங்கள் அரைகுறையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இரண்டாம் பகுதி (Part B) யில் எந்த ஒரு கேள்விக்கும் பதில் வழங்கப்படவில்லை. பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக "None" என்று பதிலளித்துவிட்டு அல்லது வெறும் கோடுகளை மட்டும் போட்டுவிட்டு கடந்து சென்றுள்ளார். இங்கே கதைகள் அடிபடுவது போல வைன்ஷொப் அல்லது சுப்பர் மார்க்கெட் பற்றிய விபரம் எதுவும் அங்கு கொடுக்கப்படவில்லை. இலங்கையில் 4 இடங்களில் காணி/வீடு மற்றும் ஒரு விவசாய நிலம் என்பவற்றுடன் வங்கிகளிலும் தனியாரிடமும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தொகை மட்டும் ஏறக்குறைய 45 மில்லியன் ரூபாய்கள். கணவன் மனைவி இருவரினதும் மொத்த மாதவருமானம் சுமார் 5 இலட்சம் ரூபாய்கள்.
2 months 4 weeks ago
உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த காலங்களில் பட்டும் படாமலும் என்னால் சொல்லப்பட்ட கருத்து. ரஷ்யாவை முறியடிக்க யாராலும் முடியாது.அதன் பலம் பொருளாதார பலம்...அது மிக வலுவானது. உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி வசி.
2 months 4 weeks ago
ஒரு குழப்பதை உருவாக்கி, இராணுவத்தினரை நிலையாக நிறுத்துவதற்காக வெளியேறும் இராணுவத்தினர் செய்யும் கொலையாக இருக்கலாமோ?
2 months 4 weeks ago
நீண்ட காலம் இலங்கையின் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டிருக்க வேண்டும். எவரும் கேட்க மாட்டார்கள் என்பது சிதம்பர ரகசியம்.
2 months 4 weeks ago
நான் தினசரி நினைக்கின்றேன்.அஞ்சலி செலுத்துகின்றேன்.எனக்கு எல்லா நாட்களும் மாவீரர் நாட்களே. 🙏 உங்கள் எழுத்துக்களுக்கு நன்றி உதயன்.
2 months 4 weeks ago
அவலங்கள் நடந்து பத்து வருங்களுக்கு மேலாகி விட்டுது. இப்போது புதுக்குரல் வருகின்றது.சம்பந்தன் இருந்திருந்தால் இந்த அறிக்கையை வைத்தே இன்னும் அரசியல் மழையில் நனைந்து வாழ்ந்திருப்பார். 🤣
2 months 4 weeks ago
ரஷ்யாவிற்கு வெற்றி நிச்சயம்.😎 தலைவன் ரம்பிற்கு நோபல் பரிசு நிச்சயம்.😀 மேற்குலகு ரஷ்யா மீது 15,20 வருடங்களாக பொருளாதார தடைகள் விதித்தும் பஞ்சத்தில் வாடவும் இல்லை வங்குரோத்து நிலைக்கும் செல்லவில்லை. மாறாக ஐரோப்பிய மக்கள் தங்கள் வாழ்க்கை செலவிற்கு அதிகம் பணம் ஒதுக்கியதுதான் மிச்சம். ரஷ்யா கைப்பற்றிய இடங்களை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.ரம்ப்-புட்டின் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால்........? எனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பலத்த தோல்வியாக வரும். ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் எல்லை நாடுகளை எந்த கொம்பனாலும் தன் கைக்குள் வைத்திருக்க முடியாது. இதுதான் இன்றைய பிராந்திய அரசியல்.
2 months 4 weeks ago
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே. ஜேர்மன் அரசு சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் மக்களை அதிகமாக உள்வாங்கும் தருணத்தில் வந்த பிரச்சனைகளை வைத்தே தன்னை சுதாகரித்திருக்க வேண்டும்.இனவாத கட்சிகளுக்கு பல சந்தர்ப்பங்களை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அகதிகளாக வந்தவர்களும் லேசுப்பட்டவர்கள் அல்ல. களவு,பாலியல் பிரச்சனை,கத்திக்குத்துகள், பாடசாலை மாணவர்களாக இருந்தும் அதே நாச வேலைகளை செய்து ஜமாய்த்து விட்டார்கள். அது ஜேர்மன் மக்களின் மனதில் அகதிகளாக வந்தவர்கள் கொடூரமானவர்கள் என பதிந்து விட்டது. இது இனவாதிகட்சிகளுக்கு வாய்ப்பாகவும் போய் விட்டது. இது இப்படியே போக உக்ரேன் அகதிகள். சொல்லி வேலையில்லை. கலவரம் இல்லாதவர்கள். தாங்களும் தங்கள் பாடும். என்ன ஒன்று வேலைக்கு போக மாட்டார்கள்.😋 இப்படியான நெருக்கங்கள் தலை மேல் பாரமாக இருக்கும் போது இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகம் இன்னும் தலையிடிகளை கொடுக்கலாம். வாக்கு அரசியலுக்காக அடக்கி வாசிக்கப்போகின்றார்கள் என நினைக்கின்றேன்.
2 months 4 weeks ago
நீங்கள் சொல்வது உண்மைதான்.அன்று உங்களைப்போன்ற என்னைப்போன்ற சந்ததியினர்க்கு எந்த தொழில் நுட்பங்களும் இல்லாமல் இருந்த கிரகிப்பு தன்மை இன்றைய சந்ததியினர்களுக்கு இல்லை. கணணியோ கைத்தொலைபேசி இல்லாமல் எந்தவொரு செயல்களையும் செய்யமுடியாமல் தவிக்கின்றார்கள். இவர்கள் தான் அப்பா அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது என ஒரு பட்டத்தை மகுடமாக தலையில் தூக்கி வைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கின்றார்கள்.😃 வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்" அது அன்று...☝ இது இன்று...👇 சனத்தொகை கூடக்கூட வாகனங்கள் கூடும் வாகனங்கள் கூடக்கூட பெற்றொல் விலை கூடும் பெற்றோல் விலை கூடக்கூட சைக்கிள் கூடும் சைக்கிள் கூட ரோட்டுக்கள் சின்னனாகும் நடை பாதைகளும் பெருகும்.😂 இன்றைய சமுதாயத்தினர் சமாளித்து விடுவார்கள். என்னைப்போன்றவர்களோ " தம்பி நான் இந்த பெற்றோல் செட்டுக்கு முன்னால நிக்கிறம் வந்து கூட்டிக்கொண்டு போங்கோ எண்ட சிஷ்டம் கண்டியளோ 🤣
2 months 4 weeks ago
அந்தக்காலங்கள் அளந்த வாழ்க்கை. எல்லோரும் எல்லாம் இருந்தது.அளவோடு உண்டார்கள். ஆனந்தமாய் வாழ்ந்தார்கள்.சுற்றம் சுற்றாடால் பாதிக்கும் வகையில் எதையுமே உருவாக்கவில்லை. இன்றைய காலம் எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எல்லோரும் புத்திசாலிகள். நனைச்சு சுமக்கின்றார்கள்.அவ்வளவுதான். 😂
2 months 4 weeks ago
இதில பகிடி என்ன வென்றால் போராட்டம் தொடங்கிய காலம்(அகிம்சை ,ஆயுதம் முதல் மற்றும் இன்றுவரை ) வகுப்பு எடுத்தல் கருத்து சொல்லுறவையல் எல்லாம் ஒன்றை சொல்லுவினம் இந்தியாவுடன் இணைந்து செயல் பட் வேணும் ... உலக ஆயுத போராட்ட குழுக்களுடன் இணைய வேணும்.(நாங்கள் பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் சேர்ந்து போராட வேணும் ...அப்படி சேர்ந்து போராடியவையல் பின்பு இலஙகை அரசுடன் கைகோர்த்து போராட்ட த்தை அழிப்பதில் முன் நின்றனர்") எவர் எமக்காக் குரல் கொடுத்தாலும் நாங்கள் விழுந்து கும்பிட வேணும் என இப்ப சொல்லுயினம்..
2 months 4 weeks ago
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் திருவிழாக்கள் என்பது ஒரு களியாட்டம் மாதிரி. இதை விட்டால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன ஒன்று கூடல் இருக்கின்றது? பிரிந்த உறவுகள் ,குடும்ப உறவுகள் ஒன்று கூடலாகவும் இதை பார்க்கலாம்.ஒவ்வொரு நாடுகளுக்கும் களியாட்டங்கள் வேறுபடும்.ஐரோப்பிய நாடுகளில் இப்படியான கொண்டாட்டங்கள் மத ரீதியாக இல்லாமல் மது தளம்ப ஊர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அங்கேயும் கள்ளர் காடையர் ஆக்கினைகள் நிறைய இருக்கும்.காவல் துறையும் அளவிற்கதிகமாக குவிக்கப்பட்டிருப்பர். அப்படியான கொண்டாட்டங்களை யாரும் குறை சொல்வதில்லை. இந்த உலகு களவில்லாத உலகமா? இல்லையே!
2 months 4 weeks ago
அடி வாங்கி மாசக்கணக்கான பின்னும்…கைப்புள்ள போல நாங்கள் அடித்தோம் என புலம்புவதில் இருந்தே தெரிகிறது வெற்றி பாக்கிஸ்தான் பக்கமே என்பது 🤣
2 months 4 weeks ago
இறைவனே அலங்காரத்துடன் ஜெகஜோதிய காட்சியளிக்கும் பொழுது பக்தர்கள் ஆண்டியாக செல்ல முடியுமா? அதுவும் அலங்கார கந்தனிடன்...🤣 திருடர்கள் பிழைப்புக்கு திருடுகிறார்கள் நாட்டின் அமைச்சரவை ஏன் இந்த திருடர்களை நல்வழிப்படுத்த முடியாது ? என் அடுத்த கேள்வியை முருகன் கேட்கலாம் 😄 உங்களது கேள்வி, 1979 களில் சில தமிழ் புரட்சிகர இளைஞர்கள் கேட்டடதை ஞாபகப்படுத்துகின்றது. 😍..இன்னும் இப்படியான கேள்வி இருக்கின்றது...இந்த கேள்வி தொடரும் ஆனால் அதைவிட பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் ...நகைளை அணிந்து செல்வார்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ,திருடர்கள் வாழ வழிகிடைக்கும் ,பொலிசார் வேலை செய்வார்கள் ... பக்தர்கள் நகை அணிய வேண்டும் ....திருடர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு தேடிக் கொடுத்து புரட்சிகரமான சக்தியாக மாற்ற வேண்டும் ...அரசர்கள் எவ்ழியோ மக்கள் அவ்வழி என்ற நிலைக்கு புர🤭ட்சி செய்ய வேண்டும் ...
2 months 4 weeks ago
2015 இல் சுமந்திரன் தொடக்கியதை 2025 இல் கஜேந்திரன் முடித்து வைக்கிறார். ஆணையாளரின் பதில் கடிதம் சொல்லும் சொல்லாத செய்திகள்! - --- --- --- ---- ----- *உள்ளகப் பொறிமுறையே பிரதானம். *தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது. சொல்லாது சொல்லும் செய்தி என்ன? *ஜேவிபி அரசாங்கத்தை உருப்பெற வைப்பது! *சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கை தானாக இணைந்தால் சிறப்பு, ஆனால்...! *இன அழிப்பைப் பற்றி மேலோட்டமாக கதைக்கலாம். குறிப்பாகவோ வலுவாகவோ அதைக் கேட்கக் கூடாது. *சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த Relay Race, 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்தார். --- ----- --- --- ------ கஜேந்திரகுமாருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் உள்ள பிரதான இரண்டு ஆங்கிலச் சொற்களின் பிரகாரமும், கொழும்பில் உள்ள சில இராஜதந்திர வட்டாரங்களோடு இன்று சனிக்கிழமை உரையாடிய விளக்கத்தை மையப்படுத்தியும் இக் கட்டுரையை எழுதுகிறேன்... ஜெனீவா மனித உரிமை சபையின் ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய பேரவை அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார்கள். ஆனால், உண்மை நிலையோ வேறு! அந்த பதில் கடிதத்தின் உள்ளடக்கம் - பொருள் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆணையாளர் தன்னுடைய பதில் கடிதத்தில் இலங்கையும், மனித உரிமை சபையும் செய்யவுள்ள “பொறுப்புகள்” பற்றி இரண்டு ஆங்கிலச் சொற்களில் வரைவிலக்கணம் செய்கிறார். 1) Comprehensive Process (SL) 2) Complementary Strategies (OHCHR & UNHRC) இந்த இரண்டு சொற்களையும் விரிவாக ஆராய்ந்தால்-- 1) Comprehensive Process (SL) என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது இலங்கையின் ‘விரிவான செயல்முறையை’ குறித்து நிற்கிறது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும் சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இலங்கை முதலில் வென்றெடுக்க வேண்டும் என்ற தொனியில் அச் சொல் அமைகிறது.. இன்னும் அழுத்திச் சொல்வதானால் பொறுப்புக்கூறல் என்ற முறையில் இலங்கைக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்த செயல் வடிவம் அது. 2) Complementary Strategies என்ற ஆங்கிலச் சொல்லின் உள்ளடக்கம் என்பது ‘குறை நிரப்புகின்ற மூலோபாயம்’ என்பதைக் குறித்து நிற்கிறது. அதாவது, இலங்கை நடத்துகின்ற உள்ளக விசாரணைகளின் பற்றாக்குறைகள் அல்லது விடுபட்டுள்ளதாக கருதப்படுகின்ற விவகாரங்கள் சிலவற்றுக்கு குறுகிய சில நடவடிக்கைகளை பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction System) முறை ஊடாக சில நாடுகளின் நீதிமன்றங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம். மனித உரிமைச் சபை உப்புச் சப்பற்ற தீர்மானத்தைக் கவனிக்கும் அல்லது அந்த விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் என்ற பொருளில் அது அமைகிறது. அதேநேரம், இலங்கை செயற்படுத்த வேண்டிய, விரிவான செயல்முறை என்ற Comprehensive Process என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்தும், ஆணையாளர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களில் இருந்தும் மேலும் சில கற்பிதங்களை புரியக் கூடியதாகவுள்ளது. அதாவது, செயல் திறன் மிக்க நியாயமான(Independent fair) அதுவும் சர்வதேச சட்டங்களின் நியமங்களை முழுமையாக திருப்பித்திப்படுத்தக் கூடியதாக இலங்கை நடத்தவுள்ள உள்ளக விசாரணை அமைய வேண்டும் என்ற தொனி தெரிகிறது. அதாவது ஆணையாளர் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்? சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) இலங்கை முதலில் வேண்டுமானால் இணைந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள மனித உரிமைகள் விதிகள் அனைத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்வது நல்லது. ஆனால், இவையெல்லாம் பழைய குற்றங்களுக்கு செல்லுபடியாக வேண்டியது இல்லை. எதிர்காலம் மட்டுமே முக்கியம். கடந்தகாலப் பொறுப்புக்கூறல் கண்துடைப்பாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய ஐ நா உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் காலத்தில் எப்போதோ ஒரு நாள் ICC இல் இலங்கையை இணைத்த பின்னர் நடத்தவுள்ள விசாரணை எப்படிப்பட்டதாக இருக்கும்? இலங்கை இணைந்தாலும் ஈழத்தமிழர்கள் கோருகின்ற விசாரணைகள் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் இருக்காது. அப்படி நடந்தாலும் கூட ஜேவிபி என்பிபி அரசாங்கத்தின் காலத்தில் இருந்து தான் விசாரணைகள் நடைபெறலாம். ஏனெனில், ஆட்சி மாற்றம் என்பதை அமெரிக்கா போன்ற மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் நம்புகின்றன. Universal Jurisdiction System என்ற முறைமை ஜெனீவாவினால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அந்தந்த நாடுகளில் வைத்து அவர்களை விசாரணை செய்யும் முறை. ஆகவே, Universal Jurisdiction என்ற இந்த மாதிரியான பலவீனமான முறைமைகள் நடைமுறையில் சில மேற்கு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருப்பதால், அந்த நடைமுறைகளையும் வைத்துக் கொண்டு, இனிமேல் பழைய குற்றங்கள் பற்றிய பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதே மேற்குலகத்தின் பிரதான இலக்கு. ஆனால், மனித உரிமை பேரவையில் இதைத் தொக்க வைத்திருந்தால், இலங்கையில் எதிர்பாராத நிலை ஏதும் ஏற்பட்டால் மீண்டும் அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. அதாவது, புதிய ஆட்சியில் புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் திட்டமாகவே (Comprehensive Process (SL) (Complementary Strategies -OHCHR & UNHRC) என்ற இந்த இரண்டு ஆங்கிலச் சொற்களும் அமைந்துள்ளன என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை. அதாவது, பழைய விவகாரங்களைக் கைவிட்டு புதிய அணுகுமுறையில் சென்று தமக்குரிய புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களில் மேற்கு - ஐரோப்பிய நாடுகள் செயற்படுவதற்கு ஈடாகவே ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்பவே தமிழ்த் தேசிய பேரவையும் கடிதத்தை தயாரித்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஐ.நா அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அல்லது அவர்களின் ஆலோசனையின் (Advice) பிரகாரம் கடிதம் எழுதியிருக்கலாம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலில்லை. இன அழிப்பு விவகாரம் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் (International (Court of Justice -ICJ) ஈழத்தமிழர்கள் ஏதேனும் ஒரு நாட்டை பிடித்து வழக்குத் தாக்கல் செய்தால், இலங்கை, அமெரிக்க- இந்திய அரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்காது என்ற நோக்கில், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐநா இவ்வாறு கையாளுகிறது. இப் பின்புலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 2015 இல் ஓடிக் கொடுத்த அஞ்சல் ஒட்டத்தை (Relay Race) 2025 இல் கஜேந்திரகுமார் நிறைவு செய்துள்ளார் என்றே பொருள் கொள்ள முடியும். பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ஜேவிபியோடு கூட்டு வைப்பதில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு வில்லங்கமும் இருக்காது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/1457391262/posts/pfbid03ddadDcotUwMxUHCdKHhsMJT5ctijLnSzg8gpUfndY4oydbKoVGi6Mv6CS1rGqE6l/?
2 months 4 weeks ago
இந்திய பிரபலமான புனித யாத்திரை நகரமான தர்மஸ்தலத்தில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல்கள் உடல்கள் புதைக்கபட்ட மனித புதைகுழி குறித்து தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. நான் நூற்றுக்கணக்கான சடலத்தை புதைத்தேன்'' - India-வை உலுக்கிய Dharmasthala Issue - என்ன நடக்கிறது?