Aggregator

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

2 months ago

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

ஞாயிறு, 04 ஜனவரி 2026 08:31 AM

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.  40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும்.

நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள  தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 

கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும்.

2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல.

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. 

ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

https://jaffnazone.com/news/53930

இலங்கைத் தமிழருக்கு  லண்டனில் £67,000 கள் அபராதம்

2 months ago
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம் Nishanthan SubramaniyamJanuary 3, 2026 3:37 pm 0 பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அத்துடன் பணியிடத்தில் “அடிமை” என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-tamil-fined-several-hundred-thousand-pounds-in-london/#more

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

2 months ago
“மதுரோவை உடனே விடுவி”: அமெரிக்காவுக்குப் புதிய இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது. இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அங்கு அவர் தெரிவிக்கையில், “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=354860

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 months ago
2024 ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய 7 வீரர்கள் தென் ஆபிரிக்காவின் 2026 குழாத்திலும் இடம்பெறுகின்றனர் Published By: Vishnu 02 Jan, 2026 | 09:56 PM (நெவில் அன்தனி) இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்ட ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் தென் ஆபிரிக்கா சார்பாக விளையாடிய 7 வீரர்கள், இந்த வருடத்துக்கான ரி20 உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறுகின்றனர். வழமையான ரி20 அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், குவின்டன் டி கொக், டேவிட் மில்லர், கேஷவ் மஹாராஜ், மார்க்கோ ஜென்சன், கெகிசோ ரபாடா, அன்றிச் நோக்யா ஆகிய எழுவரே தென் ஆபிரிக்காவின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் மீண்டும் இடம்பெறுகின்றனர். உபாதை காரணமாக இரண்டரை மாதங்கஞக்கு மேல் ஓய்வுபெற்றுவந்த கெகிசோ ரபாடா வேக்கப்பந்து வீச்சில் முன்னணி வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவருடன் அன்றிச் நோக்யா, மார்க்கோ ஜென்சன், கோபின் பொஷ், லுங்கி நிகிடி, க்வேனா மபாக்கா ஆகியோர் மற்றைய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெறுகின்றனர். அவர்களில் மார்க்கோ ஜென்சென் சிறந்த சகலதுறை வீரராவார். மபாக்கா, பொஷ் ஆகியோருடன் துடுப்பாட்ட வீரர்களான டிவோல்ட் ப்ரெவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜேசன் ஸ்மித், ஜோர்ஜ் லிண்டே, டொனவன் பெரெய்ரா ஆகியோர் முதல் தடவையாக ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளனர். இடதுகை சுழல்பந்துவீச்சாளர்களான கேஷவ் மஹாராஜ், ஜோர்ஜ் லிண்டே ஆகிய இருவரும் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதுடன் அணித் தலைவர் மார்க்ராம், பெரெய்ரா ஆகிய இருவரும் வலதுகை பந்துவீச்சாளர்களாக விளையாடுவர். பெரெய்ரா விக்கெட் காப்பாளராகவும் விளையாடக் கூடியவர். தென் ஆபிரிக்க குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் இந்த மாதம் SA20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளனளர். அதனைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுடன் தனது சொந்த நாட்டில் ரி20 தொடரில் தென் ஆபிரிக்கா விளையாடும். குழு டியில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவின் போட்டி விபரங்கள் பெப்ரவரி 9: எதிர் கனடா (அஹமதாபாத்) பெப்ரவரி 11: எதிர் ஆப்கானிஸ்தான் (அஹமதாபாத்) பெப்ரவரி 14: எதிர் நியூஸிலாந்து (அஹமதாபாத்) பெப்ரவரி 18: எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்ஹி) ரி20 உலகக் கிண்ண தென் ஆபிரிக்க குழாம் ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரெவிஸ், குவின்டன் டி கொக், டோனி டி ஸோர்ஸி, டொனவன் பெரெய்ரா, மார்க்கோ ஜென்சன், ஜோர்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ், க்வேனா மபாக்கா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்றிச் நோக்யா, கெகிசோ ரபாடா, ஜேசன் ஸ்மித். https://www.virakesari.lk/article/235078

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

2 months ago
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் January 3, 2026 விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். www.ilakku.orgபிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் | Januar...விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ்

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

2 months ago

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

January 3, 2026

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

www.ilakku.org
No image previewபிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் | Januar...
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

2 months ago
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்! Vhg ஜனவரி 04, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. சம்பவம் தொடர்பில்.... கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_330.html

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

2 months ago

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

Vhg ஜனவரி 04, 2026

AVvXsEhMB7wXPUsONIWHnDGB2SsqVZYBqBQi69BMMA4cC-0kPHrqkUc4jpuF0IqsjnqnK1S92qz3IGoadUvivvV9z-O9b8mwogHTFBQ8adww4Z7TerSLeckKCvR1yerUAxjfZIVrfTawwyZK9UoS55pdZR5MzChkWjtf-w_B6T2eqOrWB5UFfkFgogKP2C2qwKbZ

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில்....

கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025)  ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது.

https://www.battinatham.com/2026/01/blog-post_330.html

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு

2 months ago
கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் - சுமந்திரன் ,குகதாசன் களத்தில்! Vhg ஜனவரி 04, 2026 திருகோணமலை கன்னியாவில் நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த காணியை, தொல்பொருள் திணைக்களம் அண்மையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் ஆராய இன்று (04.01.2026)ஆம் திகதி நேரடி விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் அழைப்பின் பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். முக்கிய அம்சங்கள்... ஆலய காணி கையகப்படுத்தப்பட்ட விதம் குறித்து கேட்டறியப்பட்டது. மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_933.html

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

2 months ago
வெனிசுவேலா மீதான அமெரிக்க தலையீடு : ஜே.வி.பி கடும் கண்டனம்! Published By: Digital Desk 1 04 Jan, 2026 | 03:07 PM வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுவேலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுவேலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை. நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் பண்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறைமை என்பன உலகமே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடுகளாகும். எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகள் அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன நாகரிக உலகில் நியாயமானதல்ல. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுவேலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக் குறிபிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235186

நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

2 months ago
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 04 Jan, 2026 | 02:50 PM பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். மேற்படி விஜயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர். இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/235184#google_vignette

நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

2 months ago

நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

04 Jan, 2026 | 02:50 PM

image

பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

மேற்படி விஜயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/235184#google_vignette

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

2 months ago
வெறும் 2 மணி 20 நிமிடங்களில் மதுரோவை பிடித்த அமெரிக்கா - ஒரு வீரரை கூட இழக்காமல் செய்து முடித்தது எப்படி? பட மூலாதாரம்,Donald Trump/ Truth Social கட்டுரை தகவல் கேரத் எவான்ஸ் வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர். வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், "அவரின் செல்லப்பிராணிகள்" வரையிலும் கண்காணித்து வந்தது. அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர். பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது. திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது. "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் பல வாரங்களாக, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தயாராக இருந்தனர். சரியான நேரத்திற்காகவும், அதிபர் உத்தரவுக்காகவும் அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்" என்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 'அதிர்ஷ்டமும் தெய்வ ஆசியும்' பணியைத் தொடங்குவதற்கான உத்தரவு அதிபரிடமிருந்து இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு (கிழக்கு நேர மண்டலம் Eastern Daylight Time EDT) வந்தது. "நாங்கள் இதை நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யவிருந்தோம். பின்னர் திடீரென்று வாய்ப்பு உருவானது. அவர்களைப் போகச் சொன்னோம்" என்று சனிக்கிழமை அதிகாலைத் தாக்குதலுக்குப் பிறகு, ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் (Fox & Friends) நிகழ்ச்சியில் கூறினார் டிரம்ப். "அவர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கடவுள் ஆசியும் உடனிருக்கும் என்று கூறினார்" என்று தெரிவித்தார் ஜெனரல் கெய்ன். டிரம்பின் உத்தரவு கராகஸில் நள்ளிரவுக்குச் சற்று முன்பு வந்தது. இது இரவின் பெரும்பகுதி இருளில் செயல்பட ராணுவத்திற்கு அவகாசம் அளித்தது. அதன்பிறகு, வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த அந்தப் பணி, வாஷிங்டனையும் உலகெங்கிலும் பலரையும் திகைக்க வைத்தது. அளவு மற்றும் துல்லியத்தின் அடிப்படையில், இது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது. இது பல பிராந்திய சக்திகளிடமிருந்து உடனடி கண்டனங்களைப் பெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, வெனிசுவேலா தலைவரைக் சிறைபிடித்த வன்முறைச் செயல் முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். டிரம்ப் வெள்ளை மாளிகையின் சூழல் அறியும் அறையிலிருந்து (Situation Room) இந்த நிகழ்வைப் பின்தொடரவில்லை. அதற்குப் பதிலாக, அவர் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் தனது ஆலோசகர்களால் சூழப்பட்டிருந்தார். அங்கு அவர் சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்கிளிஃப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கையை நேரடிலையில் பார்த்தார். "பார்க்க நம்ப முடியாத ஒரு விஷயமாக அது இருந்தது" என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். "நடந்ததைப் பார்த்திருந்தால், அதாவது, நான் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தேன். நீங்கள் அந்த வேகம், அந்த வன்முறை... ஆகியவற்றைப் பார்த்திருந்தால், அது ஒரு ஆச்சரியமான விஷயம். இந்த வீரர்கள் செய்தது ஒரு அற்புதமான வேலை." பட மூலாதாரம்,Donald Trump / TruthSocial படக்குறிப்பு,டிரம்ப் தனது புளோரிடா பண்ணை வீட்டிலிருந்து நடவடிக்கையை நேரலையில் பார்த்தார். கடந்த சில மாதங்களில், அதிபர் டிரம்ப், மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் (narco-terrorism) ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைவீரர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் டஜன்கணக்கான போர்க்கப்பல்களும் இணைந்து, அந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான மிகப் பெரிய ராணுவ குவிப்பு நடைபெற்றது. மேலும், அந்தப் பிராந்தியத்தின் வழியாக போதைப்பொருள்களை கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய படகுகளையும் அமெரிக்கா அழித்துள்ளது. ஆனால், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' நடவடிக்கையின் முதல் அறிகுறிகள் வானில் தென்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, அந்த இரவு முழுவதும் நடந்த நடவடிக்கையின் போது, குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. "இது மிகவும் சிக்கலானது, மிகமிக சிக்கலானது. முழு இயக்கமும், தரையிறக்கங்களும், பயன்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும்..." என்று ஃபாக்ஸ் செய்திகளுக்கு டிரம்ப் தெரிவித்தார். "எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக, எங்களிடம் ஒரு போர் விமானம் இருந்தது" என்றும் அவர் கூறினார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கராகஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்தின் மேல் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. "நான் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரும் வெடிப்புச் சத்தம்," என்று செய்தியாளர் அனா வனெஸ்ஸா ஹெரேரோ பிபிசிக்கு கூறினார். "அது அனைத்து ஜன்னல்களையும் அதிரவைத்தது. உடனே, முழு பார்வையையும் மறைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய புகை மேகத்தை நான் பார்த்தேன். நகரம் முழுவதும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்துகொண்டிருந்தன" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,LUIS JAIMES/AFP via Getty Images வானில் ஏராளமான விமானங்கள் பறப்பதைக் காட்டும் காணொளிகளும், வெடிப்புகளுக்குப் பிந்தைய நிலையை காட்டும் பிற காணொளிகளும் விரைவில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றில், குண்டுவெடிப்புகளால் எழுந்ததாகத் தோன்றும் புகை மேகங்கள் மேலெழும்ப, கராகஸின் மேல், தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் ஒரு அணிவகுப்பாகப் பறந்ததை காண முடிந்தது. "அதிகாலை சுமார் 1:55 மணியளவில், வெடிப்புச் சத்தம், கராகஸின் மேல் பறந்த விமானங்களின் ஓசையும் கேட்டு நாங்கள் விழித்தோம்" என்று டேனியலா என்பவர் பிபிசிக்கு கூறினார். "அனைத்தும் முழு இருளில் மூழ்கியது. அருகில் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட வெளிச்சமே ஒரே ஒளியாக இருந்தது". "அபார்ட்மெண்ட் வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதையே புரியாமல், அந்த சத்தங்களால் அனைவரும் பயந்திருந்தனர்" என்றும் அவர் கூறினார். கராகஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தீப்பற்றல்கள் மற்றும் புகை மேகங்களை காட்டும் பல காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, சரியாக எந்த இடங்கள் இலக்காகத் தாக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்துள்ளது. இதுவரை, ஜெனரலிசிமோ பிரான்சிஸ்கோ டி மிராண்டா விமானப்படைத் தளம், லா கார்லோட்டா என அறியப்படும் விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Reuters அமெரிக்க தாக்குதல்களில் சில வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணி தொடங்குவதற்கு முன்பு கராகஸில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க டிரம்ப் பரிந்துரைத்தார். இருப்பினும் அவர் எப்படி என்று குறிப்பிடவில்லை. "எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக கராகஸின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இது இருட்டாக இருந்தது மற்றும் அது கொடியது" என்று அவர் கூறினார். 'நாங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்' கராகஸின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில், அமெரிக்கப் படைகள் நகருக்குள் நுழைந்தன. அதில், அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய சிறப்பு நடவடிக்கை அலகான டெல்டா ஃபோர்ஸின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர் என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-க்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் கனரக ஆயுதங்களுடன் இருந்ததோடு, மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் உலோகக் கதவுகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு ப்ளோடோர்ச்சையும் எடுத்துச் சென்றிருந்தனர். ஜெனரல் கெய்னின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு தாக்குதல்தொடங்கிய பிறகு, அந்தப் படையினர் மதுரோ இருந்த இடத்தை அடைந்தனர். கராகஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாதுகாப்பு இல்லத்தை, கடுமையாக பாதுகாக்கப்பட்ட ராணுவ கோட்டை என்று டிரம்ப் விவரித்தார். "அவர்கள் எங்களுக்காகத் தயாரான நிலையில் காத்திருந்தார்கள். நாங்கள் வருவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார். படைகள் அங்கு வந்தவுடன் எதிர்தாக்குதல் நடந்தது.. ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கப்பட்டாலும், அதனால் தொடர்ந்து பறக்க முடிந்தது. "மதுரோவின் வளாகத்திற்குள் நுழைந்த படை, வேகம், துல்லியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டது" என்று ஜெனரல் கெய்ன் தெரிவித்தார். "அவர்கள் அப்படியே உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். உண்மையில் உடைக்க முடியாததாக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் உடைத்தனர். இதற்காகவே அமைக்கப்பட்டிருந்த எஃகு கதவுகளைக்கூட" என்று டிரம்ப் கூறினார். மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்ட இந்த நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கத் தொடங்கினார். இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "நான் தெளிவாகச் சொல்கிறேன்: நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆனால் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும், அதன் பின்பு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த திட்டமின்றியும் ராணுவ நடவடிக்கையை தொடங்குவது பொறுப்பற்ற செயல்," என்று செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கும் சக் ஷூமர் கூறினார். முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தால், அந்த நடவடிக்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெனிசுவேலாவில் தலைநகர் கராகஸைச் சுற்றியுள்ள பல இடங்களை அமெரிக்கா தாக்கியது. வெனிசுவேலா அதிபர் மதுரோ தன் வளாகத்திற்குள் அமெரிக்காவின் எலைட் படையினர் பெருமளவில் நுழைந்தபோது, ஒரு பாதுகாப்பு அறைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார். "அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அது பாதுகாப்பான இடமல்ல. ஏனெனில், சுமார் 47 விநாடிகளில் அந்தக் கதவை நாங்கள் வெடிக்கச் செய்திருப்போம்," என்று அவர் கூறினார். மேலும், "அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை" என்றும் அவர் கூறினார். 2013-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட மதுரோ, கைது செய்யப்படும் போது எதிர்த்திருந்தால், அமெரிக்கா அவரை கொல்லக்கூடிய நிலையிலிருந்ததா என்ற கேள்விக்கு, "அது நடந்திருக்க வாய்ப்பு இருந்தது" என்று டிரம்ப் பதிலளித்தார். அமெரிக்கா தரப்பில் இரண்டு வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் கூறினார். ஆனால் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை. வெனிசுவேலா அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பையும் உறுதிப்படுத்தவில்லை. மதுரோவைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைத் தந்தால் 5 கோடி அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:20 மணிக்குள், மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் ஹெலிகாப்டர்களில் வெனிசுவேலா எல்லையை விட்டு வெளியேறப்பட்டனர். அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் காவலில், இறுதியாக நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மதுரோவை சிறைபிடித்த செய்தியை டிரம்ப் உலகுக்கு அறிவித்தார். "மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்" என்று அவர் கூறினார். கூடுதல் தகவல்கள்: ரிஸ்டோபல் வாஸ்கெஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmlzlyj29go

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

2 months ago
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர். பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை. இவ்வாறாக கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்” சகல கட்சிகளுடனும் 'கூட்டு' என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல் கதை விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது . இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும் பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது. வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி. உள்ளளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது. எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது.. இவ்வாறான நிலையில், 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் 2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான கூட்டாக இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கூட்டு-என்பதால்-ஆயுள்காலம்-குறைவாகவே-இருக்கும்/91-370514

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

2 months ago

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

முருகானந்தம் தவம்

இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின்  தாய்க் கட்சி என்று  கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5  பங்காளிக் கட்சிகளின்  கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில்    மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில்  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது.

பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈ.பி.ஆர்.எல்.எவ்.)  தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்)  தர்மலிங்கம் சித்தார்த்தன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக்  கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி  செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது.
நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து  முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை.

இவ்வாறாக  கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்”  சகல கட்சிகளுடனும் 'கூட்டு' என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல்  கதை  விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான  சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது  தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது .

இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும்  பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப்  புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது.
வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத்  தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி.

உள்ளளூராட்சி சபைகளுக்கான  தேர்தலுக்கு  முன்னர் தமிழரசுக் கட்சிக்கும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது.  எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி  தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது..

இவ்வாறான நிலையில்,  2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்  2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான  கூட்டாக  இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கூட்டு-என்பதால்-ஆயுள்காலம்-குறைவாகவே-இருக்கும்/91-370514

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

2 months ago
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வெனிசுலாவில்-இடைக்கால-ஜனாதிபதி-டெல்சி-ரோட்ரிக்ஸ்/50-370499

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

2 months ago

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்

image_2a8ee326fa.jpg

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வெனிசுலாவில்-இடைக்கால-ஜனாதிபதி-டெல்சி-ரோட்ரிக்ஸ்/50-370499

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

2 months ago
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

2 months ago

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை  அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன்  வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி),  கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை

அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை  சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No image previewநிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை  அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

2 months ago
வட்ஸப்பில் வந்தது… சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகாலத்தில் சிவஞானம் சிறீதரன் மீது தென்னிலங்கையில் சிலரால் குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்படாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகின்றது. இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார். இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது. ஏற்கனவே கிளிநொச்சியில் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிப்பத்திர விவகாரம் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் ஆதரவளித்ததான குற்றச்சாட்டுக்களை அத்தகைய தரப்புக்கள் பரப்பியே வருகின்றன.தற்போது இறுதியாக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக நல்லாட்சி காலத்தில் பணியிலிருந்த தர்சன ஹெட்டியராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை சர்ச்சையாகியுள்ளது. எனினும் அவற்றினை நிரூபிக்க பகிரங்க சவாலை சிவஞானம் சிறீதரன் முன்வைத்துவருகின்ற போதும் அத்தரப்புக்கள் மௌனம் காத்தேவருகின்றன. இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதிக்காக சிவஞானம் சிறீதரன் தரகுப்பணம் பெற்றதாக கதைகள் வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வுனவளத்திணைக்களத்தின் கீழுள்ள அரச காணிகளினை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒதுக்குவதென்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதாகவே உள்ளதென்கின்றன உள்வீட்டு தரப்புக்கள். சண்பவர் எனும் தனியார் நிறுவனம் இலங்கை புதுப்பிக்க சக்தி அமைச்சின் அனுமதியுடன் முன்னைய ரணில் அரசிடம் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதியை பெற்றிருந்தது.எனினும் ஆட்சி மாற்றம் மற்றம் மின் அலகொன்றை கொள்வனவு செய்வது தொடர்பிலான பிணக்கினால் சண்பவர் நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் சகிதம் மீண்டும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சின் ஊடாக அரசின் அனுமதியை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கென பெற்றுள்ளது. இந்நிலையில் அவற்றின் எந்நடவடிக்கையுடனும் தொடர்புபடாத சிவஞானம் சிறீதரன் மற்றும் அவர் மகன் மீது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.அத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது. எனினும் முன்னதாக இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதே "ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு" சிறீதரன் தரப்பு சவால் விடுத்திருந்தது.அதேபோன்று சிறீதரனின் மகனும் சவால் விடுத்திருந்தார். அதேவேளை தற்பேர்து இலஞ்ச ஊழல்களை ஆய்வு செய்வதற்கான குழுவில் முறைப்பாட்டளித்துள்ள சஞ்சய மஹவத்த கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதானவர் என்பதும் தற்போதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிய வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருபவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அவர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன் பின்னணியிலும் உள்வீட்டு சதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.