
பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது.
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர்.
பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும்.
பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.
சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.
இந்திய நேரப்படி இரவு 9:57 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழ தொடங்கியது. இரவு 11:01 மணிக்கு பூமியின் நிழல் நிலவு முழுவதையும் மறைத்த்து, முழு சந்திர கிரகணம் தோன்றியது. அப்போது நிலவு செந்நிறமாக தோன்ற ஆரம்பித்தது.
இந்தக் காட்சி இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, டென்மார்க், எகிப்து, என உலகின் பல்வேறு நாடுகளில் தெரிந்தது. எனினும் லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை காரணமாக சந்திர கிரகணத்தை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பட மூலாதாரம், PTI
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று இரவு தெரிந்த சந்திர கிரகணம்.

பட மூலாதாரம், MADS CLAUS RASMUSSEN/Ritzau Scanpix/AFP via Getty Images
படக்குறிப்பு, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் முழு சந்திர கிரகணத்தை மக்கள் கூடி கண்டு ரசித்தனர்.

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மக்கள் பார்வைக்கு தெரிந்த சந்திர கிரகணம்

பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் போட்டன்ஸ் பகுதியில் ஒரு தேவாலய கோபுரத்துக்கு மேலே தெரியும் சந்திர கிரகணம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னி நகரின் வானில் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சி.

பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, தென் ஆப்பிரிகாவில் ஜோஹனஸ்பர்க் நகரில் தெரிந்த சந்திர கிரகணம்

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடர் செந்நிறத்தில் தெரிந்த நிலவு.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று மாலை வானில் தெரிந்த சந்திர கிரகணம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ceq2xpd272go