2 months 1 week ago
காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
2 months 1 week ago
உங்களை மீண்டும் காண்பதில் சந்தோசம் 🙂 பல் கற்கோட்டை சுற்றி வர இருக்கின்றது எனும் தைரியம்.
2 months 1 week ago
உங்களை நீங்களே சுட்டுவது அல்லவா? சரி அதாய் விட்டாலும், auditors எவ்வாறு அவர்களின் கம்பனியின் (மிகைப்படுத்ப்பட்டதாக இங்கு சிலரால் சொல்லப்படும்) வருமானம், இலாபம் போன்றவற்றை துறைசார்பாக ஆமோதித்தனர்? auditors இன் ஒரு பணி துறைசார் judgment அல்லவா? அதில் கணக்காய்வாளர் (auditor) உடந்தை ஒரு முக்கிய காரணி. அததை தொடர்ந்து வரலாற்றில் நீண்ட காலம் இருந்த கணக்கியல் ஆலோசனை நிறுவனமும், Enron இன் கணக்காய்வாளர் (auditor) ஆன Arthur Anderson என்ற நிறுவனம் அழிந்தது, அழிக்கப்பட்டது.
2 months 1 week ago
அன்று பாட புத்தகங்களில் மாவோ சேதுங்,லெனின்,கார்ல் மார்க்ஸ்,காந்தி போன்றோரின் கொள்கைகளை படிக்க சொல்லி விட்டு...🤣 இன்று அவர்களின் கொள்கைகளை பின்பற்றுபவர்களை தடை செய்கின்றார்கள். கொலையும் செய்கின்றார்கள். 😂 கிட்டத்தட்ட தீபாவளி கதையள் மாதிரித்தான் கன கதையள் உங்கை நடக்குது 😎
2 months 1 week ago
அவுஸ்திரேலியா அலிஷா ஹேலி நாளைக்கு காயம் காரணமாக விளையாடமாட்டார். யாருக்கு முட்டை கிடைக்கும் என்பது நாளைக்கு தெரியும்
2 months 1 week ago
சின்ராசு இதுக்கே இப்படி பயப்படுறானே…. இவனா பேரினவாததுக்கு தலைவாரி, பின்னல் கட்டப்போறான்😂
2 months 1 week ago
அருவருக்கதக்க கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை தாக்கும் பதிவு. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை நீர்த்து போக செய்து, உலக ஒப்பினையை தனக்கு எதிராக திருப்ப இது மிக உதவியாக இருக்கும். சமாதான காலத்தில் புலிகளின் அனுதாபிகள் என பலர் இப்படித்தான் அவர்களுக்கு குழி பறித்தார்கள். இந்த ஜோக் காப்புரிமை செய்யப்பட்டது 😂
2 months 1 week ago
மிகவும் நல்ல கேள்வி (எங்கேயோ கேட்ட குரல்😂). சீரியசாகவே இது கேட்க வேண்டிய கேள்வி. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை இப்படித்தான் கேள்விகள் மூலம் முன்வைக்க வேண்டும். எனது பங்குக்கு மேலதிகமாக…. புலிகள் மன்னிப்பு கேட்ட சமயம் மீள வரும் போது வீடுகளை, வியாபார தலங்களை மீளளிப்பதாக சொன்னார்கள். அதே சமயம் இந்த நகைகளுக்கான ஒரு டோக்கன் நஸ்ட ஈட்டை ஏன் எவருமே கோரவில்லை?
2 months 1 week ago
நாளைக்கு உங்களுக்கு முட்டை போல் தெரியுது ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கிறீங்கள்...........அவுஸ்ரேலியா மகளிர் இந்த உலக கோப்பையில் நல்ல போமில் இருக்கினம்............... இந்தியாவை நம்பி நான் ஏமாந்து போனது தான் மிச்சம் தொடர் தோல்வி இந்தியா இதனால் நான் தொட்டு பலருக்கு பெரிசா புள்ளிகள் கிடைக்க வில்லை...............................
2 months 1 week ago
1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
2 months 1 week ago
தங்கம் அப்ப பிறக்கவேயில்லை பிறகு எப்படி தங்கத்திற்காக வெளியேற்றினார்கள்?
2 months 1 week ago
நாங்கள் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் ஐயா… சொகுசு…பவிசு… எது எண்டாலும் முதலில் அவிசு படைக்க வேண்டும்😂. சட்டதில் இடமில்லை இல்லாவிட்டால் பாய் போட்டிருப்போம்😂
2 months 1 week ago
சொன்னது தார்மீக மற்றும் சட்ட அடிப்படை என்பதை வேறுபடுத்த, இலகுவான உதாரணமாக புரிவது கடினம் அல்ல. ஆனல், ஏற்கனவே முடிவெடுத்து உருவாக்கிய பிம்பத்தின் ஊடக பார்ப்பதே ஒப்பிட்டதாக தெரிகிறது.
2 months 1 week ago
vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை. அவர்பேசாவிட்டாலும் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பேசாமல்விட்டிருக்க மாட்டார்களே. இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.
2 months 1 week ago
கவனிக்க: புலிகள் ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்கிருந்தார்கள், காட்டி கொடுத்தார்கள், பாதுகாப்புக்கு வெளி ஏற்றினோம் என்ற எந்த விளக்கத்தையும் கொடுத்து நான் அறியவில்லை. ஏன் வெளியேற்றினார்கள் என்பது, வெளிப்படையானது obvious. கிழக்கில் நடந்த கொடுரத்துக்கு பதிலாக…. இனியும் செய்யவேண்டாம் என மிரட்ட…. கிழக்கு தமிழருக்கு உங்களுக்காக நாம் இருக்கிறோம் என காட்ட….. இவைதான் காரணங்கள். மிக நியாயமான காரணங்கள். ஆனால் …. இந்த நடவடிக்கை நியாயமானதா, விவேகமானதா, நீண்ட கால நோக்கில் அனுகூலமானதா? இல்லை.
2 months 1 week ago
இதில் அரசியலும் உள்ளது. புலிகள் முஸ்லிம்கள் மீது செய்ததை சொல்லும் முஸ்லிம் அவர்களிடம் ஹீரோ. முஸ்லிம்களின் குழுக்கள் தமிழர் மீது செய்ததை சொல்லி, புலிகள் செய்ததையும் நியாயப்படுத்துவோர் எம்மிடம் ஹீரோக்கள். இங்கே எவ்வளோ எழுதுகிறார்கள் முக்கி, முக்கி. நான் கேட்ட கேள்வி ஆம் இல்லை அல்லது தெரியவில்லை என பதில் சொல்ல கூடிய எளிய கேள்வி. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் புலிகள் நகை, பணம், இதர பொருட்களை பிடுங்கி கொண்டார்களா? மறுவளமாக முஸ்லிம்களும் இப்படித்தான். வீடமுனையை நாசம் பண்ணினீர்களா? என கேட்டால் எத்தனை முஸ்லிம்கள் உண்மையை ஏற்பார்கள்? ஹிஸ்புலா காளிகோவிலை மாட்டு தொழுவம் ஆக்கினேன் என மேடையில் பேசவில்லையா? அவர்களில் யாரும் பேசினாலும் “முஸ்லிம் அரிச்சந்திரன்” - இப்படியான விடயம் பேசாமல் விடுவதே சிறப்பு என ஏனையோர் அடக்கி விடுவார்கள். மன்னிப்பு பற்றி சீமான் திரியில் எழுதியதுதான். Truth and reconciliation உண்மையும், பரஸ்பர மன்னித்து மீள் ஏற்றலும். இதில் உண்மையை தவிர்த்து விட்டு, மன்னிப்பு வெறும் வார்த்தைகளால் வராது. இது முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் மட்டும் அல்ல, சிங்களவருக்கும்ப்பொருந்தும். லொஜிக் மருந்துக்கும் இல்லாத நிலைப்பாடு. முஸ்லிம்களை பாதுகாக்க வெளி ஏற்றினால் அது தவறல்ல அவர்களுக்கு செய்த நன்மை. நன்மை செய்யமைக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா? நான் நினைக்கிறேன் இவர்கள் யாருக்காவது பெரும் நன்மையை செய்து விட்டு, நன்மை செய்தமைக்கு மன்னிபும் கேட்கும் அளவுக்கு அப்பாவிகள் என😂
2 months 1 week ago
இதை கொஞ்சம் விரிவா எழுத முடியுமா?
2 months 1 week ago
ஒம் 👇இந்த காணொளியில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த விஜய் பாதுகாப்பாகவே வளர்ந்து பாதுகாப்பாகவே தமிழ்நாட்டின் முதல்வாரக வருவதற்கு ஆசைபடுவதை மாரிதாஸ் விளக்குகின்றார். இந்த 👇காணொளியில் தமிழ்நாட்டின் முதல்வாரக வந்து தமிழர்களை ஆட்சிசெய்ய விரும்புகின்ற விஜயின் மனைவி பிள்ளைக்கு இந்திய குடியுரிமை வாக்கு போடும் உரிமை கிடையாது என்பதை மாரிதாஸ் விளங்கபடுத்துகின்றார். https://www.youtube.com/shorts/i11EiNz_jIo
2 months 1 week ago
ஈழப்பிரியன் அண்ணா மட்டும் தான் இங்லாந் வெல்லும் என தெரிவு செய்து இருக்கிறார்😁............ மற்றவை எல்லாம் அவுஸ்ரேலியா வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம்.................................................
2 months 1 week ago
நாளைக்கு நல்ல மைச் அவுஸ்ரேலியா எதிர் இங்லாந்........................