Aggregator
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார்
11 JUN, 2025 | 03:06 PM
ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்
Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM
கீழடி
21Comments
Share
சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.
கீழடி - அமர்நாத் ராமகிருஷ்ணன்
ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது.
இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன.
இத்தகைய சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டியிருக்கின்றன.
எனவே, அத்தகைய அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்." என்று கூறினார்.
நயினார் நாகேந்திரன் - கஜேந்திர சிங் - தமிழிசை சௌந்தரராஜன்
இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள்.
அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள்.
இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?
தங்கம் தென்னரசு
தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள்.
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது.
அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?" என்று எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வை விமர்சித்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், "இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை.
ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.
கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்
கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.
கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது.
ஆனால் அந்த மாட்டுக் கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே." என்று பதிவிட்டிருக்கிறார்.
கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்
தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!
தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!
11 Jun, 2025 | 11:54 AM
தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது.
இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார்.
இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார்.
அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது இளைஞனின் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரைக்குள் வழிபட சென்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்
தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்! | Virakesari.lk
தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை
தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை
11 Jun, 2025 | 03:29 PM
நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில்,
இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும்.
அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,051,096 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 210,074 பேர் இந்தியாவிலிருந்தும், 110,818 பேர் ரஷ்யாவிலிருந்தும், 98,158 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், மே மாதத்தில் மாத்திரம் 132,919 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீதமாகும்.
தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை | Virakesari.lk
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
11 Jun, 2025 | 05:11 PM
தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர்.
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk
யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் !
யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் !
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தலைநகர் கொழும்பிலில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் ! | Virakesari.lk
குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம்
குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம்
11 Jun, 2025 | 05:47 PM
குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது.
நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது. நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம் காரணமாக பொருளாதார நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்மொழியப்பட்ட குரங்கு தடுப்பு சரணாலயத்திற்கான பரிந்துரைகளை வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. மேலும் மாத்தளை மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுவின் அனுமதியும் இதற்குப் பெறப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம் | Virakesari.lk
கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது!
கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான வீடொன்றில் பணியாற்றும் பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று புதன்கிழமை (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரது பணிப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது! | Virakesari.lk