Aggregator
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
நியூயோர்க் நகரத்தின் முதல்வராக இந்திய ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த மம்டானி இன்று பதவியேற்கிறார்.
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன்
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18"
'மின்னலாய் ஒரு பின்னல்'
[நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை]
நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து
துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ?
சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால்
சோதனை வந்து வேதனை கொடுக்குதே!
அல்லது
நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/
துரோகம் செய்யும் மனிதர்களே/
சத்தியம் வெல்லும் நாளில்/
சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.............................................................................
'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்'
விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர
ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய
மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்!
கண்கள் எல்லாம் அன்பு பொழிய
கந்தலில் மறைந்து இருந்த பாலகன்
கருணை காட்டி உலகை அணைத்து
களவு இல்லா மனிதம் காட்டினான்!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
..................................................................................
'வன்னியில் குண்டுகள் ... '
வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது
கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது
மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள்
கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
................................................................
துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
1 Jan 2026, 8:53 PM

மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது.
தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது.
இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன.
ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள்.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது .
பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ.
இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர்.
இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர்.
உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு.
குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது.
ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும்.
ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில்,
அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில்,
புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில்,
தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில்,
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய,
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது.
ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள்.
சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு…
தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து…
தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள்.
எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை.
எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்…
அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம்.
இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம்.
ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர்.
கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம்.
சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம்.
ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன.
முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது.
நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள்.
“உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது”
அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல்.
அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க,
சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார்.
படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை.
சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது.
அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம்.
அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது.
சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன்.
ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான்.
எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம்.
அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே.
‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை.
இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம்.
ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்
சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்..
மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு.
கருத்து படங்கள்
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக,
2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொடரும்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
தரம் 06 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடசாலை வேளைகளின் எண்ணிக்கை 07 ஆகும்.
ஒரு பாடசாலை வேளைக்காக ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் 45.
2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும். கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகப்பூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.
தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய தரங்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 02 ஆம் திகதி வெளியிடப்படும்.
🚨 சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!
ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!

ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன.
மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவது வெளிப்படுத்தப்பட்டது. பல போராட்டக்காரர்கள் நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளனர்.
சிலர் முடியாட்சிக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அமைதியின்மையைத் தணிக்கும் முயற்சியாக அதிகாரிகள் வங்கி விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை (டிசம்பர் 31) நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூடப்பட்டன.
திறந்த சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் இந்த போராட்டம் தெஹ்ரானில் வெடித்தது.
2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் பெண் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் மிகவும் பரவலாக உள்ளன.